BREAKING NEWS
Search

ஒரு சூரியன் ஒரு சந்திரன் ஒரே ஒரு தலைவன் சூப்பர் ஸ்டார்தான்! – இது தனுஷின் ட்வீட்

ஒரு சூரியன் ஒரு சந்திரன் ஒரே ஒரு தலைவன் சூப்பர் ஸ்டார்தான்! – இது தனுஷின் ட்வீட்

lingaa-dhanush

தீபாவளியன்று வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘லிங்கா’ பர்ஸ்ட் லுக் போஸ்டரைப் பார்த்து வியந்த தனுஷ், ‘ஒரு சூரியன் ஒரு சந்திரன் ஒரே ஒரு தலைவன் சூப்பர் ஸ்டார்தான்’ என்று புகழ்ந்துள்ளார்.

லிங்கா படத்தின் இரண்டாவது போஸ்டர் இது. முதல் போஸ்டர் சில தினங்களுக்கு முன் வெளியானது. பின்னர் சந்தானத்துடன் இருக்கும் இன்னொரு படம் வெளியானது.

தீபாவளியன்று ரசிகர்களுக்கு இனிய அதிர்ச்சி தரும் வகையில், கலெக்டர் ரஜினி கோட்டு சூட்டுடன் கம்பீரமாகத் தோன்றும் மூன்றாவது போஸ்டர் வெளியானது.

இந்த போஸ்டர் இணையதளங்கள் மற்றும் சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்தப் போஸ்டரைப் பற்றி நடிகரும் ரஜினியின் மருமகனுமான தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘ஒரு சூரியன் ஒரு சந்திரன் ஒரே தலைவன் சூப்பர்ஸ்டார் தான்’ என்று ரஜினியைப் புகழ்ந்து கூறியுள்ளார்.

லிங்கா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக அனுஷ்கா, சோனக்‌ஷி சின்ஹா நடிக்கிறார்கள். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.  இப்படத்தின் பாடல்கள் நவம்பர் மாதமும், படம் டிசம்பர் 12-ம் தேதியன்றும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *