BREAKING NEWS
Search

போட்டாங்கய்யா அடுத்த குண்டு… டீசல் விலை ரூ 5 உயர்வு… சிலிண்டருக்கும் கட்டுப்பாடு!

போட்டாங்கய்யா அடுத்த குண்டு… டீசல் விலை ரூ 5 உயர்வு… சிலிண்டருக்கும் கட்டுப்பாடு!


டெல்லி: டீசல் விலை லிட்டருக்கு ரூ. 5 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டத்தில் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்த முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.

விலை உயர்வுக்கு முன் டெல்லியில் ஒரு லிட்டர் டீசல் ரூ.41.32-க்கு விற்பனை செய்யப்பட்டது. இப்போது ரூ.46.95-ஆக விலை உயர்ந்துள்ளது. இதற்கு முன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டது.

குறிப்பிடத்தக்கது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தப்பட்டதால் சென்னையில் ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.48.91 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை ஒரு லிட்டர் டீசல் ரூ.43.91-க்கு விற்கப்பட்டது.

சிலிண்டருக்கும் கட்டுப்பாடு

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.6 வரை உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், லிட்டருக்கு ரூ.14.78-ஆக இருந்த கலால் வரியில் இருந்து ரூ.5.50-ஐ அரசு குறைத்துள்ளதால் பெட்ரோல் விலை உயர்த்தப்படவில்லை.

அதேபோல் மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையும் உயர்த்தப்படவில்லை.

ஆனால் குடும்பத்துக்கு ஆண்டொன்றுக்கு மானிய விலையில் வழங்கப்படும் 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் எண்ணிக்கை 6- ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

6 சிலிண்டர்களுக்கு மேல் தேவைப்படுபவர்கள் சந்தைவிலையில் தான் இனி பெற்றுக் கொள்ள வேண்டும். சந்தை விலையில் எத்தனை சிலிண்டர்கள் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம்!

கடும் எதிர்ப்பு

இந்த விலை உயர்வுக்கு பெரும்பாலான கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. போக்குவரத்து அமைப்புகள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு தயாராகி வருகின்றன.

-என்வழி செய்திகள்
19 thoughts on “போட்டாங்கய்யா அடுத்த குண்டு… டீசல் விலை ரூ 5 உயர்வு… சிலிண்டருக்கும் கட்டுப்பாடு!

 1. Kumar

  UPA க்கு ஓட்டு போட்டு மறுபடியும் உக்கார வச்சுட்டு இப்போ குத்துது கொடயுதுனு அழுவ வேண்டியது தான்……

  தங்க தலைவர் கருணாநிதி கண்டன அறிக்கை உடுவார்……அதையும் மிஸ் பண்ணிடாதீங்க……எங்கப்பா போனாங்க குஷ்புக்கு மற தமிழச்சி பட்டம் கொடுத்த மகராசன் எல்லாம்…..இந்த பக்கம் வர மாட்டாங்களே…

 2. Kumar

  தினகர் அண்ணே……சௌக்கியமா இருக்கீகளா……அப்படியே இந்த பக்கமும் எட்டி பாருங்கண்ணே…..நீங்க சொன்னபடியே meow meow singh மறுபடியும் PM ஆவார்……நல்லாட்சி தருவார்……

  வாழ்க meow meow singh …….வளர்க சொக்க தங்கம் சோனியா …….சிறக்க தமிழீன தலைவர் கருணாநிதி……ஆமா இந்த அழகிரி பையன் எங்கயோ ஓடி ஒளிஞ்சுட்டாராமா ……பய புள்ள அஞ்ச நெஞ்சன்க்கு பொறந்துட்டு இப்படி ஓடி ஒழியுது…….

 3. Kumar

  2 நாளைக்கு அப்றோம் 2 ரூவா குறைப்பாக….ஏன்னா அவுக ஏத்த நினைச்சதே 3 ரூவா தான் இருக்கும்…..இந்த கேப்ல தமிழீன தலைவர் , முலாயம் சிங் யாதவ் , லாலு எல்லாரும் கண்டனம் பண்ணுவாங்க, எங்கனால தான் 2 ரூவா குறஞ்சுதுனு சொல்லுவாங்க….சட்டத்துக்கு உட்பட்டு ஒரு cm என்ன பண்ண முடிஞ்சுதோ அதை பண்ணி எப்படி ஈழ இறுதி போரை நிருத்தினாரோ அதே மாதிரி சென்ட்ரல் govt ல இருந்து 2 ரூவா குறைப்பார் நம்ம தலைவர்…..

  தினகர் அண்ணே நா சொல்லுறது கரீட்டு தானே…….

 4. சுதந்திரன்

  தி.மு.க அமைச்சர்களை கொண்ட மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விலை உயர்வுக்கு ஒப்புதல் அளித்து விட்டு, பின்பு கருணாநிதி விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவிப்பது வேடிக்கையிலும் வேடிக்கை.

  — சுதந்திரன்

 5. palPalani

  @சுதந்திரன்: சொல்லிட்டு செய்யல சார்! காலையில பேப்பர் பார்த்துதான் எனக்கே தெரியும்!

 6. palPalani

  /*போட்டாங்கய்யா அடுத்த குண்டு*/
  இது நடக்கப்போற தொடர் குண்டுவெடிப்பின் முதல் குண்டு!

 7. Manoharan

  180000 கோடி…176000 கோடி……..இவ்வளவு பணம் அடிச்சுட்டு வெறும் 5 ரூபாய்தானே ஏத்தினாங்க …விடுங்கபா. நம்ம வருமானம் குறைஞ்சுட்டே இருக்கு. விலைவாசி உயர்வால் செலவு ரெண்டு மடங்கு ஆயிடுச்சு. இந்த ஆட்சியில குடும்பம் நடத்துறதுக்கு பதிலா எங்கியாவது சந்நியாசியா போயிடலாம்.

 8. குமரன்

  மனோகரன் !

  சாமியாரானா கூட தப்பிக்க முடியாது! “பிச்சைக்கும், அன்னதானத்துக்கும்” ஏதாவது “சேவை வரி” விதிக்க முடியாதா என்று செட்டிநாட்டுச் சீமான் சிதம்பரம் காத்துக்கிட்டு இருக்கிறார்! அடுத்த பட்ஜெட்டில் நிச்சயம் உண்டு.

  சுகமான சாமியார் என்றால் நித்தியானந்தாவிடம் போய்ச் சேர்ந்து விடுங்கள்!

  அவரிடம் இருக்கும் இணைச் சாமியார்கள், துணைச் சாமியார்கள் ஆகியோரது வாழ்க்கை சொர்க்க வாழ்க்கை. “எல்லா வசதிகளும்” உண்டு, அவ்வப்போது “வீடியோ படம்” கூடப் பார்க்கலாம். என்ன, ஒரு ஒப்பந்தம் கையெழுத்திட வேண்டும் அவ்வளவுதான்! ஆனானப் பட்ட மதுரை ஆதீனமே ஒப்பந்தம் கையெழுத்திடும்போது நாமெல்லாம் எம்மாத்திரம் ?

 9. குமரன்

  தியாகத் திருவிளக்கு, சொக்கத் தங்கம், அன்னை சோனியா வாழ்க!

 10. தினகர்

  சிலிண்டரில் கை வைத்தது சரியான முடிவு அல்ல.

  பெட்ரோலியப் பொருட்களை விலை உயர்த்துவது மட்டுமே தீர்வு என்ற அணுகுமுறையும் மாற வேண்டும். கடந்த நான்கு வருடங்களில் அமெரிக்காவின் இறக்குமதி அளவு பாதியாக குறைந்துள்ளது. மாற்று எரிசக்தி, உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு என அன்னிய செலவாணியை சேமிக்கிறார்கள்.

  இந்தியாவும் எண்ணெய் கொள்கையில் புதிய பாதைக்கு மாற வேண்டும்..

  பக்கத்து தெருவில் இருக்கும் கடைக்கு போவதற்கு கூட பைக்கையும் காரையும் எடுக்கும் நிலையும் மாற வேண்டும். நான் முதல் முதலா பைக் வாங்கிய புதிதில் இதே போன்று செய்து கொண்டிருந்தேன். (புது மவுசு 🙂 ). ஆனால் சில மாதங்களுக்கு பிறகு, நடப்பது என்பதே இல்லாமல் போய்விட்டதே.என்று, குறைந்த பட்சம் பக்கத்து தெரு கடை வரையாவது நடக்கலாம் என்று மாறிவிட்டேன். வீட்டுக்கருகே 1 கி.மி வரை பைக் எடுப்பதில்லை என்று முடிவு செய்தேன்.

 11. chenthil UK

  இந்த பாழாய் போன பெட்ரோல் விலை எத்திடே இருக்கட்டும்… அது என்னவோ தெரியல… மக்கள் வயுதள அடிச்சு எல்ல கம்பனிகளும் நல்ல லாபம் தான் கொடுக்குது… கீழே இந்தியன் ஆயில் corporation லாப நஷ்ட கணக்கு ஒரு பகுதி தான் … பெட்ரோல் கம்மியான விலையில் கொடுக்குறேன்னு ஏன்தான் சொல்லுரன்களோ… கம்மியா கொடுத்தா எப்பவுமே நஷ்டத்துல தான் இருக்கனும்… மொத்ததுல… நமக்கு பயித்தியம் தான் பிடிக்கும் இதை இன்னும் ஆராய்ந்தால்

  http://www.iocl.com/download/Pressreleases_280212.pdf

  IndianOil Posts ` 3,955 Crore Profit for FY 2011-12
  The audited financial results of the Corporation were taken on record at the
  meeting of the Board of Directors here today. The Turnover for the financial year
  2011-12 rose by 24.7% to ` 4,09,957 crore from ` 3,28,652 crore during 2010-
  11. The profit for the year 2011-12 is ` 3,955 crore as compared to the profit of `
  7,445 crore during the previous financial year. Reduction of profit is mainly:
  a) due to higher interest cost of ` 2,918 crore on account of delay in receipt
  of compensation from Govt. of India & higher interest rates;
  b) due to provisioning of UP Entry Tax of ` 8,157 crore.
  For the quarter January – March 2012, IndianOil’s turnover went up by 19.7% to `
  1,12,267 crore as compared to the corresponding quarter of 2010-11. Profit for
  the last quarter of 2011-12 is ` 12,670 crore as compared to ` 3,905 crore in the
  corresponding quarter of 2010-11, mainly on account of Govt. Compensation
  received in current quarter for earlier quarters of 2011-12.
  For the year 2011-12, IndianOil has accounted for Govt. assistance of ` 45,486
  crore. In addition, the company has been granted discount of ` 29,961 crore from
  upstream oil companies/ refiners, as per the under recovery sharing mechanism.
  The Board of Directors have recommended a dividend of 50% (` 5 per share).

 12. anbudan ravi

  “இந்த ஆட்சியில குடும்பம் நடத்துறதுக்கு பதிலா எங்கியாவது சந்நியாசியா போயிடலாம்”…

  மனோகரன், நீங்க மட்டும் தப்பிக்க நினைக்காதீர்கள்….சந்நியாசம் போனாலும் குடும்பத்தோடதான் போகணும்….நிலைமை அப்படி.

  வாழ்க சொக்கத்தங்கம் சோனியாஜி மற்றும் மௌனமோகன்ஜி.

  அன்புடன் ரவி.

 13. Kumar

  அன்புடன் ரவி தமிழீன தலைவர் தாத்தாவை உட்டுடீக ……..

 14. enkaruthu

  //தங்க தலைவர் கருணாநிதி கண்டன அறிக்கை உடுவார்……அதையும் மிஸ் பண்ணிடாதீங்க……எங்கப்பா போனாங்க குஷ்புக்கு மற தமிழச்சி பட்டம் கொடுத்த மகராசன் எல்லாம்…..இந்த பக்கம் வர மாட்டாங்களே//

  //தினகர் அண்ணே நா சொல்லுறது கரீட்டு தானே…….//

  அடேங்கப்பா குமாரு முன்னாள் முதல்வர்தான் அறிக்கை விடுவாரு.ஆனால் இந்த அம்மா என்ன செய்தார்கள்.மக்கள் கஷ்டபடுகிறார்கள் என்றால் மாநில வரியை குறைக்கவேண்டியதுதனே விஜயகாந்த் கேட்பது போல.தனக்கு சாதகமான செய்தி என்றால் இப்படி சலம்புவது இல்லையென்றால் பெட்டி பாம்பாக ஒளிந்துகொள்வது என்ற வேலையெல்லாம் எங்களுக்கு கிடையாது.

 15. தினகர்

  குமார் என்ற பெயரில் வருவது கோடையிடியா?. கோடையிடிக்கும் இன்னொருவருக்கும் தொடர்பு உண்டே…. 🙂

 16. Kumar

  என்கருத்து, தினகர் நமக்கு ஜெயா கருணா ரெண்டு பேரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைக தான்…….நமக்கு காமராஜர், அண்ணா மாதிரி மக்களுக்கான தலைவர் தமிழ்நாட்டுக்கு cm ஆகணும்னு ஒரு நப்பாசை…..

  இவுக பக்கத்துல MGR போனார், அதுக்கு அப்றோம் அந்த மாதிரி cm நமக்கு வாய்க்கல….இப்போ இருக்குற அரசியல்வாதிகளில் வைகோ மட்டுமே நம்பிக்கை தரார்….ஆட்சில பங்கு இருந்தாலும் இல்லாட்டியும் மக்கள் ப்ரிச்சன்னைக்கு MDMK குரல் கொடுத்துட்டு தான் இருக்கு….வேற ஒரு பதிவுல யாரோ சொன்னாகளே நெஜமாவே குரல் கொடுக்குறது வேற வெறும் லிஸ்ட் போடுறதுக்கு குரல் கொடுக்குறது வேறனு ……வைகோ இதுல முதல் ரகம்….

  ஆனா பாருக நம்ம ஊர்ல எனிக்கு நல்லவன் வாழ்ந்துருக்கான்? இப்பவும் பாருக அவரு கட்சி கிட்டத்தட்ட லெட்டர் pad கட்சி மாதிரி சுருங்கிட்டு வந்தாலும் கூடங்குளத்துக்கு ஆதரவா போராட்டம் பண்றாங்க, சவுக்குல சொல்லிருக்காங்க பாருங்க எந்த கட்சி எல்லாம் மக்களுக்கான
  கட்சின்னு உணர ஒரு வாய்ப்புன்னு….

  இதே கூடங்குளம் மாதிரியான ப்ரிச்சன்னை தான் தூத்துக்குடி sterilite ப்ரிச்சன்னையும்…அதுக்காக இந்த மனுஷன் ரொம்ப நாளா தொண்டை கிழிய கத்திட்டு இருக்கார் அதை பத்தி எல்லாம் பெருசா யாரும் எழுதல…..எங்க நமக்கு தாத்தா உடுற அறிக்கை பத்தி பேச எழுத தான் இடம் நேரம் இருக்கு…..

  சிவாஜி படம் வரைக்கும் ரஜினி எப்படியும் அரசியலுக்கு வருவார் அவராவது ஒரு alternate ஆக இருப்பார்னு நம்பிக்கை இருந்துச்சு அந்த நம்பிக்கை குசேலன் படத்து ஒரு dialogue ல போயிருச்சு, அந்த டயலாக் அப்றோம் தூக்கபட்டது வேற விஷயம்…….ஆனா அதுல தெளிவா தெரிஞ்சு போச்சு ரஜினி வர மாட்டார்னு…..

  இப்போ மறுபடியும் ஒரு நப்பாசை அட்லீஸ்ட் வைகோ, தமிழருவி மணியன், pmkla இருந்து வெளிய வந்துருக்காரே பேர் ஞாபகம் இல்ல (கொஞ்சம் நம்பிக்கை தரார்) இவகுளுக்கு எல்லாம் ரஜினி ஆதரவு தந்தா நல்ல இருக்குமேன்னு….ஆனா இவர் கருணாவையும் ஜெயாவையும் காமராஜர்
  அண்ணா கூட ஒண்ணா வச்சு பாத்துட்டு இருக்கார்……

  இந்த தளம் ஆரம்பிச்ச காலத்துல இருந்து follow பண்ணிட்டு வரேன்…பெருசா கமெண்ட்ஸ் போட மாட்டேன் நான் போட்ட first கமெண்ட் கருணா govt ஐஸ்வர்யா ரஜினிக்கு கலைமாமணி கொடுத்த வினோ பெருசா போட்டுருந்தார்…அந்த award கொடுத்த அப்றோம் தான் அவர் பரத dancernu வெளிய தெரியும்….அப்போ சொனேன் இது வெறும் அரசியலுக்கு கொடுத்த அவார்ட், ரஜினி careful ஆ இருக்கணும்னு…..

 17. Kumar

  Kumar says:
  Your comment is awaiting moderation.
  September 16, 2012 at 6:36 am
  அப்றோம் கொஞ்சம் கொஞ்சமா இந்த தளமும் pro DMK stand எடுத்துட்ட மாதிரி ஒரு feel அன்னா ஹசாரே போராட்டத்தின் பின்னாடி இருந்தது அரசியல் மட்டுமேனு அடிச்சு சொன்ன இந்த தளம் கருணாவின் டெசோ நாடகமும் அப்படியே என்று சொல்லவே இல்லை….கருணா ஈழத்தில் எல்லாம் முடிஞ்ச அப்றோம் வடிக்கும் முதலை கண்ணீர் பத்தி பேசாம அந்த ஆள் விட்ட அறிக்கை எல்லாம் publish பண்ணிட்டு இருந்துச்சு….

  நான் சொல்றது இதான் கருணாவுக்கும் ஜெயாவுக்கும் ஆட்சியை மாத்தி மாத்தி கொடுத்தது போதும் இவகள மாதிரி இல்லாம நல்ல அரசியல்வாதிகள் இருக்காங்க…அவங்களை பத்தி எழுதி பேசி ஆதரவு கொடுப்போம்….
  ஜெயா புராணம் பாட ஜெயா டிவி இருக்கு கருணா புராணம் பாட பல டிவி இருக்கு….ஆனா நல்ல
  தலைவர்களை பத்தி எழுத பெருசா எந்த mediaavum இல்ல….அதுக்கான தளமா இது இருந்தா நல்லா இருக்கும்….

 18. தினகர்

  இவ்வளவு விளக்கம் எல்லாம் கொடுக்கிறத பார்த்தா, பல பாஷைகளில் பந்தாடும் நான் அவனில்லை தான் ஞாபகம வருகிறது :

  குமார் அண்ணாச்சி ரொம்பவும் கஷ்டப்பட்டு தெக்கத்தி பாஷையிலே பேசுறாக. ஆனாலும் நேட்டிவிட்டி இல்லையே . டயலாக் என்ற பெயரில் ராவணன் படத்தில் சுகாசினி, தெக்கத்தி பேச்சு நடையை கடிச்சு குதறன மாதிரி தானே இருக்கு.

  ஒரு நாயகன் உருவாகிறான், புதிய பாதையில் நடை போடுறான் 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *