BREAKING NEWS
Search

ஜஸ்ட் ரூ 3,250 க்கு கையடக்க கணிணி – பிஎஸ்என்எல் வழங்குகிறது!

ஜஸ்ட் ரூ 3,250 க்கு கையடக்க கணிணி – பிஎஸ்என்எல் வழங்குகிறது!

டெல்லி: பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். இப்போது தன் பங்குக்கு கையடக்க கணிகளை உருவாக்கியுள்ளது.

மலிவு விலையில் 3 மாடல்களில்  உருவாக்கப்பட்டுள்ள இந்த கையடக்க கணிணிகள் (Tablets), சர்வதேச அளவில் அனைத்து தயாரிப்புகளுடனும் போட்டியிடும் அளவுக்கு தரமானவையாக உருவாக்கப்பட்டுள்ளன.

பான்டெல் என்ற நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ள இவை, மத்திய அரசு வழங்கும் ஆகாஷ் டேப்லெட்டுக்கு போட்டியாக களமிறங்குகின்றன.

இவற்றுக்கு ரூ3,250, ரூ10,999 மற்றும் ரூ 13,500 ஆகிய விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

T-PAD IS701R:

இதுதான் மிகக் குறைந்த விலை மாடல். 2ஜிபி மெமரியும் 256எம்பி ரேமும் கொண்டது. இந்த 2ஜிபியை 32ஜிபி வரை அதிகரித்துக் கொள்ளும் வசதியும் உண்டு. 2 ஜிபி இன்டர்னல் மெமரியும் உண்டு. 7 இன்ச் ஸ்க்ரீன். விலை ரூ 3250.

T-Pad WS704C:


அடுத்த மாடல் இது. 1 GHz ப்ராசஸர், 512MB DDRIII ரேம் கொண்டது. இதை தொலைக்காட்சியுடன் இணைத்துக் கொள்ளலாம். இதுவும் 7 இன்ச் திரைதான். 4 ஜிபி இன்டர்னல் மெமரி, வை-பை, 2 மெகா பிக்சர் பின்பக்க கேமரா, 0.3 மெகா பிக்சல் முன்பக்க கேமரா என பல வசதிகள் உண்டு. விலை ரூ 10,999.

Penta TPAD WS802C:

பிஎஸ்என்எல்லின் காஸ்ட்லி டேப் இதுதான். 1.2 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் கொண்டது. 8 இன்ச் ஸ்க்ரீன், 512 எம்பி ரேம், 2.3 ஆன்ட்ராய்ட் ஓஎஸ், 4 ஜிபி இன்டர்னல் மெமரி, இருபுற கேமிரா வசதிகளைக் கொண்ட இந்த மாடல் விலை ரூ 13,500.

இவற்றில் எந்த மாடலை வாங்கினாலும், பிஎஸ்என்எல் இன்டர்நெட் டேடா கார்டு ரூ 750-க்கே கிடைக்கும். இதன் மூலம் 3 ஜி சிம் கார்டில் 5 ஜிபி வரையிலும், 2 ஜி சிம் கார்டில் 7.5 ஜிபி வரையிலும் பயன்படுத்தலாம். மாதக் கட்டணம் ரூ 250.

அனைத்து மாடல் டேப்களுக்கும் ஒரு வருட வாரன்டி உண்டு.

-என்வழி செய்திகள்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *