BREAKING NEWS
Search

அமர்த்தியா சென்னின் பாரத ரத்னாவைப் பறிக்கணும் – பாஜகவின் ‘சின்னப் புள்ளத்தனம்’!

அமர்த்தியா சென்னின் பாரத ரத்னாவைப் பறிக்கணும் – பாஜகவின் ‘சின்னப் புள்ளத்தனம்’!

Amartyasen

டெல்லி: குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்த பொருளாதார மேதை அமர்த்தியா சென்னுக்கு வழங்கிய பாரத் ரத்னா விருதை பறிக்க வேண்டும் என்று சின்னப்புள்ளத் தனமாக புலம்பியுள்ளது பாரதீய ஜனதா கட்சி.

இந்த கோரிக்கைக்கு எழுந்த கடுமையான கண்டனங்களைப் பார்த்து, ‘இது எங்கள் கட்சி எம்பி சந்தன் மித்ராவின் கருத்துதான். கட்சிக்கும் அதற்கும் சம்பந்தமில்லை,’ என திடீரென விளக்கம் அளித்துள்ளது.

நோபல் பரிசு பெற்ற பொருளியல் மேதை அமர்த்தியா சென், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மதச்சார்பற்ற இந்தியாவின் பிரதமராகும் தகுதியற்றவர். அவரை பிரதமராக ஏற்க நான் விரும்பவில்லை,” என்று கூறியிருந்தார்.

உடனே பாஜகவினர் அமர்த்தியா சென்னை கீழ்த்தரமாக விமர்சிக்க ஆரம்பித்தனர். பாஜகவின் எம்பியான சந்தன் மித்ரா, “அமார்த்யா சென், மோடி குறித்து கருத்து தெரிவிக்க உரிமை  இல்லாதவர். மோடி பிரதமராகக் கூடாது என்று எப்படி இவர் சொல்லலாம். அமார்த்யா சென்னுக்கு இந்தியாவில் வாக்குரிமையே கிடையாது…  அடுத்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் அவருக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதைப் பறிமுதல் செய்ய வேண்டும்,” என்று கூறியிருந்தார். பாஜக மேடைகளில் பலரும் இதே கோரிக்கையை முன்வைத்துப் பேச ஆரம்பித்தனர்.

மூன்று தினங்கள் மவுனம் காத்த பாஜக இப்போது, “சந்தன் மித்ராவின் கருத்துக்கும், கட்சிக்கும் தொடர்பு கிடையாது,”விளக்கியுள்ளது. இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், பாரத ரத்னா விவாதம் துரதிர்ஷ்டவசமானது. பாஜகவுக்கு இதில் தொடர்பில்லை. தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் சம்பந்தப்பட்ட எம்.பியுடையது. அது பாஜகவின் கருத்தாகாது என்று  கூறியுள்ளார்.

1999-ல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் பிரதமராக இருந்த வாஜ்பாயிதான் நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென்னுக்கு பாரத் ரத்னா வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

-என்வழி செய்திகள்
15 thoughts on “அமர்த்தியா சென்னின் பாரத ரத்னாவைப் பறிக்கணும் – பாஜகவின் ‘சின்னப் புள்ளத்தனம்’!

 1. தினகர்

  //1999-ல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் பிரதமராக இருந்த வாஜ்பாயிதான் அமர்த்தியா சென்னுக்கு நோபல் பரிசு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.//

  பாஜக ஆட்சியில் கொடுத்த காரணத்தினால், திருப்பி வாங்கிக்கொள்ள அவர்களுக்கு உரிமை இருப்பதாக நினைக்கிறார்களோ?

  ‘கொடுத்தவனே எடுத்துக் கொண்டாண்டி மானே’ என்று வரும், சிவாஜிக்காக சி.எஸ் ஜெயராமன் பாடிய ’தங்கப் பதுமை’ படப்பாடல் நினைவுக்கு வருகிறது 🙂

 2. மு. செந்தில் குமார்

  “பிரதமராக இருந்த வாஜ்பாயிதான் அமர்த்தியா சென்னுக்கு நோபல் பரிசு
  வழங்கினார் ”

  – பாரத் ரத்னா என்பது நோபல் பரிசு என பதிவாகியுள்ளதே.

 3. Krishna

  காங்கிரசின் திக்விஜய் சிங், சல்மான் குர்ஷித் போன்றவர்கள் கடந்த பல வருடங்களாக சகட்டு மேனிக்கு பேசி வருவதும், காங்கிரஸ் தலைமை “அது அவர்களின் தனிப்பட்ட கருத்து” என்று மறுத்து வருவதும் நடக்கவில்லையா? அந்த “உரிமை” பாஜகவுக்கு இல்லையா?

 4. Sathish

  //1999-ல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் பிரதமராக இருந்த வாஜ்பாயிதான் அமர்த்தியா சென்னுக்கு நோபல் பரிசு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.//
  ப்ளீஸ் கரெக்ட் பண்ணுங்க …அது பாரத் ரத்னா …நோபெல் பரிசு இல்ல 🙂

 5. mangustan

  1999-ல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் பிரதமராக இருந்த வாஜ்பாயிதான் அமர்த்தியா சென்னுக்கு நோபல் பரிசு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

  –சார் அது நோபல் பரிசு இல்லா!!! அது பாரத ரத்தினா !!
  ______________

  தவறுதான். திருத்தப்பட்டுவிட்டது. நன்றி.

  -என்வழி

 6. Ganesh Shankar

  //அமர்த்தியா சென்னின் பாரத ரத்னாவைப் பறிக்கணும் – பாஜகவின் ‘சின்னப் புள்ளத்தனம்’!//

  இது எங்களது கருத்து அல்ல.இதற்கும் எங்களுக்கும் பொறுப்பு இல்லை.திரு.சண்டன் மித்ராவின் தனிப்பட்ட கருத்து என்று பாஜக கூறி நாளாகிவிட்டது.செய்தியை திருத்தி கூற வேண்டாம்.

 7. தமிழன்

  மூணு நாள் மூடிகிட்டு இருந்த பாஜக, முதலுக்கே மோசம் ஆகிடும்ன்னு தெரிஞ்சி ஜகா வாங்கியிருக்கானுங்க. அதையும் சேர்த்துத்தான் செய்தியில் போட்டிருக்காங்க. அப்போ கூட ஜால்ராக்கூட்டத்துக்கு என்ன்மா கோவம் பொதுக்கிட்டு வருதப்பா. முழுசா படிச்சுகூட பாக்க நிதானம் இல்லே போலிருக்கு.

 8. Krishna

  வாஜ்பாய் சொன்னால் பாரத ரத்னா விருதை திருப்பி கொடுத்து விடுவதாக சொல்கிறார். அப்படியென்றால் பாரத ரத்னா விருது என்பது வாஜ்பாயின் தனிப்பட்ட சொத்து என்று சொல்ல வருகிறாரா? பாஜகவுக்கு இணையான “சின்னப்புள்ளத்தனம்” தான் இவர் பேச்சில் தெரிகிறது.

 9. தமிழன்

  ’வாஜ்பாய் தான் பரிந்துரைத்தார், அதைத் திருப்பித் தரவேண்டும் என்று அவரே விரும்பினால், ஏற்றுக்கொள்கிறேன்’ என்று தான் அதன் அர்த்தமே தவிர அதிலெ எங்கே சின்னப்புள்ளைத்தனம் வந்தது. பாஜகவில் , அவருடைய மரியாதைக்குரியவர் வாஜ்பாய் மட்டுமே என்று கூட எடுத்துக் கொள்ளலாம்.. அமர்த்தியா சென் நல்லவரா, கெட்டவரா என்பது இங்கே கேள்வியில்லை.

  மோடியை எதிர்த்து கருத்து சொன்னார் என்றவுடன் , நாங்க கொடுத்த அவார்டு அதை திருப்பித் தா என்று கேட்டார்களே, அவர்கள் தான் பாரத ரத்னா, அவர்களுடைய வீட்டு சொத்து என்று நினைத்த மகா சின்னப்புள்ளைத்தன்காரர்கள்.

 10. Krishna

  இரும்படிக்கும் உலைக்களத்தில் ஈக்கு என்ன வேலை? அதே போல் சம்பந்தமில்லாத விவகாரங்களில் மூக்கை நுழைப்பதற்கு இந்தியரே அல்லாத ஒருவருக்கு என்ன தகுதி இருக்கிறது? சகிப்புத்தன்மையற்ற ஒருவருக்கு பாரத ரத்னா விருது கொடுக்கப்பட்டதே தவறானது. அதுவுமின்றி நம் நாட்டின் உள் நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிட வலியுறுத்தி கையெழுத்து போட்டார்களே நமது மாண்பு மிகு பாராளுமன்ற உறுப்பினர்கள் – அவர்கள் செய்கையை ஒப்பிடும் போது பாஜகவின் செயல் ஒன்றும் அவ்வளவு சிறுபிள்ளைத்தனமானது அல்ல.

 11. தமிழன்

  இன்னைக்கு உலகமயமாகிட்டு இருக்கு. அமெரிக்கா அரசியலைப் பத்தி ஒபாமா, ராம்னின்னு இந்தியாக்காரங்க டிவியிலெயும், பத்திரிஅக்கையுலும் அலசி ஆராயும் போது, இந்திய அரசியல்வாதிகளைப் பற்றி வெளி நாட்டில் வசிப்பவர்கள் விமரிசிப்பதில் என்ன் தவறு. அவர்கள் சொன்ன கருத்தை பத்தி பேசுவதை விட்டு விட்டு, சொன்னவர் மீது தாக்குதல் நடத்துவது, சொல்லப் பட்ட கருத்தை வலுப்படுத்துகிறது. இது பாஜக ராஜாக்களுக்குகும் தெரியவில்லை, கூஜாக்களுக்கும் புரியவில்லை.

 12. மிஸ்டர் பாவலன்

  //இரும்படிக்கும் உலைக்களத்தில் ஈக்கு என்ன வேலை? // (கிருஷ்ணா)

  தி.மு.க. ஆதரவாளர்கள் பெரும் அளவில் இருக்கும் இந்த வலையில்
  நீங்கள் ஏன் பதிவு செய்ய வேண்டும் என இங்குள்ளவர்கள் பலர் சொல்லலாம்
  என்பதால் கூடுமான வரையில் நீங்கள் பதிலுக்கு பதில் என எழுதாமல்
  “வந்தோமா, போனாமா” என்று ரஜினி தகவல்களை படித்து சென்றால் நலம்!

  -== மிஸ்டர் பாவலன் ==-

 13. Krishna

  வெளிநாட்டு அரசியல் விவகாரங்களை வெறுமனே அலசினால் தவறு இல்லை. ஆனால் அந்நியர்களை நம் நாட்டு விவகாரங்களில் தலையிட அழைப்பது நம் நாட்டின் சுய மரியாதையை அடகு வைப்பதற்கு சமம். இதே மோடி 2005-ல் ஹரியானாவில் ஹோண்டா நிறுவனத்தில் நடந்த கலவரத்தை ஹரியானா காங்கிரஸ் அரசு கையாண்ட விதத்தை உள்ளூரில் பேசும் போது வன்மையாக கண்டித்தார். ஆனால் சில மாதங்களில் ஜப்பான் சென்றபோது அங்கு நடந்த மாநாட்டில் ஜப்பான் பிரதமர் அந்த பிரச்சினையை எழுப்பிய பொது காங்கிரஸ் மாநில அரசுக்கு ஆதரவாகவே பேசினார். அது போன்ற அரசியல் முதிர்ச்சி செக்யுலர்வாதிகள் என்று சொல்லிக்க்கொல்பவர்களுக்கு இல்லை.

 14. தமிழன்

  உலக்மே ஒன்னாகிட்டு இருக்கு. அடுத்தவன் சொல்றதில்லே உள்ள உண்மையை புரிஞ்சிகிட்டு சரிபண்ணிகிட்டா நமக்குத் தான் நல்லது. மோடியை விட்டா வேறு யாரும் இந்தியாவில் பிரதமருக்கு தகுதியானவர்கள் இல்லையா?. ஒன்னேகால் கோடி ஜனங்க இந்த ஒத்த ஆளை நம்பியா இருக்காங்க.. என்ன்மோ மோடி வந்துட்டா பாலும் தேனும் ரோட்டில் ஓடும்ங்கிற ரேஞ்சுக்கு கதை அடிக்கிறீங்க. போங்கப்பா, போய் குஜராத்தில் ஒரு மாசம் இருந்து நல்லா இருந்து பாத்துட்டு வந்து பேசுங்க. சும்மா பேப்பர் புலிகளாக இருக்காதீங்க.. பத்திரிக்கைகள் அனைத்தையும் மொத்தமா பேரம் பேசி, பாதிக்கும் மேலானதை மோடி சரிக்கட்டிவிட்டார். இனிமேல் செய்திகள் அவர் சார்பாகத்தான் வரும். பத்து பேர் வந்த கூட்டத்தையும் கோடிக்கணக்கானோர் திரண்டனர் என்ற செய்தியாகத்தான் வரும்.. அதையும் பாத்து இப்படி இண்டெர்னெட்டில் சந்தோசமா கமெண்ட் போட்டுகிட்டு இருங்க.. இனியும் இங்கே வெட்டியா எழுதுறத விட்டுட்டு நான் கெளம்புறேன்.

 15. Krishna

  “உலக்மே ஒன்னாகிட்டு இருக்கு. அடுத்தவன் சொல்றதில்லே உள்ள உண்மையை புரிஞ்சிகிட்டு சரிபண்ணிகிட்டா நமக்குத் தான் நல்லது. மோடியை விட்டா வேறு யாரும் இந்தியாவில் பிரதமருக்கு தகுதியானவர்கள் இல்லையா?. ஒன்னேகால் கோடி ஜனங்க இந்த ஒத்த ஆளை நம்பியா இருக்காங்க.. என்ன்மோ மோடி வந்துட்டா பாலும் தேனும் ரோட்டில் ஓடும்ங்கிற ரேஞ்சுக்கு கதை அடிக்கிறீங்க. போங்கப்பா, போய் குஜராத்தில் ஒரு மாசம் இருந்து நல்லா இருந்து பாத்துட்டு வந்து பேசுங்க. சும்மா பேப்பர் புலிகளாக இருக்காதீங்க.. பத்திரிக்கைகள் அனைத்தையும் மொத்தமா பேரம் பேசி, பாதிக்கும் மேலானதை மோடி சரிக்கட்டிவிட்டார்.”

  நீங்கள் ஹிந்து, Times of India, Deccan Chronicle, Times Now, CNN-IBN, News X, Headlines Today போன்ற ஊடகங்களை பார்ப்பதில்லை. அதில் மோடிக்கு மட்டும் பிரதமராவதற்கு தகுதி இல்லை என்று தான் கத்தி கொண்டிருக்கிறார்கள். இந்த லட்சணத்தில் மோடி ஊடகங்களை விலைக்கு வாங்கி விட்டார் என்று சொல்வது நல்ல ஜோக். பிரதமராவதற்கு மோடிக்கு மட்டும் தான் தகுதி இருக்கிறது என்று யாரும் சொல்லவில்லை. ஒவ்வொரு அமாவாசைக்கு டீசல் விலையையும் ஒவ்வொரு பௌர்ணமிக்கு பெட்ரோல் விலையையும் ஏற்றி, மக்கள் ஒரு நாள் சாப்பிடுவதற்கு 33 ரூபாய் போதும், அதனால் வறுமை ஒழிந்துவிட்டது என்று சொல்லி மக்கள் வயிற்றெரிச்சலை கொட்டி கொள்ளும் காங்கிரசை எதிர்க்கும் சக்தி பாஜகவிலேயே மோடிக்கு தான் இருக்கிறது என்பது தான் மக்கள் எண்ணம். அது உண்மையே என்பதை போல் காங்கிரசின் மக்கள் விரோத கொள்கைகளை அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ் போன்றவர்கள் எதிர்க்காமல் மெளனமாக இருக்கிறார்கள். கம்யுனிஸ்டுகள் கூட காங்கிரசின் செயல்பாடுகளை மோடியை விட அதிகமாக கண்டிக்கிறார்கள். இதை பார்க்கும் போது மக்களுக்கு 12 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி நடத்தி 3 தேர்தல்களில் கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையில் சீட்டுகளை வென்ற மோடியால் மட்டும் தான் காங்கிரசை தோற்கடிக்க முடியும் என்ற எண்ணம் இருக்கிறது. மோடி ஒரு வேளை ஆட்சிக்கு வந்து எதுவும் உருப்படியாக செய்யாவிட்டால் அவரையும் வீட்டுக்கு அனுப்பப்போவது இதே மக்கள் தான்.

  பத்து பேர் கூட்டம் வந்தாலும் கோடிக்கணக்கானோர் வந்தார்கள் என்று செய்திகள் போடுவது காங்கிரஸ் ஆதரவு மீடியா தான், அதுவும் காங்கிரஸ் அரசிடமிருந்து பத்ம பூஷன் விருது பெற்ற பர்கா தத் போன்றவர்கள் நடத்தும் மீடியா தான். அவர்களால் ஓரளவிற்கு மேல் உண்மையை மறைக்கவோ மறுக்கவோ முடியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *