BREAKING NEWS
Search

லிங்கா குவித்த கோடிகள்… மறைக்க முயற்சிக்கும் கேடிகள்!

லிங்கா குவித்த கோடிகள்… மறைக்க முயற்சிக்கும் கேடிகள்!

lingaa theater

லிங்கா படத்தில் பல கோடிகளை முதல் மூன்று நாட்களிலேயே குவித்துவிட்ட தியேட்டர்காரர்கள், குறைவான வசூல் கணக்குக் காட்டியதை கையும் களவுமாகப் பிடித்துள்ளனர் வருமான வரித்துறையினர்.

ரஜினி பட விஷயத்தில் ஒருவித பகல் கொள்ளையே நடத்துகிறார்கள் தியேட்டர்காரர்களும் விநியோகஸ்தர்களும் என்றால் மிகையல்ல.

படத்துக்கு எவ்வளவு வசூல் குவிந்தாலும், அதை வெளியில் காட்டாமல், போலியான கணக்குகளைத் தயாரித்துக் காட்டி நஷ்டம் என்று கூறி வரி ஏய்ப்பு செய்கிறார்கள். இதே கணக்கை பின்னர் மீடியாவிலும் காட்டி தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுவிட்டது,  என ரஜினியும் தயாரிப்பாளர்களும் நஷ்ட ஈடு தரவேண்டும் என்று கோரிக்கை வைப்பதும் தொடர்கிறது.

ரஜினி படங்களுக்கு முதல் நாள் முதல் காட்சி என்பது எழுதப்பட்ட சட்டமாகும். கிட்டத்தட்ட 35 ஆண்டுகளாக இந்த வழக்கம் இருந்து வருகிறது.

படம் வெளியாகும் நேரமான 11.30-க்கு முன்பே மூன்று சிறப்புக் காட்சிகள் போடுவார்கள் பெரும்பாலான அரங்குகளில். சென்னை போன்ற பெரு நகரங்களும் இதற்கு விலக்கல்ல.

இந்த முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்டின் விலை, ஒரிஜினல் டிக்கெட் விலையைப் போல பத்து மடங்கு இருக்கும். முதல் வரிசை இருக்கையிலிருந்து பால்கனி இருக்கை வரை அனைத்துக்கும் ஒரே கட்டணம். சிவாஜி படத்தின்போது ஒரு டிக்கெட் மூவாயிரம் வரை விலை போனது.

இந்த மூன்று காட்சிகள் தவிர்த்த அன்றைய நாளின் பிற காட்சிகளுக்கு சற்று குறைந்த விலையில், ஆனால் ப்ளாட்டாக ஒரே ரேட்டில் விற்பது தியேட்டர்காரர்கள் வழக்கம். அதாவது தியேட்டரே டிக்கெட்டை ப்ளாக்கில் விற்கும்.

சிறப்பு டிக்கெட் என அச்சடித்துக் கொடுப்பவர்கள், அந்த டிக்கெட்டை கணக்கில் காட்டுவதே இல்லை. முதல் நாளில் மட்டுமே பல லட்சங்களை இந்த காட்சிகள் மூலம் பார்த்துவிடுகின்றன தியேட்டர்கள். முதல் நாள் மட்டும் எட்டு காட்சிகள் ஓட்டும் இவர்கள், அடுத்த இரு தினங்களுக்கும் தலா ஆறு காட்சிகள் ஓட்டுகிறார்கள்.

இவற்றில் தினசரி நான்கு காட்சிகளுக்கு மட்டுமே கணக்கு காட்டுகிறார்கள். அந்த நான்கு காட்சிகளுக்கும் இவர்கள் கொடுக்கும் டிக்கெட் கணக்கு ரூ 10, ரூ 40, ரூ 50 மட்டுமே.

ரசிகர்களிடம் ஆயிரங்களில் வசூலித்துவிட்டு வெறும் அஞ்சு பத்து கணக்கு காட்டிவிடுகிறார்கள். ஒவ்வொரு தியேட்டரும் ரஜினி படத்தை வெளியிடும்போது, முதல் வாரத்திலேயே மொத்தப் பணத்தையும் எடுத்துவிடுகின்றனர். மீதி நாட்களில் வருவதெல்லாம் போனஸ். ஆனால் இப்படி தாங்கள் சம்பாதித்ததை மட்டும் எந்த தியேட்டர்காரரும், அவர்களுடன் டீலிங் வைத்திருக்கும் விநியோகஸ்தரும் வெளியில் சொல்வதே இல்லை.

உதாரணமாக 900 இருக்கைகள் கொண்ட ஒற்றைத் திரையரங்கில், லிங்காவுக்கு முதல் நாள் நடத்தும் 8 ஷோக்களுக்கும் சராசரியாக டிக்கெட் விலை ரூ 500 என்று வைத்துக் கொண்டால் கூட, அன்று மட்டுமே ரூ 36 லட்சம் வசூலாகியிருக்கிறது. இது கற்பனைக் கணக்கல்ல… சென்னையின் பிரதான பகுதியில் உள்ள ஒரு அரங்கில் இந்த விலைக்குத்தான் டிக்கெட் விற்றார்கள். ரசிகர்களும் அடித்துப் பிடித்து வாங்கினார்கள்.

திருச்சி, தஞ்சை, திருப்பூர், கோவை, மதுரை என பல ஊர்களிலும் நள்ளிரவுதான் முதல் காட்சி ஆரம்பமானது, குறைந்தபட்சம் ரூ 300லிருந்து 1000 வரை டிக்கெட் விலை இருந்தது. முதல் 3 நாட்கள் அத்தனை அரங்குகளும் ஹவுஸ்புல்தான். அதன் பின்னர் வந்த 5 நாட்களிலும் சராசரியாக 60 முதல் 70 சதவீத பார்வையாளர்கள் இந்தப் படத்துக்கு வந்திருக்கிறார்கள்.

சென்னை நகரைப் பொறுத்தவரை, இப்போது வரை நிறைந்த கூட்டத்துடன் ஓடிக் கொண்டிருக்கிறது லிங்கா. சத்யம், லக்ஸ் போன்ற மால்கள் தவிர்த்து, சில மால்களில் இந்தப் படத்துக்கான டிக்கெட்டுகளை இருமடங்கு அதாவது ரூ 250 வைத்துதான் விற்பனை செய்தனர். ரூ 120 டிக்கெட்டுக்கு என்றும் ரூ 130 ஸ்நாக்ஸுக்கு என்று கூறியே விற்பனை செய்தனர் முதல் மூன்று நாட்களும். இதற்கான கணக்குகளை முறைப்படி தந்திருப்பார்களா என்பதே சந்தேகம்தான்.

இத்தனைக்கும் லிங்கா படத்துக்கு 100 சதவீதம் கேளிக்கை வரி விலக்கு வேறு. அதன் பலன் முழுவதும் தியேட்டர்காரர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்குத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கையும் களவுமாகப் பிடித்த கர்நாடகா

இப்படி வசூலில் பெரும் மோசடிக் கணக்கைக் காட்டியுள்ள தியேட்டர்காரர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் குறித்து கர்நாடக மாநில வணிக வரித்துறை சமீபத்தில் பெரும் உண்மையை வெளியிட்டுள்ளது.

lingaa34

லிங்கா படம் வெளியான முதல் இரு தினங்களுக்கு தங்கள் அலுவலகத்திலிருந்து 33 அதிகாரிகளை படம் வெளியான பல அரங்குகளுக்கும் அனுப்பி படம் பார்க்க வைத்தது. இரண்டு நாட்களில் மொத்தம் 150 காட்சிகள் பார்த்துள்ளனர் அந்த அலுவலர்கள்.

அவர்கள் சோதனையிட்டதில், ஒரு பெரிய தியேட்டர் குழுமம் கொடுத்த கணக்கில், லிங்காவுக்கு கூட்டமே வரவில்லை என்றும், குறைந்த அளவே டிக்கெட் விற்பனையானது, அதுவும் மிகக் குறைந்த விலைக்கு டிக்கெட் விற்கப்பட்டது என்றும் கூறப்பட்டிருந்ததாம்.

ஆனால் லிங்காவுக்கு எவ்வளவு கூட்டம் அந்த அரங்குக்கு வந்தது என்பதை கண்ணால் கண்ட அதிகாரிகள், அந்த இரு தினங்களில் மட்டும் லிங்காவுக்கு வசூலான தொகையில் ரூ 45 லட்சத்தை கணக்கு காட்டாமல் தியேட்டர் நிர்வாகம் மறைத்ததை அம்பலமாக்கியுள்ளனர். டிகே ரவி என்ற அதிகாரியின் தலைமையில் சாதாரண சினிமா ரசிகர்களைப் போல திரையரங்குகளுக்குப் போய் இந்த உண்மையை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதுபோல மொத்த அரங்குகளின் கணக்கையும் அவர்கள் கேட்டுள்ளனர். தமிழகத்திலும் இதுபோல நடந்திருந்தால், லிங்கா விஷயத்தில் தியேட்டர்காரர்கள் செய்துள்ள முறைகேடுகள் அம்பலத்துக்கு வந்திருக்குமே!

-என்வழி
16 thoughts on “லிங்கா குவித்த கோடிகள்… மறைக்க முயற்சிக்கும் கேடிகள்!

 1. Saravan

  Perfect . Cannot compare thalaivar movie collection with Any other movie or actor . The hysteria which surrounds thalaivar movie is unexplainable. The number of shows in bangalore were around 300 to 350 on first day . Simple maths will prove that 3 day collections have been made in 1 day. Am astonished at the way when people compare it with kathi collections !!! God save them !!!

 2. jegan

  no news channels ll publish this news….all r against rajini now…..now a days media is degrading rajinis fame n name…..ellllaaaam panam paduthum paadu…..they expect rajini to give something……*******of media

 3. Murali

  pls publish real collection details atleast in our website . Real fans are eager to know the facts from reliable sources like our website. But we are unfortunately very late to gather info.

 4. Ajay

  I just watched this movie with my family. After reading all the negative comments in various blogs/ websites, I was prepared for the worst… but.. damn it, this is the best rajini movie so far in his career. the story doesn’t get bigger than this.. Wow man, I was awestuck with Rajini’s performance… Music was a bit not up to the mark at times, but KSR and SS did the majic. No words., hope to watch it again in a week..

 5. குமரன்

  லிங்கா படம் வருவதற்கு முதல் நாள் தினமலரில் செய்தி இதோ:

  இதில் முதல் மூன்று நாட்களுக்கு அனைத்துத் தியேட்டர்களிலும் டிக்கெட்டுகள் முன்னமே விற்றுத் தீர்க்கப் பட்டுவிட்டன என்றும் கிடைக்கவில்லை என்றும் உள்ளது.

  படம் வெளிவந்த மூன்று நாட்கள் கழித்துத் தினமலரில் வந்த செய்தியில் முன்று நாட்களில் 104 கோடி ரூபாய் வசூலானதாக இருந்தது. அதைத் தேடி வருகிறேன். கிடைத்ததும் இங்கே பதிகிறேன்.

  செய்தி இதோ:
  http://cinema.dinamalar.com/tamil-news/24869/cinema/Kollywood/Lingaa-tcket-sold-for-upto-Rs.1000.htm

 6. குமரன்

  15 டிசம்பர் தினமலரில் வந்த செய்தி: எப்படி 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் வந்தது என்பதை விவரமாகக் கூறுகிறது, இந்தச் செய்தி.
  என்னால் இவற்றைக் காப்பி செய்ய முடியவில்லை. அந்த வலைப்பக்கம் அனுமதிக்கவில்லையா என்று தெரியவில்லை, அல்லது எனது தற்போதைய கணிணியில் இல்லையா எனத் தெரியவில்லை.

  வினோ, இந்தச் செய்தியை மீள்பதிவு செய்யலாம். இந்தச் செய்தியை முதலில் வெளியிட்ட தினமலர், இது பொய்யா என்று கூறவேண்டும். இதன் தலைப்பு முதலில் இப்படி சந்தேகக் கேள்வியாக இருக்கவில்லை. பிறகு இப்போது மாற்றி இருக்கிறார்கள்.

  http://cinema.dinamalar.com/tamil-news/25015/cinema/Kollywood/Lingaa-crossed-Rs.100-crore-in-3-days-is-it-possible.?.htm

 7. prakash

  தினமலர் always spread false news about thalaivar and his movie. Lingaa is great movie and hope family audience make it blockbuster. I checked satyam and abirami online ticket status and it doing great compared to other christmas release movies.

 8. நாஞ்சில்மகன்

  //// லதா ரஜினியின் ரூ. 22 .21 கோடி சொத்தை வங்கி கையகப்படுத்தி உள்ளது. கோச்சடையான் படம் சம்பந்தமாக மீடியா ஒன் குளோபல் என்டர்டெயன்மென்ட் தொடர்ந்த வழக்கில் லதா ரஜினி தனக்கு சொந்தமான சொத்தை பிணையாக கொடுத்திருந்தார். இந்த சொத்தை யாரும் வாங்கவோ , விற்கவோ கூடாது என வங்கி அறிவித்துள்ளது.////

 9. s santhanakumar

  hi, linga is one of the best movie, its running succesful in all over tamilnadu and worldwide, but this fucking dinamalr writter is spreading fake news about thalivar movie pls all fans together to take strict action against that fucker

 10. s santhanakumar

  all thalaivar fans be ready to hit dinamalar office and that fucking writter who is spreading fake news about thalaivar movie

 11. RAJA

  “ரூ 500 என்று வைத்துக் கொண்டால் கூட, … சென்னையின் பிரதான பகுதியில் உள்ள ஒரு அரங்கில் இந்த விலைக்குத்தான் டிக்கெட் விற்றார்கள். ரசிகர்களும் அடித்துப் பிடித்து வாங்கினார்கள்.”

  அப்ப ரசிகர்களுக்கு எங்க போச்சு புத்தி…….

 12. s venkatesan, nigeria

  நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

 13. மிஸ்டர் பாவலன்

  நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  சூப்பர் ரஜினி அடுத்த படம் ஒரு புதிய டைரக்டருடன், ரகுமான் அல்லாத
  இசையமைப்பாளர் உடனும் (யாராக இருந்தாலும் சரி), செய்யணும் என்பது
  பாவலனின் புத்தாண்டு விருப்பம்!

  கமல் படம் நிறைய களம் இருங்குவதால் கமல் ரசிகர்கள் காட்டிலும் மழை!

  -=== மிஸ்டர் பாவலன் ==-

 14. Suresh Kumar

  kumudam weekly magazine also ciriticize’s rajni sir always. I have seen them before prasing rajni sir, but now dont know what happened to them, they are always against rajni sir in each and every week issue’s they dont forget to criticize rajni sir.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *