BREAKING NEWS
Search

நான் தலைவர் ரஜினியின் தீவிர ரசிகன்…. என்வழி தனிவழி! – எம்எஸ் தோனி

தோனி.. அல்டிமேட் ரஜினி ரசிகன்!

13d85f9e-3705-47b8-80f2-02730282fa2c

கேந்திர சிங் தோனி… இன்று நேற்றல்ல.. தன் கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்த நாளிலிருந்தே சூப்பர் ஸ்டார், அன்புத் தலைவர் ரஜினியின் தீவிர ரசிகன்.

எந்தத் தருணத்திலும் அதை வெளிப்படுத்தத் தயங்கியதில்லை.

ஒரு கிரிக்கெட் வீரனாக அல்ல… ரஜினி ரசிகனாகத்தான் அவர் சென்னை சூப்பர் கிங்ஸின் கேப்டனாக வந்தார், ரசிகர் மனங்களை அள்ளினார்.

இப்போது தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகியுள்ளது. M.S.DHONI UNTOLD STORY எனும் பெயரில் உருவாகியுள்ள அந்தப் படத்தின் விளம்பரப் பணிகளில் தோனியே நேரடியாக ஈடுபட்டுள்ளார்.

அதன் ஒரு பகுதியாக சென்னைக்கு வந்துள்ள அவர் நேற்று மாலை சத்யம் அரங்கில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

05ef1f0a-dd93-451e-ac8f-64443d8fa1df

அப்போது அவர் கூறியவை…

தமிழ்நாடு எனக்கு பிடித்த மாநிலம். அதனால் தான் சென்னை அணிக்கு தலைமை ஏற்றுக்கொண்டேன்.

இந்தியாவில் பல இடங்களில் உணவுகளை சாப்பிட்டது உண்டு. ஆனால் சென்னை பிரியாணி போல சுவையான பிரியாணி எந்த மாநிலத்திலும் சாப்பிட்டது கிடையாது.

தமிழக பெண்கள் உடை அணியும் விதம் அவர்களிடம்  எனக்கு  மரியாதையை  உருவாக்கியுள்ளது,” என்றவரிடம்… ‘தோனி உங்களுக்கு பிடித்த நடிகர் யார்?’ என்று ரசிகர்கள் கேட்டவுடன், உடனே தோனி  தோரனையுடன் எழுந்து நின்று சட்டையை கோதியபடி,  “நான்  சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகன் அவர் வழியை பின்பற்றுபவன்,” என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின்  ஸ்டைலில்  ‘என் வழி… தனி வழி’ என்று அவர் கூறவும் ரசிகர்கள் ஆர்பரித்தனர்.

-என்வழி




4 thoughts on “நான் தலைவர் ரஜினியின் தீவிர ரசிகன்…. என்வழி தனிவழி! – எம்எஸ் தோனி

  1. Raghul

    Thalaivar looks fabulous and much healthier than the day he returned from US.
    Helicopter King with (W)holi-wood King.. Amazing Picture.
    The Gems of Chennai shining the whole world…

  2. jegan N

    தோனி தலைவர் ரஜினிய பிடிக்கும்னு சொன்னதுக்கும்

    சத்தியராஜ் தலைவர் ரஜினிய பிடிக்காதுனு சொன்னதுக்கும்

    உள்ள நிறையா விஷயம் இருக்கு…

    அரசியல்……

  3. arul

    en thalaivar nallavar intha thamilnaatukkaka ivan veru maanilakaran endru sollum vimarsanathai kooda thalaivar intha kai seiyum uthaviyai antha kaikki theriyatha paarthu kolvaar.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *