BREAKING NEWS
Search

‘லிங்கா’ மற்றும் ரஜினிக்கு எதிராக அவதூறு பரப்ப நீதிமன்றம் தடை!

லிங்கா’ மற்றும் ரஜினிக்கு எதிராக அவதூறு பரப்ப நீதிமன்றம் தடை!

rajini2

பெங்களூரு: ‘லிங்கா’ மற்றும் அதன் நாயகன் ரஜினிகாந்துக்கு எதிராக பிரசாரம் செய்யவும், அதுதொடர்பான செய்திகளை அச்சு, தொலைக்காட்சி ஊடகங்களில் வெளியிடுவதற்கும் இடைக்காலத் தடை விதித்து, பெங்களூரு மாநகர 15-ஆவது கூடுதல் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடித்து அண்மையில் வெளியான ‘லிங்கா’ படத்துக்கு எதிராகவோ பிரசாரம் செய்வது, கருத்துத் தெரிவிப்பது, போராட்டம் நடத்துவது, அது தொடர்பான செய்திகளை அச்சு, தொலைக்காட்சி, இணையதள ஊடகங்களில் வெளியிடுவது உள்ளிட்ட அனைத்து வகையான நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கக் கோரி, படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் தாக்க செய்த மனு, மாநகர சிவில், செசன்ஸ் நீதிபதி சர்வோதயா சடிகர் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, ராக்லைன் வெங்கடேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.சுப்பிரமணியா, லிங்கா படத்துக்கு எதிராகவும், படத்தின் கதாநாயகன் ரஜினிகாந்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் சிலரால் திட்டமிட்டபடி பிரசாரம் செய்யப்படுகிறது.

இதுதொடர்பான செய்தியை ஊடகங்களில் வெளியிடுவதால், லிங்கா படக் குழுவினர் குறித்து தவறான கருத்து மக்களிடையே பரவுகிறது. எனவே, லிங்கா படத்துக்கு எதிராக கருத்துத் தெரிவிக்கவும், போராட்டத்தில் ஈடுபடவும், அதுதொடர்பான செய்திகளை ஊடகங்களில் வெளியிடுவதற்கும் இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, லிங்கா படத்திற்கு எதிராக பிரசாரம் செய்யவும், அதுதொடர்பான செய்திகளை அச்சு, தொலைக்காட்சி உள்ளிட்ட அனைத்து ஊடகங்களிலும் வெளியிடுவதற்கும் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.

படத்தின் நாயகன் ரஜினி, தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் ஆகியோருக்கு எதிரான பிரச்சாரத்துக்கும் தடை விதித்தார் நீதிபதி.

இனி (அ)சிங்காரவேலன் மற்றும் அவனது கும்பல் யாரும் படம் குறித்துப் பேசவும் முடியாது, பணம் கொடுத்து பிரஸ் மீட் வைத்து பொய்ப் பிரச்சாரம் செய்யவும் முடியாது.

மேலும் இந்தியன் எக்ஸ்பிரஸ், டைம்ஸ் ஆப் இந்தியா, டெக்கான் க்ரானிக்கிள், தி இந்து, சன் டிவி, ஜெயா டிவி உள்பட 105 செய்தித் தாள்கள், டிவி மற்றும் இணையதளங்கள் லிங்கா மற்றும் ரஜினி குறித்து அவதூறு பரப்ப நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவு நகல்:
COURT ORDER

DETAILS

NAME LIST
என்வழி




5 thoughts on “‘லிங்கா’ மற்றும் ரஜினிக்கு எதிராக அவதூறு பரப்ப நீதிமன்றம் தடை!

  1. Murali

    What is this joke going on? The hooligans have already got their pound of flesh. To whom is this court order ( the public ?). Non-sense. Please don’t publish toothless information like this and add salt to our wounds , Vino. Our failure to stop the false propaganda remains a failure.

  2. Radha Ravi

    இன்று (26.02.2015) நம் அன்பு தெய்வத்தின் திருமண நாள்.
    சிவனும் பார்வதியும் போல் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களும் லதா அம்மையார் அவர்களும் பல்லாண்டு காலம் நோய் நொடி ஏதுமில்லாமல் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  3. Rajagopalan

    Too late…already damaged….
    But Puli padhunnguvadhu pay vadhurkuthan…
    Thalaivar sikiram singa padhai edupar…

  4. Sankar

    see below link.

    ரஜினியுடன் மோதல் – ஜகா வாங்கிய கட்சிகள் – நல்லா இருக்கு படிக்க. சிங்கு potta பையன் கேட்டும் தூண்டியும் கட்சிகள் தயங்கி உள்ளன. சில கட்சிகள் தலைவர் பக்கம் நியாயம் உள்ளதாக சொல்லி உள்ளன. சிங்கு potta பையன் இப்போ புரிஞ்சிட்டு இருப்பான். தாணுவோட பதில் பாருங்க “ரஜினி என்ற ஒற்றை மனிதரால் சினிமாவில் லட்சம் மனிதர்கள் பிழைத்திருக்கிறார்கள். அவரை அசிங்கபடுத்தும் விதமாக சிங்கு டீம் செயல் படுவது யாரும் விரும்ப வில்லை” என்று தெளிவாக சொல்லி உள்ளார்.

    வாழ்க தலைவர்.
    வளர்க அவர் புகழ்.

    https://www.kumudam.com/magazine/Reporter/2015-02-27/flipbook.php#6/z

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *