BREAKING NEWS
Search

ரஜினி எனும் யானையைத் தடவிப் பார்த்த குருடர்கள்!

IMG_0219

குருடர்கள் என்ற பதத்தை உபயோகிக்கக் கூடாதுதான். ஆனால் இது பார்வைத் திறன் குறைந்த மாற்றுத் திறனாளிகளைக் குறிக்க அல்ல… என்னதான் உண்மையெனத் தெரிந்தாலும், அதை ஏற்க மறுத்து வெற்றுப் பரபரப்பு, அன்றைய நாளின் பிழைப்புக்காக தொடர்ந்து வெவ்வேறு கற்பிதங்களைப் பரப்புபவர்களுக்கு இந்தப் பதம் சாலப் பொருந்தும் அல்லவா!

இன்று ரஜினி தன் ரசிகர்களை ராகவேந்திரா மண்டபத்தில் சந்தித்துப் படம் எடுத்துக் கொண்டார். இன்னும் நான்கு நாட்கள் சந்திக்கப் போகிறார்.

இந்த சந்திப்புக்கு முன் அவர் பேசியதை வைத்து, அவருக்கு பின்னால் வைக்கப்பட்ட பாபா முத்திரைக் குறியீட்டை வைத்து இப்போதே ஆளாலுக்கு கதைகள் கட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.

ரஜினி பேசியது நேர் கோணத்தில் என்றால், அதைக் கேட்ட, பார்த்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். தாங்களாகவே ஒரு அர்த்தம் கற்பித்துப் பேசி, எழுதி வருகின்றனர்.

‘ரஜினி அரசியலுக்கு வரவே மாட்டார்’

‘ரஜினி பாஜக துணையுடன் அரசியலுக்கு வரப் போகிறார். அதற்கு அடையாளம்தான் தாமரை மேலிருக்கும் பாபா முத்திரை’.

‘ரஜினி மீண்டும் ரசிகர்களை உசுப்பேற்றுகிறார்’

‘2.ஓவுக்காக இந்த சந்திப்பு’ (ரஜினியே அத்தனை வெளிப்படையாக இது பற்றிச் சொன்ன பிறகுமா இந்த கமெண்ட்… அந்தப் படம் வர இன்னும் ஒரு வருஷம் இருக்கேப்பா!)

‘ரஜினி மோடியை விட மோசம்… ஆதார், பான் கார்டெல்லாம் கேட்கிறார்’ (அவர் எப்போ, எதுக்குக் கேட்டார்.. விசாரிக்கவே மாட்டீங்களா?!)

‘திமுகவை மறைமுகமாக விமர்சிக்கிறார்’

‘என்னமோ திட்டம் போட்டுவிட்டார்… அதை சூசகமாகச் சொல்கிறார்’ (என்னன்னு கண்டுபிடிக்க துப்பில்ல…)

இன்னும் இப்படி நிறைய குருட்டாம்போக்கான கற்பனைகளைப் பரப்ப ஆரம்பித்துள்ளனர். அரசியல், பொது வாழ்க்கை என்று வந்தால் ஆயிரம் விமர்சனங்கள் வரத்தான் செய்யும். ஆனால் பகுத்தறிந்து பார்த்து விமர்சனங்களை வைக்க வேண்டும். குருட்டுத்தனமாக எழுதுபவர்கள்,  பேசுபவர்கள் என்னதான் விளக்கமாகச் சொன்னாலும் புரிந்து கொள்ள மாட்டார்கள். காரணம், எப்போதும் புரியாத மாதிரியே நடிப்பவர்கள். யாரிடமோ கேட்க வேண்டிய கேள்விகளை ரஜினியிடம் மட்டுமே கேட்டுக் கொண்டிருக்கும், காற்றில் கத்தி வீசும் வாய்ச் சொல் வீரர்கள்… விட்டுத் தள்ளுங்கள்!

-என்வழி
5 thoughts on “ரஜினி எனும் யானையைத் தடவிப் பார்த்த குருடர்கள்!

 1. Chenthil

  rightly said…. critics were the people doing the same thing for last 25 to 30 years… and unnecessarily twisting the Rajini’s speech to just to create the headlines daily. They never change and doesn’t want people to accept him… But if he is not worth for headlines, why are they reporting about him daily.. there are lots of issues which they dont report also.. very bad biased media towards Rajini.. Rajini never spoke bad about any one but still media is using his name to just get free advertisements… and thinking they are spoiling his name,

 2. jegan

  ரஜினி பிஜேபி கு ஆதரவாக சித்தரிக்க படுவதாலும் …முதுமையிலும் மவுசு kurayatha ரஜினி மீது பொறாமயினாலும் …அவர் வந்தால் தங்கள் எச்ச பொழப்பு நடக்காது என்ட பயம் காரணமாகவே எதிர்மறை கருத்துக்கள் கோழைகளால் பரப்பப்படுகிறது

 3. S Venkatesan

  தலைவருக்கு என்னதான் மக்கள் செல்வாக்கு இருந்தாலும் ரஜினியாக வாழ்வதே அவருக்கு பெரும் சுமை. பெரும்பாவிகளே துண்டு துக்கடா கட்சிகளை வைத்து கொண்டு விமர்சனம் செய்து அவரை நோகடிப்பார்கள்.

  நீங்கள் நன்றாக கவனித்தால் பெரும் வோட்டு செல்வாக்கு உள்ள அதிமுக திமுக காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அவரை அதிகமாய் விமர்சனம் செய்ய மாட்டார்கள். அதற்கு உண்மையான காரணம் அவரின் பெரும் மக்கள் செல்வாக்குதான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *