BREAKING NEWS
Search

ஹாலிவுட் போகும் பொம்மலாட்டம்… சாமுவேல் ஜாக்ஸனை இயக்குகிறார் பாரதிராஜா!!

ஹாலிவுட் போகும் பொம்மலாட்டம்… சாமுவேல் ஜாக்ஸனை இயக்குகிறார் பாரதிராஜா!!


ரொம்பத் தாமதமாகவென்றாலும் தமிழ் சினிமாவுக்கும் அதன் படைப்பாளிகளுக்கும் சர்வதேச அங்கீகாரம் கிடைக்க ஆரம்பித்துள்ளது.

கமல்ஹாசனைத் தொடர்ந்து பாரதிராஜாவும் ஹாலிவுட் படத்தை இயக்கும் வாய்ப்பு பெற்றுள்ளார். தமிழ் – இந்தியில் பாராட்டுக்களைப் பெற்ற தனது பொம்மலாட்டம் படத்தை, ஹாலிவுட்டில் இயக்குகிறார். இந்தப் படத்தில் சாமுவேல் ஜாக்ஸன் ஹீரோவாக நடிக்கிறார்.

பொம்மலாட்டம் ஒரு ஆக்ஷன் த்ரில்லர். மனிதாபிமானமும், படைப்பாற்றலும் முக்க ஒரு திரைப்பட இயக்குநரின் வாழ்க்கையில் மறைக்கப்பட்ட ஒரு பக்கத்தை வெகு அழகாக சித்தரித்த படம் அது. நானா படேகரும் அர்ஜுனும் மனசை அள்ளிக் கொண்டனர் அந்தந்த பாத்திரமாகவே மாறி! பாரதிராஜாவையே பார்த்த மாதிரி இருந்தது நானாவின் உருவில்.

நானா படேகர் பாத்திரத்திற்கு ஹாலிவுட் நடிகர் சாமுவேல் ஜாக்சனை தேர்வு செய்துள்ளார் பாரதிராஜா. ஜூராஸிக் பார்க், கில்பில் 2 உள்பட 100-க்கும் அதிகமான படங்களில் நடித்தவர் சாமுவேல் ஜாக்ஸன். நானா படேகரின் பாத்திரத்துக்கு இவரை விட பொருத்தமான ஒருவரைப் பார்க்க முடியாது!

அர்ஜூன் பாத்திரத்தில் பாரதிராஜாவின் நண்பர் ஒருவர் நடிக்கவுள்ளார். அவர்தான் படத்தைத் தயாரிக்கப் போவதாகவும் கூறப்படுகிறது.


பொம்மலாட்டமும், தானும் ஹாலிவுட்டுக்குப் போவதை உறுதி செய்துள்ளார் பாரதிராஜா.

பாரதிராஜாவிடம் இதுகுறித்து கேட்டபோது, “ஆமாம், ஹாலிவுட்டில் எனது பொம்மலாட்டத்தை ரீமேக் செய்யப் போவது உண்மைதான். அமெரிக்காவைச் சேர்ந்த எனது நான்கு நண்பர்கள் இப்படத்தை தயாரிக்கப் போகிறார்கள்,” என்றார்.

தற்போது அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் பாரதிராஜா அதை முடித்து விட்டு ஹாலிவுட் போகிறார். ஹாலிவுட் தேவைக்கேற்ப பொம்மலாட்டம் படத்தின் திரைக்கதையில் மாற்றங்களும் செய்துள்ளாராம்.

“இந்தப் படம் இங்கு பெற்ற வெற்றியைவிட, அங்கீகாரத்தைவிட, பெரிய அளவில் ஹாலிவுட்டில் பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. படத்தைப் பார்த்த சாமுவேல் ஜாக்ஸன் மிகவும் வியந்து பாராட்டினார். மிகவும் சுவாரஸ்யமான படம். ஹாலிவுட்டுக்கு ஏற்ற விறுவிறுப்பான கதை என்று பாராட்டினார்,” என்கிறார் பாரதிராஜா.

பெருமையாக இருக்கிறது.. வாழ்த்துகள்!




6 thoughts on “ஹாலிவுட் போகும் பொம்மலாட்டம்… சாமுவேல் ஜாக்ஸனை இயக்குகிறார் பாரதிராஜா!!

  1. பாவலன்

    பாரதிராஜா மிகவும் திறமையான இயக்குனர். அவரது ‘நிழல்கள்’
    படம் ஓடவில்லை – ஆனால் தமிழ்த் திரையுலகில் அது ஒரு
    மைல் கல். பாரதிராஜாவின் எடிட்டிங் மிகச் சிறப்பாக இருக்கும்.
    காமெரா ஆங்கிள், இசை என நுணுக்கமாக அவர் செய்வார்.

    பொம்மலாட்டம் ஆங்கிலம் வெற்றி அடைய அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

    -பாவலன்

  2. unmai

    சரியான காமெடி.. ரெண்டு பேறு தொல்லை தாங்க முடியலே..ஹாலிவுட் வந்த சோதனை..

  3. பாவலன்

    -=== தின கப்சா ===

    ரஜினிகாந்த், கமல்ஹாசன், பாரதிராஜா என்ட்ரியை அடுத்து..
    ஹாலிவுட்டில் வேறொரு கோலிவுட் ஸ்டார் ஹாலிவுட்டில்
    என்ட்ரி கொடுப்பதாக கடைசியாக சாலிக்ராமத்தில் இருந்து
    ஒரு தகவல் வந்துள்ளது.

    அடுத்த ஜேம்ஸ் பான்ட் படத்திற்கு Daniel Craig-ற்கு அடுத்தபடி
    அதிரடியான புதுமையான action hero தேவைப்படுவதால்
    ‘கரகாட்டக்காரன்’ புகழ் ராமராஜன் ஜேம்ஸ் பாண்டாக நடிக்கலாம்
    என ஒரு வதந்தி வந்துள்ளது. கோலிவுட்டில் இது பரபரப்பாக
    பேசப் படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *