BREAKING NEWS
Search

ரஜினி சூப்பர் ஸ்டாரா இருக்கார்னா, அதை சுத்தியிருக்கிறவங்க சந்தோஷமாவா பாக்கிறாங்க? – கவுண்டமணி

ரஜினி சூப்பர் ஸ்டாரா இருக்கார்னா, அதை சுத்தியிருக்கிறவங்க சந்தோஷமாவா பாக்கிறாங்க? – கவுண்டமணி

கைச்சுவை சக்கரவர்த்தி எனப் புகழப்படும் கவுண்டமணி பொதுவாக யாருக்கும் பேட்டி கொடுத்ததில்லை. பல வருடங்களுக்கு முன்பு எப்படியோ விகடன் அவரிடம் பேட்டி வாங்கிவிட்டது. அதை இப்போது வெளியிட்டுள்ளனர். அதன் ஒரு பகுதி இது:

“நடிக்க வந்தது எப்படி…?”

“நமக்குச் சொந்த ஊரு உடுமலைப்பேட்டை. சினிமாவுக்கும் நமக்கும் ரொம்ப லாங்கு! வீட்ல விவசாயம் பார்த்தாங்க. அவங்க யாரும் ‘டாக்கீஸ்’ பக்கம்கூடப் போனதில்லே. சின்ன வயசுல நடிக்கணும்னு வெறி எனக்கு! காமெடியா, வில்லனா, ஹீரோவா… அதெல்லாம் முடிவு பண்ணலே! நடிகனாயிடணும்; அதான் லட்சியம். 12 வயசுல நாடகக் கம்பெனியில சேர்ந்தேன். பாய்ஸ் கம்பெனியிலேர்ந்து ஜோதி நாடக சபா வரைக்கும் எல்லாத்துலயும் இருந்தேன்; எல்லா வேஷமும் போட்டேன். கூச்சம், பயமெல்லாம் போய், நம்மால முடியும்கிற தைரியம் வந்தது. அப்பதான் சினிமா சான்ஸும் வந்தது!”

“பதினாறு வயதினிலே’ படத்தில் கண்ணெல்லாம் சுருங்கிப்போய், கன்னத்து எலும்பெல்லாம் நீட்டிக்கிட்டு இருக்கும் உங்களுக்கு! அதாவது, வறுமை..?!”

(சட்டென்று இடைமறித்து) “அதெல்லாம் சும்மா! வறுமையாவது ஒண்ணாவது..! சினிமாவுக்கு முன்னாடிதான் நாடகத்துல இருந்தேன்னு சொல்றேனே… வேளாவேளைக்குச் சோறு; அதிகம் இல்லாட்டியும் பொழுதைத் தள்றதுக்குக் காசு கிடைச்சுக்கிட்டுதான் இருந்தது! வளர்ந்து பெரிய ஆளான பிறகு, ‘ஒரு காலத்துல பணத்துக்கு லாட்டரி அடிச்சேன்; துண்டு பீடிதான் பிடிச்சேன்’னு சொல்றது, இப்ப ஒரு ஃபாஷனாப் போச்சு! அதெல்லாம் நான் சொல்லமாட்டேன்!”

“செந்திலை நீங்க அத்தனை பாஷையிலும் திட்டியிருக்கீங்க… அடிச்சு உதைச்சிருக்கீங்க…”

“அது தானா அமைஞ்ச காம்பினேஷன்! செந்திலுக்கு ப்ளஸ் பாயின்ட்டே அவனோட அமைப்புதான்! என்ன சொன்னாலும் புரிஞ்சுக்காத மாதிரி அப்பாவியா நிப்பான். ஒரு மாறுதலா இருக்கட்டுமேனு ‘கலர் கம்பித் தலையா… அடுப்புச் சட்டித் தலையா… அரிசி மூட்டைக்கு அண்ட்ராயர் போட்ட மாதிரி வர்றான் பாரு’னு எல்லா மாதிரியும் திட்டியாச்சு. எதையும் மிச்சம் வெச்சதா தெரியலே! செட்டுக்குப் போயிட்டு, அவனைப் பார்த்ததுமே புதுசு புதுசா திட்டறதுக்கு எனக்கு வார்த்தைங்க தோணும்!”


“உங்களோட வளர்ச்சியில யாருக்குப் பங்கு உண்டு? உங்க காட்ஃபாதர் மாதிரினு யாரைச் சொல்வீங்க?”

“இது என்ன ‘மாஃபியா கேங்’கா, காட்ஃபாதர் இருக்கிறதுக்கு! ‘ஒருத்தன் வளர்றது இன் னொருத்தனுக்குப் பிடிக்காது’னு நான்தான் சொல்றேனே!

ரஜினி இவ்வளவு உயரத்துல இருக்காருன்னா, அவரைச் சுத்தியிருக்கிறவங்களுக்குச் சந்தோஷம்னா நினைக்கறீங்க? ‘சூப்பர் ஸ்டார்’னு புகழறாங்களே தவிர, சொந்தக்காரங்ககூட உள்ளுக்குள்ளே எரிச்சலோடதான் இருப்பாங்க. இதுதான் உலகம்..! இதுதான் எனக்கும்!”

நன்றி: விகடன்
10 thoughts on “ரஜினி சூப்பர் ஸ்டாரா இருக்கார்னா, அதை சுத்தியிருக்கிறவங்க சந்தோஷமாவா பாக்கிறாங்க? – கவுண்டமணி

 1. enkaruthu

  //வளர்ந்து பெரிய ஆளான பிறகு, ‘ஒரு காலத்துல பணத்துக்கு லாட்டரி அடிச்சேன்; துண்டு பீடிதான் பிடிச்சேன்’னு சொல்றது, இப்ப ஒரு ஃபாஷனாப் போச்சு! அதெல்லாம் நான் சொல்லமாட்டேன்!”//

  //ரஜினி இவ்வளவு உயரத்துல இருக்காருன்னா, அவரைச் சுத்தியிருக்கிறவங்களுக்குச் சந்தோஷம்னா நினைக்கறீங்க? ‘சூப்பர் ஸ்டார்’னு புகழறாங்களே தவிர, சொந்தக்காரங்ககூட உள்ளுக்குள்ளே எரிச்சலோடதான் இருப்பாங்க. இதுதான் உலகம்..! இதுதான் எனக்கும்!”//

  ஐயோ சார் என் காமெடி தலைவர் கவுண்டர் பேசும் பேச்சு எல்லாமே காமெடி பிளஸ் சிந்தனை தூண்டுவதுதான்.அது சினிமா ஆனாலும் சரி நேர் பேட்டி ஆனாலும் சரி அதுவும் ரஜினியை பற்றி கவுண்டர் அவர்கள் சொன்னது அவர் ஒரு தீர்கதரிசியாக சொன்னதாகவே நான் நினைக்கிறேன்.

 2. Manoharan

  இவர் இண்டர்வியூ கூட சிரிக்க வைக்கிறது.

 3. Venkateshan

  கவுன்டமணி எங்க ஊருகாரர் , அவர் உடுமலைபேட்டை க்கு என்ன செய்தாரோ இல்லையோ , இந்த பேட்டி மூலம் தனது ஊர் பெயரை சொல்லிவேட்டார்

 4. r.v.saravanan

  ரஜினி இவ்வளவு உயரத்துல இருக்காருன்னா, அவரைச் சுத்தியிருக்கிறவங்களுக்குச் சந்தோஷம்னா நினைக்கறீங்க? ‘சூப்பர் ஸ்டார்’னு புகழறாங்களே தவிர, சொந்தக்காரங்ககூட உள்ளுக்குள்ளே எரிச்சலோடதான் இருப்பாங்க. இதுதான் உலகம்..! இதுதான் எனக்கும்!”

  ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம் போல் சொல்லியிருக்காரு கவுண்டமணி சார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *