BREAKING NEWS
Search

சி.ஏ. தேர்வில் தேசிய அளவில் முதலிடம் பெற்ற மும்பை தமிழ் ஆட்டோ ஓட்டுநர் மகள்.. கருணாநிதி ரூ 1 லட்சம் உதவி!!

சி.ஏ. தேர்வில் தேசிய அளவில் முதலிடம் பெற்ற மும்பை தமிழ் ஆட்டோ ஓட்டுநர் மகள்!

auto-mumbai

மும்பை: மும்பையில் ஆட்டோ ஓட்டும் விழுப்புரத்தைச் சேர்ந்த தமிழரின் மகள் பிரேமா அகில இந்திய அளவிலான சி.ஏ. தேர்வில் முதல் மாணவியாகத் தேர்வாகியுள்ளார்.

மும்பை மலாட் பகுதியல் வசிப்பவர் ஜெயக்குமார் பெருமாள். ஆட்டோ டிரைவர். இவரது பூர்வீகம் விழுப்புரம்.  ஆனால் 20  ஆண்டுகளுக்கு முன்பே மும்பை வந்து  செட்டிலாகி விட்டார்.  இவரது மனைவி லிங்கம். இல்லத்தரசியாக இருக்கிறார். இவர்களுக்கு பிரேமா (24) என்ற மகளும் தன்ராஜ் (22) என்ற மகனும் உள்ளனர்.

20 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வருகிறார் ஜெயக்குமார். அவர்கள் இருப்பது 300 சதுர அடி அளவிலான மிகச் சிறிய வீடு. வீட்டின் நிலை உணர்ந்து பிரேமாவும், தம்பி தன்ராஜும் படிப்பில் கெட்டிக்காரர்களாக உள்ளனர்.

கடந்த நவம்பர் மாதம் நடந்த சி.ஏ.(சார்டர்ட் அகௌண்டன்ட்ஸ்) தேர்வில் பிரேமாவும், தன்ராஜும் கலந்து கொண்டு எழுதினர். அதன் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது.

அதில் பிரேமா இந்தியாவிலேயே முதல் மாணவியாகத் தேர்வாகியுள்ளார். 800க்கு 607 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தன்ராஜும் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவதே மிகக் கடினமான சமாச்சாரமாகும். இதில் முதல் மதிப்பெண்ணும் பெற்றிருப்பது அசாதாரண சாதனையாகும்.

இது குறித்து பிரேமா கூறுகையில், “இது என்னுடைய வாழ்நாள் சாதனை என்றுதான் நினைக்கிறேன். ரொம்ப கஷ்டப்பட்டு படிச்சேன். என் பெற்றோர் எனக்கு ஊக்கமளித்து வந்தனர். அவர்களின் ஆதரவும், ஆசியும் இல்லை என்றால் என்னால் சாதித்திருக்க முடியாது.

நான் நன்றாகப் படிப்பேன். சிறப்பான இடத்தைப் பெறுவேன் என்ற நம்பிக்கை இருந்தது.  ஆனால் முதலிடம் கிடைத்திருப்பது ஆச்சரியமாக உள்ளது.

என்னுடைய மற்றும் என் சகோதரருடைய படிப்புக்கு இடையே பணப் பிரச்சனை வந்துவிடாமல் பார்த்துக் கொள்ளும் என் பெற்றோரை நினைத்து பெருமைப்படுகிறேன். இத்தனை நாட்களாக எங்களுக்காக கஷ்டப்பட்ட எங்கள் தந்தை இனியாவது ஓய்வு எடுக்க வேண்டும்,” என்றார்.

கிஷோர் சேத் அன்ட் கம்பெனியில் மாதம் ரூ.6,000 சம்பளத்தில் வேலை பார்த்து வந்தார் பிரேமா என்பது குறிப்பிடத்தக்கது.

சி.ஏ. படித்துக் கொண்டே அவர் எம்.காம். முடித்தார். அதில் அவர் பல்கலைக்கழகத்திலேயே முதல் மாணவியாகத் தேர்வானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தன்ராஜ் படிப்பு செலவுக்காக சிறிது காலம் கால் சென்டரில் வேலை பார்த்திருக்கிறார். தன் அக்காவையே ரோல்மாடலாக வைத்துக் கொண்டு படித்தாராம் தன்ராஜ்.

கருணாநிதி ரூ 1 லட்சம்  உதவி

மாணவி பிரேமாவின் சாதனையைப் பாராட்டி, திமுக தலைவர் கருணாநிதி ரூ 1 லட்சம் நிதி உதவியை திமுக சார்பில் வழங்கியுள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “இந்தியாவிலேயே சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் தேர்வில் முதலிடம் பிடித்த மும்பையைச் சேர்ந்த தமிழ் மாணவி பிரேமாவுக்கு திமுக அறக்கட்டளை சார்பில் ரூ.1 லட்சம் வழங்கப்படும்.

விழுப்புரத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் பெருமாள் மும்பையில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மகள் பிரேமா சிஏ தேரவில் இந்திய அளவில் முதலிடத்தில் தேர்வாகி சாதனை படைத்துள்ளார். இவரது சாதனையை பாராட்டி திமுக அறக்கட்டளை சார்பில் பிரேமாவுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-என்வழி செய்திகள்
11 thoughts on “சி.ஏ. தேர்வில் தேசிய அளவில் முதலிடம் பெற்ற மும்பை தமிழ் ஆட்டோ ஓட்டுநர் மகள்.. கருணாநிதி ரூ 1 லட்சம் உதவி!!

 1. mani

  போன ஜென்மத்தில் பிரேமா எதோ புண்ணியம் செய்து இருக்க வேண்டும்.

  இல்லாவிட்டால் இது நடக்காது. படிப்பில் புத்திசாலி என்று பெயர் எடுத்த

  எனக்கு தெரிந்த நபர் intermediate பரீட்சையில் கூட தேறவில்லை. பிறகு எங்கே

  சி.ஏ இறுதி தேர்வுக்கு செல்ல ? படிப்பில் அதி புத்திசாலிகள் கூட எட்டு பாடங்களை

  ஒன்றாக எழுத அஞ்சுவார்கள். தினமும் ஒரு பாடம் தொடர்ச்சியாக பரீட்சை எழுத

  வேண்டும். படித்த பாடங்களை அன்று இரவில் திருப்பி படித்தால் தான் மறு நாள்

  பரீட்சை எழுத முடியும். படித்த அத்தனையும் அன்று இரவுக்குள் படிக்க இயல்லது.

  தூக்கம் கண்ணை சொக்கும். தாக்கு பிடித்து நான்கு நாட்களுக்கு மேல் எழத முடியாது.
  இந்த பெண் பிரேமா எட்டு நாட்கள் சரியாக தூங்காமல் பரீட்சை எழுதி இருக்கிறார்.

  இந்த கஷ்ட மான பரீட்சை எழுதியவர்களுக்கு தெரியும். கடேசி பரீட்சை எழுதும்

  போது சரியாக தூக்கம் இல்லாத காரணத்தினால் ஒரு பைத்தியக்கார மன நிலை

  வந்து விடும். வெற்றிக்கு 50% எடுத்தால் போதும். ஆனால் இந்த பெண் சராசரியாக எட்டு பாடத்திலும் 75% மதிப்பெண் எடுத்திருக்கிறார். இந்தியாவில் உள்ள சி .ஏ படித்த ஆடிட்டர்கள் வாய் பிளந்து பார்க்கிறார்கள் . ஏன் என்றால் அந்த மேதாவிகள் அத்தனை பேரும் பல முறை எழுதி Just பாஸ் 50 % எடுக்க பல்டி அடித்தவர்கள் ஆவர். கடவுளின் முழு ஆசிர்வாதத்தை

  பெற்றால் மட்டுமே இந்த சாதனையை எட்ட முடியும்.

 2. தினகர்

  யாரப்பா இந்த மணி. பரிட்சையில் பாஸ் பண்ணுவதற்கும், முதலிடம் கிடைப்பதற்கும் போன ஜென்ம புண்ணியம் பத்தியெல்லாம் பேசுறாரு. ஒவ்வொரு ஆண்டும் ஒருத்தர் சி.ஏ தேர்வில் முதலிடம் பெறுகிறாரே அது இவரது கண்ணுக்கு தெரியவில்லையா?. அதெல்லாமும் பூர்வ ஜென்ம புண்ணியம் தானா?,கடின உழைப்பு இல்லையா? அல்லது ஆட்டோ ஓட்டுனர் மகள் என்பதால் இந்த எகத்தாளமா?

  பிரேமா ஜெயக்குமாருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். அவருடைய கடின உழைப்பு, மற்றும் உறுதியான மனப்பான்மை மட்டுமே இந்த வெற்றிக்கு காரணம். தான் மட்டுமல்லாமல், தனது தம்பியையும் அதே தேர்வில் வெற்றி பெற காரணமாக இருந்துள்ளாரே அது கூடுதல் முக்கியத்துவம்.

  தனது குழந்தைகளை நல்லவிதமாக படிக்க வைக்க வேண்டும் என்று பாடுபட்ட அந்த தாய் தந்தையர், தெய்வமாக மதிக்கப்பட வேண்டியவர்கள்.

  கல்வி தான் சமுதாய முன்னேற்றத்திற்கு வழி என்று சுவாமி விவேகானந்தர் கூறியிருக்கிறார். பிரேமா ஜெயக்குமாரின் வெற்றி, ஏனைய மாணவ மாணவியர்களுக்கு உந்துதலாக இருக்கட்டும்.

  ”முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
  இன்மை புகுத்தி விடும்”

  ”தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
  மெய்வருத்தக் கூலி தரும்”

  என்ற தெய்வப்புலவர் திருவள்ளுவரின் வாக்கு மீண்டும் மெய்யாகி உள்ளது.

 3. தினகர்

  “இப்பரீட்சையில் பிரேமா 800 க்கு 607 எடுத்துள்ளார். 605 மார்க் எடுத்தவர் முயற்சி எடுக்காதவரா ? ”

  ஆமாம், பிரேமா அளவுக்கு முயற்சி எடுக்காதவர். இரண்டு மார்க்குகள் அதிகம் எடுப்பதற்கு தேவையான அதிக முயற்சியை பிரேமா எடுத்துள்ளார். வெற்றி கிடைத்துள்ளது

  விட்டால் கிரிக்கெட், ஒலிம்பிக் எல்லாத்திலும் பூர்வ புண்ணிய ஜென்மம் என்று கதை விடுவீர்கள் போலிருக்கே..! அங்கேயும் ஒரு ரன், ஒரு செகண்டுகளில் தான் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படுகிறது..

  ஒரு ஏழைத் தந்தையும், அவரது குழந்தையின் முயற்சியையும் பாராட்டும் மனம் இல்லாவிட்டால் பரவாயில்லை!.. குதர்க்கம் பேசி அவர்களை கொச்சைப் படுத்த வேண்டாம்.

 4. Kreshna

  I don’t know why everyone taking an aim at Mr Mani’s comment. Is it because he mentioned things last birth?

  I agree hard work is needed not only in this exam but in all exams but at the same time you can’t disagree certain things are just fated in your life. Please re-read the article again, Prema’s brother took the same exam too. The article mentions both studied for this exam together and both are considered to be acadmically good in their studies. But only Ms Prema came first. It mention danraj passed and thats about it. This shows he is not second or even third to Ms Prema because if it was it would have been definitely mentioned.

  Both studied together and both took the same exam. But only one did exceptionally well to came first in national level. Now only Ms Prema is going to receive 100,000 from DMK.
  Not her brother.

 5. தினகர்

  Mr.Kreshna. No one is aiming at anyone. But Mr.Mani’s tone is a great disgrace to the winner. Anyone who wholeheartedly feel good about Prema’s achievement can easily understand that. Now you are trying to rake up a new issue after so many days. It does not honor Prema’s achievement. For some reason, you are also not able to accept her victory but defend for Mr.Mani. all right…keep it up…

 6. மிஸ்டர் பாவலன்

  // கடவுளின் முழு ஆசிர்வாதத்தை பெற்றால் மட்டுமே இந்த சாதனையை எட்ட முடியும்.//

  அப்துல் கலாம், அண்ணாதுரை போன்ற விஞ்ஞானிகள் சுய முயற்சிக்குத் தான் அதிகம்
  முக்கியம் கொடுக்கிறார்கள். ‘மெய் வருத்தம் பாரார்..கண் துஞ்சார்..”
  என ஒரு நாலடியார் பதிகம் உண்டு. கருமமே கண் ஆனவருக்கு கடவுள்
  ஆசீர்வாதம் தன்னால் வரும் (எந்த மதம் ஆக இருந்தாலும்).

  பிரேமா ஜெயக்குமாரின் வெற்றி அவர் முயற்சிக்கு கிடைத்த பரிசு
  எனத் தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். நன்றி.

  -=== மிஸ்டர் பாவலன் ==-

 7. Kreshna

  // Now you are trying to rake up a new issue after so many days.//

  Haha, I only happen to read this article yesterday.

  // For some reason, you are also not able to accept her victory…………//

  Of course i am happy that a Tamil girl scored first in National level.
  I only trying to say hardwork + god’s grace

  Cheers!!!

 8. Ganesh Shankar

  இன்று தான் இந்த செய்தியை நான் படிக்கிறேன் இங்கே.
  C.A என்னும் படிப்பை பற்றி சில தகவல்கள் சேகரித்து கொண்டு இருந்தேன்.அப்போது இந்த தென்பட்டது.

  அந்த பெண்ணிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
  தன்னுடைய சுய முயற்சியும்,கடவுளின் ஆசிர்வாதமும் சேர்ந்து அந்த பெண்ணை இவ்வளவு பெரிய வெற்றியை தேடி கொடுத்து இருக்கிறது.
  மணி சொல்வதில் ஒன்றும் தவறு இல்லை.போன ஜென்மத்தில் செய்த புண்ணியம்,அவருக்கு கடவுளின் அசிர்வததை கொண்டு சேர்த்து இருக்கிறது.
  ஆயிரம் தான் படித்தாலும்,சரியான நேரத்தில்,சரியாக சென்று சேர்ந்து,சரியான நினைவுடன்,தவறுதல் செய்யாமல் எல்லாம் நடந்ததனால் தான் வெற்றி கிட்டியது,அது தான் போன ஜென்மத்தில் செய்த புண்ணியம் என்று சொல்லபடுகிறது.

  அன்று “பாட்ஷா” படத்தில் ரஜினி சொன்ன வாக்கியம் நினைவிற்கு வருகிறது.
  ஆண்டவன் மேல் நம்பிக்கை இல்லையா?என்றவுடன்,அய்யோயோ,ஆண்டவன் இல்லேன்னா எப்டிங்க??
  நாம் நம்மை கவனித்தால்,ஆண்டவன் நம்மை கவனிப்பார்.

  விவசாயி களத்தில் ஆயிரம் முயற்சிகள் போட்ட பிறகும்,தேவையான மழை இல்லை எனில் ஒன்றும் நடக்காது.
  இங்கே விவசாயி போட்ட உழைப்பு- ஒவொரு மனிதரும் போடுகின்ற உழைப்பு
  தேவையான மழை- கடவுளின் ஆசிர்வாதம்.
  இரண்டுமே எதிர் எதிர் கிடையாது- இரண்டில் எது இல்லை என்றாலும்,வெற்றி கிடைக்காது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *