BREAKING NEWS
Search

பரதேசி பட்ட பாடு: பாலா… இது ரீலா ரியலா!!

பரதேசி பட்ட பாடு.. பாலா சார்.. இது ரீலா ரியலா!!

paradesi movie photos

து பாலா வாரம்.. எனும் அளவுக்கு பரதேசி பற்றிய செய்திகளும் படங்களும் வீடியோக்களும் ஊடகங்களில் குவிந்துவிட்டன.

நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை இந்தப் படம் உலகம் முழுக்க வெளியாகிறது.

பரதேசி பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகளும்… கடைசியில் ஒரு ஷாக்கிங் வீடியோவும் உங்களுக்காக!

* பரதேசி படத்தின் ஒரிஜினல் கதை ரெட் டீ நாவல்.. அது மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பின்னர் தமிழிலும் வெளியானது. தமிழில் தலைப்பு எரியும் பனிக்காடு!

* இந்தப் படத்துக்கு முதலில் சனி பகவான் என்று பெயர் வைத்தார். அந்த நேரம் பார்த்து ஆதி பகவன் என்ற படத்தை எடுத்துக் கொண்டிருந்தார் அமீர். அதை பின்னர், கல்லறைத்தோட்டம் என மாற்றினார். பின்னர் என்ன நினைத்தாரோ.. பரதேசி என்று முடிவு செய்துவிட்டார்.

* பாலா என்ற ஒரு இயக்குநர் வெளியில் தெரியும் முன்பே அவருக்கு எல்லாமாக இருந்து ஆசி வழங்கியவர் இளையராஜா. தன் இசையால் அவர் படைப்புகளுக்கு அர்த்தம் தந்தவர். ஆனால் இந்தப் படத்தில் முதல் முறையாக ராஜா குடும்பத்துக்கு வெளியில், ஜி.வி.பிரகாஷிடன் இணைந்திருக்கிறார் பாலா. ஆனால் மனசுக்குள் ராஜா மேல் உள்ள மரியாதையைக் காட்ட, படத்தின் இறுதி வடிவத்தை இளையராஜாவுக்குக் காட்டி ஆசி பெற முடிவு செய்துள்ளாராம்.
 
* பாலாவின் படங்களில் வெளிநாட்டில் அதிக அரங்குகளில் வெளியாவதும் பரதேசிதான். 18-ம் நூற்றாண்டில் தமிழ் தேயிலைத் தோட்ட தொழிலாளிகளுக்கு ஆங்கிலேயர் செய்த கொடுமைகளை ஆங்கிலேயருக்குச் சொல்ல ஆங்கில சப்டைட்டிலுடன் 25 திரையரங்குகளில் பிரிட்டனில் வெளியாகிறது பரதேசி.

S2gto

* பொதுவாக தன் பாடல் வரிகளில் யார் செய்யும் திருத்தங்களையும் அத்தனை சுலபத்தில் ஏற்க மாட்டார் வைரமுத்து. ஆனால் பாலா பல திருத்தங்கள் சொல்லச் சொல்ல, அதற்கேற்ப தன் பாடல்களை மாற்றிக் கொண்டாராம். அது மட்டுமல்ல, அடுத்த படத்துக்கும் வாய்ப்பு கேட்டுள்ளார். பாலா வழக்கம் போல சிரித்து வைத்தாராம். காரணம், அடுத்த படத்துக்கு மீண்டும் இளையராஜாவிடம் போகும் திட்டத்திலிருக்கிறார் பாலா. வைரமுத்துவுக்கு எப்படி வாக்கு தரமுடியும்!

* இப்படத்தின் வில்லன் கதாபாத்திரத்துக்கு டப்பிங் பேச இயக்குனர் சீமானை அழைக்க முடிவு செய்தார் பாலா. ஆனால், கடைசி நேரத்தில் அந்த எண்ணத்தைக் கைவிட்டு விட்டார். அஜீத் விவகாரத்தில் சீமான்தான் பாலாவுக்கு உதவியவர் என்பது நினைவிருக்கலாம்.

* படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை படமெடுத்து முடித்துவிட்டு, மனசு பாரம் தாங்காமல் சோத்துப்பாறை ஏரியாவில் உள்ள சுடுகாட்டில்  இரண்டு நாட்கள் படுத்துறங்கிவிட்டு வந்தாராம்!

* இந்தப் படம் வலி மிகுந்த ஒரு வரலாற்றைச் சொல்லும் படம்தான் என்றாலும், பாலாவின் படங்களுக்கே உரிய நகைச்சுவையும் கொண்டதாக இருக்கும் என்கிறார்கள்.

Paradesi_Phot_1

* அதெல்லாம் ஓகேதான்… இந்தப் படத்துக்காக பாலா தன் நடிகர்களைப் படுத்தியிருக்கும் பாட்டை ஒரு வீடியோவாகத் தந்திருக்கிறார்.

அதைத்தான் எந்த வகையில் சேர்த்தி என்று தெரியவில்லை.. ரீலா.. ரியலா.. ?

பரதேசியை அவர் பாராட்டினார்.. இவர் சிலாகித்தார் என்று வந்த அத்தனை பாஸிடிவ் செய்திகளையும் நாசமாக்கியிருக்கிறது இந்த ரியாலிட்டி டீஸர் என்பது மட்டும் சர்வ நிச்சயம்.

இதோ அந்த வீடியோ..

என்வழி ஸ்பெஷல்
11 thoughts on “பரதேசி பட்ட பாடு: பாலா… இது ரீலா ரியலா!!

 1. Manoharan

  இதில் ஒன்றை புரிந்து கொள்ளவில்லை. அவர் நடிகர்களை நன்றாக நடிக்கவில்லை என்பதற்க்காக அடிக்கவில்லை. ஒரு அடிதடி காட்சியில் சம்பந்தப்பட்ட நடிகர் எப்படி நடிக்கவேண்டும் என்பதை சொல்லித்தருகிறார். அதன் பின்னர் அந்த் நடிகரும் பாலா போலவே அடிக்கிறார். அப்படி என்றால் அந்த நடிகரும் சைக்கோவா ? ஒரு அழுகை காட்சியில் எப்ப்டி அழுது காட்டுகிறாரோ அதே போல் சண்டை காட்சியில் அடித்துக் காட்டிகிறார். இதிலென்ன தவறு என்று தெரியவில்லை..

 2. srikanth1974

  ஏதோ ஒருவாட்டி நடிச்சு காட்டுங்கையானு ஒரு பேச்சுக்குக் கேட்டா?.
  அதுக்காக இந்த மனுஷன் பாலா ‘இப்படியா அடிச்சுக் காட்டுவாரு .யப்பா சாமீ ஒடம்பெல்லாம் ஒரே வலி.

 3. INDIAN

  ஒரு காட்சி எப்படி வர வேண்டும் என்பது ஒரு இயக்குனரின் வேலை அதன்படி செய்து காட்டி நடிக்க சொல்வது தவறேதுமில்லை.

 4. ssrsukumar

  ஒரு காட்சி எப்படி வர வேண்டும் அதன்படி செய்து காட்டி நடிக்க சொல்வது தவறேதுமில்லை. அவர் நடிகர்களை நன்றாக நடிக்கவில்லை என்பதற்காக அடிக்கவில்லை. ஒரு அடிதடி காட்சியில் சம்பந்தப்பட்ட நடிகர் எப்படி நடிக்கவேண்டும் என்பதை சொல்லித்தருகிறார். அதன் பின்னர் அந்த் நடிகரும் பாலா போலவே அடிக்கிறார். ஒரு அழுகை காட்சியில் எப்ப்டி அழுது காட்டுகிறாரோ அதே போல் சண்டை காட்சியில் அடித்துக் காட்டிகிறார். இதிலென்ன தவறு? சைக்கோ யாரு? நீங்கதான் சந்தேகமே இல்லை….உங்களுக்கு படப்பிடிப்பு பற்றி அடிப்படை அறிவே இல்லை என்பதைத்தான் இது காட்டுகிறது.

 5. NAREN

  பாலா ஒரு டென்ஷன் பாண்டியன் … அவரு படத்துல வர ஹீரோ வும் அப்டியே இருப்பாங்க… இல்ல்ளன காமெடி நு என்ற பேர்ல மசகடி மன்னர்கள்… பாலா இந்த ball அவது சரியாய் போடுவர .. பொறுத்திருந்து பார்போம்..

 6. kamal

  அடிப்பது தவறில்லை ஆனால் இதை வெளி இட்டது ஒரு கர்வமுள்ள விளம்பரமாக தெரிகிறது …..படைப்பாளியை விட படைப்பு தான் சிறந்தது என்பதை பாலா உணர்ந்தால் சரி …..

 7. Kumar

  எப்பா சாமி என்ன அடி என்ன திட்டு.கேட்டா இவரு சமுதாயத்தை திருத்த போறாராம்.ஏன்யா கொடுமைகளை அழிக்கணும் என்றால் முதலில் தன்னோட சுயத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.அடிச்சு காமிச்சாதான் காட்சி நல்லா வரும் என்றால் ஏன் எல்லா இயக்குனர்களும் இப்படி பண்ண கூடாது?.எவளவோ தலை சிறந்த படங்கள் நடிகர் நடிகைகளை அடிக்காமல் திட்டமால் வந்து இருக்கின்றன.கேட்டா பகுத்தறிவு , மக்கள் இன்னும் அறியாமையில் இருகங்கன்னு திசை திருப்ப ஆரம்பிச்சுடுவாங்க.முதலில் நீ கொடுமை பண்ணாம இருயா அப்புறம் மத்தவனை திருத்தலாம்.

 8. raja

  இதுதான் உண்மையான உலகப்படம் மத்ததெல்லாம் டப்பா படம் என்ற தலைப்பில் உங்களிடம் இருந்து பரதேசி விமர்சனத்தை எதிர்பார்த்தேன் .. இன்னும் போடவில்லையே …

 9. Vadvielan

  என்வழி வினோ அவர்களுக்கு தலைவர் பாலாவின் பரதேசி பார்த்துவிட்டாரா?? அவரின் கருத்து எப்பொழுது வெளியிடுவீர்கள் சொல்லுங்கள் பாலா வெற்றி பெற வாழ்த்துக்கள்

 10. karthi

  பாலா தான் கோபக்காரர், யாருக்கும் பயப்படாதவன், என்ற இமேஜை உருவாக்குகிறார், (மற்றவர்களுக்கும் அதை சொல்ல வேண்டும் என்று நினைக்கிறார் ) தனக்கு தெரிந்த சினிமா, தான் எடுப்பது ஒழுங்கு, மற்றவர்கள் ரசனையை நினைப்பதில்லை (பாலாவின் டிவி பேட்டி மூலம் நான் உணர்ந்தது ) திறமையை படைப்புகளில் காண்பியுங்கள் , சமூக அக்கரையில் படம் எடுத்தாலும் அதை மற்றவர்கள் பார்வையிலும் யோசித்து எடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *