BREAKING NEWS
Search

‘பாஜகவினரை நான் பார்த்துக் கொள்கிறேன்… திப்பு சுல்தானில் ரஜினி நடிப்பார்’! – தயாரிப்பாளர் அசோக் கெனி

பாஜகவினரை நான் பார்த்துக் கொள்கிறேன்… திப்பு சுல்தானில் ரஜினி நடிப்பார்! 

rajini-tipu

‘சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் திப்பு சுல்தான் படம் திட்டமிட்டபடி உருவாகும். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பாஜகவினரை நான் பார்த்துக் கொள்கிறேன்..’, என்று தயாரிப்பாளரும் தொழிலதிபருமான அசோக் கெனி தெரிவித்துள்ளார்.

திப்பு சுல்தான் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து பிரமாண்டமாக பல மொழிகளில் படம் எடுக்க வேண்டும் என்று கடந்த 2011-ம் ஆண்டே அசோக் கெனி திட்டமிட்டார். இதனை ரஜினியிடம் கூற, அவரும் ஆர்வத்துடன் சம்மதித்தார்.

ஆனால் அதன் பிறகு ரஜினி ராணாவை அறிவித்தார். பின்னர் உடல் நலம் சரியில்லாமல் போய், கோச்சடையான், லிங்கா வந்ததெல்லாம் தெரிந்த சமாச்சாரங்கள்.

இப்போது ரஜினி மீண்டும் முழு வேகத்துடன் புதுப்புது படங்களில் நடித்து வருகிறார். இப்போது கபாலியில் நடிக்கும் அவர், அடுத்த நான்கு மாதங்களில் ஷங்கர் இயக்கத்தில் எந்திரன் 2-ல் நடிக்கிறார். மேலும் சில படங்களில் நடிக்கும் திட்டத்திலும் உள்ளார்.

இந்த நிலையில், திப்பு சுல்தான் படத்தை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து ரஜினியுடன் பேசவிருப்பதாக அசோக் கெனி தெரிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பைக் கிளப்பியதோடு, பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகளிடமிருந்து எதிர்ப்பும் கிளம்பியது. ரஜினி இந்தப் படம் குறித்து ஒரு வார்த்தை கூட இன்னும் பேசவில்லை. ஆனால் அதற்குள் ஏக சர்ச்சைகள் அந்தப் படம் குறித்து.

திப்பு சுல்தான் பற்றி ஏற்கெனவே பாலிவுட்டில் படங்கள், டிவி தொடர் வந்துள்ளது. அப்போது எந்த எதிர்ப்பும் கிளம்பவில்லை.

இந்த நிலையில் திப்பு சுல்தான் படத்தை ரஜினியை வைத்து உருவாக்குவதில் உறுதியுடன் இருப்பதாக அசோக் கெனி மீண்டும் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், “நான் முதலில் மாவீரன் சிவாஜியின் வாழ்க்கையைத்தான் ரஜினியை வைத்துப் படமாக்க வேண்டும் என விரும்பினேன். அதை ரஜினியிடம் கூறியபோது ‘வேண்டாம்… சிவாஜி காலத்தில் அவருக்கு இஸ்லாமியர்களோடு மோதல் இருந்தது. அப்படிக் காட்சிகள் வேண்டாம். அதைவிட திப்பு சுல்தான் கதையை படமாக்கினால் நன்றாக இருக்கும். அனைத்து மதத்தவர்களையும் அரவணைத்தவர் திப்பு.. பிரிட்டிாரை வீரத்துடன் போரிட்டு விரட்டியவர்,’ என்று ரஜினிதான் கூறினார்.

ரஜினி இந்த நாட்டு மக்களால் பெரிதும் விரும்பப்படும் கலைஞர். ஒவ்வொருவருக்கும் அவர் மீது உரிமையும் அன்பும் உள்ளது.

இந்தப் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாஜக உள்ளிட்டோரை நான் பார்த்துக் கொள்கிறேன். திட்டமிட்டபடி படத்தில் ரஜினி நடிப்பார். இப்போது ஸ்க்ரிப்ட் வேலை நடந்து கொண்டிருக்கிறது,’ என்றார்.

-என்வழி

குறிப்பு: இங்கே நீங்கள் பார்ப்பது ரசிகர்கள் வடிவமைத்த திப்பு சுல்தான் ரஜினியின் முதல் பார்வை!




3 thoughts on “‘பாஜகவினரை நான் பார்த்துக் கொள்கிறேன்… திப்பு சுல்தானில் ரஜினி நடிப்பார்’! – தயாரிப்பாளர் அசோக் கெனி

  1. Sekar

    தலைவர் கம்பீரமாக உள்ளார்.
    வாழ்த்துக்கள்.

  2. குமரன்

    என்ன ஒரு அடக்கம், அவனை நான் பார்த்துக் கொள்கிறேன், நீ வந்து இந்த நெருப்பில் கை வை என்கிறாரே, இவரது உள்நோக்கத்துக்கும், ஈகோவுக்கும் தலைவர்தான் கிடைத்தாரா? அவரை வம்பில் மாட்டிவிடத் துடிக்கும் இந்த அசோக்குக்குக் உண்மையிலேயெ தலைவர் மீது அன்பும் மரியாதையும் இருக்கிறதா? எப்போது எதிர்ப்பு வரும் என்று தெரீகிறதோ அப்போதே தலைவரை அனாவசியமாக இதில் இழுப்பதை இந்த அசோக் நிறுத்த வேண்டாமா?

  3. Rajagopalan

    I support Mr Kumaran.
    All people are dragging thalaivar into all sorts of nonsense & trying to spoil thalaivar name in the name of friendship.

    I guess all enemies of thalaivar are jointly doing something to spoil him.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *