BREAKING NEWS
Search

பீகாரில் சோகம்.. மதிய உணவு சாப்பிட்ட 21 குழந்தைகள் பலி!

பீகாரில் சோகம்.. மதிய உணவு சாப்பிட்ட 21 குழந்தைகள் பலி!  

bihar-student
சாப்ரா / பாட்னா: பீகாரில் மதிய உணவு சாப்பிட்டு 21 குழந்தைகள் பலியாகியுள்ளனர். மேலும் சில குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் உள்ள சாப்ரா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

சாப்ரா நகரில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தர்மாசதி கண்டமான் என்ற கிராமத்தில் அரசு தொடக்க பள்ளிக்கூடம் உள்ளது. புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்த பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவ – மாணவிகளுக்கு நேற்று இலவச மதிய உணவு வழங்கப்பட்டது. உணவு சாப்பிட்ட அனைவரும் 8 முதல் 12 வயதுக்கு உட்பட்டவர்கள்.

உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில், ஏறத்தாழ 80 மாணவர்களுக்கு வாந்தியும், மயக்கமும் ஏற்பட்டது. இந்த தகவல் ஊருக்குள் பரவியதும், பெற்றோர்கள் அலறியடித்தபடி பள்ளிக்கூடத்துக்கு விரைந்தனர். மயங்கி விழுந்த மாணவர்கள் அனைவரும், உடனடியாக அருகில் உள்ள சாதர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

21 குழந்தைகள் பலி

ஆனால், அவர்களில் குஞ்சன் குமார், அன்ஷு குமார் ஆகிய 2 பேர், வழியிலேயே பரிதாபமாக இறந்து விட்டனர். மற்ற குழந்தைகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மேலும் 19 குழந்தைகள் அடுத்தடுத்து இறந்துவிட்டனர்.

மேலும் 30 பேருக்கு அங்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த மருத்துவமனைக்குத் தேவையான கூடுதல் மருந்து – மாத்திரைகள் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

bihar-2

மேலும் சிலர் கவலைக்கிடம்

சிகிச்சை பெறும் மாணவர்களில் சிலருடைய உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. உணவு சமைத்த பணியாளரும் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

பள்ளிக் கூடத்தில் மதிய உணவாக அரிசி, பருப்பு வகைகள் மற்றும் சோயாபீன்ஸ் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவு பரிமாறப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த உணவு கெட்டுப்போய் இருந்ததால், சாப்பிட்டதும் அதுவே விஷமாகி மாறி குழந்தைகளைக் கொன்றிருக்கிறது.

நிதிஷ்குமார் அவசர ஆலோசனை

தகவல் அறிந்ததும், பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த துயர சம்பவம் குறித்து உயர் மட்ட விசாரணை நடத்தும்படி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

தடய அறிவியல் ஆய்வக குழுவினர் உதவியுடன், போலீஸ் டி.ஐ.ஜி. மற்றும் கோட்ட ஆணையாளர் ஆகியோர் இணைந்து இந்த விசாரணையை நடத்துவார்கள் என்று, முதல்வர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தலா ரூ.2 லட்சம் உதவி

பலியான குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் உதவிப்பணம் வழங்கவும் முதல்வர் நிதிஷ்குமார் உத்தரவிட்டார். இந்த சம்பவம் நடைபெற்ற சாப்ரா பகுதி, பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரீய ஜனதா தள தலைவருமான லாலுபிரசாத் யாதவ் வெற்றி பெற்ற பாராளுமன்ற தொகுதியில் அடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Bihar  food poisoning

பாஜக ஆர்ப்பாட்டம் – மக்கள் வன்முறை

21 குழந்தைகள் பலியை கையிலெடுத்துள்ள பாஜக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

சரண் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். அரசு கட்டடங்களை தாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.




One thought on “பீகாரில் சோகம்.. மதிய உணவு சாப்பிட்ட 21 குழந்தைகள் பலி!

  1. Raj

    ஏன் இங்கு தாத்தாவும், அம்மாவும், ஐயாவும் சந்தடி கிடைத்தால் ஆட்டம் போடவில்லையா? என்னமோ BJP செய்தது மாபெரும் தவறு போல் சித்தரித்து இருக்கிறீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *