BREAKING NEWS
Search

கார்ப்பொரேட் கொள்ளைக்காரர்கள்… அசராமல் ஆதரிக்கும் மக்கள்!

கோடீஸ்வர கொள்ளைக்காரர்கள்… அசராமல் ஆதரிக்கும் மக்கள்!


கொஞ்ச நாளைக்கு முன் இணையத்தையே கலக்கியது ஒரு யுட்யூப் வீடியோ. விஜய் டிவியில்  நடிகர் சூர்யா நடத்தும் ‘நீங்களும் சொல்லலாம், நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ என்ற நிகழ்ச்சி குறித்த எள்ளல் மிமிக்ரி.

கோடீஸ்வரனாக்குகிறேன் பேர்வழி என்று சொல்லிக் கொண்டு தனியார் தொலைக்காட்சிகள், செல்போன் நிறுவனங்கள் எப்படியெல்லாம் மக்களைக் கொள்ளையடிக்கின்றன என்பதை பல்வேறு திரைக்கலைஞர்கள் குரல்களில், சொல்லியிருந்தார்கள்.

அன்று அது ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியாகத் தெரிந்தாலும், அதிலிருந்த உண்மையின் சூட்டைத் தாங்க முடியாத தொலைக்காட்சியும் செல்போன் நிறுவனங்களுமாய்ச் சேர்ந்து அந்த வீடியோவையே யுட்யூபிலிருந்து அகற்ற வைத்தார்கள். பின்னர் வேறு வடிவில் அந்த வீடியோவை மறுவெளியீடு செய்திருந்தார்கள்.

அதில் சொல்லப்பட்டிருந்த விஷயம் இம்மி கூட மாறாமல் அப்படியே நடப்பதைக் குறிப்பிடவே இந்தக் கட்டுரை.

இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக எஸ்எம்எஸ் மூலம் பதிலளிக்க கேள்விகள் கேட்கப்படுகிறது.

இந்த கேள்விகள் எந்த அளவு கேனத்தனமாக அமையும் என்பதை பலரும் கிண்டலாக எழுதி வந்தனர். அதைவிடக் கேவலமாகவே இந்த நிகழ்ச்சியில் இப்போது கேள்விகள் கேட்கப்படுகின்றன.

சாம்பிள் ஒன்று:

இவற்றில் ஒருவர் செய்வதைப் பார்த்து மற்றவர் அப்படியே செய்வதை எப்படிக் குறிப்பிடுவீர்கள்?

நாய் அடிச்சான் காப்பி
கொசு அடிச்சான் காப்பி
ஈயடிச்சான் காப்பி
பேய் அடிச்சான் காப்பி

சாம்பிள் இரண்டு:

ஒரு கேள்வி கேட்டு முடிக்கும் முன் முந்திக் கொண்டு பதில் சொல்வதை இப்படி சொல்வார்கள்:

பலாக் கொட்டை
வால் நட்
முந்திரிக் கொட்டை
பாதாம் கொட்டை

சாம்பிள் 3:

திருமணத்துக்குப்பின் தம்பதிகள் கொண்டாடும் முதல் தீபாவளி பெயர் என்ன?

தலை தீபாவளி
கால் தீபாவளி
மூக்கு தீபாவளி
கை தீபாவளி

-இப்படித்தான் போகிறது அந்த ‘அறிவுப்பூர்வமான’ நிகழ்ச்சி. ஆக, அறிவுக்கு சம்பந்தமே இல்லாத நிகழ்ச்சி இது!

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்காக ஏழு தினங்கள் ஏழு கேள்விகளைக் கேட்டிருந்தார்கள். இந்தக் கேள்விக்கு எஸ் எம் எஸ் மூலம் பதிலளிக்கலாம். அதற்கு மட்டுமே நாலரை கோடி எஸ்எம்எஸ்கள் வந்ததாக பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஒரு எஸ்எம்எஸ்ஸுக்கு சராசரியாக ரூ 6 என்றாலும் எந்த அளவு அந்த தொலைக்காட்சியும் செல்போன் கம்பெனிகளும் மக்களிடமிருந்து அடித்துள்ள கோடிகள் எவ்வளவு என கணக்கிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்!

இதுதவிர நிகழ்ச்சியின் இடையே விளம்பரம் செய்வதில் கிடைக்கும் வருமானம், நிகழ்ச்சி ஏற்பாட்டுக்கு விளம்பர நிறுவனங்கள் தரும் செலவு என பார்த்தால் மொத்தம் ரூ.45 கோடி முதல் ரூ.50 கோடி வரை கிடைக்கும் என்கிறார்கள்.

இதில் பங்கேற்க அழைப்பு விடுக்கும் நடிகருக்கு பெரிய அளவில் சம்பளம் (திநகரில் கட்டும் அரண்மனைச் செலவுக்கு பணம் வேண்டுமே!).

ஒரு டிவி இந்த நிகழ்ச்சியை அறிவித்து கல்லா கட்டியதைக் கண்டதும், இன்னொரு முன்னணி டிவியும் ஒரு கோடி என்ற மயக்க பிஸ்கட்டை மக்கள் முன் நீட்ட ஆரம்பித்துள்ளது.

டி.வி. சேனல்கள், அலைபேசி நிறுவனங்கள், தனியார் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கைகோத்து வெவ்வேறு பெயர்களில் லாட்டரிக்கு இணையான கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். எஸ்.எம்.எஸ். மூலம் நடத்தப்படும் இந்தப் பல கோடி ரூபாய் மோசடியை அரசு ஏன் வேடிக்கை பார்க்கிறது?

சரி.. அரசு கிடக்கட்டும்… பெரும்பாலும் கொள்ளையர்களைத்தான் அவர்கள் ஆதரிப்பார்கள். சமயத்தில் கொள்ளையர்களே அரசும் நடத்துவார்கள்.

மக்களுக்கு எங்கே போனது புத்தி… இந்த நிகழ்ச்சி அறிவிக்கப்பட்டபோது பலரும் எழுதினார்கள். தினமணி உள்ளிட்ட பத்திரிகைகள், ஒன்இந்தியா உள்ளிட்ட பிரபல இணையதளங்கள் பகிரங்கமாகவே கண்டித்தன.

ஆனால் மக்கள் அதைப் பற்றி கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. விரும்பிப் போய் கொள்ளையர் கல்லாவை அவர்களாகவே கல்லாவை நிரப்புகிறார்கள். இல்லாவிட்டால் இத்தனை விழிப்புணர்வு பரப்புரைக்குப் பின்னும் 4.5 கோடி எஸ்எம்எஸ்களை அனுப்பி, இந்த புது கொள்ளையர்களை ஊக்குவிப்பார்களா தமிழர்கள்!

இது வர்த்தகம்தான் என்றாலும்… மிக சாமர்த்தியமாக மக்களைச் சுரண்டும் மோசடி அல்லவா… இந்த நிகழ்ச்சியை அனுமதிக்கும் அரசு, ஆன்லைன் லாட்டரிகள், ஒரு நம்பர் லாட்டரி, லாட்டரிச் சீட்டுகள், மூணு சீட்டு என பல்வேறு வகை சூதாட்டங்களையும் தாராளமாக அனுமதிக்கலாமே. பணம் சம்பாதிக்கும் குறுக்கு வழிகளில் இவையும் அடங்கும்தானே, என கோபக் கேள்விகள் எழுந்துள்ளன.

என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டுகளே.. நியாயமாக உங்கள் கவனைத்தை இந்த கார்ப்பொரேட் கொள்ளையர் பக்கம்தான் திருப்பியிருக்க வேண்டும்.. மனித உரிமை அமைப்புகள் கூட கேள்வி கேட்காது!

-என்வழி ஸ்பெஷல்
21 thoughts on “கார்ப்பொரேட் கொள்ளைக்காரர்கள்… அசராமல் ஆதரிக்கும் மக்கள்!

 1. Anbudan Ravi

  பணம் பண்ணும் இயந்திரமாக மாறிவிட்டார் சூர்யா. விளம்பரம், கடைகள் திறப்பு என்று விழுந்து விழுந்து பணம் பண்ணுகிறார்….இருக்கட்டும் காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்று அவர் அப்பா சொல்லி இருப்பார் போலும். கார்ப்பொரேட் கொள்ளைக்காரர்களுக்கு இவரும் துணை போயிருப்பதுதான் வேதனை.

  அன்புடன் ரவி.

 2. குமரன்

  நேற்றிரவு channel surfing செய்தபோது அந்த ஈ அடிச்சான் காப்பியைப் பார்த்தேன். ஆஹா “எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்” என்பதை விடவும் கடினமான கேள்வி என்று சிலாகித்தேன்.

  இத்தனைச் சுடச்சுட இந்த சூடான பதிவு இரவே 11 .40 க்குப் போட்டிருக்கிறீர்களே, வினோ … hats off!

  மக்கள்தான் தொலைக்காட்சியின் ஆதிக்கத்தில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறார்களே … எப்படிப் புரியும்?

 3. Ravi

  அருமையான பதிவு. நம் மக்கள் திருந்துவது கடினம்.
  விஜய் டிவி நிகழ்ச்சிகள் மக்களின் உணர்ச்சியை செல்போன் காசாக்கி கொள்ளையடிப்பதில் காட்டும் கவனம் யப்பா

 4. srini

  its biz vino…u cant say its looting…looting means taking money from the public in fraudulent and forced way.

  Though the questions are very simple and sometimes awkward not showing true sense in knowledge delivery basis but then its only to pull more common people to participate rather than intellectuals….in this way its not aiming for knowledge based show.

  Money making is not sin…they are not cheating…those who wish can sms and participate otherwise leave it.

  Comment about surya n all is very personal vino…he is doing his professional and making money in all forms ad and tv shows etc…whats wrong in that…even if we get opportunity we will do…he is not cheating others and building his house…its based on his effort and hard work he earn this fame….its very bad attitude to show our hatred-ness on those who make money.

  Lets not have negativity with those who grow and make money….its not sin

 5. ராசாமணி

  Lets not have negativity with those who grow and make money….its not சின்

  தம்பி ஸ்ரீனி மங்காத்தா ஆடி சம்பாதிக்கிறிக்கியோ.. பாவம் புண்ணியம் பத்தி எல்லாம் பேசுற..

 6. srini

  Mr.rasamani,

  There is lot diff between mankatha and this show….in my opinion they are not cheating its pure biz like producing serial and shows…whats wrong in that? i don’t see any problem here…KBC went successfully with same format but with little more intellectual questions..apart from this nothing wrong.

  If your not interested…dont sms and dont watch…they are not forcing anybody to do the same…where is d question of cheating here?

 7. devaraj

  Hi Vino
  I do not think we can say that this is looting money.
  These are game shows which happen all over the world.
  All these programs are copied from the orginal version in UK or USA.
  The only unfortunate thing is that they are asking very low quality questions, which could be avoided.
  cheers
  Dev.

 8. naren

  ஆரம்பத்துல இப்டி ஈஸியா கேள்வி கேக்கறது வழக்கம் …… ஆனா அதுக்காக இப்டியா… இட்லி, பொங்கல் , மெதுவடை, காபி, நு ஒரே சரவண பவன் மெனு கேட்டு கிட்டு …. சூர்யா வுக்கு காமெடி வரும்னு இப்டியா … அய்யகோ ..

 9. karthik

  //மக்களுக்கு எங்கே போனது புத்தி…

  4 .5 கோடி முட்டாள்களா ?

 10. Manoharan

  இந்த நிகழ்ச்சியில் எந்த தப்பும் இல்லை. ஆனால் கேட்கப்படும் கேள்விகள்தான் எள்ளி நகையாடும் விதத்தில் உள்ளது. அமிதாப்பின் KBC யின் ரசிகன் நான். ஏன் என்றால் அதில் கேட்கப்படும் கேள்விகள் நம் பொது அறிவுக்கு தீனி போடும் விதத்தில் இருந்தது. இப்போது கூட ஜெயா டிவியின் ஜாக்பாட்டில் ஜாக்பாட் ரௌண்டில் கேட்கப்படும் கேள்விகள் நன்றாக உள்ளன. ஆனால் இது விஜய் டிவி ஏன் இப்படி தரம் தாழ்ந்த கேள்விகளை கேட்கிறார்கள். அவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கட்டும். ஆனால் பொது அறிவையும் கூடவே வளர்க்கலாமே ?

 11. Gopi

  விஜய் டிவி மக்கள் மீது அபார நம்பிக்கை. ஒரு SMS செய்தால் இவ்வளவு பணம் அல்லது பரிசு கிடைக்க வாயப்பு என்றால் மக்கள் நிச்சயம் ஏமாறுவார்கள் என்று நன்கு அவர்களுக்கு தெரியும். மேலும் அவர்கள் தொடர்களில் தங்களுக்கு சாதகமாக அல்லது sponsor இருந்தால் அதை அப்பட்டமாக விளம்பரம் செய்வார்கள். உதாரணம் நண்பன் படத்தை வைத்து ஒரு வாரம் அவர்களின் சரவணன் மீனாட்சி தொடரில் தேவை இல்லாமல் விளம்பரம். ஒரு celebrity அழைத்து அவர்கள் இரண்டு அல்லது மூன்று நிகழ்ச்சியில் கமிட் செய்து அதனை ஒளிபரப்பு செய்வார்கள். அது எது எது ப்ரோக்ராம் வந்தால் அடுத்த வாரம் அதே நபர் ஒரு வார்த்தை ஒரு லட்சம், சூப்பர் சிங்கர், முன் ஜென்மம்… இப்படி தொடரும். மெரினா படத்தின் டைரக்டர் பண்டிராஜ் ஒரு வாரம் அந்த சேனல் பணியாளர் போல் எல்லா நிகழ்ச்சிக்கும் வந்தார். விஜய் மற்றும் சூர்யா காசுக்காக எல்லா நிகழ்ச்சிக்கும்/ விளம்பரத்துக்கும் வருவார்கள் அவர்கள் செய்வதை தப்பு சொல்லவில்லை, மக்கள் அறியாமை தான் நமக்கு வருத்தம்.

 12. தினகர்

  KBC ஐ இப்படி ஒரு கேணத்தணமான கேள்வி கேட்கும் நிகழ்ச்சியோடு ஒப்பிடுவது மகா முட்டாள்தனம். அங்கே கேட்கப்படுவருக்காக, நிகழ்ச்சி நடத்துபவர்கள் பயணத்திற்கு பணம் கொடுத்து அழைக்கிறார்கள் .

  இங்கே நோகாமல் நொங்கு தின்பவன் போல், வலி தெரியாமல் பணத்தை சுரண்டுகிறார்கள்..

  ஒரு ரூபாய் – வந்தால் வீட்டுக்கு , இல்லையென்றால் நாட்டுக்கு என்று தான் லாட்டரி சீட்டுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அது எத்தனை ஏழை எளிய குடும்பங்களை சீரழித்தது என்று தெரியாதா?

  இந்த கேள்வியை காதால் கேட்பவனையெல்லாம் எஸ்.எம்.எஸ் அனுப்ப வைக்க வேண்டும், ஒருத்தன் கூட மிஸ் ஆகக்கூடாது. ஒரு கேள்வியிலேயே மொத்தமா பணத்தை சுருட்டிடனும்ங்கிற ஒரே நோக்கத்தில் தான் கேணத்தனமான கேள்வியை கேக்குறானுங்க. இதையும் அறிவுபூர்வமா ஆதரிப்பவர்களின் அறிவுத்திறனை பாராட்டித்தான் ஆக வேண்டும்..

  வலிக்காமல் , உழைக்காமல் சம்பாதிக்க நினைப்பவர்கள் இருக்கும் வரை இப்படிப்பட்ட கூட்டத்திற்கு பொழைப்பு நல்லாவே நடக்கும்..

 13. umarfarook

  என்ன வினோ சார்… ஏன் இந்த இரட்டை நிலை… நீங்கள் கூறும் நியாயங்களை பார்த்தால் சினிமா உலகமும் அதில் நடிகர்கள் பெரும் பெரும்சம்பளமும் பொது மக்களுடையது தானே…. பொது ஜனங்களுடைய பணம் தானே அவர்களுக்கு சம்பளமாக போகின்றது… சினிமாவையும் நடிகர்களின் வானளாவிய சம்பளத்தையும் எதிர்க்க நீங்கள் தயார் என்றால் உங்களின் இந்த கருத்தை நான் ஆதரிக்கின்றேன்…. இல்லை என்றால் ?

 14. Manoharan

  இங்கே சினிமா நடிகர்களின் சம்பாத்தியம் என்னவோ பொதுமக்கள் தருவது மாதிரி பேசுகிறார்கள். அவர்கள் அவர்கள் வேலையை செய்கிறார்கள், படம் பிடித்திருந்தால் மட்டுமே நாம் போகிறோம், அதாவது 3 மணிநேரம் நாம் சந்தோசமாக பொழுதை கழிக்க செலவு செய்கிறோம். சம்பத்தப்பட்ட நடிகர் தொடர்ந்து நல்ல படங்கள் நடித்தலோ, அல்லது அவரை நமக்கு பிடித்துவிட்டாலோ அவரது அடுத்த படத்தை பார்க்கிறோம். அவரி எல்லோருக்கும் பிடிக்கிறது அல்லது அவர் நல்ல படங்களில் நடிக்கிறார் என்று தெரிந்ததும் தயாரிப்பாளர்கள் அவரை வைத்து படமெடுக்க ஓடுகிறார்கள். ஒருவர் ஒரு கோடி சம்பளம் தர தயார் என்கிறார், இன்னொருவர் 3 கோடி என்கிறார், அடுத்தவர் 5 கோடி என்கிறார். எந்த மனிதனாக இருந்தாலும் தன உழைப்புக்கு அதிக பட்ச சம்பளத்தைதான் எதிபார்ப்பான். அவர்கள் வேலை அங்கீகாரிக்கப்பட்டு அதனால் சம்பளம் வாங்குகிறார்கள். ஆனால் இதெல்லாம் எடுபடவில்லை என்றால் எவனாவது அந்த நடிகரை சீண்டுவானா ? அவன் ஏன் 5 லட்சம் சம்பளம் மட்டுமே வாங்குகிறான் என்று யாராவது கேட்டதுண்டா ? உனக்கு பொழுது போக வேண்டும் ,காசு கொடுத்து படம் பார்க்கிறாய், அவ்வளவுதான்…என்னமோ இவர்கள் நேரடியாக சொந்த காசை நடிகர்களுக்கு தருவது போல் அல்லவா பேசுகிறார்கள். படமோ அல்லது அதில் நடித்த நடிகர், நடிகையோ பிடித்துப் போய்விட்டால் அந்த படத்தை திரும்ப திரும்ப பார்க்கிறார்கள். ஏன் ? சந்தோசமாக பொழுது கழிகிறது . அது உனக்கு என்ன ஓசியிலா கிடைக்கும்.

 15. சுதந்திரன்

  //இங்கே சினிமா நடிகர்களின் சம்பாத்தியம் என்னவோ பொதுமக்கள் தருவது மாதிரி பேசுகிறார்கள்//
  பொருளாதார சக்கர விதி படி பொதுமக்களின் சொந்த பணம் தானே தயாரிப்பாளரின் பண பையை சென்று அடைகிறது.
  பொதுஜனம் –> திரை அரங்கம் –> விநியோகஸ்தர் –> தயாரிப்பாளர் –> நடிகர்.
  இது தானே பணம் பயணம் செய்யும் முறை. மனோகர், இப்போது சொல்லுங்கள், நீங்கள் சொன்னது சரி தானா என்று.

 16. Gopi

  @ சுதந்திரன் – நீங்கள் மனோகர் அவர்களுக்கு கேட்ட கேள்வி அதற்கு என் பதில்…

  பொதுஜனம் –> திரை அரங்கம் –> விநியோகஸ்தர் –> தயாரிப்பாளர் –> நடிகர் -> பொதுஜனம் 🙂

  சினிமா நமக்கு பொழுது போக்கு… சினிமா டிக்கெட் வாங்குவோருக்கு குலுக்கல் முறையில் பரிசு என்றால் அது ஏமாற்று வேலை. அம் மாதிரி தான் இந்த SMS ஏமாற்று வேலை. இந்த SMS அந்நியன் படத்தில் வருவது போல் ஐந்து பைசா , ஐந்து பைசா கொள்ளை அடித்தால் தப்பு மாதிரி என்று ஒரு வசனம் வருமே அது மாதிரி தான்.

 17. Gopi

  @ Srini – நீங்கள் சொல்வது எப்படி இருக்கு தெரியுமா, மது கடைகள் தெருவுக்கு தெரு இருந்தால் என்ன தப்பு நாம குடிகிரவர்களை தான் குறை சொல்ல வேண்டும் என்பது போல் இருக்கு. இங்கே நாம் குறை சொல்வது மக்களின் அறியாமை பயன் படுத்தி காசு திருடுவதை தான்.

  என்வழி இங்கே ஏன் சூர்யா ஒரு படத்துக்கு 15 கோடி சம்பளம் வாங்குறார் என்று கேட்கவில்லை. சூர்யா சுடர்மணி ஜட்டி விளம்பரத்தில் ஏன் நடிக்கிறார் என்றும் கேட்கவில்லை.

 18. ajith

  சூர்யா 7 ஆம் அறிவு நடிச்சி ௦ அறிவுக்கு போயிட்டாரு,யாரவது சூர்யா வை காப்பாத்துங்கோ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *