BREAKING NEWS
Search

சூப்பர் ஸ்டாரின் புதுப்படம்… இயக்குகிறார் ரஞ்சித்.. தயாரிப்பு கலைப்புலி தாணு!

சூப்பர் ஸ்டாரின் புதுப்படம்… இயக்குகிறார் ரஞ்சித்.. தயாரிப்பு கலைப்புலி தாணு!

11117950_584256245010071_296617522_n

லைவர் சூப்பர் ஸ்டாரின் அடுத்த படம் கிட்டத்தட்ட அறிவிக்கப்பட்டாகிவிட்டது. தலைவர் தன் வாயால் அதைச் சொல்லவில்லை.

ஆனால் இயக்கப் போகிறவரும், தயாரிப்பாளரும் நூறு சதவீதம் உறுதி செய்து மீடியாவுக்குச் சொல்லிவிட்டார்கள்.

தலைவரின் புதுப் படத்தை இயக்கப் போகிறவர், அட்டகத்தி, மெட்ராஸ் என தமிழ் சினிமாவுக்கு புதிய வெளிச்சம் தந்த இயக்குநர் ரஞ்சித். தயாரிப்பவர் தலைவருக்கு சூப்பர் ஸ்டார் எனப் பட்டம் தந்து, பிரமாண்ட கட் அவுட்கள் வைத்து அழகு பார்த்த கலைப்புலி தாணு.

கலைப்புலி தாணுவின் சினிமா வாழ்க்கை இன்றுதான் முழுமையான அர்த்தம் பெறுகிறது. காரணம், ரஜினியை வைத்து சினிமா தயாரிப்பது அவரது பல ஆண்டு கனவு.  எண்பதுகளிலிருந்தே முயற்சித்து வரும் தாணுவுக்கு அந்த கனவு நிறைவேற முப்பத்தைந்து ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது.

இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில்.. ஏன், நாளையே கூட வெளியாகக் கூடும். அதற்கு முன்பே படம் குறித்த தகவல்களை மீடியாவுக்குத் தந்து பரபரப்பை உருவாக்கியவர் முன்னணி பிஆர்ஓ நிகில் முருகன்.

அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டதிலிருந்து சமூக வலைத் தளங்களான ட்விட்டர், பேஸ்புக், வாட்ஸ்ஆப் போன்றவை அலறிக் கொண்டிருக்கின்றன. ரசிகர்கள் தூக்கம் மறந்து தலைவர் படம் குறித்த தங்களின் பார்வைகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

இந்தத் தகவல் உண்மைதானா என ததயாரிப்பாளர் தாணுவிடம் கேட்டபோது, உண்மைதான் என உறுதி செய்தார். ஆனாலும் ரஜினி மூலமே இந்த அறிவிப்பு வெளியாக வேண்டும் என விரும்புவதாகத் தெரிவித்தார்.

இயக்குநர் ரஞ்சித்தைத் தொடர்பு கொண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தபோது, மிக அடக்கத்துடன் அவற்றை ஏற்றுக் கொண்டார்.

இந்தப் படம் முடிந்த கையோடு, ஷங்கரின் புதிய படத்தில் ரஜினி நடிக்கிறார் என்பது கூடுதல் தகவல்!

-என்வழி ஸ்பெஷல்




11 thoughts on “சூப்பர் ஸ்டாரின் புதுப்படம்… இயக்குகிறார் ரஞ்சித்.. தயாரிப்பு கலைப்புலி தாணு!

  1. Sekar

    தலைவா வாருங்கள் காத்து கொண்டு இருக்கிறோம். தமிழர்களின் இதய சிம்மாசனத்தின் என்றும் குடி இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களை வணங்குகிறேன்.

  2. Rajagopalan

    Edhu ennanga pudhu news a eruka?
    Shankarnu sonanga, Sundarnu sonanga, raghava lawrencenu sonanga, muragadossnu sonanga eppo Ranjitha?

  3. suresh.KD

    டைரக்டர் ரஞ்சித் என்பது ஏற்கும்படியாக இல்லை.
    உறுதியான தகவலுக்காக காத்திருப்போம்.

  4. Thirumurugan

    நல்ல நியூஸ் ரொம்ப சந்தோசமா இருக்கு ..
    தேர்தல் ku முன்னாடியே படத்த ரிலீஸ் பண்றது இன்னும் கூடுதல் sandhosam
    தலைவர் arasiyaluku வரணும்..

  5. தமிழன்பன்

    சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களை தெரியாதவர்கள் இன்னும் பிறக்காதவர்கள். இந்த பூமி இந்த காற்று இந்த ஆகாயம் தமிழர் இனம் உள்ளவரை கலை கடவுள் ரஜினி அவர்களின் புகழ் நிலைத்து இருக்கும்.

  6. dhanasanjayan

    இன்னும் ஒரு முள்ளும் மலரும் .
    வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *