BREAKING NEWS
Search

தர்மபுரி திவ்யாவின் காதல் கணவர் இளவரசன் கொலை? – தண்டவாளத்தில் சடலம் கண்டெடுப்பு!

தர்மபுரி திவ்யாவின் காதல் கணவர் இளவரசன் கொலை / தற்கொலை? தண்டவாளத்தில் சடலம் கண்டெடுப்பு!

ilavarasan

தர்மபுரி: தர்மபுரியில் திவ்யா என்ற வன்னிய சாதிப் பெண்ணை காதலித்து மணந்து, பின்னர் சாதிய சக்திகளால் பிரிக்கப்பட்ட தலித் இளைஞர் இளவரசனின் உடல் இன்று தர்மபுரியில் தண்டவாளத்தில் சிதறிக் கிடந்தது.

சாதீய சக்திகளால் அவர் கொல்லப்பட்டாரா… அல்லது திவ்யா இன்று அளித்த பேட்டியால் தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தருமபுரி நாய்க்கன் கொட்டாயைச் சேர்ந்த திவ்யா கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார் இளவரசன். இதனை பாமக பெரிய அரசியல் சர்த்தை ஆக்கியது. அந்தப் பெண்ணின் தந்தை தற்கொலை செய்யத் தூண்டியதாகக் கூறப்பட்டது.

அவரது தற்கொலையைத் தொடர்ந்து பெரும் சாதிக் கலவரமே அரங்கேறியது தர்மபுரியில். மூன்று கிராமங்களைச் சேர்ந்த தலித்களின் வீடுகள் சூறையாடப்பட்டன. சொத்துகளை நாசமாக்கினர் வன்னியர்களும் பாமகவினரும். ஒரு தலித் கொல்லப்பட்டார். பலர் படுகாயமடைந்தனர். இன்னும் கூட இயல்பு நிலை திரும்பவில்லை தலித் மக்களின் குடியிருப்புகளில்.

இந்த நிலையில், பாமகவினரின் தொடர்ந்து முயற்சி செய்து திவ்யாவின் தாய் தேன்மொழி மூலம், இளவரசனிடமிருந்து திவ்யாவைப் பிரித்தனர். வன்னியர் அமைப்பின் வக்கீல்கள்தான் இதன் மூளையாக இருந்து வேலைப் பார்த்தனர்.
di
மூன்று முறை நீதிமன்றத்தில் ஆஜரான திவ்யா, முதலில் அம்மாவுடன் கொஞ்ச நாள் இருந்துவிட்டு பின்னர் இளவரசனுடன் சேர்வதாக சொன்னார். அடுத்து அம்மா சொன்னால் இளவரசனுடன் சேர்வதாக நீதிபதிகளிடம் கூறினார். இன்று, இனி இளவரசனுடன் சேர மாட்டேன். எனக்கு அவருடன் வாழப் பிடிக்கவில்லை என்று திட்டவட்டமாகக் கூறினார்.

இந்த நிலையில், இன்று தர்மபுரி அரசுக் கல்லூரி பின்புறம் உள்ள தண்டவாளத்தில் இளவரசன் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. சடலத்தை கைப்பற்றிய போலீசார், அவரை யாராவது சாதிய விஷமிகள் கொன்றுவிட்டார்களா அல்லது திவ்யாவின் முடிவு கேட்டு தற்கொலை செய்து கொண்டாரா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், தண்டவாளத்தின் அருகில் இருந்த அவரது இருசக்கர வாகனத்தில் இருந்த கைப்பையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். இளவரசனின் சட்டைப்பையில் 2 கடிதங்கள் இருந்தாகவும் கூறப்படுகிறது.

திவ்யாவை இப்படி கூறவைத்து, அதனால் இளவரசன் தற்கொலை செய்து கொண்டதாக சித்தரிக்க, சாதி வெறி பிடித்த சிலர் செய்த கொலையாக இது இருக்கக் கூடும் என்றே பலரும் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

-என்வழி செய்திகள்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *