BREAKING NEWS
Search

தங்க மகன்… சூப்பர் ஸ்டாரின் இன்னொரு ஹிட் படத் தலைப்பும் வீணானது!

thanga

னுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி படம் ஹிட்டடித்ததும், உடனே அதற்கு ஒரு இரண்டாம் பாகத்தை உருவாக்கப்போவதாக அறிவித்தார்.

இரண்டாம் பாகம் என்றால் ஏதாவது ஒரு விதத்தில் முதல் பாகத்துடன் தொடர்பிருக்க வேண்டும், சூர்யாவின் சிங்கம் மாதிரி.

ஆனால் இப்போது அதுபற்றியெல்லாம் யாரும் யோசிப்பது கூட இல்லை. பப்ளிசிட்டிக்காக இரண்டாம் பாகம் என்று அறிவித்துவிட்டு, சம்பந்தமே இல்லாத ஒரு கதையை எடுத்து வைத்திருப்பார்கள்.

இந்த தங்க மகனும் அப்படித்தான். ஆனால் காட்சி அமைப்புகளில் தனுஷின் பல பழைய படங்களின் சாயல். இடைவேளைக்குப் பிறகு தமிழ் சினிமா சீரியல்களுக்குப் போட்டியாகிவிடுகிறது படம்.

தனுஷை சில காட்சிகளில் ரசிக்க முடிகிறது. சில காட்சிகளில் எரிச்சலாக உள்ளது. எமி ஜாக்சன் பரவாயில்லை. சமந்தா சகிக்கவில்லை. கேஎஸ் ரவிக்குமாருக்கு இது புதிய தொடக்கம்.

பீப் பாட்டுக்காகச் சொல்லவில்லை… உண்மையிலேயே அனிருத்துக்கு இசை கைவரவில்லை.

ஏற்கெனவே பொல்லாதவன், படிக்காதவன், மாப்பிள்ளை என ரஜினி படத் தலைப்புகளை வீணாக்கி, ரஜினியின் அந்த ஹிட் படங்களை இணையத்திலிருந்து பின்னுக்குத் தள்ளிய தனுஷ், இப்போது தங்க மகனையும் அந்தப் பட்டியலில் சேர்த்துள்ளார்.

வேறொன்றும் சொல்வதற்கில்லை!

-என்வழி




2 thoughts on “தங்க மகன்… சூப்பர் ஸ்டாரின் இன்னொரு ஹிட் படத் தலைப்பும் வீணானது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *