BREAKING NEWS
Search

வலியப் போய் உறவாடும் இந்தியா… திரும்பத் திரும்ப அவமானப்படுத்தும் இலங்கை…!

வலியப் போய் உறவாடும் இந்தியா… திரும்பத் திரும்ப அவமானப்படுத்தும் இலங்கை…!


டெல்லி: இலங்கை நமது நட்பு நாடு, உறவு நாடு, பாரம்பரிய நட்பு உள்ள நாடு என்று வாய் கிழிய இந்தியத் தலைவர்கள் பேசி வருகிறார்கள்.

ஆனால் மறுபக்கம் இலங்கையோ, இந்தியாவை பகை நாடாகவே பார்க்கிறது. இந்தியாவின் பரம விரோதியான சீனாவுக்கு ஒப்பந்தங்களையும் திட்டங்களையும் தூக்கிக் கொடுத்து வருகிறது. இலங்கையை கிட்டத்தட்ட சீனாவுக்கு திறந்திவிட்டிருக்கும் இலங்கை, புதிதாக சீனாவுடன் 16 முக்கிய ஒப்பந்தங்களை போட்டுள்ளது.

இலங்கையுடன் நெருக்கமாக இருக்கிறோம் என்று காட்டிக் கொள்ள ரொம்பவே மெனக்கெடுகிறது இந்தியா. ஆனால் இலங்கையோ சீனாவுடன்தான் ரொம்பவே உறவாடி வருகிறது. இந்தியாவுக்கு எந்தத் திட்டத்தையும் கொடுக்க யோசிக்கும் இலங்கை, சீனா கேட்டால் மட்டும் உடனே தூக்கிக் கொடுத்து விடுகிறது. இப்போது பாகிஸ்தான்தான் உண்மையான நட்பு நாடு என்று வேறு ராஜபக்சே முழங்கியிருக்கிறார்,

இந்தியா கேட்டு வந்த பல முக்கியத் திட்டங்களையும் தர மறுத்த இலங்கை அவற்றை சீனாவுக்கே கொடுத்து இந்தியாவை கடும் கோபத்தில் ஆழ்த்தி வருகிறது.

இந்த நிலையில் இலங்கைக்கு சமீபத்தில் சீனத் தலைவர் வூ பங்குவோ விஜயம் செய்தபோது முக்கியமான 16 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு இந்தியாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இவற்றில் பெரும்பாலானவை அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்களாகும். ஒப்பந்தங்களின் மொத்தத் தொகை 760 பில்லியன் அமெரிக்க டாலர்.

வூ பங்குவோ என்பவர் அதிபர் ஹூ ஜின்டாவோவுக்கு அடுத்த நிலையில் இருக்கும் கம்யூனிஸ்ட் தலைவர் ஆவார். ஈழத்தில் போரை இலங்கை முடித்த பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள முதல் சீன முக்கியத் தலைவர் இந்த பங்குவோ.

இந்த ஒப்பந்தங்கள் மூலம் ஆசியாவின் அற்புதமாக இலங்கை மாறும் என்றும் சீனா வர்ணித்துள்ளது. இது இந்தியாவுக்கு கவலை தரக் கூடிய விஷயம் என்பதில் சந்தேகமில்லை.

விசா விதி விலக்கு, கடலோர மேம்பாடு, பொருளாதாரம், தொழில்நுட்ப ஒத்துழைப்பு, ஏற்றுமதி, இறக்குமதி முதலீடுகள் உள்ளிட்டவை இந்த ஒப்பந்தங்களில் சில.

இவரது வருகைக்கு முன்பாக சீன பாதுகாப்பு அமைச்சர் லியாங் குவாங் லீ வந்து போயிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

இலங்கை மீது தாங்கள் வைத்துள்ள அரசியல் நம்பிக்கையை மேலும் ஆழப்படுத்துவது போல இந்த ஒப்பந்தங்கள் அமைந்துள்ளதாக சீனா கூறியுள்ளது. மேலும், சீனாவை மிகப் பெரிய சக்தியாக மாற்றும் வகையிலான ஒப்பந்தங்களாக இவை அமைந்துள்ளதாகவும் சீனா கூறியுள்ளது.

மறுபக்கம், ஒவ்வொரு ஆண்டும் சீனா- இலங்கை இடையிலான வர்த்தக அளவு அதிகரித்துக் கொண்டே போகிறது. 2011ல் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக அளவு 3.14 பில்லியன் டாலராக இருந்தது. இது அதற்கு முந்தைய ஆண்டை விட 49.8 சதவீதம் அதிகமாகும்.

இலங்கையில் நடந்து வரும் பல்வேறு முக்கியமான கட்டுமானப் பணிகளிலும் சீனாதான் முக்கியப் பங்காற்றி வருகிறது. பிற நாடுகளுக்கு, ஏன் இந்தியாவுக்குக் கூட இதில் இடமளிப்பதில்லை இலங்கை.

மேலும் மிகப் பெரிய அளவிலான திட்டமாக இருந்தால் முதலில் சீனாவைத்தான் நாடுகிறது இலங்கை. நட்பு நாடான இந்தியாவை அது கண்டு கொள்வதே இல்லை.

இலங்கையின் இந்த செயல் இந்தியாவை அவமானத்தில் நெளிய வைத்துள்ளது. ஆனாலும் இலங்கையை இந்தியாவால் கண்டிக்க முடியவில்லை. அப்படிக் கேட்டால், இந்தியாவுக்காக நாங்கள் போரை நடத்தினோம் என பந்தை திருப்பி அடிக்கிறார் ராஜபக்சே.

ஆனால் கொஞ்சமும் வெட்கமோ உள்ளார்ந்த தர்மமோ இல்லாமல் ராஜபக்சே இந்தியா வருவதும், அவருக்கு இந்தியா உபசாரம் செய்வதும் தொடர்கிறது.

விடுதலைப் புலிகள் என்ற சக்தி இருந்தவரை, சீனா, பாகிஸ்தான் என அத்தனை இந்திய விரோத நாடுகளும் முன்பக்கத்தையும் பின்பக்கத்தையும் மூடிக்கொண்டிருந்தது, இந்திய மூட அரசியல்வாதிகளுக்கு எப்போது புரியப் போகிறதோ!

-என்வழி செய்திகள்
5 thoughts on “வலியப் போய் உறவாடும் இந்தியா… திரும்பத் திரும்ப அவமானப்படுத்தும் இலங்கை…!

 1. குமரன்

  ///விடுதலைப் புலிகள் என்ற சக்தி இருந்தவரை, சீனா, பாகிஸ்தான் என அத்தனை இந்திய விரோத நாடுகளும் முன்பக்கத்தையும் பின்பக்கத்தையும் மூடிக்கொண்டிருந்தது, இந்திய மூட அரசியல்வாதிகளுக்கு எப்போது புரியப் போகிறதோ!///

  பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள்தான் இந்தியாவுக்கு தென்பகுதியில் மிகப் பெரும் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தார்கள் என்ற உண்மை இன்னமும் எந்த ஜன்மத்துக்கும் புரியவில்லை.

  அவர்கள் இருந்தவரைதான் தமிழ்நாட்டுக்கும், தமிழ் மக்களுக்கும் தில்லியில் இருந்து மரியாதை இருந்தது என்பதை இங்குள்ள தமிழர்களே உணரவில்லை.

  வினோவின் உடனடி கவனத்துக்கு ….. ஒரு நகைமுரண் (Irony )…..

  இந்தப் பக்கத்தில் உள்ள என்வழி விடியோவில் வருகின்ற விளம்பரக் குறும்படம் ……. shopping in Sri Lanka …. இலங்கை குறித்த சுற்றுலா விளம்பரம்.

 2. தினகர்

  எங்கே செல்லும் இந்த பாதை…………..

  ஒரு நல்ல முடிவை நோக்கி இந்தியாவின் பயணம் தொடங்கும் என்று நம்புகிறேன்..

 3. மு. செந்தில் குமார்

  அருமையான கருத்து. இதுபோல பல நேரங்களில் நமது தலத்தில் வருகிறது. அனால் எனக்குள்ள வருத்தம் இது எவ்வளவு மக்களை சென்றடைகிறது?

  இவ்வளவு அறிய விஷயங்கள் நெட்டை / நமது தளத்தை பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமா?

  குடத்துக்குள் உள்ள விளக்கு குன்றின் மீது ஏற / ஏற்ற ஆசை / அவசியமும் கூட.

 4. குமரன்

  //ஒரு நல்ல முடிவை நோக்கி இந்தியாவின் பயணம் தொடங்கும் என்று நம்புகிறேன்..//

  சான்சே இல்லை. இலங்கை விஷயத்தில் இந்தியா தனது தவறான கொள்கைகளால் நிறையவே இழந்து விட்டது.

  அனுபவம் இல்லாத ராஜீவ் காந்தி வெறுமனே இந்திராவின் மகன் என்ற ஒரே காரணத்துக்காக காங்கிரஸ் தனது தலைவராக ஏற்று நம் மக்களும் “அவங்க அம்மாவைச் சுட்டுக் கொன்னுட்டாங்க, பாவம் பய புள்ள என்ன செய்யும்” என்ரு ஏதோ அவர் வயித்துப் பாட்டுக்கு இல்லாமல் தெருவில் நின்றுவிடுவாரோ என்று எண்ணி அவருக்கு வாக்களித்து பிரதமாராகவும் ஆக்கி விட்டனர்.

  அவரோ ஜெயவர்த்தன என்ற கிழட்டு நரியிடம் ஏமாந்து இந்தியா இலங்கை ஒப்பந்தத்தைப் போட்டு அதனால் தன் உயிரை இழந்தார். தவறான ஒப்பந்தத்தால் செத்த அவரை ஏதோ நாட்டுக்குத் தியாகம் செய்தவர் போல உருவகப் படுத்தி காங்கிரஸ் குளிர் காய்ந்து கொண்டிருக்கிறது. “உலகத் தமிழினத்தின் ஒப்பற்ற ஒரே தலைவர்” கருணாநிதியும் சோனியாவைத் தியாகத் திருவிளக்கு என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்லி மகிழ்ந்தார்.

  சோனியாவோ தனது சொந்தப் பழிக்காக அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவிக்க ராஜபக்சேக்குத் துணையாக பக்கபலமாக நின்றார்.

  இப்படி இருக்க எப்போது நாடு நல்ல வழியில் போவது?
  நாடும் நல்ல வழி போகாது. இவர்களும் நல்ல வழி போக மாட்டார்கள்.

  //இலங்கையை இந்தியாவால் கண்டிக்க முடியவில்லை. அப்படிக் கேட்டால், இந்தியாவுக்காக நாங்கள் போரை நடத்தினோம் என பந்தை திருப்பி அடிக்கிறார் ராஜபக்சே.///

  எப்படி ஜெயவர்தன நரித்தனம் செய்து ராஜீவை சிக்க வைத்து ஏமாற்றினாரோ அப்படியே ராஜ பக்சேயும் நரித்தனம் செய்தி சோனியாவையும் கருணாநிதியையும் ஏமாற்றி விட்டார். கருணாநிதி, (உண்மையாகவே ஏமாளித் தமிழர்) ஒப்புதல் வாக்குமூலம் தந்து விட்டார். “சொக்கத் தங்கம்” “தியாகத் திருவிளக்கு” “அன்னை” சோனியாவோ ஐரோப்பிய/ இத்தாலி ரத்தத்தில் ஊறிய சதிவலை பின்னுவதில் தேர்ச்சியான உண்மை குறித்துக் கவலைப் படாதவர், அவர் என்றும் இதை பகிரங்கமாக ஒப்புக் கொள்ள மாட்டார். அவரைப் பொறுத்த மட்டும் ராஜீவ் செத்ததற்குப் பழி வாங்கி ஆகி விட்டது, இப்போது செத்திருப்பது செத்துக் கொண்டிருப்பது அப்பாவித் தமிழர்கள்தானே அது பற்றி அவருக்கு என்ன கவலை?

 5. Amdan

  Nice Article வினோ …!

  ஆமா இந்திய அரசாங்கமும் இலங்கையோட சேர்ந்து கொடுரமா போரை நடத்தி அப்பாவி தமிழர்களையும், வஞ்சக சூழ்ச்சியால உண்மையான விடுதலை வீரர்களையும் கொன்னீங்க தானே, அதுக்கு தான் இப்போ ஆப்பு உங்களுக்கே திரும்பி வருது, இத தான் சொந்த செலவுல சூனியம் வச்சு கொள்ளுரதுன்னு சொல்லுவாங்க.

  ஆயிரம் தான் சொன்னாலும் மகிந்தவுக்கு இருக்குற தொலைநோக்கு பார்வையும், அரசியல் நுணுக்கமும் கொன்னுபோட்டாலும் இந்திய அரசியல்வாதிகளுக்கு வராது. இந்திய அரசியல்வாதிகள் பணத்துக்காகவும் பதவிக்காகவும் சொந்த நாட்டு மக்களையே விப்பானுங்க, ஏன் நாட்ட கூட கூறு போட்டு விப்பானுங், ஆனா மகிந்த எந்த காரனத்த கொண்டும் தாய் நாட்ட ஒரு நாளும் காட்டி குடுக்க மாட்டான். சுத்தி இருக்குற எல்லா நாட்டு காதுலயும் பூ சுத்துவனே தவிர சொந்த நாட்ட கூறு போட விடமாட்டான், இப்போ இந்திய கறிவேப்பிலை ஆகிடுச்சு , இனி அடுத்தது சீனா அதுக்கப்புறம் பாகிஸ்தான். இருக்கு மாப்பு எல்லாருக்கும் வரிசையா ஆப்பு ..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *