BREAKING NEWS
Search

சூப்பர் ஸ்டார் ரஜினியைக் கவர்ந்த பாஸ்கர் தி ராஸ்கல்!

சூப்பர் ஸ்டார் ரஜினியைக் கவர்ந்த பாஸ்கர் தி ராஸ்கல்!

thalaivar-movie

லிங்கா’ படத்தையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினி  ’மெட்ராஸ்’ பட இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். நயன்தாராதான் நாயகியாக நடிக்கவிருக்கிறார்.

கலைப்புலி தாணு தயாரிக்கப் போகும் இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனாலும், அந்தப் படத்துக்கான அலுவலகம் அமைக்கப்பட்டு வேலைகளும் தொடங்கிவிட்டன.

இந்தப் படத்துக்குப் பிறகு ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்ட பொருட்செலவில் ஒரு அறிவியல் சார்ந்த படத்தில் ரஜினி நடிப்பார் என்ற தகவலும் உறுதியாகச் சொல்லப்பட்டு வருகிறது.

இந்த இரு படங்கள் தவிர, ஆஸ்கர் ரவிச்சந்திரன், ஞானவேல் ராஜா, லிங்குசாமி ஆகியோரும் ரஜினியின் தேதிகளுக்காகக் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் மலையாளத்தில் மம்மூட்டி, நயன்தாரா நடிப்பில் வெளியான படம் ‘பாஸ்கர் த ராஸ்கல்’ படத்தை சமீபத்தில் பார்த்த ரஜினி அப்படத்தை ரீமேக் செய்தால் நன்றாக இருக்கும் என விரும்பினாராம்.

இந்தப் படத்தின் தமிழ் உரிமையை ஏற்கனவே எஸ்.எஸ்.துரைராஜ் வாங்கி வைத்துள்ளாராம். இவர் ஏய், பாறை, சதுரங்கம் போன்ற படங்களைத் தயாரித்தவர்.

baskar-raskal

ரஜினியிடம் இந்தப் படத்தின் உரிமை, ரீமேக் குறித்து எஸ்எஸ் துரைராஜ் ஏற்கெனவே பேசியுள்ளாராம். மலையாளத்தில் படத்தை இயக்கிய சித்திக்கே தமிழ் – தெலுங்கிலும் ரஜினியை இயக்குவதாக ஏற்பாடு. இந்த நிலையில்தான் தாணு படத்தில் ஒப்பந்தமாகிவிட்டார் ரஜினி.

எப்படியும் தமக்கு கால்ஷீட் தந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறாராம் துரைராஜ்.

இடையில் இந்தப் படத்தில் நடிக்க அஜீத் சம்மதித்தாகவும், ஆனால், ரஜினியைத் தவிர வேறு யார் நடித்தாலும் சரியாக வராது என எஸ்எஸ் துரைராஜ் கூறிவிட்டதாகவும் ஒரு தகவல் உலா வருகிறது.

-என்வழி




4 thoughts on “சூப்பர் ஸ்டார் ரஜினியைக் கவர்ந்த பாஸ்கர் தி ராஸ்கல்!

  1. prakash

    Malayalam padam remake seri pattu varathu..Kuselan oru example. Rajinth movie is better.

  2. Rajagopalan

    enna enna enna nadakudhu enge…
    Another movieya?
    Thalaiva kalakunga…
    Yearly 2 movies for another 2 years…
    Nammathan epodhum topu…

  3. anbudan ravi

    தலைவர் தற்போதய கதை களங்களுக்கேற்ப நடித்தல் இப்பொழுதுள்ள இளைய தலைமுறையும் கவர்ந்திழுக்கலாம். மெட்ராஸ், சூது கவ்வும், இதற்க்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா போன்ற படங்களில் தலைவர் நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று அடிக்கடி கற்பனை செய்து பார்ப்பேன்……

    அன்புடன் ரவி.

  4. rajagopalan

    Y u removed my today’s comments?
    I didn’t say anything wrong
    I simply said thalaivar or any body movies should not be given to these so called distributors
    ————

    அப்படி எந்த கமெண்டையும் பார்க்கவில்லை. திரும்ப வேண்டுமானால் அனுப்பவும்.

    -என்வழி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *