பில்லா 2 – சிறப்பு விமர்சனம்
நடிப்பு: அஜீத், புருனா, பார்வதி ஓமணக் குட்டன், வித்யூத் ஜம்வால், சுதன்ஷா
ஒளிப்பதிவு: ஆர்டி ராஜசேகர்
இசை: யுவன் சங்கர் ராஜா
தயாரிப்பு: இன் என்டர்டெயின்மென்ட்
இயக்கம்: சக்ரி டோலெட்டி
முதலில் ஒரு விஷயம் தெளிவாக வேண்டும். அது அஜீத்தின் சமீப காலப் பேட்டிகள் மற்றும் நடவடிக்கைகள். அதில் ஒரு விஷயத்தை மட்டும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
‘என் படத்தைப் பற்றி மக்கள் பேச வேண்டும். அப்படித்தான் என் படங்கள் இருக்கும்’
-அஜீத் அவர்களே… இந்த பில்லா 2 படம் எடுத்து முடித்த பிறகு முழுசாக நீங்கள் பார்த்தீர்களா?
ஒரு டான் எப்படி உருவாகிறான் அல்லது உருவாக்கப்படுகிறான்… என்பதை அழகாகச் சொன்ன படங்கள் எதையாவது பார்த்திருக்கிறீர்களா… நீங்கள் நின்றால், நடந்தால், உட்கார்ந்தால், தாடி வளர்த்தால், விருது வாங்கினால்… ஏன் சாமி கும்பிட்டால் கூட ரஜினி வழியைப் பின்பற்றுகிறீர்களே…. அந்த ரஜினி நடித்த தீ படத்தைப் பார்த்திருக்கிறீர்களா… இல்லாவிட்டால், இந்த சக்ரியுடன் உட்கார்ந்து சில முறைகள் அந்தப் படத்தைப் பார்க்கவும்!
வெறும் விளம்பரங்கள், விநியோகஸ்தரின் பொய் விளம்பரங்கள் மட்டுமே ஒரு படத்தை தூக்கி நிறுத்திவிடாது. அழுத்தமாக இல்லாவிட்டாலும், அட்லீஸ்ட் ரசிக்கிற மாதிரியாவது ஒரு கதை இருக்க வேண்டும். பில்லா 2 ன் பிரச்சினையே அதுதான்.
தமிழ் சினிமாவில் அஜீத் என்ற நடிகனுக்கு அசைக்க முடியாத இடம் கொடுத்த படம் பில்லா. ரஜினி நடித்த படத்தின் ரீமேக்.
அந்தப் படத்தின் கதை எத்தனை வலுவானது. கொடூரமும், காதலும், மனிதாபிமானமும், நகைச்சுவையும் பின்னிப் பிணைந்த கதை. ஒவ்வொரு பாத்திரமும் அத்தனை அழுத்தமானவை.
ஈவிரக்கமில்லாத பில்லா, அதற்கு நேர்மாறாக மனிதாபிமானத்தின் உச்சமாய் நிற்கும் ராஜப்பா (ரஜினி), இன்பார்மர் என்றாலும் மனசாட்சியுள்ள ஜானி (தேங்காய் சீனிவாசன்), மிஸ்டர் ஜென்டில்மேன் அலெக்சான்டர் (கே பாலாஜி), இன்டர்போல் ஆபீஸர் கோகுல்நாத் (மேஜர்), அழகு, குரோதம், காதல் ததும்பும் ஸ்ரீபிரியா… இந்தப் பாத்திரங்களின் சுவாரஸ்ய கலைவைதான் பில்லா. அதுதான் அந்தப் பட வெற்றிக்கு முக்கிய காரணம்!
ஆனால் இந்த பில்லா 2-ல் அப்படி எதுவும் இல்லை!
சம்பந்தமில்லாத காட்சிகள், சரக்கில்லாத வண்டியின் சத்தம் போல வெற்று விளம்பரங்கள்… விளைவு.. தியேட்டரில் ஒரு அக்மார்க் அஜீத் ரசிகனே, தலையிலடித்துக் கொள்கிறான்!
கீழே நீங்கள் படிப்பது இன்னொரு தளத்துக்காக நான் எழுதிய விமர்சனம்… திருப்பி புதுசா எழுத மனசு வரல. இந்தப் படத்துக்கு இது போதும். அதனால படிங்க, திரும்ப!!
ஒரே ஒரு வரியை இறுதியில் சேர்த்திருக்கிறேன். விமர்சனத்தை படிச்சிட்டு அதையும் படிச்சிக்கங்க… கண்டிப்பாக அஜீத் ரசிகர்களைப் புண்படுத்த அல்ல இந்த விமர்சனம். ஒரு நம்பிக்கையில் இந்தப் படத்தின் சிறப்புக் காட்சிக்கு நண்பர் மூலம் ஏற்பாடு செய்தேன். அவர் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும்! அது தனி கதை!!
என்னதான் பணத்தைக் கொட்டி படமெடுத்து, அதற்கு வண்டி வண்டியாய் விளம்பரம் செய்தாலும், கதை என்ற தூண் வலுவாக இல்லாவிட்டால் என்ன ஆகும் என்பதற்கு அஜீத் குமார் நடித்துள்ள பில்லா 2 ஒரு சிறந்த உதாரணம்.
மேலும் சக்ரி டோலெட்டியின் இயக்க திறமை மீது ஆரம்பத்திலிருந்தே அஜீத் ரசிகர்கள் கொண்டிருந்த அவநம்பிக்கை நிரூபணமாகியிருக்கிறது.
படத்தை ஸ்டைலாக எடுக்க வேண்டும், கலர் டோன் இப்படி இருக்க வேண்டும், யாரும் போகாத இடத்துக்குப் போய் படமாக்க வேண்டும் என்று யோசித்தவர்கள், கொஞ்சம் வித்தியாசமான கதையாக சொல்லத் தவறிவிட்டார்கள்.
படத்தின் கதை? ஒரே வரியில் சொன்னால்… டேவிட் பில்லா நடக்கிறார்… திரும்பிப் பார்க்கிறார்… எதிரி என்றல்ல… எதிரில் வருகிறவர்களையெல்லாம் சுட்டுத் தள்ளுகிறார்… அல்லது கழுத்தை அறுக்கிறார். இது முடிவல்ல ஆரம்பம் என்று சொல்லும் போது படம் முடிந்தே விடுகிறது!
கதையின் ஆரம்பம் என்னவோ நன்றாகத்தான் உள்ளது. ராமேஸ்வரம் அகதிகள் முகாமில் ஈழத்து அகதியாக அறிமுகமாகும் அஜீத்துக்கு, ஒரே ஒரு அக்கா. ஆனால் அவருக்கு இவரது போக்கு பிடிக்கவில்லை. ஒரு சர்ச்சில் மகளுடன் வசிக்கிறார்.
அகதி முகாமில் அஜீத்துக்கு தொடர்ந்து தொல்லை தருகிறார் ஒரு இன்ஸ்பெக்டர். நாயகனில் வரும் போலீஸ்காரர் ரேஞ்சுக்கு அவர் இம்சை தொடர்கிறது. ஒரு வைரக் கடத்தலில் அஜீத்தை சிக்க வைத்து போட்டுத் தள்ளப் பார்க்கிறார். ஆனால் சுதாரித்துக் கொள்ளும் அஜீத்தும் அவர் நண்பரும் போலீஸ்காரர்களை போட்டுத் தள்ளிவிட்டு, வைரத்தை உரிய நபரிடம் (இளவரசு) ஒப்படைக்க, இவர்களின் தொழில் நேர்மையைப் பாராட்டி தொடர்ந்து வேலை தருகிறார்.
ஆனால் அடுத்த கட்டத்துக்குப் போக முயலும் அஜீத், போதை மருந்து கடத்தல், சட்ட விரோத ஆயுத பிஸினஸ் என்று போகிறார். மும்பை தாதா சுதன்ஷாவுடன் சேருகிறார். அடுத்த சீனிலேயே மும்பையிலிருந்து ஜார்ஜியாவுக்கு பயணமாகிறார்… (கடத்தல் பிஸினஸை (?) அடுத்த லெவலுக்கு கொண்டு போறாங்களாம்!)
அங்கே அட்டகாசமான வில்லன் வித்யூத் ஜம்வாலுடன் முதல் நட்பாகி பின்னர் விரோதியாகிறார். விரோதிகள் அனைவரும் இவரை போட்டுத் தள்ள முயல்கிறார்கள். ஆனால் இவர் மட்டும் எங்கும் சிக்கிக் கொள்ளாமல், மற்றவர்களை டப் டப்பென்னு சுட்டுக் கொண்டே இருக்கிறார். இனி சுட எதிரிகளே இல்லை என ரசிகர்களே முடிவு கட்டிக் கொண்டு எழ தயாராகும்போது, நல்ல வேளை படமும் முடிந்து போகிறது!
இந்தப் படத்தின் தவறுகளுக்கு பெரும்பான்மைப் பொறுப்பாளி இயக்குநர் சக்ரி டோலெட்டிதான். படம் முழுக்க அத்தனை ஓட்டைகள். லாஜிக் என்றால் வீசை என்ன விலை என்று கேட்கிறது திரைக்கதை.
அதிலும் அஜீத் ஒரு ஆயுத அசைன்மென்டை போலீசாரிடமிருந்து மீட்கும் காட்சி அபத்தத்தின் உச்சம்.
பார்வதி ஓமணக்குட்டனை எதிரிகள் தூரமாய் நிற்கவைத்துவிட்டு, புல்வெளியில் துப்பாக்கியை நீட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள். அப்போது விர்விர்ரென்று வருகின்றன பத்து கார்கள். பார்வதியை சுற்றிச் சுற்றி வர, அஜீத் சர்வ சாதாரணமாக கதவைத் திறந்து பார்வதியை உள்ளே உட்கார வைத்துக் கொண்டு போய்விடுகிறார். நீட்டிய துப்பாக்கி நீட்டியபடி நிற்க, அடியாட்கள் தேமே என்று நிற்கிறார்கள். படத்தில் காமெடியே இல்லை என்று யாரும் சொல்லிவிடக் கூடாது என்பதற்காக இந்தக் காட்சி போலிருக்கிறது!
இரண்டு காட்சிகளை உருப்படியாக எடுத்திருக்கிறார்கள். ஒன்று மராட்டிய முதல்வரும் அஜீத்தும் பேசிக் கொள்ளும் இடம்.
அடுத்து, அந்த பாட்டில் ஃபைட்!
அஜீத் நடந்து வந்தாலே போதும்… தலையை அப்படியும் இப்படியும் திருப்பி, நிதா….னமாக வசனம் சொன்னால் போதும்… சூப்பர் டான் என்று யாரோ தப்புத் தப்பாக சொல்லிக் கொடுத்துவிட்டார்கள். டான்களின் உலகம் என்ற கற்பனையை மறந்துவிட்டு, நிஜத்தில் அவர்களின் உலகத்தைப் பாருங்கள். சொந்த அக்கா செத்துப் போய்விட்டதாக போனில் செய்தி வர, ஏதோ சன்நியூஸில் செய்தி கேட்டமாதிரி அவர் பாட்டுக்கு தேமே என்று போகிறார் அஜீத்!
ஆனால், அந்த ஹெலிகாப்டர் சேஸிங் சான்ஸே இல்லை. அஜீத்துக்கு மகா தைரியம்!
பார்வதி ஓமணக்குட்டன் ஹீரோயினாம். எண்ணி நாலே முக்கால் சீன்கள் எட்டிப் பார்த்துவிட்டு இடைவேளையில் செத்துப் போகிறார். அந்த வகையில் இன்னொரு ஹீரோயின் புருனா அப்துல்லா பரவாயில்லை. க்ளைமாக்ஸ் வரை தம்மாத்துண்டு ட்ரஸ்ஸில் வத்தலாக வந்து கடைசியில் சாகிறார்.
அஜீத்துடன் நண்பராக வரும் நடிகர் அம்சமாக நடித்திருக்கிறார். அதேபோல சுதன்ஷு, வித்யூத் ஜம்வால் இரண்டு வில்லன்களுமே பின்னி எடுத்திருக்கிறார்கள். குறிப்பாக சுதன்ஷுவின் பாடி லாங்குவேஜ், நடிப்பு அனைத்துமே அபாரம்!
தொழில்நுட்ப ரீதியாக, ஒளிப்பதிவாளர் ஆர்டி ராஜசேகரின் உழைப்பு அபாரம். குறிப்பாக ஜார்ஜியா காட்சிகள் கண்களுக்கு வேறு உலகைக் காட்டுகின்றன.
மகா நிதானமாக நகரும் காட்சிகளை வேகப்படுத்த யுவனும் பகீரதப் பிரயத்தனம் எடுத்திருக்கிறார். அந்த பின்னணி தீம் மியூசிக் உண்மையிலேயே நன்றாக உள்ளது. ஆனால் பாடல்கள் ஒன்றுகூட நினைவில் இல்லை.
எடிட்டரும் இயக்குநரும் போட்டி போட்டுக் கொண்டு சொதப்பியிருக்கிறார்கள்.
அடுத்தமுறை அஜீத்திடம் கதை சொல்பவர்கள் தயவு செய்து அந்த ‘கோட்’டை சலவைக்கும், துப்பாக்கிகளை பழைய காயலான் கடைக்கும் போடுவது போல ஒரு சீன் வைத்தால் சூப்பராக இருக்கும்!
ஒரு சின்ன திருப்தி – இந்தப் படத்தை முதலில் எடுக்கவிருந்தவர் சௌந்தர்யா… அப்பாடா.. ரஜினி குடும்பம் தப்பிச்சது!
எஸ் ஷங்கர்
-என்வழி ஸ்பெஷல்
ஹா ஹா ஹா !!! கடைசி வரிகளுக்காக !! ஆனால் அஜித் தோற்பது உண்மையில் வருத்தமே !!
பில்லா 2 ..பிரேக் ரெகார்ட்ஸ் ஒப் பாக்ஸ் ஆபீஸ் …ரஜினி பாக்ஸ் ஆபீஸ் கடவுள் …அஜித் பாக்ஸ் ஆபீஸ் கிங்
ரஜினி சார் அன்பும் ஆசிர்வாதமும் அஜித்துக்கு எப்போதும் உண்டு
நன்றி, வினோ, சுடச் சுட (!!!!) விமரிசனத்துக்கு.
நாங்களும் தப்பிச்சுடறோம்.!
சார் விமர்சனம் சொந்தமா எழுதுங்க
____________________
விமர்சனத்தை முழுசா படிச்சீங்களா… இல்லன்னா திரும்ப படிச்சிட்டு கருத்தை எழுதுங்க…
நாயகன் கண்டிப்பா பாக்கணும் (டான் )
இந்த படத்த அவராலே பார்க்க முடியாது? மக்கள் எங்க பாக்குறது ?
தல எங்க தலைவர் படத்தை எல்லாம் இனிமேல் ரீமேக் பண்ணாதிங்க ?
\\ இந்தப் படத்தின் சிறப்புக் காட்சிக்கு நண்பர் மூலம் ஏற்பாடு செய்தேன். அவர் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும்! அது தனி கதை!! // ….:)
பில்லா 2 ..ஒரு தடவை பார்க்கலாம் ..கண்டிப்பாக வசூலில் சரித்திரம் படைக்கும் … மாயாஜால் மட்டும் முதல் நாளில் 84 காட்சிகள் ஆல் கௌஷ்புள் …1476000 ..ஆல் டைம் ரெகார்ட்
ரஜினி அவர்களின் ரசிகர்களுக்கு நன்றி
Guys பில்லா 2 நல்ல தான் இருக்கு… dnt believe negative reviews… jst watch & enjoy…
envazhi kitta irundhu ipdi oru review’va expect panla… vino vuku ajith maela enna gaandu nu theriyalaaa…
என்ன அவர் (நண்பர்)பட்ட பாடு? தெளிவாக சொல்லவும் .
திரு.சங்கர் அவர்களே…
.
சபீபகாலமா நமது தளத்தில் விளம்பர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்தாக தோன்றுகிறது….அது உங்களின் சொந்த விருப்பமாக இருந்தாலும்..சில விளம்பரங்களை கட்டாயம் அணைத்து வாசகரும் பார்க்க அல்லது கிளிக் செய்யவைப்பது கொஞ்சம் தர்மசங்கடமாக இருக்கிறது…இதை தவீர்பீர்கள?…(கட்டயம் இல்லை..வேண்டுகோள்தான்) . நன்றி…
கண்ணன்
__________
நிச்சயம்.. நன்றி.
-வினோ
katham hatham aduthu baadcha 2 irukku kavalaiya vidunga thla
pilla அஜீத் rocking
nice review
ரஜினியின் “தீ ” என்றொரு சூப்பர் படம் .வாழ்வில் விரக்தி அடைந்த மனிதன் “டான்” ஆக மாறும் அந்த வேடத்தில் சூப்பர் ஸ்டார் வாழ்ந்திருப்பார் .அதிலும் ரஜினி நடப்பார் . அது ஒரு சிங்க நடை .ஸ்டைலாக திரும்பி பார்ப்பார் .சிறுத்தையின் பார்வை . அதை அஜித் எத்தனை தடவை பார்த்தாலும் தலைவர் போல் நடிக்க முடியாது . அஜித் “better luck ” next time . ” தல ” நம்ம “பெருந்தல” ய பார்த்து கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு .
இந்தப் படத்திற்கு ஹீரோயினாக த்ரிஷா நடித்திருந்திருக்கலாம்.
அவர் நடித்த ராசி தலைக்கு மங்காத்தா சூப்பர் ஹிட் படமாக ஓடினது.
-=== மிஸ்டர் பாவலன் ===-
//படத்தில் காமெடியே இல்லை என்று யாரும் சொல்லிவிடக் கூடாது என்பதற்காக இந்தக் காட்சி போலிருக்கிறது!//
உண்மையிலே சரியான காமெடி…..அந்த சீன்.
ரஜினியை திரையில் காப்பி அடிப்பது ஒரு வகை… நிஜ வாழ்க்கையில் காப்பியடிப்பது இன்னொரு வகை… அஜீத் எந்த வகை?
Hi friends, everyone has the rights to share their views when something comes to public’s view and so is the movie reviews. but whatever the movie pls dont judge your view by others’ comments or reviews. i stopped doing so when i skipped a very good movie, Anbe sivam. i regret when i saw it again (in my view Anbe siva is a good matinee).
Also, when you have expectations at very high level, the movie may not satisfy you, it doesnt meant that the movie is bad one.
I would say, go and see Billa-2 as it is not sort of junk and even many reviewers accepted there are pluses in the movie (incl. this reviewer 🙂
வினோ அண்ணா,விமர்சனம் நன்றாக இருந்தது.அவரோட ரசிகர்களுக்கு படம் ரொம்ப பிடிக்கும் .அஜித் ஒரு தடைவை ஆனந்த விகடன் பேட்டியில் கூறும் பொது,இனிமேல் தனது படத்தை எதிர்ப்பது இருக்கும் ரசிகர்கல்கக தன படம் செய்வேன் என்று கூறி இருந்தார்.அதட்டி செய்து இருக்கிறார் போலும்.இருந்தாலும் இவளவு வான்முறை படத்தில் நல்லது அல்ல.அஜித் அவர்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும் .இருந்தாலும் வினோ அண்ணா ,அஜித் காக ஒரு தடைவை பார்க்கலாம் .கொலை செய்யும் பொது எல்லாம் கத்துகிறார்கள் அவர் ரசிகர்கள்.உலகம் எங்கே சென்று கொண்டு இருக்கிறது கடவுளே
slow screenplay.. that’s a only issue…else we enjoyed the dialogues.. padam yaaru edutha enna boss… nalla iruntha makkal rasika poranga…. 🙂
தசவாதாரம் , சிங்கம் மங்காத்தா வரிசையில் என்வழியில் மட்டும் பலாப் ஆன படம்தான் இந்த பில்லா … இந்த வருடம் என்வழியில் மெஹா ஹிட் ஆன ஒரே படம் தனுஷ் வாழ்ந்து காட்டிய 3 மட்டுமே ..
//இந்தப் படத்தை முதலில் எடுக்கவிருந்தவர் சௌந்தர்யா… அப்பாடா.. ரஜினி குடும்பம் தப்பிச்சது!
ஆமா பாஸ் சுல்தான் த வார்ரயொர் , 3 படங்களை எடுத்து எப்படி தப்பித்ததோ அதே போல இம்முறையும் தப்பித்து விட்டது
பாஸ் ஒரு படத்தை விமர்சிக்கலாம் தப்பே இல்லை ஆனால் கடைசி வரிகளை படிக்கும் பொது உங்கள் எண்ணம் வேறு மாதிரியாக இருக்கிறதோ என்ற சந்தேகம் உருவாகிறது …
_______________
ஏன்.. என்வழில வந்த வேற படங்களின் விமர்சனம் உங்க கண்ணுக்கு தெரியவே இல்லையா? 3 ஓஹோன்னு இருக்குன்னா எழுதினோம்/ முதல்ல ஒழுங்கா படிச்சுட்டு கமெண்ட் எழுதுங்க. அஜீத் என்ன… இப்படி ஒரு படத்தை யார் நடிச்சிருந்தாலும், இதைவிட கடுமையாகவே விமர்சனம் இருக்கும். நன்றி.
-வினோ
billa 2 collect 38-40 crores in india only within 3 days …TFU KANNAN & Mr.SREEDHAR PILLAI TWEET …very happy to see good people always wins even negative reviews also vanished by god ….NALLAVANGA JEIPPANGA KONJAM NERAM AGUM..THALAIVAR & THALA ROCKS ALWAYS …
நான் நேற்றுதான் இந்த படத்தை அஜித் ரசிகர்கள் 10 பேரோடு பார்த்தேன். ஆனால் கடைசியில் யாமற்றம்தான்.இதை முதல் நாள் அஜித் ரசிகர்கள் படம் எப்படி என்று நான் கேட்டதற்கு மலுப்பும்போழுதே தெரிந்து கொண்டேன் படம் சரி இல்லை என்று (இருந்தாலும் நம் தலைவருக்ககவும் அவரை போலவே நிஜ வாழ்கையில் வாழும் அஜித் காகவும் போனேன்).எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் தலைவர் போலவே தல அஜித் அவர்கள் நிஜ வாழ்கையில் நட்புக்காக தன் நலத்தை இழப்பதால்தான் இப்படி ஒரு சோதனை.
குசேலனுக்கு தலைவர் போல் இந்த படத்துக்கு அஜித்.அஜித் விசிறிகளே நிஜ வாழ்கையில் தலைவரும் தலையும் ஒரே மாதிரிதான்.நம் நிஜ வாழ்கையில் உள்ள எண்ண ஒற்றுமைகளை எந்த ஒரு குருவியாலும் அழிக்கமுடியாது. நண்பர்களே படம் நினைத்த அளவுக்கு இல்லை என்பதுதான் இந்த விமர்சனத்தின் நோக்கம்.நண்பர்களே கொஞ்சம் நினைத்து பாருங்கள் இதே தளத்தில்தான் பில்லா 2 படம் வெளியாவதற்கு முன்பே படத்தின் பெருமை பற்றி ஒரு கட்டுரை வந்திருக்கிறது .அஜித் ரசிகர்களே ரசிகர்களாகிய நீங்கள் அவரின் தவறை சுட்டிகாட்டுங்கள் அப்பொழுதுதான் அடுத்த படத்தில் அந்த தவறை அவர் திருத்திகொள்வார். அஜித் ரசிகர்களோடு ரஜினி ரசிகர்களும் சேர்ந்து இந்த படத்துக்கு ப்ரோமோ பண்ணியதால்தான் படம் சரி இல்லை என்றாலும் இவ்வளவு ஒரு பெரிய வசூல்.
//இந்தப் படத்திற்கு ஹீரோயினாக த்ரிஷா நடித்திருந்திருக்கலாம்.
அவர் நடித்த ராசி தலைக்கு மங்காத்தா சூப்பர் ஹிட் படமாக ஓடினது.
-=== மிஸ்டர் பாவலன் ===-//
சம்பந்தமே இல்லை என்றாலும் உங்கள் அபிமான த்ரிஷாவை செய்தியில் இணைத்த உங்கள் திறமை பாராட்டத்தக்கது.
விமர்சனம் படித்துவிட்டு தான் படமே பார்தேன்… விநோஜி நீங்க ஏதோ பெரிய மனசு பண்ணி இவளவு எழுதிருகிங்க… ஆனா படம் அதுக்கு worth இல்லைஜி.. ஏதோ ரெண்டரை மணிநேரம் trailer ஐ பார்த்த ஒரு feeling …starting to end கொலைவெறி தான்…மொதல்ல ajith family full ஆ ரெண்டு மூணு தடவை பாக்க வச்சு.. யாரும் தற்கொலை பண்ணாம வெளிய வந்தாங்கன்னா மக்களை பாக்க வைக்கணும் … Godfather மாதிரி prequel கொடுக்கலாம்னு நினச்சி… trailer 2 hrs ku ரிலீஸ் பன்னிருகாங்க..
//சம்பந்தமே இல்லை என்றாலும் உங்கள் அபிமான த்ரிஷாவை செய்தியில் இணைத்த உங்கள் திறமை பாராட்டத்தக்கது.// (வெங்கடேஷ்)
உங்கள் கருத்திற்கு நன்றி!
அமீர் கான் மகாராஜா-மிஸ்டர் பாவலன்-த்ரிஷா திகில் கதையைத்
தொடரலாம் எனத் தான் நினைத்திருந்தேன். ஆனால் அனைவரும்
“த்ரிஷா வேண்டாம்!” என்றதால் அந்தக் கதையும் உடனே நின்று
விட்டது. ஹி..ஹி..ஹி..
-== மிஸ்டர் பாவலன் ==-
உண்மையான விமர்சனம் . நடுநிலையான விமர்சனம் . இந்த விமர்சனம் குறித்து எத்தனை விமர்சனம் வந்தாலும் கவலைபடவேண்டாம் .
தொடர்க Mr வினோ உங்கள் நடுநிலையான விமர்சனம்
ஒரு இரண்டு மணிநேர டிரைலர் பார்த்த திருப்தி வந்தது. கடைசி வரை படம் போடவே இல்லை. என் வாழ்க்கையிலேயே காசு கொடுத்து பார்த்த முதல் டிரைலர் இதுதான் . இந்த படத்தின் பெயரை இப்படி வைத்திருக்கலாம். நடந்தான் சுட்டான்.
நண்பரின் வற்புறுத்தலின் பேரில் இந்த படத்திற்கு சென்றேன்…எந்த எதிர்பார்த்தாலும் இல்லாமல் போனதாலோ என்னவோ, படத்தை நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம் என்று நினைக்கிறேன். ஆனால் துப்பாக்கி மற்றும் ரத்தக்கறை அதிகம், தவிர்த்திருந்தால் நிச்சயம் நன்றாக இருந்திருக்கும். ஒலிக்கும் ஒளிக்கும் (தலைவரின் ஆசி பெற்றவர் என்பதாலும்) ஒருமுறை பார்க்கலாம்.
அன்புடன் ரவி.
அஜித்தை தவிர வேறு யாரும் இந்த பில்லா – 2 படத்திற்கு match ஆக மாட்டார்கள்.
விமர்சனம் எழுதும் போது சரியான தகவல்களை தாருங்கள்.
கதை மட்டும் படத்தை கொண்டு செல்லாது.
பில்லா -2 படத்தின் அத்தனை காட்சிகளும் amazing
சாரி அஜித்
ஒரு நல்ல படம்
ப்ருனா அப்துல்லா ரோலை த்ரிஷாவிற்கு கொடுத்திருந்திருக்கலாம்
என த்ரிஷாவின் ரசிகர்கள் கருதுகிறார்கள். படமும் பில்லா-1 போல்
வசூலை அள்ளி இருக்கும்!
-=== மிஸ்டர் பாவலன் ===-
Hi Vino,
நீங்க Billa 2 படத்தை விமர்சிக்கல(அஜித் தான் விமர்சிதிருகிரிர்) அது மட்டும் நல்லா புரிந்தது, இதை ரஜினி சார் பார்த்த கூட உங்க மேல நல்ல அபிப்ராயம் அவருக்கு வராது அது மட்டும் உண்மை.
கடைசி வரி ரொம்ப over. 3 படத்தோட (i have not mention 3 yoda your விமர்சனம்) Gentral விமர்சனம் உங்களுக்கே தெரியும் (please compare your last line this article) than please answer truly.
நான் உங்களை விமர்சிக்கல but என்னோட opinion தெரிவிக்கேறேன். Ajith ஒரு நல்ல மனிதர் அவருக்கு ரசிகர்கள் அவர் படத்தை மட்டும் பார்த்து வரல ஓகே வா சார், அது அனைவருக்கும் தெரியும்.
So உங்கள் இந்த BILLA 2(அஜித்) விமர்சனம் உங்கள் மீது கண்டிப்பாக நல்ல அபிப்ராயம் வராது.
குறிப்பு: படத்தை விமர்சிக்கலாம் ஆனால் நடிகரை விமர்சிப்பது sorry அசிங்க படுத்துவதற்கு (நீங்கள் தவறை சுட்டி கட்டுவதாக சொல்வது பொய்) தவறு.
அலெக்ஸ்:
‘இயக்குனர் சிகரம்’ கே. பாலச்சந்தர் ‘பில்லா-2 ‘ படத்தை புகழ்ந்து
தள்ளியிருக்கிறார். ‘தமிழில் ஒரு ஆங்கிலப் படம்’ என்ற KB-ன்
வரிகள் எண்ணிப் பார்க்க வேண்டும். கே. பாலச்சந்தர்
அஜீத்தை மிகவும் பாராட்டி இருக்கிறார்.
-== மிஸ்டர் பாவலன் ===-
Hi மிஸ்டர் பாவலன்,
Yes கே. பாலச்சந்தர் ‘பில்லா-2 ‘ படத்தை மட்டும் அல்ல அஜித்தையும் பாராட்டி இருக்கிறார்.
அஜித்தை போன்று துணிச்சலான நடிகரை என் சினிமா வாழ்வில் பார்த்தது இல்லை என்று குறி இருக்கிறார் KB.
So இந்த விமர்சனம் KB விட ….. (“அஜீத் என்ன… இப்படி ஒரு படத்தை” என ராஜாவிற்கு பதில் குறி இருந்தார் இந்த விமர்சகர் எனவே தான்)
பில்லா ரஜினி style இல்லாத ஒரு ரஜினி படம் இதை அஜித்தை தவிர வேறு யார் நடித்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது இது உண்மை.
Hi Alex,
well said alex….. same kind of feeling only i too received while reading this review
Good artical !!
//பில்லா ரஜினி style இல்லாத ஒரு ரஜினி படம் இதை அஜித்தை தவிர வேறு யார் நடித்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது இது உண்மை.//
ஒரு வேளை பவர் ஸ்டார் சீனிவாசன் நடித்திருந்தால்? 🙂 🙂
-== மிஸ்டர் பாவலன் ===-
@மிஸ்டர் பாவலன் அப்போ ரஜினி சார் இருக்க வேண்டிய இடத்தில் பவர் ஸ்டார் இருக்கணும்னு நினைகிரிங்க?
@Admin
நீங்க 3 படத்துக்கு review எழுதிநின்களே அப்பவே தெரியும் உங்க நேர்மை பத்தி எப்பவும் ஒரே மாதிரி review கொடுத்தா நல்லா இருக்கும்.
//@மிஸ்டர் பாவலன் அப்போ ரஜினி சார் இருக்க வேண்டிய இடத்தில் பவர் ஸ்டார் இருக்கணும்னு நினைகிரிங்க?//
அப்படி நான் சொல்லலீங்க.. ஏதோ தெரியாம கேட்டுப்புட்டேங்க.. 🙂 🙂
-== மிஸ்டர் பாவலன் ===-
தல 100 % ரசிகர்களுக்காக.
ஒரு படத்தை ரீமேக் பன்னும் போது அசலின் தனித்தன்மை இழப்பது இயல்பு
டானின் தனித்தன்மை
ரஜினியின் பில்லாவில் கிடையாது என்பது உண்மை