BREAKING NEWS
Search

குவிப்பு வழக்கு: ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை… ரூ100 கோடி அபராதம்!- முதல்வர், எம்எல்ஏ பதவிகள் பறிப்பு!!

குவிப்பு வழக்கு: ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை… ரூ100 கோடி அபராதம்!- முதல்வர், எம்எல்ஏ பதவிகள் பறிப்பு!!

jayalalitha828-600

பெங்களூர்: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு காலம் சிறைத் தண்டனையுடன் ரூ100 கோடி அபராதம் விதித்தது பெங்களூர் சிறப்பு நீதிமன்றம்.

கடந்த 1991 முதல் 1996 வரை முதலமைச்சராக பதவி வகித்தபோது, ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 1996-ம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

அப்போது தொடங்கி சுமார் 18 ஆண்டுகள் வரை இந்த வழக்கு சென்னை மற்றும் பெங்களூருவில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களில் நடைபெற்றது.

குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர்.

இந்நிலையில், பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா, பரப்பன அக்ரஹாரம் பகுதியில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை 11 மணிக்கு இந்த சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை வெளியிடுவதாக அறிவித்திருந்தார்.

இதனால் அந்தப் பகுதி மற்றும் தமிழக-கர்நாடக எல்லையில் சுமார் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இன்று காலை நீதிமன்றத்தில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் ஆஜராகினர். ஆனால் 11 மணிக்கு தீர்ப்பளிக்கப்படவில்லை. முதலில் பகல் 1 மணிக்கு தீர்ப்பளிக்கப்படும் என ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் பிற்பகல் 2.15 மணியளவில் செய்தியாளர்களிடம் பேசிய அரசு வழக்கறிஞர் பவானிசிங், இந்தவழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்று நீதிபதி குன்ஹா தீர்ப்பளித்ததாக தெரிவித்தார்.

மேலும் மாலை 3 மணிக்கு ஜெயலலிதா உள்ளிட்டோருக்கான தண்டனைக் காலம் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார். ஆனால் மாலை 5 மணியளவில்தான் தண்டனையை அறிவித்தார்.

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகாலம் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. அத்துடன் இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு ரூ100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா ரூ10 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நான்கு ஆண்டுகாலம் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் ஜெயலலிதாவின் முதல்வர் பதவி உடனடியாக பறிபோய்விட்டது. அதே நேரத்தில் அவரது எம்எல்ஏ பதவியும் விரைவில் பறிக்கப்படுகிறது. 4 ஆண்டு சிறை தண்டனை என்பதால் இந்த நீதிமன்றத்தில் உடனடியாக ஜாமீனும் கிடைக்காது. இதனால் நீதிமன்றத்தில் இருந்து அப்படியே சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அடைக்கப்படுகின்றனர்.

இவர்கள் அடுத்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில்தான் ஜாமீன் கோர முடியும்.

ஆனால், அடுத்த 10 நாட்கள் தசராவுக்காக உயர் நீதிமன்றத்துக்கு விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.

என்வழி செய்திகள்




14 thoughts on “குவிப்பு வழக்கு: ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை… ரூ100 கோடி அபராதம்!- முதல்வர், எம்எல்ஏ பதவிகள் பறிப்பு!!

  1. chozhan

    //அடுத்த 10 நாட்கள் தசராவுக்காக உயர் நீதிமன்றத்துக்கு விடுமுறை//

    திட்டமிட்டு அம்மாவை உள்ள அனுப்பிய தீர்ப்பு, இப்படி ஒரு சொத்துக் குவிப்பு வழக்கு கருணா மேல் போட்டால் 40 ஆண்டு சிறையும் 4000 கோடி அபராதமும் கிடைக்கும்.

    இப்படிக்கு சோகத்துடன்
    சோழன்

  2. sakthi

    Chozan…. Athuthan aapppu vachachula!
    Road la mutta pasanka… Karunanithiya ilukurankana inka ninkaluma!!! Ayyo ayyo unkalellam thiruthave mudiyathu! Ithu karuna kodutha theerppu illa… Judge kodutha theerppu….

  3. Suresh

    இந்த தீர்ப்பு 1996-2000 இடைப்பட்ட நேரத்துல வந்து இருக்க வேண்டியது. ஆனா இது ரொம்ப லேட்டு. அப்போ இருந்த ஜெயலலிதா வேற இப்போ இருக்கிற ஜெயலலிதா வேற கொஞ்ச மாறி இருகாகங்கே. 2001-2006 மற்றும் இப்போ இந்த அம்மா ஓரளவுக்கு நல்லது மட்டுமே செஞ்சு இருகாகங்கே. இந்த தீர்ப்பு இந்த அம்மாவுக்கு சத்தியமா பரிதாப அலையைதான் ஏற்படுத்தி கொடுத்து இருக்கும். ஆனா இவங்கே தொண்டர்கள் என்ற போர்வையில் செய்கின்ற வன்முறையால் தேவை இல்லாத கேட்ட பெயரை ஏற்படுத்த போகிறது.. பொறுத்து இருந்து பார்போம் என்ன நடக்கிறது என்று?? எனக்கு தெரிஞ்சு 2ஜி உழல விட இது அவளோ பெரிய உழல் இல்ல.. இதுகே 4 வருஷம் 100 கோடி அபாரதம்னா? 2ஜி உழலுக்கு எவளோ வருஷம் எவளோ கோடி அபராதமா இருக்கும்??.. அந்த நாளும் விரைவில் வர வேண்டும்…!!!

  4. Sargunam

    யாரு கிட்ட .. !!

    நம்ம தலைவர தமிழ் சினிமா 100 இயர்…

    கடைசி வரிசைல அமர வச்சதுக்கு .. இப்ப அம்மாவுக்கு சீட் எ இல்லாம போச்சி ….பாவம் ….!!!

    தலைவர பகசிகிட்ட யவனும் நல்ல இருந்ததா சரித்திரமே கிடையாது…

    சரியான தீர்ப்பு ………

  5. s venkatesan, nigeria

    இன்னும் கூட அம்மா அப்பாவி என்று சொல்ல கூடிய அறிவாளிகள் நிறைய பேர் இருக்கின்றனர்.

  6. மிஸ்டர் பாவலன்

    “நீதிக்கு தலை வணங்கு!” – இது எம்.ஜி.ஆர் படத் தலைப்பு.
    நிதர்சன உண்மையும் அது தான். சட்டத்தின் முன்னர் அனைவரும் சமமே.

    சட்டப்படி அப்பீல் செய்ய வழி உள்ளது. அதிமுக வழக்கறிஞர்கள்
    அப்பீல் செய்து தண்டனையைக் குறைக்கவோ, இல்லை, முற்றாக
    தீர்ப்பை கேன்சல் செய்து வெளி வரவும் வாய்ப்பு உள்ளது. அதனால்
    அப்பீல் ப்ராசஸ் பரிசீலனை செய்து, சுப்ரீம் கோர்ட் பதில் அளிக்கும் வரை
    அதிமுக தொண்டர்கள் அமைதி காத்தல் நல்லது.

    சுப்பிரமணியம் சுவாமி இது போல் “2G” திமுக கட்சி பிரமுகர்கள் மேல்
    எந்த வழக்கும் தொடுக்காமல் இருப்பது நடுநிலையாளர்கள் சந்தேகிக்கும்
    படியும் உள்ளது.

    -== மிஸ்டர் பாவலன் ==-

  7. குமரன்

    வரவேற்று கொண்டாடப் படவேண்டிய தீர்ப்பு.
    இது ஜன நாயகத்துக்கும் உண்மைக்கும் கிடைத்த வெற்றி.
    உலகுக்கு அடிக்கப்பட்ட இன்னொரு பேரிடி.

    சென்ற 20 ஆம் தேதி தீர்ப்பு வழங்க நீதிபதி நாள் குறித்திருந்தார். எப்படியாவது வழக்கைக் கால தாமதம் செய்யும் நோக்கில் பாதுகாப்பு இல்லை என்று ஒரு மனுவை ஜெயா தரப்பு பத்து நாட்களுக்கு முன் தாக்கல் செய்தது. அதனால் தீர்ப்புத் தேதியை 27 ஆக்கி ஒரு வாரத்தில் அதிக அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

    20 ஆம் தேதியே “நீதிக்குத் தலை வணங்கி” இருந்தால், இந்த வாரம் ஜாமீன் மனுப் போட்டு வெளியே வந்திருக்கலாம்!

    விதியின் செயல்பாடு வினோதமானது. அவரது தீவினை அவரை இப்படி ஒரு மனுவைப் போட்டு, 27 ஆம் தேதியை வாங்க வைத்தது. இதில் அவரும் திட்டமிட வில்லை, நீதிபதியும் திட்டமிடவில்லை!

    தீவினையின் ஒரு பயனே, நவராத்திரியில் பரப்பன அக்ரஹாரத்தில் ஜெயா கொலுவிருக்க வைத்தது !!

  8. குமரன்

    உழலுக்கு என்பது உலகுக்கு என்று தவறாகத் தட்டச்சாகிவிட்டது. பிளை பொறுக்கவும்.

  9. மிஸ்டர் பாவலன்

    நண்பர் குமரன் அவர்களே – தினமணியில் இன்று நான்
    படித்த செய்தி இது – http://t.co/1எ2க்வ்ஹப்ம்ஜ்9

    மதிப்பிற்குரிய சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர், சட்ட மேதை,
    ராம் ஜெத்மலானி அவர்கள் கடும் விமர்சனம் செய்துள்ளார்.

    தினமணி செய்தி:

    சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையோடு 100 கோடி ரூபாய் அபாரதம் விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

    தீர்ப்பைத் தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள் உப்பட பலர் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு வழக்கப்பட்ட தீர்ப்புக்கு மூத்த வழக்கறிஞரான ராம்ஜெத்மலானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, ஊழல் தடுப்பு சட்ட விதிகளின்படி இந்த தீர்ப்பு வழங்கப்படவில்லை என்றும் அபாராதம் விதித்ததில் நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா நீதிக் கோட்பாடுகளை மீறிவிட்டார் என்றும் கூறியுள்ளார்.

    மேலும் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் வழக்கறிஞர் என்ற முறையில் இந்த தீர்ப்பை எதிர்ப்பதாக கூறிய அவர் ஜெயலலிதாவுக்கு இந்த தீர்ப்பை வழங்கியதன் மூலம் நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா நீதித்துறையில் மிகப்பெரிய தவறை செய்துவிட்டார் என்று தெரிவித்துள்ளார். [தினமணி இணைய தளம்]

    -== மிஸ்டர் பாவலன் ==-

  10. srikanth1974

    உள்ள போன அத்தனைப் பேரும் குற்றவாளி இல்லீங்க
    வெளிய உள்ள அத்தனைப் பேரும் புத்தன் காந்தி இல்லீங்க
    என் தலைவரின் படப் பாடல் வரிகளை இங்கே கூற விரும்புகிறேன்.

    எத்தனையோ இறைப்பணி செய்திருக்கும் மாண்புமிகு அம்மா அவர்கள்
    மிகுந்த தெய்வ பக்தி நிறைந்தவர் எனவே தெய்வம் அவருக்கு துணை நின்று
    நல்லதொரு தீர்ப்பை பெற்றுத் தரும் என நம்புகிறேன்.

    நம்பினார் கெடுவதில்லை இது நான்குமறைத் தீர்ப்பு
    நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான் ஆனா கைவிடமாட்டான்.

  11. Sargunam

    நல்லவுங்கள விடுங்க ….

    நாகரிகம் ந என்னதுன்னு கூட தெரியாது…..

    நம்ம தலைவர் சினிமா நுற்றாண்டு விழாவுல அவமானப்பட வச்சாங்கள இப்ப நல்ல படட்டும் …

    இப்பதான் மனசுக்கு சந்தோசமா இருக்கு..

    எனக்கு எங்க தலைவர் தான் முக்கியம்….

    இதுக்கு கலைனர் எவ்வளவோ பராவாஇல்லை………….

  12. மிஸ்டர் பாவலன்

    கலைஞர் ஒரு மாபெரும் அரசியல் சாணக்கியன்..

    அவர் எதுவும் ஊழல் வழக்கில் மாட்டுவார் எனத் தோன்றவில்லை..

    அரசியலில் எப்படி சதுரங்கக் காய்கள் நகர்த்தணும் என்ற நுணுக்கங்கள்
    அறிந்த அரசியல் வித்தகர் கலைஞர்..

    -== மிஸ்டர் பாவலன் ==-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *