BREAKING NEWS
Search

பாட்ஷாவை மிஞ்ச சத்தியமா எந்தப் படமும் இல்லை! – சூப்பர் ஸ்டார் ரஜினி

பாட்ஷாவை மிஞ்ச எந்தப் படமும் இல்லை! – சூப்பர் ஸ்டார் ரஜினி

சென்னை: பாட்ஷா படத்தை கபாலி மிஞ்சுமா என பலர் என்னிடம் கேட்கிறார்கள். ஒரு பாட்ஷாதான். அதை மிஞ்ச எந்தப் படமும் இல்லை என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

தயாரிப்பாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர் எம் வீரப்பனின் 90வது பிறந்த நாள் விழா இன்று சென்னை ராணி சீதை அரங்கில் நடந்தது.

விழாவில் சிறப்பு விருந்தினராக ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

ஆர்எம் வீரப்பன் தயாரிச்ச பாட்ஷா படத்தோட 125 வது நாள் விழாவில் கலந்துகிட்டேன். அப்போ ஆர்எம்வீ  அமைச்சராக இருந்தார். அந்த மேடையில் வெடிகுண்டு கலாச்சாரம் பற்றிப் பேசினேன். அன்று இரவே ஆர்எம்வீக்கு பதவி போய்விட்டது. அடுத்த நாள் விஷயம் தெரிஞ்சு, கொஞ்சம் பயத்தோடதான் அவருக்குப் போன் பண்ணேன். வருத்தத்தைத் தெரிவிச்சப்ப, அவர் சிரிச்சிக்கிட்டே,
‘வருத்தப்படாதீங்க.. இது காலத்தின் கட்டாயம்’-னு சொன்னார்.

ஆர்எம் வீரப்பன் சார் ஒரு முறை கூட ஆஸ்பிடலுக்கு போனதே இல்லைனு சொல்லுவாங்க. ஆஸ்பிடலுக்குப் போன வேதனையை அனுபவிச்சவன் நான். தயவு செய்து யாரும் ஆஸ்பிடலுக்கு போகாத அளவுக்கு உடம்பை வச்சிக்கங்க. 50 வயசுக்கு மேல இருக்கிறவங்க தினமும் எக்ஸர்ஸைஸ் பண்ணுங்க…!

என்கிட்ட பலர் இப்போ நான் நடிக்கிற கபாலி, பாட்ஷாவை மிஞ்சுமான்னு கேட்கிறாங்க. சத்தியமா அது மாதிரி எதிர்ப்பாக்காதீங்க… அந்த மாதிரி மறுபடியும் உருவாக சான்ஸ் இல்ல… ஆர்எம்வீ அவர்களாலதான் அது முடியும். இந்த மேடையில இருக்கறதுக்காக சொல்ல வரல.. சத்தியமா அதுக்காக சொல்லல… அந்தப் படத்துல முதல்ல என்னை யாருன்னு காட்டக்கூடாதுன்னுதான் காட்சி இருக்கும். ஆனா ஆர்எம்வீதான் சொன்னாங்க.. உங்களை Reveal பண்ணுங்கண்ணு.. அந்த காட்சிதான் (மெடிக்கல் காலேஜ் அதிபரிடம் தன்னை பாட்ஷாவாக ரஜினி வெளிக்காட்டும் காட்சி) படத்தின் மிகப் பெரிய வெற்றிக்குக் காரணம். பாட்ஷா அந்த அளவு ஹிட்டாகக் காரணமே அவர்தான்,” என்றார்.

-என்வழி




2 thoughts on “பாட்ஷாவை மிஞ்ச சத்தியமா எந்தப் படமும் இல்லை! – சூப்பர் ஸ்டார் ரஜினி

  1. srikanth1974

    ‘பாட்ஷா’ வை மிஞ்ச ‘பாட்ஷா’ 2 வால் மட்டுமே முடியும்.
    நான்காண்டுகளுக்கு முன்பே இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா
    பாட்ஷா 2 க்கான திரைக்கதையை பக்காவாக தயார் செய்து விட்டதாக
    செய்திகளில் படித்தோம்.உங்களுக்காகவே உங்களின் ஸ்டைலை மனதில்
    வைத்து ஒவ்வொரு காட்சியையும் செதுக்கி இருப்பதாகவும் தெரிகிறது
    அவர் உங்கள் முடிவுக்காக காத்திருக்கிறார் தலைவா’
    எனவே நீங்கள் மட்டும் சரியென்று ஒரு வார்த்தை கூறினால் மீண்டும் ஓர்
    மிரட்டலான படம் இந்திய சினிமாவிற்கு கிடைக்கும்.அதுமட்டுமின்றி
    அடுத்த சூப்பர் ஸ்டார் நான் தான் என்று கூறிக்கொண்டு பறந்து திரியும்
    உள்ளூர் உளறல் குருவிக்கும், உண்மையை உணர வைக்க முடியும்.
    முடிவெடுப்பீர்களா தலைவா? உங்கள் முடிவுக்காக காத்திருக்கும்
    உங்கள் அன்பு ரசிகன்
    ஸ்ரீகாந்த்.ப

  2. Uma Ravi

    பாட்ஷா சாதனை முறியடிக்க சூப்பர் ஸ்டார் ரஜினியால் மட்டுமே முடியும்.
    தலைவர் அவர்கள் அதற்கு மனசு வைக்க வேண்டும்.
    பார்ப்போம். காலம் கனியட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *