BREAKING NEWS
Search

உலக சினிமாவைக் கலக்க மெகா திட்டம்: சூப்பர் ஸ்டார் ரஜினி – ஷங்கர் படத்தில் முக்கிய வேடத்தில் அர்னால்ட்?

உலக சினிமாவைக் கலக்க மெகா திட்டம்:  சூப்பர் ஸ்டார் ரஜினி – ஷங்கர் படத்தில் முக்கிய வேடத்தில் அர்னால்ட்?

Rajini, Shankar, Arnold Schwarzenegger @ I Movie Audio Launch Stills

சூப்பர் ஸ்டார் ரஜினி – ஷங்கர் இணையும் மெகா படத்தில், இன்னொரு பெரிய நடிகரும் நடிப்பார் என்று கூறப்பட்டு வருகிறதல்லவா…

அந்த இன்னொரு நடிகர் என முதலில் கமல் ஹாஸன் என்றார்கள், பின்னர் ஆமீர்கான் என்றார்கள், அடுத்து விக்ரம் பெயரைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

இந்த நிலையில் அந்தப் பாத்திரத்தில் நடிக்கப் போகிறவர்… ஹாலிவுட் மெகா ஸ்டார் அர்னால்ட் என்ற புதிய தகவல் கசிந்துள்ளது.

ஷங்கர் இயக்கிய ஐ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவுக்காக அர்னால்ட் சென்னை வந்திருந்தார். அப்போது அவருடன் ஷங்கருக்கு நல்ல அறிமுகம் கிடைத்தது. அப்போது மேடையிலேயே தமிழில் தனக்கும் ஒரு வாய்ப்புத் தருமாறு ஷங்கரிடம் அர்னால்ட் கேட்டது நினைவிருக்கலாம்.

அதை வைத்து ஷங்கரும் இப்போது அர்னால்டை அணுகியிருக்கிறாராம். ரஜினிக்கு சமமான பாத்திரத்தில் அர்னால்ட் நடிக்கப் போகிறாராம். அர்னால்டும், இந்தியாவில் தனக்காக உள்ள ரசிகர் கூட்டத்தை மனதில் வைத்து நடிக்கச் சம்மதித்திருப்பதாகத் தகவல்.

சுமார் இரண்டாண்டுகள் நடக்கவிருக்கும் அந்தப்படத்தின் வேலைகளில் படப்பிடிப்பு மட்டும் ஓராண்டு நடக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அதில் அர்னால்டு இருபத்தைந்து நாட்கள் வரை நடிப்பார் என்கிறார்கள். இதை ரஜினியும் மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டுள்ளாராம்.

இந்தப் படத்தில் ரஜினி – அர்னால்ட் நடிப்பதன் மூலம் அந்தப் படத்தின் மார்க்கெட் சர்வதேச அளவில் பரந்து விரியும் என்பதோடு, உலகளவில் பாரமவுண்ட் மாதிரி பெரிய நிறுவனங்கள் படத்தை வெளியிடும் வாய்ப்பும் கிடைக்கும். அதன் மூலம் தமிழ்ப் படம் ஒன்றை ஹாலிவுட் நிறுவனம் உலகளவில் வெளியிடுவது முதல் முறையாக அமையும்.

இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

-என்வழி




7 thoughts on “உலக சினிமாவைக் கலக்க மெகா திட்டம்: சூப்பர் ஸ்டார் ரஜினி – ஷங்கர் படத்தில் முக்கிய வேடத்தில் அர்னால்ட்?

 1. Rajagopalan

  Edhathan edhirpathen….

  Hope it will get materialised….

  2 years wait pannanume…..

 2. Sanjev

  தலைவா, நீ தான் இந்தியன் சினிமா முன்னோடி. ”
  நான் யானை இல்ல குதிரை”.
  Cannot wait for this to be true.

 3. குமரன்

  மிக அருமையான திட்டம். இதன்படி இந்தப் படம் எடுக்கப்பட்டு வெளியானால், இந்தியத் திரையுலக வரலாற்றில் இது முக்கியமான மைல் கல்லாக அமையும். மிகக் கடின உழைப்பை ஒவ்வொருவரிடமிருந்தும் பெற்றாக வேண்டிய கடும் வேலையை சங்கர் சிறப்பாகச செய்து முடிப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

  அத்தகைய பெரிய செலவைச் சமாளிக்கும் சந்தை தலைவர் ஒருவரிடம் மட்டுமே உள்ளது. ஆர்நால்டும் சேர்ந்தால் நிச்சய வெற்றிதான்.

  இந்த பிளாக் மெயிலர் சிங்காரவேலன் கொசுத் தொல்லையை அதற்குள் முடித்துவிடவேண்டும். அதற்கு தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் இந்த பிளாக் மெயிலர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

 4. srikanth1974

  உன்பேரை சொன்னதும்,பெருமை சொன்னதும்
  கடலும்,கடலும் கை தட்டும்

  நீ உலகம் தாண்டிய உயரம் கொண்டதில்
  நிலவு நிலவு தரை முட்டும்

  வாழ்த்துக்கள் தலைவா!

 5. Anumantharao

  தலைவரின் ஒவொரு படத்திற்கும் ஏதாவது ஒரு புதிய சிக்கலை வரவைத்து பணம் சம்பாதிக்க நிறைய பேர் irukiraargal… ஏன் சிங்காரவேலனே மீண்டும் வேறு யார் மூலமாகவோ விநியோக உரிமையை வாங்கி வெளியிட வைப்பு உண்டு இந்த உலகம் போட்டியையும் பொறாமையையும் பணத்தாசையும் பின்பற்றி ஓடுகிறது ……

 6. Maya

  தற்போதைய செய்தி ….என்னிடம் பணம் பறிக்கும் கெட்ட எண்ணத்துடன் வழக்கு தொடர்கிறார்கள்! – ரஜினிகாந்த் மனு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *