BREAKING NEWS
Search

குதிரை, கழுதை… சேரன்!

ஒரு அற்புதக் கலைஞனின் மேடையில் ஐந்தறிவு சேரன்!

மேடைகள்தான் ஒரு மனிதனின்  உண்மையான முகத்தை பல நேரங்களில் அம்பலமாக்கிவிடுகின்றன. காரணம், பல நூறு கண்கள் தன்மீதே நிலைத்திருப்பதாய் மனதுக்குள் எழும் கர்வமும், அந்த கவனத்தை அப்படியே தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அல்பத்தனமும் கண்டபடி உளற வைக்கின்றன.

இயக்குநராக ஆரம்பத்தில் ஜெயித்து, நடிகராகி இரண்டிலுமே பின்னர் தோற்றுப் போன சேரனும் இப்படித்தான். மேடைகளில் உணர்ச்சி வசப்படுவதாக நினைத்துக் கொண்டு ஓவராக்ட் செய்து தன்னைத் தானே அவமானப்படுத்திக் கொள்வார். அவரை யாரும் விமர்சிக்க வேண்டியதே இல்லை. அத்தனை வேலைகளையும் அவரே செய்து கொள்வார்.

நேற்று சென்னையில் நடந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் புதுப்பிக்கப்பட்ட கர்ணன் பட ட்ரெயிலர் வெளியீட்டு விழாவில் மைக் பிடித்த சேரன் கண்டபடி பேசிவிட்டார். ‘இந்தாளுக்கு என்னய்யா ஆச்சு’ என வந்திருந்தவர்களே கேட்டுக் கொள்ளும் அளவுக்கு ‘ஓவர் பேச்சு’!

அதில் கடுப்பேற்றிய ஓரிரு விஷயங்களை மட்டும் குறிப்பிட்டுவிட்டு இந்த கட்டுரையை முடித்துவிடுகிறோம்.

“காசுக்காக மாரடிக்கும் கூட்டமாக சினிமா மாறிவிட்டது. பில்லா, மாப்பிள்ளை, கழுதை குதிரைன்னு எல்லாம் படம் எடுக்கிறாங்க. யாருக்காச்சும் சிவாஜி நடித்த கர்ணன், உத்தமப்புத்திரன், தில்லான மோகனம்பாள் போன்ற படங்களை எடுக்க தைரியம் இருக்கா…?”

-சேரன் சினிமா எடுக்க வந்திருப்பது கலைச்சேவைக்காகவா… காசுக்காக இவர்  மாரடித்த காட்சிகள், போட்ட வேடங்கள், நடித்த மேடைகள் எத்தனை என்பது மறந்து போனதா… பில்லாவை, மாப்பிள்ளையை இப்போதும்கூட யாராலும் நன்றாக எடுக்க முடியவில்லையே!

சிவாஜி கணேசனை பாராட்டுவதாகக் கூறி, தேவையில்லாமல் அவரையும் அசிங்கப்படுத்தி, இவரும் அவமானப்பட்டு நிற்கிறார். சிவாஜி படத்தை ரீமேக் பண்ண தைரியம் இருக்கா என்று மற்றவர்களைக் கேட்கிறாரே… ஆங்கிலப் படத்தைக் கூட ஒழுங்காகக் காப்பியடிக்க முடியாமல் பொக்கிஷத்திலும் முரணிலும் தோற்றுப்போன இவர் இப்படிக் கேட்கலாமா?

“நாம சிவாஜியை ஆட்சி பண்ண சொல்லலியேன்னு ஒரு நாள் வருத்தப்படுவீங்க. அவருடைய கை கரைபடியாத சுத்தமான கை. கைநீட்டி யார்கிட்டேயும் காசு வாங்கல, யாருக்கும் சிபாரிசு பண்ணல, ஆனால் அவரை நம்ம சரியாக பயன்படுத்தல…”

-சிவாஜி ஒரு சிறந்த நடிகர். இந்தியாவின் ஒப்புயர்வற்ற கலைஞன். நடிகர்களில் பிதாமகன். இந்த புகழோடு போய்ச் சேர்ந்த மனிதரை தேவையில்லாமல் பழைய அரசியல் ப்ளாஷ்பேக்கை சொல்ல வைத்து அசிங்கப்படுத்துகிறார் சேரன்.

சிவாஜி அரசியல் என்பது ‘பழையூர்ப்பட்டி சேரனுக்கு’ வேண்டுமானால் வெறும் நியூஸ்பேப்பர் செய்தியாக இருக்கலாம். அதற்காக எல்லோருக்குமே அப்படித்தான் என்று நினைத்துக் கொண்டு ‘ரீல் ஓட்ட’க் கூடாது.

சிவாஜியின் தோல்விகள், சிவாஜியால் ஏன் அரசியலில் தாக்குப்பிடிக்க முடியவில்லை என்பதெல்லாம் தெரியாத ஸ்கூல் பையன்களிடம்  தன் புதுக்கதையைச் சொல்லட்டும் சேரன். ‘அட, நான் சூடுபோட்டுக்கிட்டது உண்மைதான்.. அது மறக்க விரும்பறேன். நீங்களும் மறந்திடுங்க பிள்ளைகளே’ன்னு சிவாஜியே சொன்ன விஷயத்தை நினைத்து இவர் ரொம்பத்தான் ‘ஃப்ப்..பீல்’ பண்றாரே!

காலம் சென்ற ஒரு மகா கலைஞன் என்ற மரியாதையோடு அவர் பெயர் நிலைக்கவேண்டுமானால், சேரன் போன்ற அரை வேக்காடுகளை மேடையில் ஏற்றுவதைத் தவிர்க்க வேண்டும் சிவாஜி குடும்பத்தினர்!

“சிவாஜியை பார்த்து சினிமாவுக்கு வந்தவர்கள் பலர். அவர்களில் நானும் ஒருவன். சிறு வயதில் மதுரையில், தியேட்டர்களில் படம் பார்க்க பலமுறை அம்மாவிடம் அனுமதி வாங்கி அவர் நடித்த படங்களை கையில் சூடம் ஏற்றிப் பார்த்திருக்கிறேன். அவர் வீட்டில் ஒரு வேலைக்காரனாக, அவர் கை, கால்களை அமுக்கிவிடும் ஒரு சேவகனாக போக ஆசைப்பட்டவன் நான். அவ்வளவு வெறி பிடித்த ரசிகர்களில் நானும் ஒருவன்…”

-அட என் அறிவுக் கொழுந்தே… இது மாதிரி ஒரு சந்தர்ப்பத்துக்காகத்தான் காத்திருந்தோம். அப்புறம் என்ன ‘இதுக்கு’ வெற்றி கொடி கட்டு படத்துல ஹீரோக்களின் ரசிகர்களையும், அவர்களை ஆராதிப்பவர்களையும் கடுமையாக சாடி காட்சிகள் வைத்தீர்கள்? சிவாஜிக்கு கையில் சூடம் கொளுத்தி ஆராதித்துவிட்டு, அதை இப்போதும் பெருமையாக சொல்லிக் கொள்ளும் உங்களுக்கு, மற்ற ரசிகர்களைச் சாட எந்த அருகதையும் இல்லையே!

சினிமாவில் ஜெயித்தவரை, நல்ல நிலையில் இருப்பவரைப் பார்த்து, வெற்றிக்கான வழியைக் கத்துக்கணும். இப்படி கத்திக்கொண்டு குட்டிச் சுவத்துல முட்டிக்கிட்டிருக்கக் கூடாது. பொறாமை மாதிரி பெரிய நோய் உலகத்துல எதுவுமே இல்லை. உங்க ‘ஆட்டோகிராப்ல’ மறக்காம இந்த லைனைச் சேர்த்துக்கங்க சேரன்!

சேரனுக்கு சனி நாக்குல என்பார்கள் திரையுலகில்.. ம்ஹூம்… அது உடம்பெங்கும் உச்சத்துல இருக்கு என்பதுதான் உண்மை!

-ரசிகன்
12 thoughts on “குதிரை, கழுதை… சேரன்!

 1. Deen_uk

  இவருக்கு ரெண்டு படம் ஹிட் கொடுத்தவுடன் வந்த போதை இன்னும் தெளியவில்லை..இன்னும் அதே ப்ப்..பீலிங்க்ல இருக்காரு…! இவரோட சமுதாய அக்கறையையும் கலை தாகத்தையும் தான் மாயக்கண்ணாடி போட்டு காட்டும்போதே பார்த்துட்டோம்! இவர் கிட்ட தலைவருக்காக தயார் செய்யப்பட்ட திரைக்கதை ஒண்ணு இருக்காம்!! (இவரது பேட்டியை எதிலோ படித்த நினைவு..)..அதில தலைவர் நடிக்கலன்னு இவருக்கு கொஞ்சம் ஜெலுசில் தேவை.
  அதில தலைவர் இப்போ நடிக்க கால்ஷீட் கொடுத்திட்டார்ணா ,இது அப்டியே மாறி பேசும்..!!
  தமிழ் சினிமா ல இது மாதிரி சில கேஸ்கள் இருக்கு.மேடையும் மைக்கும் கிடைச்சா போதும்..
  அதில நம்பர் ஒண்ணு,நக்கல் நாயகர்..! முதல் நாள் தலைவரை மேடையில் அநாகரிகமா போட்டு தாக்கி பேசுவார்! (அவருக்கு மேடையில கை தட்டு கிடைக்கலனா ரொம்ப கோப படுவார் மனுஷன்!! பாவம்!!இவர் மேடையில ரொம்ப நாகரிகமா ஜட்டி ,பிரா பற்றி லாம் பேசுவார்!!)அப்புறம் தலைவரை புகழ்ந்து பேசுவார்..! அடுத்து சங்கர் மச்சான் தொனியில் உச்சரிப்பு வரும் பெயர் கொண்ட தமிழை தாம்பு கயிறு வைத்து கட்டிக் காக்கும் டைரெக்டர் (இன்னொரு க்ளு வேணா அமிதாப் பச்சான் நு சொல்லலாம் இதுல அமிதாப்பை குழப்பி கொள்ள வேணாம்!!!!)..!_இவருக்கு மைக் கிடைச்சா இவர் என்ன பேசுவார்னு இவருக்கே தெரியாது..!!அடுத்து ஒரு அரசில்யல் காமெடி பீசு!! இது ஒரு நேரத்துல தமிழ் நாட்டுல இரவு எட்டு மணிக்கு மேல யாரையும் ரோட்ல நடக்க விடாம இருக்க சட்டம் கொண்டு வரணும் நு சொன்ன ஜோக்கர்..! இதுவே மரத்தை வெட்டும்..!! அப்புறம் மரத்தை நடும்..!! இதையெல்லாம் நாம கண்டுக்க கூடாது..!

 2. முத்துசிவா

  //குதிரை, கழுதை… சேரன்!// இந்த வரிசையில சேரனை சேத்து கழுதையும் குதிரையையும் அசிங்கப்படுத்தியதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்

 3. M Senthil

  kuraintha thaguthiyai petru, athiga thaguthi udayathaga ninaipavargalin seyal ippadithan irrukkum. Ithukku – Cheran is the best example

 4. Dinesh Murugesan

  நல்ல கட்டுரை …….அதிலும் “Deen_uk says ” இன் comment அருமை ……..

 5. Deen_uk

  எனது பின்னூட்டத்தை ரசித்து உற்சாகம் கொடுத்த நண்பர்கள் திரு.பிரசன்னா குமார் மற்றும் திரு.தினேஷ் முருகேசன் அவர்களுக்கு எனது நன்றிகள்…இந்த ஜெலுசில் ஜந்துக்களை பற்றி நிறைய எழுதலாம்! குறைத்து எழுதியுள்ளேன்! காரணம், வினோ சாருக்கும்,எனக்கும்,உங்களுக்கும் டைம் வேஸ்ட் என்பதால்!….
  மீண்டும் எனது நன்றிகள் நண்பர்களே..

 6. kabilan

  இவன் எல்லாம் ஒரு ஆளுன்னு.வினோ அண்ணனுக்கு ஒரு வேண்டுகோள் இந்த சேரன்,விஜய்,கமல்,சத்யராஜ் இவர்களை பற்றிய செய்திகளை போடதிர்கள் அன்ன.நம்ம தலத்தில் போடுகிற அளவுக்கு அவர்களுக்கு தகுதி இல்லை அண்ணா

 7. Gopi

  தில்லான மோகனம்பாள் – ராமராஜன் ரீமேக் படம் கரகாட்டக்காரன் 🙂

  ____________
  அதுவும் அருமையான ரீமேக்!
  -வினோ

 8. Manoharan

  ////யாருக்காச்சும் சிவாஜி நடித்த கர்ணன், உத்தமப்புத்திரன், தில்லான மோகனம்பாள் போன்ற படங்களை எடுக்க தைரியம் இருக்கா…?”///

  முதலில் உங்களுக்கு அந்த தைரியம் இருக்கிறதா? வாய் கிழிய பேசும் நீங்கள், ஏன் இப்படங்களை தயாரித்து, இயக்கி நடிக்கக் கூடாது ? கர்ணன் உத்தமப்புத்திரன், தில்லான மோகனம்பாள் போன்ற வேடங்களில் உங்களை பார்க்க நாங்கள் தயார். நீங்கள் தயாரா ? இல்லை என்றால் கொஞ்சம் பொத்திக்கிட்டு போய் விடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *