BREAKING NEWS
Search

பட்ஜெட் எனும் சடங்கு.. இது மோடி அரசின் மிகப் பெரிய துரோகம்!

பட்ஜெட் எனும் சடங்கு!

modi_jaitley_380PTI

ட்ஜெட் என்பது வெறும் சடங்குதான். அந்த சடங்கையும் கூட கார்ப்பொரேட்கள் நலனுக்காகவே செய்வோம்’ என்பதில் தெளிவாக இருக்கிறது மோடி அரசு.

மக்களின் கல்வி மற்றும் சுகாதாரத் துறைக்குத்தான் முதலிடம் தருவோம் என்று காவியின் மீது சத்தியம் அடித்தவர்கள், இந்த பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் 15 சதவீதமும், கல்வித் துறைக்கான ஒதுக்கீட்டை 16 சதவீதமாகவும் குறைத்திருக்கிறார்கள்.

சர்வதேச அளவில் கல்வித் துறைக்கு ஒவ்வொரு நாடும் தனது மொத்த வருவாயில் (ஜிடிபி) 4.9 சதவீதத்தை ஒதுக்குகின்றன. ஆனால் உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகை கொண்ட இந்தியா ஒதுக்கு 3.3 சதவீதம்தான். இப்போது அதிலும் 16 சதவீதம் கட்..!

ஆனால் பெரும் நிறுவனங்களுக்கான வரியை 30 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக்கியுள்ளது மோடி அரசு. அவங்க கண்ணுல தூசி விழுந்திடக் கூடாதே… தேர்தலின் போது அவர்களிடம் வாங்கியதைத் திருப்பித் தரும் மோடியின் நன்றி விசுவாசமே இந்த பட்ஜெட்டில் அப்பட்டமாகத் தெரிகிறது.

இவை ஓரிரு சாம்பிள்கள்தான். மற்றபடி… சகல விதங்களிலும் ஏழை – நடுத்தர மக்களின் கண்களில் மிளகாய்ப் பொடி தூவும் கேடித்தனத்தைத்தான் மோடி அரசின் முதல் முழு பட்ஜெட்டில் பார்க்க முடிகிறது. அடுத்த நான்காண்டுகளில் இவர்கள் எப்பேர்ப்பட்ட கேடிகள் என்பது நூறு சதவீதம் இந்திய மக்களுக்கு தெளிவாகிவிடும். முந்தைய அரசாவது, மக்களுக்கு துரோகம் செய்கிறோமே என்ற குறைந்தபட்ச குற்ற உணர்வுடன் தவறுகள் செய்தது. இவர்களுக்கு அதுகூட இல்லை. வெளிப்படையாகவே துரோகத்தை அரங்கேற்றுகிறார்கள்.

இந்த பட்ஜெட்டுக்கு எல்லோரும் தோன்றியதை மதிப்பெண்களாகத் தந்திருந்தார்கள். எனக்குத் தோன்றியது -5/10!

மீண்டும் ‘ஒளிருது இந்தியா’..!

-வினோ
என்வழி
4 thoughts on “பட்ஜெட் எனும் சடங்கு.. இது மோடி அரசின் மிகப் பெரிய துரோகம்!

 1. குமரன்

  வினோ விஷயம் புரியாமல் கொட்டிவிட்டீர்களே?
  தேர்தலின்போது காவி மீது சத்தியம் என்பதெல்லாம் அரசியலுக்கு உகந்த வசனம், ஆராய்ச்சிக்கல்ல!!

  கார்ப்பொரேட் வரி தற்போதுள்ள 30 சதவிகிதத்திலிருந்து 25 சதவிகிதமாக படிப்படியாக 2016 முதல் நான்கு ஆண்டுகளில் குறைக்கப் படும் என்றுதான் சொல்லி இருக்கிறார்கள், உடனடியாகக் குறைத்து விடவில்லை.

  ஆனால், உடனடியாக கூடுதல் வரி என்ற பெயரில் 2% போட்டு விட்டார்கள். அவர்கள் 2016 முதல் தொடங்கி நாலு வருஷத்தில் கொடுக்கிறேன் என்று சொல்லி இன்றே எடுத்துக் கொண்டாரே என்று அழுகிறார்கள்!

  டைம்ஸ் நாளிதழில் முதல் பக்கப் பெட்டியில் பாருங்கள்:

  1 கோடி வருமானமுள்ள ஒருவர் கூடுதலாக 58000 வரி கட்டவேண்டும்,
  2 கோடி வருமானமா – கூடுதல் வரி 1 லட்சத்து 20 ஆயிரம்
  5 கோடி வருமானமா- கூடுதல் வரி 3 லட்சம்
  10கோடி வருமானமா – கூடுதல் வரி 6 லட்சம்.

  ஆக கார்ப்பொரேட்டுக்குக் குறைத்துவிட்டார்கள் என்று புலம்ப வேண்டாம் சரி.

  ஆனால் அடுத்த பக்கம் மக்களை உண்மையில் இடிப்பது எதுவென்றால் சேவை வரி 12.36 சதவிகிதத்திலிருந்து 14 சதவிகிதமாக உயர்த்தியதுதான் சரியான அடி.

  ஆனாலும் இதில் ஒரு முக்கிய விஷயத்தை ஒரு பொருளாதார சீர்திருத்தம் என்ற அடிப்படையில் பார்க்க வேண்டும்.

  உலகெங்கும், முன்னேறிய நாடுகள், பொருளாதாரத்தை நல்ல முறையில் ஒழுங்கு படுத்திய நாடுகளில், வருமான வரி போன்ற நேர்முகவரிகளும், கஸ்டம்ஸ், எக்சைஸ், வணிக வரி போன்ற மறைமுக வரிகளும் விதிக்கப்பட்டு வந்த காலம் மாறி வருகிறது. பல்வேறு நாடுகளில் வருமான வரி, ஏற்றுமதி இறக்குமதி வரிகள்/ கஸ்டம்ஸ், எக்சைஸ் வரிகள் உள்ளன. வணிக வரி இல்லை. தவிர, இந்தியாவில் பலகாலமாக சேவைகள் வரிக்கு உட்படவே இல்லை. பல நாடுகளில், வணிகவரி, ஆக்ட்ராய் இவை இல்லை. பதிலாக எல்லா பொருள் விற்பனையிலும் ஒருமுகமாக வாட் எனும் மதிப்புக் கூட்டு வரி மட்டுமே விதிக்கப் படுகிறது, இது சேவைகளுக்கும் பொருந்தும்.

  இந்தியாவில் அடுத்த ஆண்டு 2016 ஏப்ரல் முதல் எங்கும் வணிக வரி,அல்லது வாட் அல்லது ஆக்ட்ராய் கிடையாது. சேவை வரியும் கிடையாது. பதிலாக ஒரு முகமாக GST (Goods and Services Tax ) எனப்படும் ஒரே வரியாக பொருள்/சேவை வரி மட்டும் விதிக்கப்படும். உலகில் இந்த வரி குறைந்த பட்சமாக 20 சதவிகிதம் அளவு இருப்பதால், நம் நாட்டிலும் அந்த நிலை வருங்காலத்தில் எட்டப் படும். 2016 இல் GST வரும்போது அது 14 அல்லது 15 சதவிகிதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அதன் காரணமாகவே இப்போது சேவை வரி 14 ஆக உயர்த்தப் பட்டிருக்கிறது.

  இதில் ஒரு விஷயம் என்னவென்றால், வாட் போலவே GST இலும் முந்தைய நிலையில் ஏதும் GST கட்டி இருந்தால் சலுகை இருக்கும்.

 2. குமரன்

  //// இந்த பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் 15 சதவீதமும், கல்வித் துறைக்கான ஒதுக்கீட்டை 16 சதவீதமாகவும் குறைத்திருக்கிறார்கள்.

  சர்வதேச அளவில் கல்வித் துறைக்கு ஒவ்வொரு நாடும் தனது மொத்த வருவாயில் (ஜிடிபி) 4.9 சதவீதத்தை ஒதுக்குகின்றன.////

  இந்த ஒதுக்கீடு சதவிகிதங்களை விட்டு விட்டு, சரியான தொகை அடிப்படையில் பார்ப்பது ஒன்றே சரியான முடிவுக்கு இட்டுச் செல்லும்.

  முந்தைய அரசு சுகாதாரத்துக்கு என்று செய்த ஒதுக்கீட்டில் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் அடித்த கொள்ளையை ஒடுக்கி விட்டுப் பார்த்தால் அவர்கள் ஒதுக்கியது சுகாதாரத்துக்கு அல்ல, அவரவர் தாரத்துக்கும்(மனைவி), தரத்துக்கும்தான் (ஏனெனில் துணைவி வேறு உண்டே) என்பது புலப்படும். தற்போது வரும் தகவல்கள் மத்திய அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும் இப்போது முன்பு போல இல்லாமல், லஞ்சத்தை முன்னிறுத்தி முடிவெடுப்பதில்லை என்று மோடியை விரும்பாதவர்களே கூறத் துவங்கி உள்ளனர். இது உண்மையாக இருந்து தொடரும் பட்சத்தில் ஒதுக்கீடு குறைவு என்பது அரசுக்குச் சேமிப்பாகத்தான் இருக்கும், அது நல்ல விஷயம்தான். அதன் பலன் மறைமுகமாக மக்களுக்குக் காலப்போக்கில் வந்து சேரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *