BREAKING NEWS
Search

சிங்காரவேலன் கும்பல், ஜெயா டிவி உள்ளிட்ட 105 பேர் லிங்கா, ரஜினிக்கு எதிராக செய்தி வெளியிட தடை!

சிங்காரவேலன் கும்பல், ஜெயா டிவி உள்ளிட்ட 105 பேர் லிங்கா, ரஜினிக்கு எதிராக செய்தி வெளியிட தடை!

thalaivar poster

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியாகியுள்ள லிங்காவுக்கு எதிரான அவதூறு செய்திகளை (விமர்சனங்கள் அல்ல) வெளியிட ஜெயாடிவி, சன் டிவி உள்ளிட்ட 105 அச்சு மற்றும் காட்சி ஊடகங்களுக்கும், சிங்கார வேலன் உள்ளிட்ட 9 நபர்களுக்கும் பெங்களூரு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

லிங்கா படம் வெளியான நான்காவது நாளிலிருந்து அந்தப் படத்துக்கும் ரஜினிக்கும் எதிராக திட்டமிட்ட பிரச்சாரத்தை சிலர் மேற்கொண்டனர். அவர்களில் முதன்மையானவர் சிங்காரவேலன் என்பவர். படம் வெளியான முதல் வாரமே, தெரு முனையில் நின்றுகொண்டு படத்துக்கும் ரஜினிக்கும் எதிராக பேட்டிகள் கொடுக்க ஆரம்பித்தார் இவர்.

பெரும் தொகையைச் செலவழித்து பிரஸ் மீட் வைத்து இந்தப் பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

இப்படிப் பிரச்சாரம் செய்தே படத்தைக் கொன்றுவிட்டதாக சிங்காரவேலன் உள்ளிட்டோர் மீது தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் குற்றம்சாட்டினார்.

இந்நிலையில் படத்துக்கு நஷ்ட ஈடு கோரி பிச்சை எடுக்கும் அளவுக்குப் போய்விட்டனர் லிங்கா விநியோகஸ்தர்கள். அத்தோடு, லிங்காவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கிறார் என்று குற்றம்சாட்டப்பட்ட நடிகர் விஜய்யின் பிரியாணி விருந்திலும் பங்கேற்று போட்டோவுக்கு போஸ் கொடுத்து, அதை ஊடகங்களிலும் வெளியிட்டார் சிங்காரவேலன். தொடர்ந்து விஜய்யின் மக்கள் இயக்கத்தில் சேர்ந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இன்றைக்கு, லிங்கா மற்றும் ரஜினிக்கு எதிராக அரங்கேறிய அத்தனை நடவடிக்கைகளும் தனி மனிதரின் வேலையல்ல, திட்டமிடப்பட்ட கூட்டுச் சதி என்று பலரும் பேச, எழுத ஆரம்பித்துள்ளனர்.

இந்த நிலையில், சிங்காரவேலன் மற்றும் அவரைச் சார்ந்த 9 பேர், 100-க்கும் மேற்பட்ட பத்திரிகை, டிவி மற்றும் இணையதளங்கள், இனி லிங்கா படம் குறித்து எதிர்மறையாகப் பேசவோ, சிங்காரவேலன் போன்றோர் தரும் அவதூறுச் செய்திகளை வெளியிடவோ, படத்தின் நாயகன் ரஜினிக்கு எதிராக அவதூறு பரப்பவோ  கூடாது என பெங்களூரு நீதிமன்றத்தில் தடை பெற்றுள்ளார் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ்.

ஜெயா டிவி, சன் டிவி போன்ற டிவிக்கள், டைம்ஸ் ஆப் இந்தியா, தி இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற பத்திரிகைகளும் இதில் அடங்கும்.

-என்வழி
13 thoughts on “சிங்காரவேலன் கும்பல், ஜெயா டிவி உள்ளிட்ட 105 பேர் லிங்கா, ரஜினிக்கு எதிராக செய்தி வெளியிட தடை!

 1. Rajagopalan

  Too late…already damaged….
  But Puli padhunnguvadhu pay vadhurkuthan…
  Thalaivar sikiram singa padhai edupar…

 2. prabu

  லிங்கா’ திரைப்பட பிரச்னையில் தப்பித்தவறி விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் தொகை எதுவும் திருப்பி வழங்கப்பட்டால், அவர்கள் ஏற்கனவே கூடுதல் தொகை கொடுத்து படம் பார்த்த திரை ரசிகர்களுக்கு அந்தத் தொகையை திருப்பித் தர வேண்டும். – இப்படி ஒரு கோரிக்கையை, ’திரையரங்கிற்குச் சென்று திரைப்படம் பார்க்கும் தமிழ் ரசிகர்கள்’ என்ற பெயரில் ஒரு அறிக்கையில் சிலர் வைத்திருக்கிறார்கள்.

  மேலதிக தகவல்களுக்கு : http://www.seythigal.com/?p=5861

 3. Anumandhu

  இது கர்நாடகாவிற்குள் மட்டுமே செல்லுபடியாகும் என இங்கு விரைவில் சிங்கரவேளர்கள் அறிவிப்பார்கள்…. ஜெயா டிவி யும் முனைப்புடன் செயல்படும்…. ரஜினிக்கு ரசிகர்கள் பட்டாளம் இருந்தது உண்மைதான்… தற்போது எந்த அளவிற்கு என்பதை உணர முடிகிறது

 4. sk

  now theatre association secretary has issued statement supporting distributors and asking that thalaivar shud aplogise to media for the court injunction …if the law permits for such an action y shud someone aplogise for taking legal route…
  everything they r doing looks to me like a master plan……they have all back up plans to continue to tarnish thalaivar…..definitely not just some actors..some big political parties seem to be behind the conspiracy….hope that truth will come out one day

 5. Rajini Fan

  இதே போல் சோசியல் மீடியா வில் யாரும் ஒரு திரைப்படத்தைப்பற்றி தவறாக விமர்சனம் பரப்ப கூடாது என்றும் தடை செய்ய வேண்டும். அவனவன் கோடி கணக்கில் பணம் முதலீடு செய்து படம் எடுத்தால் ஒரு கூட்டம் திருட்டு VCD போடுகிறது இன்னொரு கூட்டம் Net இல் ரிலீஸ் செய்கிறது.. இவர்களுடன் சோசியல் மீடியா விமர்சனமும் Distributor களின் சதி யும் சேர்ந்தால் பாவம் தயாரிப்பாளர்கள் காணமல் போய் விடுவார்கள்.

 6. Rajini Fan

  ஓர் படத்திற்கு மதிப்பெண் கொடுபதையும் தடை செய்ய வேண்டும்.

 7. Ganesh

  Sir,
  Dont publish the negative cooments about thaliavar.This court stratgy they should have done beforehand .Some un wanted elements wanted to fish in the troubled watres.Some Press also without any respect to court order publish them.I pray God for thalivars next succesful move in his venture. Which he undertakes as per Gods wish.

 8. elango

  Drogram seidhavaruke …indha poster vaasagam porundhum!
  Thiruvikaiyaadal …ungaluku mattum த
  Konjam special vilaiyadal !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *