BREAKING NEWS
Search

தர்மபுரி இளவரசன்: கண்ணெதிரே ஒரு கோரக் கொலை… கையாலாகாத சாட்சிகளாய் நாம்!

தர்மபுரி இளவரசன் கொலை… ஒரு கோரக் கொலைக்கு கையாலாகாத சாட்சிகளாய் நாம்…

ilavarasan (1)
ண்பர்களே… தர்மபுரி இளவரசன் ‘கொல்லப்பட்டது’ மனதை ரணகளமாக்கிவிட்டது. வாழ்நாளில் எதற்காகவும் இந்த அளவு கலங்கியதில்லை.

அவன் கொல்லப்பட்டது குறித்து கோர்வையாக கட்டுரை எழுதக் கூட திராணியில்லை.

ஃபேஸ்புக்கின் இன்று நான் பதிவிட்டவற்றை மட்டும் தொகுத்துத் தருகிறேன்.

Ilavarasan-2
ரு பத்திரிகையாளனாக இத்தனை ஆண்டு அனுபவத்தில் இவ்வளவு மனத்துன்பத்தை அனுபவித்ததில்லை.

அந்தப் பெண் நீதிமன்றத்தில் முன்னுக்குப் பின் முரணாகப் பேசிக் கொண்டிருந்த போதே நான் பயந்தது இந்தப் பையனை நினைத்துதான்.

மனதில் விழுந்த பெரிய அடியாக வலிக்கிறது. கண்ணெதிரில் ஒரு கோரக் கொலைக்கு கையாலாகாத சாட்சிகளாய் நின்று கொண்டிருக்கும் கேவலம்… நாமே நம் முகத்தில் துப்பிக் கொள்வதைப் போன்ற அருவருப்பு… என்ன வாழ்க்கைடா இது!

Ilavarasan-3
ளவரசன் மரணம் நிச்சயம் தற்கொலை அல்ல.. திட்டமிட்ட கொலையே. மூன்று முறை மூன்றுவிதமாக அந்தப் பெண்ணை பேச வைத்து, அதனால் மனமுடைந்து இளவரசன் தற்கொலை செய்து கொண்டதாக சித்தரிக்கும் சாதீய சதி இது.

‘திவ்யா மனம் மாறி வரும் வரை உறுதியாக இருப்பேன்… தற்கொலை செய்யும் அளவுக்கு நான் கோழையல்ல’, என்று இளவரசன் சொன்னதை நினைவில் கொள்ளவும்!

Ilavarasan-4
நாம் வாழும் சமூகம் எத்தனை குரூரமாக இருக்கிறது? எத்தனை பெரிய கொடூரத்தையும் சில நிமிட பொழுதுபோக்காகப் பார்க்கும் குரூர மனப்பான்மை எல்லோரையுமே பீடித்துள்ளது. அதனால்தான் இன்னும் தீண்டாமை எனும் கொடுமை இந்த நாட்டில் தொடர்கிறது.

இளவரசன் கொலை தலித் மக்களின் நிராதரவான நிலைக்கு ஆணித்தரமான சாட்சி.

பாட்டாளி மக்கள் கட்சி போன்ற இழிவான அமைப்புகளை தாங்கிப் பிடிக்கவும், அதன் செயல்களை ஆதரிக்கவும் இன்னும் மனிதர்கள் இருக்கிறார்கள் இந்த சமூகத்தில்.

கண்ணுக்குத் தெரியாமல் எத்தனை இளவரசன்களை எம் மக்கள் பலி கொடுக்கப் போகிறார்களோ!

தமிழர்கள் கடைசி வரை நினைவில் கொள்ள வேண்டியது… பாமக என்ற விஷமரமும் அதற்கு விதையூன்றியவர்களும் வேரோடும் வேரடி மண்ணோடும் அகற்றப்பட வேண்டிய ஆலகால விஷங்கள் என்பதே!

-அட ஜாதி வெறி பிடிச்ச மிருகங்களா… இப்ப அடங்கிருச்சாடா உங்க வெறி… இந்த சமூகத்தில் பிறந்ததை நினைத்து முதல் முறை வெட்கப்படுகிறேன்!

அடங்க மறு திமிறி எழு திருப்பி அடி – இதை வன்முறை என்று சொன்ன நாதாரிகளைத் தேடித் தேடி உதைங்கடா!

Ilavarasan-5
த்தனை பெரிய கோரத்தை ஒரு உச்சுக் கொட்டலோடுதான் கடந்து போகப் போகிறதா இந்த சமூகம்?

தலித் மக்களுக்கான சலுகைகளைப் பார்க்கும்போதெல்லாம் பொறாமையால் பொசுங்கி, அதில் சமத்துவம் கேட்ட கேடு கெட்டவர்களே.. இப்போதாவது புரிகிறதா அவர்களின் அவலம்?

சாதி வதையால் நொந்து வெந்து மெல்ல துளிர்க்கப் பார்க்கும் நேரத்தில் மீண்டும் உங்கள் ராட்சதப் பாதங்களால் அவர்களை நசுக்கத் துடிப்பதா சமூக நீதி?

சாதியின் கொடுமைகளை வெறும் எழுத்தாகப் பார்க்காதீர்கள்.

Ilavarasan-6
ரு தலித்துக்கும் வன்னியனுக்கும் அப்படி என்னடா சமூக வித்தியாசம் வந்துவிட்டது? அவன் அடிமையும் அல்ல.. நீ ஆண்டையும் அல்ல!

அவனும் கூலி வேலைக்குத்தான் போகிறான்.. நீயும் கூலிக்குத்தான் போகிறாய்… நூறு நாள் வேலைத் திட்டத்தில் இருவரும் சேர்ந்தேதான் மண் சுமக்கிறீர்கள்.. வரிசையில் நின்று கூலி பெறுகிறீர்கள்.

அவன் திண்ணும் அதே களி, கூழ் அல்லது சோறுதான் உனக்கும்.

நிறத்தில் கூட அவனுக்கும் உனக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை.

உணவில்? அவனைவிட நீதான் அதிக மாடுகளைக் கொல்கிறாய்…

அப்புறம் எங்கிருந்து எப்படி முளைத்தது உனக்கு மட்டும் வன்னிய சாதிக் கிரீடம்?

Ilavarasan-8
ஃபேஸ்புக், ட்விட்டரில் சாதிக் கொடுமைக்கு எதிராக இவ்வளவு பேர் பொங்குவது ஆறுதலாய்த்தான் உள்ளது. இந்தப் ‘பொங்கல்’ உங்கள் வீட்டிலும் ஒரு காதல் உருவாகும் போது தொடர வேண்டும். அப்போது கவுரவக் கொலைகளுக்கு கால்பிராண்டாமல் இருப்பீர்களாக!

di
ல்லா காதல்களிலும்-

முதலில் திறக்க மறுப்பது பெண்ணின் இதயமே.
திறந்து கலந்த பின் நிர்ப்பந்தங்களுக்கு முதலில் பணிந்து போவதும் பெண்ணே…
அதை வென்று நிற்கும் பெண் ஆயிரத்தில் ஒருத்திதான்.
மற்றவர்கள் திவ்யாக்களே!

இது பொது உண்மை மட்டுமல்ல, அனுபவமும் கூட!

Ilavarasan-10
பாதிப்பு தலித்துக்கு என்றால் எத்தனை சீக்கிரம் பிறக்கிறது 144… ! திருப்பியடிக்க வாய்ப்புக் கொடுத்துவிடக் கூடாது பாருங்கள்…

ஆனால்… மூன்று தலித் கிராமங்களும் அந்த மக்களின் வாழ்வாதாரங்களும் எரிந்து அழியும் வரை… தர்மபுரி மாவட்டம் முழுக்க வரவே இல்லையடா இந்த 144.

144-க்கு கூட இவ்வளவு தீண்டாமை தெரிந்திருக்கிறது..!

ilavarasan_1479295f
தாழ்த்தப்பட்டவனுக்கு மட்டும் அரசியல் ரீதியாக எந்த முக்கியத்துவமும் சமூகப் பாதுகாப்பும் இல்லாமலே போவதன் காரணம் என்ன?

அவனுக்கென்று தனித்த வாக்கு வங்கி இல்லாமை. அரசியல் விளையாட்டில் அவன் பேரம் பேச சக்தியற்றவன். எப்படியும் அவர்களின் வாக்கு ஏதாவது ஒரு திராவிடக் கட்சிக்கும், மீதி காங்கிரசுக்கும்தான் என்ற அரசியல் தெளிவு. இந்த தெளிவு இருப்பதால்தான், இத்தனை கேவலமான சாதி அரசியல் நடத்தும் ஒரு இழிபிறவியை கூட்டணிக்குத் துரத்திக் கொண்டிருந்தார் / இருக்கிறார் இந்தப் ‘பெரியவரும்!’

திருமா போன்றவர்களை கறிவேப்பிலைக்கும் சற்று கீழே பயன்படுத்திக் கொண்டாலும் பிரச்சினை வரப் போவதில்லை என்பதில் இன்னும் தெளிவாக இருக்கிறார்கள் இரு திராவிடக் கட்சிகளும்.

இந்த சாதி அரசியலை சாதியால்தான் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஒடுக்கப்பட்ட ஒவ்வொருவனுக்கும் தாரக மந்திரம்.. Educate! Organize! Agitate!

உயர்சாதிக்காரனாக இருந்து சாதி வேண்டாம் என்று சொல்லலாம். அது கவுரவம். பெருந்தன்மை. ஒரு தாழ்த்தப்பட்டவனுக்கு? தம்பி இளவரசன் ‘கொலை’ தாழ்த்தப்பட்டவனுக்கு சட்டரீதியான சமூகப் பாதுகாப்பை கோரி நிற்கிறது.. ஆம் கோரித்தான் நிற்கிறது… வற்புறுத்திக் கேட்க பெரும் வாக்கு வங்கி வேண்டுமடா… Educate! Organize! Agitate!

வினோ

 
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *