BREAKING NEWS
Search

சூப்பர் ஸ்டார் நடித்த பாண்டியன் ரீமேக்கில் ஆர்யா!

பாண்டியன் ரீமேக்கில் ஆர்யா!

arya-rajini

சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்களை ரீமேக் செய்வது கோலிவுட்டில் தீவிரமாக நடக்க ஆரம்பித்துவிட்டது.

இந்த முறை அவரது 1992-ம் ஆண்டு ஹிட் படமான பாண்டியனை ரீமேக் செய்கிறார்கள். ரஜினி வேடத்தில் நடிக்கப் போகிறவர் ஆர்யாவாம். இயக்கம் படிக்காதவன், மாப்பிள்ளை போன்ற படங்களை இயக்கிய சுராஜ்.

ரஜினியை வைத்து எஸ்பி முத்துராமன் இயக்கிய கடைசி படம் (25வது) பாண்டியன். ‘மிஸ்டர் ரைட்’ ரஜினி, குஷ்பு, ஜனகராஜ், ஜெயசுதா நடித்த இந்தப் படத்தை எஸ்பி முத்துராமனின் யூனிட்டுக்காக ரஜினி இலவசமாக நடித்துக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரிய வெற்றி என்று சொல்ல முடியாவிட்டாலும், பாண்டியன் படம் 100 நாட்கள் ஓடி  திருப்தியான லாபத்தைத் தந்தது.

-என்வழி

 




5 thoughts on “சூப்பர் ஸ்டார் நடித்த பாண்டியன் ரீமேக்கில் ஆர்யா!

  1. srikanth1974

    எங்கள் தலைவர் நடித்தே அது சுமாரா போன படம் என்கிறபோது உனக்கு எதுக்குயா இந்த வேலை? யோவ் ஆரியா பேசாம போறியா?.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *