BREAKING NEWS
Search

பாபி சிம்ஹா ரஜினியாகிவிட முடியுமா? – டி சிவாவின் அதிரடி ‘அட்டாக்’

பாபி சிம்ஹா ரஜினியாகிவிட முடியுமா? – டி சிவாவின் அதிரடி ‘அட்டாக்’

 

ரு நடிகர் ஒன்றிரண்டு சுமாரான வெற்றிப் படங்களைக் கொடுத்த உடனே அவரை அடுத்த சூப்பர் ஸ்டார் என்று அழைக்கும் கெட்ட வியாதி தமிழ் சினிமாக்காரர்களைத் தொற்றி ரொம்ப காலமாகிவிட்டது.

இப்போது இந்த கெட்ட வியாதிக்காரர்கள் பிடித்து தொங்கிக் கொண்டிருப்பது பாபி சிம்ஹாவை. ஐ மேடையில் அர்னால்டின் சட்டைக் காலரை இழுத்து அசிங்கப்படுத்தி டென்ஷனாக்கி அனுப்பினாரே… அதே பாபி சிம்ஹாதான்.

இவரைப் பார்க்கும்போதெல்லாம், இவர் அப்படியே பில்லா, ரங்கா, ஜானி காலத்து ரஜினி மாதிரியே இருக்கிறார் (அட காமாலைக் கண்ணனுங்களா…) என்று மேடைக்கு மேடை சிலர் அடிக்கிற ஜால்ராவின் காது ஜவ்வு ‘அந்து’ போகிறது.

இவர்கள் தாங்களாகவே இப்படி உளறுகிறார்களா.. அல்லது இந்த பாபிதான் கூலிக்கு ஆள்வைத்துக் கூவ வைக்கிறாரா என்று கேட்கும் அளவுக்குப் போய்விட்டது நிலைமை. இப்படி இவர்கள் போட்ட ஜால்ராவில் மயங்கிப்போய், குரல், நடை, ஸ்டைல் என அனைத்திலும் ரஜினியைக் காப்பியடிக்க ஆரம்பித்துள்ளார் பாபி.

சமீபத்தில் நடந்த ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இதை நேரடியாகப் பார்த்து,  நங்கென்று ஒரு குட்டு வைத்திருக்கிறார் அம்மா கிரியேஷன்ஸ் டி சிவா.

சிவாவின் அந்தப் பேச்சுக்கு செம ரெஸ்பான்ஸ். பாபி சிம்ஹாவை ரஜினியுடன் ஒப்பிட்டுப் பேசியதை எந்த அளவுக்கு ஜீரணிக்க முடியவில்லை என்று காட்டுவதாக இருந்தது ரசிகர்களின் அந்த கைத்தட்டல்.

சிவா பேசியது இதுதான்:

இங்கு பேசுன எல்லாரும் பாபி சிம்ஹாவை அடுத்த ரஜினியைப் பார்க்குற மாதிரியிருக்குன்னு பேசுனாங்க.

ரஜினியாவறது அவ்வளவு சுலபம் இல்லங்க. அவரால் வாழ்ந்த தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்கள் தியேட்டர்காரர்கள் ஏராளம். அப்படியே தன் படம் நஷ்டப்பட்டாலும் அந்த நஷ்டத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிற பழக்கம் ரஜினிக்கு உண்டு.

இதையெல்லாம் பாபி சிம்ஹாவும் வளர்த்துக்கணும். அதற்குள் அவரை ரஜினி இடத்திற்கு வருவார் என்று கூறுவது பொருத்தமாகாது,” என்றார்.

‘பாபி சிம்ஹா ரஜினியாவாரா மாட்டாரான்னு ஜோசியம் சொல்றவங்க அப்படியே மனோபாலாவின் பாம்புச் சட்டை ஆபீஸ் பக்கம் போங்க… பாபி பத்தி அவர் புலம்பறதையும் கொஞ்சம் கேட்டுட்டு வாங்க’ – டி சிவா பேசியதைக் கேட்ட பிறகு, அருகிலிருந்த இயக்குநர் ஒருவர் அடித்த கமெண்ட் இது!

-என்வழி
One thought on “பாபி சிம்ஹா ரஜினியாகிவிட முடியுமா? – டி சிவாவின் அதிரடி ‘அட்டாக்’

  1. குமரன்

    சினிமாவில் தலையைக் காட்டி டான்ஸ் என்ற பெயரில் கையைக் காலை விலுக்கு விலுக்குன்னு வலிப்பு வந்தவன் மாதிரி இழுக்குறவன், காமெடி என்று வழிகிறவன், ஸ்டைல் என்ற பெயரில் இங்கும் அங்கும் அலைகிறவன் என்று போகிறவருகிறவன் எல்லாம் தான் ரஜினி என்று நினைத்துக் கொள்வதும் ஆளை வைத்து அலட்டிக் கொள்வதும் தாங்க முடியவில்லை.

    மூக்குக் கண்ணாடியை அட்ஜஸ்ட் செய்ததாலும், அல்லது தூக்கிப் போட்டாலும், ச்கரட்டைத் தூக்கிப் போட்டுப் பிடித்தாலும் வெறுமே இது எப்படி இருக்கு என்று கேட்டாலும் அதில் ஒரு தனித்துவமும் ஒரிஜினாளிடியும் இருந்தத நாட்கள் ரஜினியின் ஆரம்ப நாட்கள். அதாவது வந்த முதல் நாள் முதல் இன்று வரை ஒவ்வொரு புதிய ஸ்டைலும் தனித்துவமுமாக இருக்கும் ரஜினியின் தனித்துவத்தை யாராலும் பிடிக்க முடியாது. எல்லாவற்றையும் விட, எவரையும் காப்பி அடிக்காத தனித்துவம் அவருடையது. அவர் ஸ்டையிலைக் காப்பி அடிப்பதை விட, எவராவது ரஞ்சினியின் தனித்துவத்தைக் காப்பி அடித்து தனக்கென ஒரு தனித்துவத்தை வளர்த்துக் கொண்டால் உருப்படலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *