BREAKING NEWS
Search

கோச்சடையான் இசை வெளியீட்டு விழா.. சீனாவில் தயாரான 3 டி அழைப்பிதழ்கள்!

கோச்சடையான் இசை வெளியீட்டு விழா.. சீனாவில் தயாரான 3 டி அழைப்பிதழ்கள்!

Rajinikanth’s Kochadaiyaan Audio Release Date official Confirmed

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கோச்சடையான் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்காக சீனாவில் 3 டி அழைப்பிதழ்களை அச்சடித்துள்ளனர்.

கோச்சடையான் இசை வெளியீட்டு விழா வரும் மார்ச் 9-ம் தேதி சென்னை சத்யம் திரையரங்கில் நடக்கிறது. காலை 10.30 மணிக்கு நடக்கும் இந்த விழாவில் பாலிவுட்டின் சாதனை நடிகர் அமிதாப் பங்கேற்கிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன், படத்தில் நடித்த தீபிகா படுகோன் உள்பட அனைவரும் கலந்து கொள்கின்றனர். இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

சத்யம் அரங்கத்தில் அதிகபட்சம் 800 பேர் மட்டுமே அமர முடியும். திரையுலகினர் அனைவருமே இந்த விழாவில் பங்கேற்கவிருக்கின்றனர். எனவே ரசிகர்களை அனுமதிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மன்ற நிர்வாகிகள் சிலர் மட்டும் அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளது.

3 டி அழைப்பிதழ்கள்

இந்த விழாவுக்காக 3 டி அழைப்பிதழ்களைத் தயாரித்துள்ளது கோச்சடையான் குழு. அழைப்பிதழில் 3 டியில் ரஜினியின் உருவம் தெரிவது போல வடிவமைத்துள்ளனர். சீனாவில் வைத்து இந்த அழைப்பிதழ்களை உருவாக்கியுள்ளனர்.

rana copy1

கோச்சடையான் பாடல்கள் குறித்து கவிஞர் வைரமுத்து கூறும்போது, “கோச்சடையான்’ உலக படம். புதிய தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ளது. இதில் கிளைமாக்ஸ் பாடலை எழுதியது தனி அனுபவமாக இருந்தது. இந்த பாடலை ஏ.ஆர்.ரஹ்மானே பாடியுள்ளார்.

ஒவ்வொரு பாடலையும் கேட்டுப் பாராட்டினார் சூப்பர் ஸ்டார். தொழில்நுட்ப அளவில் இது புது மாதிரி படமே தவிர, மற்ற வகையில் எல்லா படங்களையும் போலவே அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களுடன் ரசித்து பார்க்கக் கூடிய படமாகவே இது இருக்கும்,” என்றார்.

-என்வழி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *