BREAKING NEWS
Search

இயக்குநர் மணிவண்ணன் மனைவி மரணம்!

இயக்குநர் மணிவண்ணன் மனைவி மரணம்!

கணவர் மணிவண்ணன் மறைவின் போது...

கணவர் மணிவண்ணன் மறைவின் போது…

சென்னை: கணவர் மணிவண்ணன் மரணித்த இரண்டு மாதங்களில் அவரது மனைவி செங்கமலம் (55) இன்று காலை மரணமடைந்தார்.

மணிவண்ணன் மரணத்துக்குப் பின், மகன் ரகுவண்ணனுடன் சென்னை கே.கே.நகர் ஜெய்பாலாஜி நகர் திருமலை தெருவில் வசித்து வந்தார். கணவர் இறந்த பின்னர் அவர் மிகுந்த சோகத்துடன் இருந்தார்.

ஏற்கெனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று உடல் நிலை தேறியிருந்தார்.

சில நாட்களுக்கு முன்பு செங்கமலத்திற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றும் நோய் குணமாகவில்லை. இந்த நிலையில் இன்று அதிகாலை செங்கமலம் இறந்தார்.

இதுபற்றி அறிந்ததும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மற்றும் நிர்வாகிகள், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

சினிமா பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். செங்கமலத்தின் இறுதிச் சடங்கு வெள்ளிக்கிழமை மாலை நடந்தது.

அவருக்கு ரகுவண்ணன் என்ற மகனும், ஜோதி என்ற மகளும் உள்ளனர்.

கணவர் மீது மிகுந்த அன்பு செலுத்தியவர் செங்கமலம். மணிவண்ணன் இவரைக் காதலித்து மணந்தார். மணிவண்ணன் தன் மனைவியை மிகவும் நேசித்தார்.

தான் எந்த ஊருக்குச் சென்றாலும், விமானத்திலிருந்து இறங்கிய அடுத்த நிமிடம் அவர் மனைவிக்கு போன் செய்து விசாரித்துவிட்டுத்தான் மறு வேலை பார்ப்பார். புற்றுநோய் பாதித்த மனைவியை, உடனிருந்து கவனித்துக் கொண்டார் மணிவண்ணன். கடைசியாக அமைதிப்படை 2 விழாவில் கணவருடன் கலந்து கொண்டார் செங்கமலம்.

மகனுக்கு திருமணம் செய்து பார்த்துவிட இருவரும் விரும்பி முயற்சிகள் எடுத்தனர். மணிவண்ணன் இறப்பதற்கு சில மாதங்கள் முன்புதான் மகன் ரகுவண்ணனுக்கும் ஈழத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடத்தி வைத்தார். இப்போது தந்தையும், அவரைத் தொடர்ந்து தாயும் இயற்கையெய்தி விட்டனர்.

-என்வழி செய்திகள்

 




One thought on “இயக்குநர் மணிவண்ணன் மனைவி மரணம்!

  1. kabilan.k

    மகனின் திருமணத்தை பார்காமலே இருவரும் மரணித்து விட்டனரே என்று நினைக்கும் போது,சோகம் மனதை கவ்வுகிறது.வாழ்க்கை அவளவு வசதியாக நமக்கு பிடித்த மாதிரி,பிடித்த இடத்தில போய் நின்று கொள்வது இல்லை என்று ஜெயகாந்தன் ஐயா சொன்னது தான் நினைவுக்கு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *