முதல் பக்கம்    வணக்கம்!    ரசிகர் பக்கம்   தேர்தல்    புனைவுகள்    வணிகம்    நட்புடன்    சும்மா தமாசு    வீடியோ    இன்றைய கார்ட்டூன்    கேள்வி பதில்
  உலகம் சுத்தலாம் வாங்க!    நினைவுகளை மீட்டும் இசை!    இது எப்படி இருக்கு...!    அசத்தல் படங்கள்    ஃபிளாஷ்பேக்    எனது பக்கங்கள்    ஸ்போர்ட்ஸ்

ரஜினி சாருடன் நடிப்பதை நினைக்கும்போதே மனம் லேசாகிறது – தீபிகா படுகோன்

Friday, February 24, 2012 at 7:29 pm | 1,011 views

இந்தியாவின் மிகப் பெரிய சூப்பர் ஸ்டார், உலகமெல்லாம் ரசிகர்கள் கொண்ட ரஜினி சாருடன் நடிப்பது என் அதிர்ஷ்டம்! – தீபிகா

ரஜினி சாருடன் நடிப்பதை நினைக்கும்போதே மனம் லேசாகிறது. இந்தியாவின் மிகப் பெரிய சூப்பர் ஸ்டார், உலகமெல்லாம் ரசிகர்கள் கொண்ட ரஜினி சாருடன் நடிப்பது என் அதிர்ஷ்டம், என்று கூறியுள்ளார் தீபிகா.

ஆங்கிலப் பத்திரிகையொன்றுக்கு தீபிகா அளித்துள்ள பேட்டியில், “ரேஸ் 2 பட விவகாரம் சுமுகமாக முடிந்துவிட்டது. ஆனால் இப்போதும் சொல்கிறேன்… என் பக்கம் தவறில்லை.

நான் பிஸியாக இருந்த காலகட்டத்தில் ‘ரேஸ்-2′ நடிக்க தேதிகள் கொடுத்திருந்தேன். ஆனால் அவர்கள் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. படப்பிடிப்பு நடத்தாமல் ஒன்றரை ஆண்டுகள் இழுத்தடித்தனர்.

நானும் வேறு சில படங்களுக்கு தேதி கொடுத்ததால் நெருக்கடி ஏற்பட்டது. அப்போதுதான் ரஜினி சார் படமும் வந்தது. பெரிய வாய்ப்பு அது. எனவே அதற்கேற்ப தேதிகளை மாற்றினேன். ஆனால் கோச்சடையானுக்காகத்தான் ரேஸ் 2 வை விட்டதாகக் கூறுவது தவறு.

ஆனால் ‘ரேஸ்-2′ படத்தின் சார்பாக நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்தார்கள். இதற்கு நான் சங்கத்திற்கு நேரில் போய் விளக்கம் கூறிவிட்டேன்.

ஆனால் பின்னர் யோசித்துப் பார்த்தேன்.  எந்த பிரச்சினையும் வேண்டாம் என்பதால், மீண்டும் ரேஸ்-ல் நடிக்க சம்மதித்துவிட்டேன்.

சினிமா உலக சட்டங்களே தனி. எந்தப் பின்னணியும் இல்லாத பெண் நான்… வேறு வழியில்லை. பிரச்சினையை சுமூகமாக முடித்துக் கொண்டேன்.

கோச்சடையான் வாய்ப்பு பற்றி…

ரஜினி சாருடன் இணைந்து கேமராவுக்கு முன் நிற்கும் நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். நான் இன்றைக்கு எத்தனையோ பிரச்சினைகளைச் சந்தித்தாலும், ரஜினி சாருடன் நடிக்கிறேன் என்பதை நினைக்கும்போதே மனம் லேசாகிறது. காரணம் நான் அவரது மிகத் தீவிரமான ரசிகை.

படிக்கும் காலத்திலேயே பலமுறை அவரது படங்களைப் பார்த்துவிடுவேன். இந்தியாவின் மிகப் பெரிய சூப்பர் ஸ்டார், உலகமெல்லாம் ரசிகர்களைக் கொண்ட ரஜினி சாருடன் நடிப்பது என் அதிர்ஷ்டம். இன்றைக்கு அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் மிகப் பிடித்த பெண்ணாக நான் மாறியிருக்கிறேன். எத்தனைப் பேருக்கு இப்படி அமையும்..!,” என்றார்.

-என்வழி ஸ்பெஷல்

Related Posts with Thumbnails
© The content is copyrighted to Envazhi and may not be reproduced on other websites.

Comments

5 Responses to “ரஜினி சாருடன் நடிப்பதை நினைக்கும்போதே மனம் லேசாகிறது – தீபிகா படுகோன்”
  1. Simple Fan of Superstar! says:

    கவலைப்படாதேம்மா.. அதான் நம்மாளு ஆகிட்டீங்களே. இனி எல்லாம் நல்லதே நடக்கும்.

  2. Manoharan says:

    ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம். ரஜினியுடன் நடிக்கும் எல்லோரையும் எங்களுக்கு பிடிக்காது தீபிகா. ஆனால் உங்களை பிடித்திருப்பது உண்மைதான்.

  3. Manoharan says:

    ரஜினியுடன் நீங்கள் நடிப்பதை விட அவரை பற்றிய உங்கள் பேட்டிகளுக்கும் கருத்துகளுக்கும் நாங்கள் ரசிகர்களாகிவிட்டோம்.

  4. Ram says:

    சூப்பர் ஸ்டார் படத்தைப் பார்த்தாலே போதும்…
    இந்திய சினிமா மார்க்கெட்டில் யார் புதிய இளைய நடிகைகள் என்று…

  5. sam says:

    அமர்க்களம் சூப்பர் ஸ்டார்

Speak Your Mind

  Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)