BREAKING NEWS
Search

நானும் ரஜினியும்… இயக்குநர் மகேந்திரனின் பரவசமான பேட்டி!

நானும் ரஜினியும்… இயக்குநர் மகேந்திரனின் பரவசமான பேட்டி!

லைஞர் தொலைக்காட்சியில் இன்று ஒளிபரப்பான ரசிகன் நிகழ்ச்சியில் இயக்குநர் மகேந்திரன் பேட்டி.

அவரது படங்களைப் போலவே, பேட்டி நெடுகிலும் ஒரு அன்பும் நெகிழ்வும். ஒவ்வொரு கேள்விக்கும் அவர் சொன்ன பதிலில் ஒரு விவசாயியின் எளிமையும் ரசிகனின் வியப்பும் தன்னை பிறர் புகழக் கேட்டு நாணுவதில் சான்றாண்மையும் பார்க்க முடிந்தது.

எம்ஜிஆர், ரஜினி, இளையராஜா என இந்த தமிழ் உலகின் ஆளுமைகளுடனான தனது அனுபவங்களை அவரளவுக்கு வேறு யாரும் இத்தனை எளிமையாகப் பேசியதில்லை.

‘என்னைப் பற்றி பேச வேண்டுமா… அது எதற்கு? அப்படி ஒரு போதும் நினைத்ததில்லை. என் படங்கள் பேசினால் போதும்…’ என்று ஒதுங்கிச் செல்லும் அபூர்வமான படைப்பாளி.

அவரிடம் கேட்கப்பட்ட ஒவ்வொரு கேள்வியும், அதற்கான பதிலும் சுவாரஸ்யமானவை. பரவசமிக்கவை.

அதில் இரண்டு கேள்விகளுக்கான பதில்களை மட்டும் இங்கே தருகிறேன். (மீதி வீடியோவாக)

எனக்கும் தலைவருக்கும் (எம்ஜிஆர்) நெருக்கமான தொடர்புண்டு என்றாலும் நான் அரசியல் பக்கம் போகவில்லை. ஒருவேளை அவர் அன்புக்கென்று கட்சி ஆரம்பித்திருந்தால் நான் அதில் இருந்திருப்பேன். அரசியல் எனக்கெதற்கு?

ரஜினி சாருக்கும் எனக்கும் உடல்மொழி (பாடிலாங்வேஜ்), பேசும் ஸ்டைல் ஒரே மாதிரி இருப்பதாக சினிமாவுக்கு வெளியில் உள்ள நண்பர்கள்கூட சொல்லியிருக்கிறார்கள். எனக்கே அது ஆச்சர்யமாகக் கூட இருக்கிறது. ஒவ்வொரு இயக்குநருமே நடிகர்தான்.

பாடி லாங்வேஜை ஒருத்தருக்கொருத்தர் பரிமாறிக்கலாம்… ஆனால் ரஜினி சாரோட ரொம்ப நல்ல உயர்ந்த குணங்களை மனசுக்குள்ள உள்வாங்கியிருக்கிறேன். அதை ஃபாலோ பண்றதில்தான் எனக்கு பெரிய பெருமையும் சந்தோஷமும் இருக்கு. பாடி லாங்வேஜ் ஈஸ் நத்திங்!

தமிழ் சினிமாவில் ரஜினியும் ஸ்ரீதேவியும் அபாரமான திறமையாளர்கள். இயக்குநர் ஒன்றைச் சொன்னால் அதை நூறு மடங்கு செய்து காட்டி அசத்துவார்கள்.

(தனக்குப் பிடித்த இயக்குநர் மகேந்திரன் என கே பாலச்சந்தருக்கு அளித்த பேட்டியில் ரஜினி கூறியது பற்றி மகேந்திரனிடம் இந்த முறையும் கேட்டார் பேட்டியெடுத்தவர். ஆனந்த விகடன் பேட்டியில் என்ன சொல்லியிருந்தாரோ அதில் இம்மியும் மாற்றாமல் அப்படியே இந்த டிவி பேட்டியிலும் கூறினார் மகேந்திரன். அந்த நேர்மை, எங்கும் எப்போதும் யாருக்காகவும் தன்னை விட்டுக்கொடுக்காமைதான் மகேந்திரன் ஸ்பெஷல்!)

இளையராஜா…


நானும் என் படங்களும் இந்த அளவு பேசப்படுவதற்குக் காரணம் இளையராஜாவின் ரீ ரிக்கார்டிங்தான்.

இளையராஜா இல்லாமலிருந்தால் என் படங்களின் காட்சிகளில் இத்தனை அழுத்தமான உணர்வைப் பார்க்க முடியாது. நான் ஒருபோதும் அவரிடம் எனக்கு சூப்பர் ஹிட் பாடல்கள் கொடுங்கள் என்று சொன்னதில்லை. டூயட்களை நான் பெரும்பாலும் வைப்பதில்லை. ஒரு படம் மட்டும் விதிவிலக்கு.


நான் அதிகமாக பின்னணி இசைக்குதான் முக்கியத்துவம் தருவேன். தன் இசையால் நான் எடுத்த காட்சிகளை பல மடங்கு உயர்த்தியவர் இளையராஜா. ஹி ஈஸ் கிரேட் (இப்படி அவர் சொல்லிமுடித்ததும் ஜானி பட பாடலின் இசையை தவழவிட்டார்கள் காட்சியுடன்… உடம்பிலிருந்த ரோமங்களெல்லாம் சிலிர்த்து நின்றன!).

-என்வழி ஸ்பெஷல்
4 thoughts on “நானும் ரஜினியும்… இயக்குநர் மகேந்திரனின் பரவசமான பேட்டி!

 1. THAMEEZ

  தலைவரை முதலும் கடைசியாய் புதிய கோணத்தில் செதுக்கிய ஒரே சிற்பி மகேந்திரன் அவர்கள்.

 2. arulnithya

  எஸ் வினோ,
  அந்த ப்ரோக்ராம் பார்த்த பொழுதே நான் இதை நினைத்தேன். அதே கருத்துக்கள் “என் வழியில்” (என்வழியில் வரும் என்று எதிர்பார்த்தேன்). ஒரே சிந்தனைகள் தலைவர் (ரஜினி) ரசிகர்களிடத்தில்!!

  என்றும் நட்புடன்
  அருள் நித்தியானந்தம்

 3. வெங்கடேஷ்

  மகேந்திரன் சார் பேட்டியைப் போலவே, நீங்கள் அதற்கு கொடுத்திருக்கிற முன்னுரை அருமை வினோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *