BREAKING NEWS
Search

மிக மிக நல்ல மனிதன் என பல நூறுமுறை சொல்ல வேண்டிய மனிதர் சூப்பர் ஸ்டார் ரஜினி!- பாலகுமாரன்

‘மிக மிக நல்ல மனிதன் என பல நூறுமுறை சொல்ல வேண்டிய மனிதர் சூப்பர் ஸ்டார் ரஜினி!’

rajini-bala

“மிக மிக நல்ல மனிதன் என்று பல நூறு முறை ஒரு மனிதனைப் பற்றிச் சொல்ல வேண்டுமெனில் அது சூப்பர் ஸடார் ரஜினிகாந்தாத்தான் இருக்கும்.

வியாபார உத்தி வாழ்வு தந்திரம் உண்டென்றாலும இவையல்ல வாழ்க்கை என்பதும் அவருக்குத் தெளிவாய் தெரிந்திருக்கிறது.

என் காது சமீபமாய் மந்தித்திருக்கிறது. ஆயினும் பதினைந்து நிமிடப் பேச்சில் அன்பும் அக்கறையும் இருந்தன.

அந்த உயரத்திற்கு வாசல் வரை வந்து என் இனோவா கதவை திறக்க வேண்டியதில்லை. வந்தார் திறந்தார். படியிறங்க கைத்
தாங்கினார். என் புத்தகங்கள் தந்தேன். மனம் பலமாய் நலமாய் இருப்பது சொன்னேன். தன் நலன் பற்றியும் பேசினார்.

நான்கு வருடங்கள் கழித்த சந்திப்பு. இனிமையாய் முடிந்தது. இதுதான் அழகு.”

rajini-bala2

rajini-balakumaran

-பாலகுமாரன், எழுத்தாளர்.
6 thoughts on “மிக மிக நல்ல மனிதன் என பல நூறுமுறை சொல்ல வேண்டிய மனிதர் சூப்பர் ஸ்டார் ரஜினி!- பாலகுமாரன்

 1. Rajagopalan

  malai varumbodhu panivum varavendum endra solluku mutrilum poruthamana thalaivar nam kabali da….

 2. Deen_uk

  ஒரு வேண்டுகோள் தலைவருக்கு..
  ஜூலை ஒன்றாம் தேதி ரிலீஸ் செய்தால் கணிசமான (இஸ்லாமிய) ரஜினி ரசிகர்களால் முதல் ஒரு வாரம் தியேட்டர் பக்கமே வரமுடியாது.அனைவரும் நோன்பு வைக்கும் மாதம் இது.நோன்பு காலத்தில் நோன்பு வைத்துகொண்டு யாரும் படம் பார்க்க முடியாது.ஜூலை ஆறு அல்லது ஏழு தேதி தான் நோன்பு முடியும்.ஆறு,ஏழாம்தேதி புதன் மற்றும் வியாழன் என்பதால்,எட்டாம் தேதி வெள்ளிகிழமை ரிலீஸ் செய்யலாம்.முதல் மூன்று நாள் வசூல் என்பது முக்கியம் என்பதால் தலைவர் இது பற்றி கொஞ்சம் பரிசீலனை செய்ய வேண்டுகிறேன்.இந்த படத்திற்கு இந்தியா மற்றும் அல்லாமல் மலேசியாவிலும் எதிர்பார்ப்பு அதிகம்.மலேசியா ஒரு முஸ்லிம் நாடு என்பதால்,அங்கும் முதல் மூன்று நாள் வசூல் கணிசமாக அல்லாமல் அதிகமாகவே குறையும்.காரணம் மலேசியாவில் இந்து நண்பர்கள் கூட கணிசமாக நோன்பு வைப்பார்கள்.மத ஒற்றுமை வெளிபாடாக.தலைவருக்கு தனிப்பட்ட ஒரு ரசிகன் கிடையாது..ஒரு ரசிகன் இருந்தால் அவனது குடும்பமே தலைவர் ரசிகராக தான் இருக்கிறார்கள்.நோன்பு முடிந்து ரிலீஸ் செய்தால் குடும்பம் குடும்பமாக வரும் டிக்கெட் இழக்க தேவை இருக்காது.ரஜினி ரசிக குடும்பங்களுக்கு இது ஒரு மிகபெரிய பெருநாள் கொண்டாட்டமாக அமையும்..! மலேசியா நண்பர்களும் அதிக அளவில் blogspot மற்றும் யுட்யூப் வாயிலாக இந்த கோரிக்கை வைத்தபடி உள்ளதை காண முடிகிறது.நான் லண்டனில் வசிக்கிறேன்.லண்டனில் பெருவாரியான தலைவரின் முஸ்லிம் மற்றும் இந்து நண்பர்களின் விருப்பமும் இதுவே. தாணு அவர்கள் மற்றும் தலைவர் இதை அறியாதவர்கள் அல்ல..அவர்கள் இந்த தேதி முடிவு செய்து இருந்தால் அதில் ஒரு காரணம் இருக்கும்..ஆனால் எனது மனதுக்கு பட்டதை சொல்ல தோன்றியது..மேலும் என் போன்ற ரஜினி வெறியர்கள் தலைவரின் படம் வசூல் சாதனை செய்யவேண்டும் என்ற நோக்கில் இந்த வேண்டுகோள் வைக்கிறேன்.தலைவரை அரசியலுக்கு வர சொல்லவில்லை! தலைவரின் வெறியன் என்ற முறையில் அவர் வசூல் சாதனை குறையாமல் இருக்க ஒரு வேண்டுகோள்!! வினோ அண்ணா..இதை தலைவர் காதுக்கு கொண்டு செல்வீர்களா? தலைவருக்கு இது தெரிந்தால் நிச்சயம் தேதி மாற்றுவார் (வசூலுக்காக அல்ல..எங்களை போன்ற ரசிகர்களுக்காக )

 3. மிஸ்டர் பாவலன்

  உலகநாயகன் கமல் ஹாசன் அவர்களைப் பலரும் வந்து பார்த்து விட்டு செல்கிறார்கள்.. கமல் பெரிய அறிஞரும் கூட.சகலகலாவல்லவன். இருந்தாலும் இது போல் எதுவும் மீடியா பதிவுகள் வருவதில்லை. இது கமல் ரசிகர்களுக்கு பெரிய குறையாக உள்ளது. கமல் ரஜினியைப் பார்த்து விட்டு சென்றால் தான் மீடியா செய்தியாக வரும் போல் உள்ளது..

 4. velmurugan.a

  Mr.Vino,

  Please give some reply to Mr.Deen_UK.
  As he said if it is known by either tthalaivar or Mr. Dhaanu, date will be changed, which will also shut somebody’s mouth , who is commenting on the reason for the release date.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *