BREAKING NEWS
Search

இந்து நிர்வாகத்தில் மாற்றங்கள்… நிறுவனத்தின் தலைவரானார் என் ராம்!

இந்து நிர்வாகத்தில் மாற்றங்கள்… நிறுவனத்தின் தலைவரானார் என் ராம்!

hinduசென்னை: ந்து நிர்வாகம் மொத்தமாக மாறியிருக்கிறது. நிறுவனத்தின் தலைவர் மற்றும் வெளியீட்டாளராக என் ராம் பதவி ஏற்றிருக்கிறார்.

அவரது சகோதரர் என் ரவி மீண்டும் முதன்மை ஆசிரியராகியுள்ளார். இந்து ஆசிரியராக மாலினி பார்த்தசாரதி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை முதன்மை ஆசிரியராக இருந்த சித்தார்த் வரதராஜன் மற்றும் நிறுவனத்தின் சிஇஓ அருண் ஆனந்த் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

‘நிறுவனத்தின் நீண்ட கால பாரம்பர்யத்துக்கு பாதிப்பு ஏற்படும் விஷயங்கள் தொடர்ந்ததால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது,’ என ராம் விளக்கமளித்திருக்கிறார்!

தி இந்து ஆங்கில நாளிதழ் மற்றும் கஸ்தூரி அன்ட் சன்ஸில் மட்டுமே இந்த மாற்றங்கள் என்றும், நிறுவனத்தின் பிற நாளிதழ்கள் மற்றும் வார இதழ்களில் இப்போது உள்ள நிலை தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சித்தார்த் வரதராஜன் முதன்மை ஆசிரியராக இருந்த காலகட்டத்தில்தான் இந்துவில் ஈழச் செய்திகள் ஓரளவு நடுநிலையாக வந்ததாக கருதப்பட்டது. இப்போது மீண்டும் ‘லங்கா ரத்னா’ விருது பெற்றவரும் மகிந்த ராஜபக்சேவுக்கு நெருக்கமானவருமான ராம் மற்றும் அவர் சகோதரர் தலைமை ஏற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

-என்வழி செய்திகள்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *