BREAKING NEWS
Search

இது தேசிய அவமானம்!

இது தேசிய அவமானம்!

டித்தவர்கள், பண்பாடு மிக்கவர்கள், பாரம்பரியத்தைப் போற்றுபவர்கள் நிறைந்த தேசம் எனும் இந்தியாவில் பெண்களுக்கு நேரும் கொடுமைகள் சொல்லத் தரமற்றவை.

வக்கிரத்தின் உச்சிக்குப் போய்விட்ட ஆண்கள் கூட்டத்தை இப்போதெல்லாம் எங்கும் பார்க்க முடிகிறது.

அசாம் மாநிலம் கவுகாத்தியில் விருந்துக்கு சென்ற ஒரு 17 வயது இளம் பெண்ணை, 20 பேர் கொண்ட கும்பல் ஒன்று பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளது. அதுவும் மக்கள் நடமாட்டம் மிக்க தலைமைச் செயலக பிரதான சாலையில், அரை மணி நேரத்துக்கும் மேல் இந்த கொடுமையைச் செய்திருக்கிறார்கள். ஒருவரும் அந்தப் பெண்ணைக் காக்க முன்வரவில்லை.

இந்த சம்பவம் முழுவதையும் ஒரு உள்ளூர் சேனல் வீடியோ எடுத்து பார்ட் 1, பார்ட் 2 என ஒளிபரப்பிய பிறகுதான் இந்தக் கொடுமை வெளிச்சத்துக்கு வந்து, நாட்டையே தலைகுனிய வைத்திருக்கிறது.

இந்த கொடுமையைச் செய்த 20 இளைஞர்களில் நால்வரை மட்டும் மாநில போலீஸ் கைது செய்துள்ளது. மற்றவர்களைக் கைது செய்து, இந்த சம்பவத்தின் பின்னணியை முழுவதுமாக விசாரித்து அறிக்கை தர மாநில அரசுக்கு 48 மணி நேர கெடுவிதித்துள்ளார் அசாம் முதல்வர் தருண் கோகாய்.

மிருகங்களை வெட்கப்பட வைத்த இழி பிறவிகள்…

இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்த 24 மணி நேரத்துக்குள், அதே அசாமின் காட்டுப் பகுதி ஒன்றில் ஒரு இளம்பெண்ணை ராணுவத்தினர் மானபங்கம் செய்திருக்கிறார்கள். அந்தப் பெண்ணின் கூக்குரல் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவர, ராணுவத்தினர் திருடர்களைப் போல கேம்ப்பை காலி செய்துவிட்டு ஓடியுள்ளனர்!

நாட்டிலேயே குற்றங்கள் அதிகம் நடக்கும் மாநிலம் அசாம்தான். இங்கு ஆண்டுக்கு 36.6 சதவீத குற்றச் செயல்கள் நடக்கின்றன. குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இங்கு மிக அதிகம். கடந்த ஆண்டு மட்டும் 3785 கடத்தல் சம்பவங்களும் 1,707 கற்பழிப்பு சம்பவங்களும் நடந்துள்ளன.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் செய்வதில் மற்ற மாநில நிலைமையும் பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவுக்கில்லை. ஓரிரு சதவீத மாறுபாடு இருந்தாலும், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் இன்றைக்கு மிக அதிகமாகி வருவது கவலை தருகிறது.

ஈவ் டீஸிங், பாலியல் வன்முறை போன்றவற்றுக்கு அரசுகள் என்னதான் அதிகபட்ச தண்டனை அறிவித்திருந்தாலும், அவற்றிலிருந்து தப்பித்துக் கொள்ளும் வழிகள் அதிகமாக இருப்பதல் தண்டனைக்கு பெரிதாக அஞ்சுவதில்லை என்றே தோன்றுகிறது.

அதேநேரம், இப்படி கொடுமைகள் அரங்கேறுவதற்கு முக்கிய காரணம், இந்த சமூகமே ஒழுக்க நெறி தவறிப் போய்க் கொண்டிருப்பதுதான் என்பதில் இருவேறு கருத்தில்லை.

சம்பாதிப்பதில், குடும்பம் நடத்துவதில், உறவுகளில் நெறி கெட்டுப் போய்க் கொண்டிருக்கும் நிலை இன்றைக்கு. பல குற்றங்களின் ஊற்றுக் கண் இந்த ஒழுக்கக் கேடுதான்!

இனி வரும் நாட்களை, நடக்கப் போகும் நிகழ்வுகளை நினைத்தால் கொஞ்சம் அச்சமாகத்தான் இருக்கிறது. இந்த சமூகக் கிருமிகள் மெல்ல மெல்ல மனிதாபிமானத்தை, மிச்சம் மீதி இருக்கும் மென் உணர்வுகளை அரித்துத் தின்றுவிடுமோ…

இந்தக் குற்றச் செயல்களுக்கு நிகராக நாம் பார்ப்பது, இதைக் கண்டித்துள்ளவர்களின் பேச்சில் தொனிக்கும் அலட்சியமும், உள்ளூர அந்த வக்கிரத்தை ரசிக்கும் போக்கும்தான்.

அரைமணி நேரமாக, பிரதான சாலையில் ஒரு பெண்ணை 20 பேர் மானபங்கம் செய்கிறார்கள். போலீசார் எட்டிப் பார்க்கவில்லையே என்றால், ‘போலீஸ் என்ன ஏடிஎம் மிஷினா… கார்டு போட்டதும் வருவதற்கு?” என மனிதாபிமானமின்றி பதிலளித்திருக்கிறார் அசாம் மாநில டிஜிபி.

மக்களைக் காக்கும் கடமையிலிருப்போரின் மனப்பான்மையைப் புரிந்து கொள்ள இது ஒரு சாம்பிள்தான்! ஏடிஎம்மை விட வேகமாகவும் சுறுசுறுப்பாகவும் இருந்தால்தான் போலீஸ்… இல்லாவிட்டால் யூஸ்லெஸ் என்பது தெரியாத ஒரு டிஜிபி!

அதிகாரிகள் குற்றங்களின் காவலர்களாகிவிட்ட சூழல். மக்களோ, கண்ணெதில் கொலை, கற்பழிப்பு, கொடிய வன்முறை என எது நடந்தாலும் அதை ‘லைவாக’ ரசிக்கும் மனநிலைக்கு வந்துவிட்டனர்.

அதிகாரிகளின் அலட்சியத்தைவிட ஆபத்தானது இதுதான்!

-வினோ
என்வழி ஸ்பெஷல்
10 thoughts on “இது தேசிய அவமானம்!

 1. தினகர்

  ‘போலீஸ் என்ன ஏடிஎம் மிஷினா… கார்டு போட்டதும் வருவதற்கு?” என மனிதாபிமானமின்றி பதிலளித்திருக்கிறார் அசாம் மாநில டிஜிபி.”

  தலைவர் சொன்னாரே ‘ உதைக்க வேண்டாமா?’ என்று. அது இவருக்கும் பொருந்தும்.

  ”மக்களோ, கண்ணெதில் கொலை, கற்பழிப்பு, கொடிய வன்முறை என எது நடந்தாலும் அதை ‘லைவாக’ ரசிக்கும் மனநிலைக்கு வந்துவிட்டனர்.”

  சில மக்கள் மிருகங்களாக மாறிவருவது தெரிகிறது.. இன்னும் மக்கள் இனமாக இருப்பவர்கள் இந்த மிருகங்களை ஒழித்து மக்கள் இனத்தை காக்க வேண்டும்.

 2. r.v.saravanan

  மிருகங்களை வெட்கப்பட வைத்த இழி பிறவிகள்
  இப்படி நம்மை சொல்கிறார்களே என்று இதற்காவது இவர்கள் வெட்கப்படுவார்களா ?

 3. குமரன்

  இதைச் செய்தவர்களை மனிதர்கள் என்றே சொல்லக் கூடாது. எல்லாம் மிருகங்கள். சரியான தண்டனை – அவர்களது ஆண்மையை அகற்றிவிட்டு வாழ்நாளெல்லாம் பெண்மையை அனுபவிக்கவே விடாமல் செய்யவேண்டும். வெட்கத்திலே/ அவமானத்திலே வாழ்நாள் முழுவதும் துடிக்க வேண்டும்.

  பெண்மையைப் பாராட்டி, பாதுகாத்து, அரவணைத்து அனுபவிக்கும் சிந்தனையை இளம் தலைமுறைக்கு மீண்டும் ஒருமுறை எடுத்துச் செல்லவேண்டும்.

  அங்கங்கே முளைத்திருக்கும் பார்களையும், பப்களையும் மூடுவது கடினம் என்றாலும் கட்டுக்குள் வைக்க வேண்டும். இளம் தலைமுறை இவற்றில் கவனம் செலுத்தாத படி நல்ல சிந்தனைகளை வளர்க்கவேண்டும்.

  facebook போன்றவற்றினால் மேலும் மேலும் தவறான பாதையில் இளைஞர்கள் செல்வது இதனால் உறுதியாகிறது. இந்தச் செயலில் ஈடுபட்ட சிகப்பு டி-ஷர்ட் இளைஞன் facebook பக்கம் அவனை காட்டிக் கொடுக்கிறது.

  இந்த நிகழ்வை அப்படியே விடியோ படம் எடுத்து லோக்கல் தொலைக் காட்சியில் திரும்பத் திரும்ப (நமது சன் டி.வி. நித்தியானந்தா-ரஞ்சிதா டேப்பை ஒளிபரப்பியது போல) ஒளிபரப்பி இருக்கிறார்கள்.

  அவர்களது வீட்டுப் பெண்ணானால் காப்பதில்தான் மனம் செல்லும், இது வேறு யாரோ பெண் என்பதால் அதை ஒளிபரப்பி அந்த பரபரப்பில் விளம்பரம் தேடும் அளவுக்கு நமது ஊடகங்களும் பத்திரிகையாளர்களும் தரம் தாழ்ந்து விட்டார்கள்.

 4. JB

  ஏன் மிருகங்களுடன் இவர்களை ஒப்பிட்டு மிருகத்தை கேவலப்படுத்துகிறீர்கள்?

  மிருகங்கள் மனசாட்சி அற்றவை என்று மனிதன் நம்புகிறான். எனவே அவற்றின் செயலுக்கு அவை பொறுப்பல்ல. அது வேண்டும் என்றே தெரிந்து புரிந்து செய்யாது. தன் இயல்பு சுபாவத்தில் செயல்படுகிறது.

  மனிதன்தான் தெரிந்தே தப்பு செய்கிறான். அவனை ஒரு மிருகம் என்று சொல்வதால், அவனது தப்புக்கு அவன் பொறுப்பல்ல என்று ஆகிறது. மனிதனின் இயல்பு சுபாவம் துன்புறுத்துதலாக இருந்தாலும், அவனது மனசாட்சி அது தப்பு என்று அவனுக்கு அறிவிக்கும். அதை கேட்காதது அவனது தப்பு. அதுவும் மிருகமும் ஒன்றல்ல.

  எனது சிறிய அபிப்பிராயம்.

 5. s venkatesan, nigeria

  //ஏன் மிருகங்களுடன் இவர்களை ஒப்பிட்டு மிருகத்தை கேவலப்படுத்துகிறீர்கள்?
  மிருகங்கள் மனசாட்சி அற்றவை என்று மனிதன் நம்புகிறான். எனவே அவற்றின் செயலுக்கு அவை பொறுப்பல்ல. அது வேண்டும் என்றே தெரிந்து புரிந்து செய்யாது. தன் இயல்பு சுபாவத்தில் செயல்படுகிறது.
  மனிதன்தான் தெரிந்தே தப்பு செய்கிறான். அவனை ஒரு மிருகம் என்று சொல்வதால், அவனது தப்புக்கு அவன் பொறுப்பல்ல என்று ஆகிறது. மனிதனின் இயல்பு சுபாவம் துன்புறுத்துதலாக இருந்தாலும், அவனது மனசாட்சி அது தப்பு என்று அவனுக்கு அறிவிக்கும். அதை கேட்காதது அவனது தப்பு. அதுவும் மிருகமும் ஒன்றல்ல.
  எனது சிறிய அபிப்பிராயம்.//
  மிக சிறந்த கருத்து.

 6. enkaruthu

  என்னை பொறுத்தவரை இந்த ஒரு விஷயத்தில் மட்டும் அரபு நாடுகள் போல இங்கே சட்டத்தை தளர்த்தவேண்டும்.இந்த தெருநாய்களை எல்லாம் கருணையே பார்க்காமல் சுட்டு கொல்லவேண்டும்.இல்லையென்றால் இவனுங்களை எல்லாம் ஒரு நாள் பூராவும் கொஞ்சம் கொஞ்சமாக தெளியவிட்டு தெளியவிட்டு அடித்து கொல்லவேண்டும்.

 7. மு. செந்தில் குமார்

  திரு குமரன் மற்றும் திரு என்கருத்து அவர்களின் கோபம் தான் எனக்கும்.

 8. Rajmohan

  Dear All,
  Here Vino not even said any single comment on that TV reporter,
  If really he(reporter) is an HUMAN BEING, he could have saved this girl from these animals.
  But both the reporter and Camera man have shooted this film very casually!!!
  This is the real TRUTH.
  This incident is really SHAME to media ppl’s…..

 9. Manoharan

  திரு குமரன் மற்றும் திரு என்கருத்து அவர்களின் கோபம் தான் எனக்கும். நான் நினைத்ததை இவர்கள் அப்படியே சொல்லிவிட்டார்கள்.

 10. krishnan

  Those peoples are stupid. They are not living in this world. Same incident do not happen in this world

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *