BREAKING NEWS
Search

பாரதியாரா பாரதிராசாவா? அவரே கன்பீஸ் ஆயிட்டாரு!!

rajinikanth-kamal-main
தெளிவாகப் பேசும் பலர் ரஜினியின் அரசியல் பிரவேசத்தைப் பற்றி பேச ஆரம்பித்ததும் உளறிக் கொட்டி மொக்கை வாங்கும் சம்பவம் நமக்கு ஒன்றும் புதிதல்ல. இரண்டு மாதங்களுக்கு முன்னர் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் பங்குபெற்ற சீமான், நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் படு பயங்கரமாகப் பேசி, ரஜினியின் அரசியல் கேள்விகள் வந்த உடனேயே பாண்டேவின் நியாயமான பல கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் “தம்பி.. அது வந்து தம்பி.. அப்டி இல்ல தம்பி…” என்று அசடு வழிய பேட்டியை முடித்தது அனைவருக்குமே ஞாபகம் இருக்கும்.

கிட்டத்தட்ட அதே பேட்டியின் மறு ஒளிபரப்பு போல் அமைந்து விட்டது இந்த வாரம் பாரதிராஜா பங்குபெற்ற நிகழ்ச்சியும். தனக்கு சினிமாவின் மேல் எப்படி ஆர்வம் ஏற்பட்டது, இளையராஜாவுக்கும் தனக்கும் இடையே நடந்தது என்ன என்பதைப் பற்றியெல்லாம் மிகவும் சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டிருந்த பாரதிராஜா, அரசியல், ரஜினி என்று வந்தவுடன் சகட்டு மேனிக்கு உளற ஆரம்பித்துவிட்டார்.

அவர் கூற்றுப்படி, “ரஜினியும், கமலும் மிக மிக நல்லவர்கள். அவர்களுக்கு ஏமாற்றத் தெரியாது. லஞ்சம் வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. அரசியலில் லஞ்சம் வாங்குபவனும், அவ்வப்போது வளைந்து நெளிபவனும் மட்டும்தான் நிலைத்து நின்று வெற்றி பெற முடியும். அதனால் ரஜினி, கமலால் அரசியலில் பிழைப்பு நடத்த முடியாது. அதனால் நான் அவர்களின் அரசியல் வருகையை விரும்பவில்லை” என்றார்.

பாண்டேவின் கேள்விகள் இன்னும் வலுக்க அடுத்த சில நிமிடங்களில் ரஜினி அரசியலுக்கு வந்தால் நிச்சயம் அவருக்கு ஓட்டுப் போடுவேன். ஆனால் அவர் முதலமைச்சராக வருவதை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்றார். ரஜினி கைகாட்டும் நபர் முதல்வராகலாம். ஆனால் ரஜினி முதல்வராகக் கூடாது என்றும் கூறினார். ஏன் என்று விளக்கம் கேட்டதற்கு, “என் வீட்டில் என்னால் குழந்தை பெற முடியவில்லை என்றால் இன்னொருவன் வந்து நான் பெற்றுத்தருகிறேன்,” என்றால் ஒப்புக்கொள்வீர்களா என்ற ஒரு அருவருப்பான பதிலையும் அளித்தார்.

அதாவது பாரதிராஜாவின் கருத்துப்படி, “ஒரு நாரப் பய நாட்டை ஆண்டாலும் அது நம்மூர் பயலாக இருக்க வேண்டும்,” என்பதே. இதே பேட்டியின் ஆரம்பத்தில், அவர் எடுத்த அலைகள் ஓய்வதில்லை படத்தினை பார்த்துவிட்டு நாங்கள் மேடைகளில் சொல்லத் தயங்கும் விஷயத்தை நீ திரையில் கொண்டு வந்துவிட்டாய் என எம்.ஜி.ஆர் மிகவும் பாராட்டியதாக் கூறினார்.

மதவெறியை எதிர்த்து எடுக்கப்பட்ட அலைகள் ஓய்வதில்லை படத்தை எம் ஜி ஆர் பாராட்டினார் எனக் கூறி அகமகிழ்ந்த அதே பாரதிராஜாதான் அடுத்த பத்து நிமிடத்தில் மொழி வெறியைக் காட்டி ரஜினி முதலமைச்சராக வரக் கூடாது என்கிறார். சாதி மத வெறிக்கும் இன மொழி வெறிக்கும் இடையே ஒரு மெல்லிய கோடுதானே இருக்கிறது.

சரி ரஜினிதான் வேறு மாநிலத்திலிருந்து வந்தவர். கமல் உள்ளூர்க்காரர்தானே அவர் முதல்வராகலாமா என்றால் அதற்கும் உளறலே பதிலாகக் கிடைத்தது. அதுமட்டுமில்லாமல் ஏழையாக இருந்து அரசியலுக்கு வருபவர்கள் மட்டும்தான் கொள்ளையடிக்கிறார்களாம். இதே கருத்தை வேறு எவராவது சொல்லியிருந்தால் நம் மக்களின் ரியாக்‌ஷன் என்னவாக இருக்கும் என்று யூகிக்க முடியவில்லை.

நெய்வேலி போராட்டத்தின் போது ஏன் ரஜினி எங்களுக்கு ஆதரவு கொடுக்காமல் தனியாக உண்ணாவிரதம் இருந்தார் என பயங்கரமான ஒரு கேள்வியைக் கேட்டார். இவர்கள் போராட்டம் அறிவித்து, ஒவ்வொரு நடிகரும் நாக்கைத் துருத்திக்கொண்டு, “அவன வெட்டுவோம், குத்துவோம்.. அவனுக்கு கரண்ட் குடுக்க மாட்டோம்,” என நரம்பு புடைக்க கத்திகொண்டிருப்பதைப் பார்த்த ரஜினி “அந்தப் போராட்டத்தில் ரத்தம்தான் உங்களுக்கு வேண்டும் என்றால் நிச்சயம் நான் அதற்கு வரமாட்டேன்,” என்று தெளிவாக அறிக்கை விட்டுவிட்டுத்தான் உண்ணாவிரத்தை ஆரம்பித்தார்.

முதல் நாள் நெய்வேலிப் போராட்டத்தில் கலந்து கொண்ட பல நடிக நடிகைகள் மறுநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு பாரதிராசா நடத்திய அதே நெய்வேலிப் போராட்டத்தை தொலைக்காட்சி நேரலையிலேயே குறை கூறியதை அவர் பார்த்திருக்கவில்லை போலும்.

சீமான், சத்யராஜ், பாரதிராஜா மற்றும் பலருக்கு ஒரே எண்ணம், நோக்கம் ரஜினியை எதிர்ப்பது. அவ்வளவே. இதற்கு முக்கியக் காரணம் ரஜினி மீதான அவர்களின் காழ்ப்புணர்ச்சியாக இருக்கலாம். பாரதிராஜா, சீமான் பேச்சுக்களில் இது வெளிப்படாவிடாலும் சத்யராஜின் பேச்சுக்களில் இது அப்பட்டமாகத் தெரியும். ஆனால் ரஜினியை எதிர்க்க இவர்களிடம் இருக்கும் ஒரே ஆயுதம் அவர் தமிழர் அல்ல என்பது மட்டுமே. அதை வைத்துக்கொண்டு நீண்டநாள் வண்டி ஓட்ட முடியாது என்பது சீமான், பாரதிராஜாக்களின் நேர்காணல் மூலம் நன்றாகவே தெரிகிறது. நான்கு கேள்விகள் தொடர்ந்து கேட்டாலேயே இவர்களின் முகத்திரை கிழிபடுகிறது.

படுக்கையறை உதாரணத்தைக் கூறி வேற்று மாநிலத்தோர் நம்மை ஆளக்கூடாது எனக் கூறிய பாரதிராஜாவிற்கு இரண்டு பேரக் குழந்தைகளை ஈன்றெடுத்துக் கொடுத்திருப்பவர் ஒரு கேரளப் பெண். ஏன் தமிழ்நாட்டில் பெண்களே இல்லாததால்தான் கேரளப் பெண்ணை அழைத்து வந்திருக்கிறாரா? மகனுக்குப் பிடித்த காரணத்தினால்தானே? அதே போல் தமிழக மக்களுக்குப் பிடிக்கும் பட்சத்தில் ரஜினியை ஆதரிப்பதில் என்ன ப்ரச்சனை?

– முத்துசிவா
6 thoughts on “பாரதியாரா பாரதிராசாவா? அவரே கன்பீஸ் ஆயிட்டாரு!!

 1. Vazan

  Best article that reflects my mind for the past 20 years, Thanks Muthusiva
  பொறாமை என்பது தமிழர் weakness
  “சீமான், சத்யராஜ், பாரதிராஜா மற்றும் பலருக்கு ஒரே எண்ணம், நோக்கம் ரஜினியை எதிர்ப்பது. அவ்வளவே. இதற்கு முக்கியக் காரணம் ரஜினி மீதான அவர்களின் காழ்ப்புணர்ச்சி”

 2. `PJagab

  appadi endraaal bharathiraja padangalai paarththa enpondra tamil naatil pirantha tamilarallatha vetru mozhhi pesum kittathtaata rani mangammalo krishna devarayaro kalathil telungu pesum boomiyil irundhu kudipeyarndha engal panaththai thirumba tharuvaara? ini ivar padangalaiyo allathu ivar , ivar saarndha kudumbathinar thariththa nadiththa padangalai paarkka koodathu allava? tamil naatil thalai muraigalaai valnthaalum vetru mozhi pesum naangal yen yevar pondra inam allathu mozhi adipadaivaathigalukku aadtharavu thara veendum

 3. R.PREMANAND

  இந்த ஆளையெல்லாம் ஒரு மனுஷனாவே மதிக்கக்கூடாது. நல்லா படமெடுப்பார், ஒரு காலத்துல அதோட சரி. இவரோட பேட்டியெல்லாம் படிச்சு/பாத்து டைம் வேஸ்ட் பண்ணவேண்டாம்னு நெனைக்கறேன்.

 4. Rajagopalan

  what happened? Y no updates for a very long time?
  Not even 2.0 audio launch event not updated by you.

 5. R. Hari hara kroshnan

  முள்ளை முள்ளால் டுப்பது போல! அவரின் மருமகள் கேரண்! அவர் வாரிசு நாளை பாதி தமிழ்/பாதி மலையாளம்னு ஒருத்தன் சொல்லுவான் தமிழ்நாடு/கேரளா இரண்டிலும் உன் பேரன் தேர்தலில் நிற்க முடியாது பரவாயில்லையா?? இதனால் தான் இவனெல்லாம் பெரிய டைரக்டரா நிக்க முடியலை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *