BREAKING NEWS
Search

ஆசியக் கோப்பை: நூறாவது சதம் காண சச்சினுக்கு இன்னுமொரு எக்ஸ்டென்ஷன்!

நூறாவது சதம் காண சச்சினுக்கு இன்னுமொரு எக்ஸ்டென்ஷன்! – ஷேவாக், ஜாகிர் நீக்கம்!

சிய கோப்பை அணி: சச்சினுக்கு மீண்டும் சான்ஸ்-ஷேவாக், ஜாகிர் கான் நீக்கம்-கேப்டனாக தொடர்கிறார் தோனி

மும்பை: அணி தோற்கிறதோ ஜெயிக்கிறதோ… சச்சினின் நூறாவது சதம்தான் முக்கியம் என்பதுதான் கிட்டத்தட்ட இந்திய ரசிகர்களின் மனநிலை என்றாகிவிட்டது.

அதைப் புரிந்து கொண்ட பிசிசிஐ, சச்சின் நூறாவது சதத்தை எட்ட மேலும் ஒரு வாய்ப்பை அளித்துள்ளது.

டாக்காவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள ஆசியக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் பார்மில் இல்லாதவரும், ஆஸ்திரேலிய தொடரின்போது கேப்டன் டோணியுடன் மோதல் போக்கில் ஈடுபட்டவருமான வீரேந்திர ஷேவாக்கை பிசிசிஐ நீக்கியுள்ளது. அதேசமயம் கிட்டத்தட்ட 1 ஆண்டாக பார்மில் இல்லாமல், விமர்சனங்களுக்குள்ளாகியுள்ள சச்சினுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஜாகிர்கானுக்கும் இடம் கிடைக்கவில்லை.

பங்காளதேஷ் தலைநகர் டாக்காவில் மார்ச் 12ம் தேதி ஆசியக் கோப்பை தொடர் துவங்க உள்ளது. இதில் விளையாடும் இந்திய வீரர்களின் தேர்வு இன்று மும்பையில் நடைபெற்றது. இந்திய அணித் தேர்வாளர் குழுத் தலைவர்  ஸ்ரீகாந்த் தலைமையிலான குழு நீண்ட ஆலோசனைக்கு பிறகு ஆசியக் கோப்பைக்கான 15 பேர் அடங்கிய இந்திய அணியை அறிவித்தது.

இதில் ஆஸ்திரேலியாவில் மோசமாக ஆடிய துவக்க வீரர் ஷேவாக் அணியி்ல் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஆனால் பார்மில் இல்லாவிட்டாலும் கூட, 100 வது சத சாதனை படைக்க சச்சினுக்கு அணியில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வழக்கம் போல கேப்டன் டோணி அணியை வழிநடத்தி செல்வார். அவருக்கு உறுதுணையாக விராத் கோஹ்லி துணைக் கேப்டனாக செயல்படுவார். முத்தரப்புத் தொடரின் சமீபத்திய போட்டியில் கலக்கலாக சதமடித்ததற்காக கோஹ்லிக்கு இந்த பரிசு!

மேலும் சுழல்பந்து வீரர் அஸ்வின், சுரேஷ் ரெய்னா, ரவிந்திர ஜடேஜா, வினய் குமார் ஆகிய இளம்வீரர்கள் அணியில் நீடிக்கின்றனர். இந்திய அணியில் புதுமுகமாக வேகபந்துவீச்சாளர் அசோக் டின்டா சேர்க்கப்பட்டுள்ளார். வேகபந்துவீச்சாளர் ஜாகிர்கான் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

மீண்டும் பதான் சகோதரர்கள்

இந்திய அணியில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பதான் சகோதரர்களான இர்பான் பதான் மற்றும் யூசுப் பதான் ஆகிய இருவரும் இடம் பிடித்துள்ளனர்.

15 பேர் கொண்ட இந்திய அணி:

டோணி (கேப்டன்), விராத் கோஹ்லி(துணைக் கேப்டன்), சச்சின் டெண்டுல்கர், கெளதம் கம்பீர், ரோஹித் சர்மா, சுரேஷ் ரெய்னா, ரவிந்திர ஜடேஜா, அஸ்வின், பிரவீன் குமார், வினய் குமார், ராகுல் சர்மா, யூசுப் பதான், இர்பான் பதான், அசோக் டின்டா

-என்வழி செய்திகள்
10 thoughts on “ஆசியக் கோப்பை: நூறாவது சதம் காண சச்சினுக்கு இன்னுமொரு எக்ஸ்டென்ஷன்!

 1. kabilan

  வினோ அண்ணா நீங்கள் சொல்லி இருப்பது தவறு .நீங்கள் ஸ்ரீகாந்த் பேட்டி குடுத்ததை பார்கவில்லை என்று நினைக்கிறன் .sehwag ,zaheer இருவருக்கும் 500% ஓய்வு அளிக்க படு உள்ளது .மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் நீங்கள் செய்தி போட்டு இருப்பதாய் பார்த்தல் எதோ சச்சின் புதுமுக வீரர் போலவும் அவருக்கு எதோ போன போகிறது என்று இன்னொரு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது போலவும் கூறியுள்ளிர்கள் .நேத்து சச்சின் விளையாண்டதை பாரதிகள இல்லையா ?சச்சினை அப்படி கூரதிர்கள் அண்ணா .இந்திய சினிமா உலகிற்கு தலைவர் ரஜினி எப்போடியோ அது போல் கிரிக்கெட் உலகத்திற்கு சச்சின் அவர்கள்.

 2. Manoharan

  சச்சின் பார்மில் இல்லை என்று யார் சொன்னது ? நீங்கள் அவர் விளையாடியதை பார்க்கவில்லை என்று நினைக்கிறேன். டெக்னிகலாக அவரிடம் எந்த பிரச்சனையும் இல்லை, எல்லா ஷாட்களையும் நன்றாக அடிக்கிறார். களத்தில் தினறுவதில்லை. ஆனால் திடீரென்று அவுட் ஆகிவிடுகிறார். பிரச்சனை அவர் ஆட்டத்தில் இல்லை. அவர் மனதில் உள்ளது. ஏற்க்கனவே 100 வது சதம் அவரை மனதளவில் பாதிக்கிறது. இந்த தொடரில் தோனியின் ரொட்டேஷன் பாலிசியினால் மேலும் பாதிப்பு. அந்த 100 மட்டும் அடித்துவிட்டால் பழைய சச்சினை மறுபடியும் பார்க்கலாம். என்னை பொறுத்தவரை இந்த தொடரில் பைனலுக்கு இந்தியா போனாலும், பின் ஆசிய தொடரின் போதும் அவர் தனது பாணியான அதிரடி ஆட்டத்தை தொடர்ந்து வெளிபடுத்த வேண்டும். . அவுட் ஆவதை பற்றி கவலையே படக்கூடாது. அப்படி செய்தால் சதம் நிச்சயம். வாழ்த்துக்கள் சச்சின்.

 3. Rose

  சச்சினை விட கிரிக்கெட் முக்கியம் கபிலன். சச்சினை யாரும் தனிப்பட்ட முறையில் குறை சொல்லவில்லை. சச்சின் 25 மேட்ச்களில் சொதப்பி, நேற்றைய மேட்சில் பரவாயில்லை எனும் அளவுக்கு ஆடினார். அவருக்கு தரப்படும் அளவுக்கு வாய்ப்புகளை மற்றவர்களுக்கும் வழங்குவார்களா பிசிசிஐ?

 4. மிஸ்டர் பாவலன்

  மனோகரன் எழுதினது நூற்றுக்கு நூறு உண்மை.
  சச்சினைப் போல ஒரு கிரிக்கட் வீரர் இந்தியாவில்
  வேறு யாரும் இல்லை. அவரை டிராப் செய்யும்
  தகுதி ஸ்ரீகாந்திற்கு இல்லை. நூறாவது சதம்
  எப்போது அடிப்போம்? அவுட்டாகி விடுமோ? என்ற
  பயமே அவரைக் கெடுக்கிறது. சாய்பாபாவும் இல்லை.
  பாபா ராம்தேவ், பண்டிட் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் யாரையாவது
  பார்த்து யோகா செய்து சச்சின் களம் இறங்கி சாதனை
  படைப்பார் என நம்புவோம்.

  -=== மிஸ்டர் பாவலன் ===-

 5. enkaruthu

  //அந்த 100 மட்டும் அடித்துவிட்டால் பழைய சச்சினை மறுபடியும் பார்க்கலாம். //
  என் கருத்தும் அதுதான்.சச்சினை போல் பிறருக்கு மீடியா மற்றும் ரசிகர்களின் அன்பு தொல்லை இருந்தால் அவரெல்லாம் என்றைக்கோ பைத்தியம் ஆகிருப்பர்கள்.இந்த ஆஸ்திரேலியா தொடரில் ஒவ்வொரு மேட்சுக்கு ஒரு மணி நேரம் முன்பாக அணைத்து ஆங்கில சேனலை பாருங்கள்
  whole india waiting for sachin’s 100th ton என்று பயங்கர டென்ஷன் கூட்டுவார்கள்.நம் ரசிகர்களும் சச்சின் சச்சின் என்று அவர் களத்தில் இறங்கும்பொழுது கத்துவார்கள்.அவர் மேல் உள்ள ஆசையால் கத்தினாலும் அவருக்கு அது டென்ஷன்னே.ஒரு கிரிக்கெட் பிளேயர் என்ற முறையில் சொல்கிறேன் ஒரு நல்ல பிளேயர் என்றும் பந்தை வேஸ்ட் செய்ய மாட்டார்கள். ஒவ்வொரு மட்சில்லும் சச்சினின் strike ரேட்டை பாருங்கள் அது நன்றாகவே தெரியும் .120 பக்கம் பந்தை பிடித்து 30 ரன் எடுத்த கவாஸ்கர் கூட அந்த மேட்சுக்கு அப்புறம் ஓய்வு ஆக வில்லை.அவரை போன்றவர்கள் எல்லாம் சச்சின் ஆட்டத்தை குறை கூற தகுதி இல்லை.மேலும் கடந்த 20 வருடங்களாக அவர் பீல்டிங்கை analyse செய்தால் அவர் விட்ட கேட்சும் பில்டிங்கில் பந்தை தவற விட்டதும் ரொம்ப அரிது.எனக்கு தெரிந்து டோனி stumping தவற விட்டது மிக அதிகம்.சச்சின் மட்டும் இந்த நூறாவது சதத்தை அடிக்கட்டும் அதற்க்கு அப்புறம் வரும் ஒவ்வொரு ஆட்டத்திலும் அவர் விளையாடுவதை பார்த்து அனைவரும் பாராட்டத்தான் போகிறார்கள்.என்னை பொறுத்தவரை பல ஆண்டுகளாக நாட்டுக்கு பெருமை சேர்த்தவரை அவர் மனது குளிரும்படி வலி அனுப்ப வேண்டும்.அப்பொழுதான் நாட்டுக்காக அட வேண்டும் என்று அனைத்து பிளேயர்களுக்கும் மனது வரும்.

 6. குமரன்

  பெரிய ஆட்டங்கள் எல்லாமே ஆடுபவருக்கு அதிக அளவில் படபடப்பைத்தருவன. Wherever the stakes are high the player undergoes high stress and the heart beat will be very heavy at the climaxing time. the one who knows to relax at the climax wins! When I say game, it doesnot necessarily mean “game” it includes any target based attempt. eg., a candidate at an election, when the counting goes on and the results are to be announced, the player playing the finals of a high stake game, the artist/ producer/technician expecting the outcome of the movie soon after release etc.

  படபடவென்று இதயம் துடிக்கப்பந்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும்போது, நூறை எட்டக் காத்திருக்கும் பேட்ஸ்மேன் தவறுவது இயற்கை.

  ஒரு நூருக்கே படபடப்பாக இருந்து அதனை 90 களில் தவற விட்டவர்கள் ஏராளம், ஆயிரக் கணக்கில். இப்படியிருக்க நூறாவது நாரை எதிர்பார்க்கும்போது அதுவும் வயது அதிகமான நிலையில் இயல்பாகவே சச்சினுக்குப் படபடப்பாக இதயத் துடிப்பு அதிகமாகவே இருக்கும். அவர் நமது பாவலன் சொன்னது போல அந்த நேரத்தில் மனதை ஒருமுகப்படுத்தி, நிதானப் படுத்தும் பயற்சி செய்தல் பலன் தரும்.

  நூறாவது நூறை சச்சின் எட்டிப்பிடிக்க வாழ்த்துவோம். ஆனால் அதை அவர் எடுத்தவுடன் பாரத ரத்னா என்று ஆரம்பிப்பார்கள், அது ஓவர், தவறான பாதை, முன்னுதாரணம்.

 7. Manoharan

  @ Rose. சச்சினை எப்படி மற்றவர்களுடன் ஒப்பிடுகிறீர்கள் என்று புரியவில்லை. அவர் ஒரு ஜீனியஸ்,லெஜன்ட், கடந்த 23 வருடங்களாக இந்தியர்கள் கிரிக்கெட்டின் மீது இவ்வளவு பிடிப்பு வைத்திருப்பதற்கு மிக முக்கியமான காரணம் சச்சின். இன்றைக்கு விளையாட்டில் உலக அளவில் நாம் பெருமைபட்டு சொல்லக்கூடிய பெயர் சச்சின். ஒரு விளையாட்டில் All time Best என்பது கற்பனைக்கு எட்டாத விஷயம். அதை செய்து காட்டியவர் சச்சின். நிச்சயமாக சொல்கிறேன் சச்சின் ஒய்வு பெரும் அந்த நாளில் கிரிக்கெட் மீது எனக்கு இருக்கும் ஆர்வமும் ஒய்வு பெற்று விடும். இந்தியாவில் என்னை போன்றவர்கள் கோடிக்கணக்கில் உள்ளனர்.

 8. kabilan

  மனோகரன் சார்,மிக்க நன்றி .நன் நினைத்ததையும் னியானைகததையும் சேர்த்து எழுத்து உள்ளீர்கள் .சூப்பர் சார் .

 9. சுதந்திரன்

  சச்சின் ஒரு genious என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை, இருக்கவும் முடியாது. ஆனால், என்றைக்கோ செய்த ஒரு சாதனைய இன்றைக்கும் சொல்லி கொண்டிருப்பது பழங்கதை பேசும் வீரர்களின் செயல். மேலும், அதை சொல்லி சொல்லியே அணியில் இடம் பிடித்து கொண்டிருப்பது இன்னுமொரு தவறான முன்னுதாரணம்.
  சச்சின் மிக விரைவாக 100 ஆவது சதத்தை அடிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசையும். காரணம், அப்போதாவது அவரின் மனமும் ரசிகர்களின் மனமும் குளிர்ந்து அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விடுவார். இன்னொரு இளைஞருக்கு அணியில் அந்த இடம் கிடைக்கும். உடனே, சச்சினை போல் இன்னொருவர் கிடைக்க முடியாது என்று புது பொருமலை யாரும் ஆரம்பித்து விட வேண்டாம்.
  இன்றைக்கு சச்சின் இவ்வளவு தடுமாறுவதற்கு மிக முக்கிய காரணம் அவரது ரசிகர்களே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *