BREAKING NEWS
Search

சென்னையில் அர்னால்ட்… சிறப்பான வரவேற்பு.. முதல்வரைச் சந்திக்கிறார்!

சென்னையில் அர்னால்ட்… சிறப்பான வரவேற்பு.. முதல்வரைச் சந்திக்கிறார்!

arnold-airport

சென்னை: ஐ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்காக சென்னை வந்த அர்னால்ட் ஸ்வார்ஷ்நெக்கருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இன்று பிற்பகல் அவர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திக்கிறார்.

ஹாலிவுட்டின் பிரபல நடிகரும் உலகம் முழுக்க ஏராளமான ரசிகர்களின் மனம் கவர்ந்தவருமான அர்னால்ட் இன்று முதல் முறையாக சென்னைக்கு வந்துள்ளார். ஷங்கர் இயக்கத்தில், ஏ ஆர் ரஹ்மான் இசையில், விக்ரம் – எமி ஜாக்ஸன் நடித்துள்ள ஐ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக அவர் வந்துள்ளார்.

தனி விமானம் மூலம் வந்த அவருக்கு சென்னை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரைக் காண ஏராளமான ரசிகர்கள் குழுமியிருந்தனர்.

படத்தின் தயாரிப்பாளர்கள் மற்றும் குழுவினர் அவரை வரவேற்று அழைத்துச் சென்றனர். சென்னை லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில் அவர் தங்கியுள்ளார்.

arnold-2

பிற்பகல் 2.45 மணிக்கு அவர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசுகிறார்.

அர்னால் ஒரு நடிகர் மட்டுமல்ல. கலிபோர்னியா மாகாணத்தின் ஆளுநராக இரு முறை (2003 – 2011) பதவி வகித்தவர். சர்வதேச அளவில் புகழ்பெற்ற பிரமுகர். அந்த வகையில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இன்று அவர் சந்திக்கவிருக்கிறார்.

இன்று மாலை 5.30 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் ஐ இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்று பாடல்களை வெளியிடுகிறார் அர்னால்ட். அவற்றை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெற்றுக் கொள்கிறார்.

-என்வழி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *