BREAKING NEWS
Search

கர்நாட தேர்தலில் காங்கிரஸ் மாபெரும் வெற்றி!

கர்நாட தேர்தலில் காங்கிரஸ் மாபெரும் வெற்றி!

indian-monument-images-vidhana_soudha

பெங்களூர்: கர்நாடகத்தில் பெருமளவு இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது.

7 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் இங்கு மீண்டும் பதவிக்கு வந்துள்ளது.

கர்நாடகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 118 தொகுதிகளில் இதுவரை வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் ஆட்சியமைக்கத் தேவையான அறுதிப் பெரும்பான்மைக்கும் கூடுதலான தொகுதிகளை அக்கட்சி வென்றுள்ளது.

மேலும் சில தொகுதிகளில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. எனவே இம்முறை ஆட்சியமைக்க யார் தயவையும் நாட வேண்டிய அவசியம் காங்கிரஸுக்கு ஏற்படவில்லை.

கர்நாடகத்தின் மொத்த தொகுதிகள் எண்ணிக்கை 224. இதில் ஒரு தொகுதிக்கு மட்டும் வாக்காளர் மரணம் காரணமாக தேர்தல் நடை பெறவில்லை. மற்ற தொகுதிகளில் நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. இன்று காலை வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.

ஆரம்பகட்ட வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியமைக்கத் தேவையான அளவுக்கு இடங்கள் கிடைக்குமா என்பதே சந்தேகமாகவே இருந்தது. ஆனால், வாக்கு எண்ணிக்கை கடைசி கட்டத்தை எட்டுகையில் காங்கிரசுக்கு அதிக இடங்கள் கிடைத்துவிட்டன.

ஆட்சியைப் பிடிக்க 112 இடங்கள் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் கட்சி 118 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

அடுத்த இடத்தை தேவ கெளடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் பிடித்துள்ளது. அந்தக் கட்சி 40 இடங்களைப் பிடித்துள்ளது. இதன்மூலம் ஆளும் கட்சியான இருந்த பாஜக மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. அந்தக் கட்சி 38 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது.

எதியூரப்பாவின் கர்நாடக ஜனதா கட்சி 8 தொகுதிகளிலும், ரெட்டி சகோதரர்களின் வலது கரமான ஸ்ரீராமுலுவின் தனிக் கட்சி 3 இடங்களிலும் வென்றுள்ளன. சுயேச்சை உள்ளிட்ட மற்றவர்கள் 15 இடங்களைப் பிடித்துள்ளனர்.

-என்வழி செய்திகள்




2 thoughts on “கர்நாட தேர்தலில் காங்கிரஸ் மாபெரும் வெற்றி!

  1. anbudan ravi

    காங்கிரஸ் வெற்றி என்று சொல்வதைவிட பி.ஜே.பி தனக்குத்தானே கொள்ளி வைத்துகொண்டது என்ற தலைப்பு மிகப்பொருத்தமாக இருக்கும்.

    அன்புடன் ரவி.

  2. குமரன்

    காங்கிரஸ் ப.ஜ.க.வுக்கு நன்றி சொல்ல வேண்டும்!

    பதினான்கு வருடங்களுக்குப் பின் காங்கிரஸை கர்நாடகாவில் காலூன்ற வைத்ததன் காரணம் எதியூரப்பா தலைமையில் ரெட்டி சகோதரர்கள் அடித்த கொள்ளையும், அதைக் கட்டுப் படுத்தாத பா.ஜ.க. தலைமையும்தான். சுரண்டல் ஊழல் என்ற நிலை போய் சுரங்க ஊழல் என்ற நிலைக்கு மாநிலத்தை உயர்த்திய ரெட்டி சகோதரர்கள், ஆந்திரக் காங்கிரஸ் முன்னாள் முதல்வர் ஒய். எஸ்.ஆரின் புதிய வார்ப்புக்கள் என்றால் மிகை அல்ல. ஆந்திராவைச் சேர்ந்த இவர்கள் கர்நாடகாவில் சுரண்டியது (“சுரங்கியது” என்றும் சொல்லலாம்!) இவர்களின் “திறமையை” காட்டுகிறது.

    ஆந்திரா, கர்நாடகம், ஒரிசா, பீஹார், சட்டிஸ்கர், ஜார்க்கண்ட் என்று எங்கெல்லாம் இன்னமும் தாதுப் பொருள்களை ஆங்கிலேயர் சுரண்டாமல் விட்டு வைத்திருக்கிறார்களோ அங்கெல்லாம் நமது அரசியல்வாதிகள் இப்போது கொள்ளை அடிக்கிறார்கள். கர்நாடகத்தில் பா.ஜ.க என்ற போர்வையில் கொள்ளை அடித்தவர்கள், பிற மானிலங்களில், காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் (சரத் யாதவ்-நிதீஷ் கட்சி), ராஷ்ட்ரிய ஜனதா தளம் (லாலு கட்சி) ஆகியவற்றின் ஆதரவுடன் கொள்ளை அடிக்கிறார்கள்.

    இவற்றில் ஆந்திராவிலும், ஒரிசாவிலும் காங்கிரசின் கொள்ளை கொடி கட்டிப் பறக்கிறது.

    இதனால்தான் இந்தப் பகுதிகளில் நக்சலைட்டுகளின் ஆதிக்கமும் வளர்ந்து வருகிறது.

    ஊழலின் பரிணாம வளர்ச்சியே ஆயுதம் ஏந்திய போராட்டமும் வன்முறையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *