BREAKING NEWS
Search

ரஜினி என்ன முடிவெடுத்தாலும் அதில் மனிதத்தன்மை இருக்கும்! – ரஹ்மான்

ரஜினி என்ன முடிவெடுத்தாலும் அதில் மனிதத்தன்மை இருக்கும்! – ரஹ்மான்

p10

ஜினி, கமல் ரெண்டு பேரிடமுமே பழகி யிருக்கீங்க… அவங்ககிட்ட கத்துக்கிட்ட விஷயம் என்ன?”

”ரஜினி சார் எந்த முடிவையும் யோசிச்சு எடுக்கமாட்டார். அவருக்கு உள்ளுக்குள்ள இருக்கிற ஆன்மிக மனசு என்ன சொல்லுதோ அதைவெச்சு முடிவு எடுப்பார். அவர் என்ன முடிவு எடுத்தாலும் அதில் மனிதத்தன்மைஇருக் கும். அது எனக்கு ரொம்பப் பிடிக்கும். கமல் சார் மூணு தலைமுறைக்கு சாதிக்க வேண்டியதை ஒரே ஆளா சாதிச்சுட்டார். அப்புறம் நீங்க நம்புவீங்களான்னு தெரியலை… ரெண்டு பேர்கிட்டயும் நான் அவ்வளவாப் பேசினதே இல்லை.

‘கோச்சடையான்’ பாட்டுகளுக்காக டியூன் ரெடி பண்ணும்போது ரஜினி சார்கிட்ட கொஞ்சம் பழகினேன். ஒரு பாட்டில் அவரைப் புகழ்ந்து அவரே சொல்ற மாதிரி ஒரு வசனம் வரும். அதைச் சொல்றதுக்கு அவ்ளோ கூச்சப்பட்டார். ரொம்ப வற்புறுத்தி அந்த வசனத்தைப் பேசவெச்சோம். அந்த எளிமைதான் ரஜினி!”

-விகடன் பேட்டியில் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான்.

 

 
10 thoughts on “ரஜினி என்ன முடிவெடுத்தாலும் அதில் மனிதத்தன்மை இருக்கும்! – ரஹ்மான்

 1. மிஸ்டர் பாவலன்

  ரஜினியின் எளிமை பற்றி இசைப்புயல் ரஹ்மான் குறிப்பிட்டிருந்தார்.
  ரஹ்மானும் மிக எளிமையானவர் தான். இருவரும் சாதனை மேதைகள்.
  ஆன்மீக உணர்வுள்ளவர்கள். தமிழ் பற்று உள்ளவர்கள். மனித நேயம்
  (humanity) கொண்டவர்கள்.

  ஆனால் ரஹ்மான் குறிப்பிட்டது அவருக்கு முதல் அனுபவமாக
  இருந்தாலும் மற்ற இசை அமைப்பாளர்களுக்கு புதிதல்ல. ஒரு FM
  பேட்டியில் ரஜினி படங்களுக்கு இசை அமைத்தது பற்றி தேவா
  குறிப்பிட்டது எனக்கு நினைவுக்கு உள்ளது. ‘அருணாசலம்’ படத்தில்
  வரும் “அதாண்டா, இதாண்டா..” பாடலை outdoor shooting-ல் கேட்ட
  ரஜினி “இந்தப் பாடல் ரொம்பவும் என்னை பாராட்டுவது போல் உள்ளது,
  இதற்கு என்னால் ஆட முடியாது” என மறுத்து விட்டாராம். “சார்,
  outdoor shooting-னு வந்துட்டோம், இப்போ முடியாதுன்னு திரும்பினா
  உங்க call sheet, இந்த group dancers செலவு..இதெல்லாம் waste ஆயிடும்,
  கொஞ்சம் consider பண்ணுங்க..” இப்படி கேட்டுக் கொண்டதும் அவர்கள்
  அனைவரும் யோசித்து “அருணாசலம்” என இறைவனை போற்றிப்
  போடுவது போல் பாடலை அமைத்து விடலாம் என முடிவு எடுத்தார்கள்.
  தேவாவும் அதற்கு ஏற்ற படி பாடலின் முன்னாள் மந்திரத்தை சேர்த்து
  ‘இறை வணக்கம்’ போல பாடலை மாற்றி இசை அமைத்து கொடுத்தார்.
  அந்தப் பாடலில் வரும் சிவலிங்கம் உண்மையான சிவலிங்கம் இல்லை.
  அவசரமாக முடிவெடுத்து பாடல் மாற்றி எடுக்கப் பட்டதால் setting
  செய்து ஒரு பக்கெட்டோ, தொட்டியோ paint அடித்து சிவலிங்கம் போல்
  மாற்றி அமைக்கப் பட்டது. ரஜினி ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக
  அந்த பாடல் அமைந்தது.

  உலக நாயகன் கமல் பற்றியும் சில வரிகள் எழுத வேண்டும்.
  சமீபத்தில் வெளி வந்து தோல்வி கண்ட ‘மன்மதன் அம்பு’ படத்தில்
  “Who is the hero, who is the hero?” என Andrea பாடுவது போல் ஒரு பாடல்
  வரும். அதில் கமல்ஹாசனை மிகவும் புகழ்ச்சி செய்யும் வகையில்
  அந்த பாடலின் lyrics அமைந்துள்ளது. கிட்டத்தட்ட ஒரு rock song போல
  தமிழை Andrea பாடி இருப்பார். ஊளை இடுவது மாதிரி இந்தப் பாடலை
  ஸ்டைலாக பாடி முடிப்பார். இந்தப் பாடலை இயற்றியது வேறு யாரும்
  இல்லை. உலக நாயகனே தான்! மன்மதன் அம்பு படத்தில் பல பாடல்கள்
  எழுதி ஒரு புதிய dimension காண்பித்து இருப்பார். ரஜினியின் எளிமை
  கமல்ஹாசனுக்கு இன்னும் வரவில்லை. நன்றி.

  -=== மிஸ்டர் பாவலன் ==-

 2. குமரன்

  // ஒரு பக்கெட்டோ, தொட்டியோ paint அடித்து சிவலிங்கம் போல்
  மாற்றி அமைக்கப் பட்டது. ///

  அது பக்கெட்டோ, தொட்டியோ அல்ல.
  அது ஒரு அண்டா. அண்டாவின் கீழ்ப்புறம் சாதாரணமாகவே அண்டாவை கருப்பு நிற வர்ணம் பூசி கவிழ்த்து வைத்து சிவலிங்கமாக உருவாக்கிப் படம் பிடித்தார்கள்.

  அதாண்டா, இதாண்டா அருணாசலம் நான்தாண்டா என்ற வரிகளில் நிஜமாகவே உண்மை மறைந்திருக்கிறது என்று நான் சொல்வதுண்டு.

  அது அண்டா, இது அண்டா (அதாண்டா, இதாண்டா!)
  அருணாசலம் நான்தாண்டா என்பதுதான் athu !!!

 3. குமரன்

  // ஒரு பக்கெட்டோ, தொட்டியோ paint அடித்து சிவலிங்கம் போல்
  மாற்றி அமைக்கப் பட்டது. ///

  அது பக்கெட்டோ, தொட்டியோ அல்ல.
  அது ஒரு அண்டா. அண்டாவின் கீழ்ப்புறம் சாதாரணமாகவே கருப்பு நிறம் இருக்கும். முழுமையாகவே கருப்பு நிற வர்ணம் பூசி அண்டாவைக் கவிழ்த்து வைத்து சிவலிங்கமாக உருவாக்கிப் படம் பிடித்தார்கள்.

  “அதாண்டா, இதாண்டா அருணாசலம் நான்தாண்டா” என்ற வரிகளில் நிஜமாகவே உண்மை மறைந்திருக்கிறது என்று நான் சொல்வதுண்டு.

  அது அண்டா, இது அண்டா (அதாண்டா, இதாண்டா!)
  அருணாசலம் நான்தாண்டா என்பதுதான் அது !!!

 4. குமரன்

  ரஹ்மான் பழகுதற்கு இனிமையான மனிதர். எனது நண்பரின் (மேலதிகாரியின்/ முதலாளியின்) நண்பர் என்ற முறையில் எனது நண்பராக ஆனவர். அவருடன் தொடர்பு விட்டுப் போய் பதிமூன்று வருடங்கள் ஆகிவிட்டன. ஒவ்வொரு ரம்ஜான் அன்றும், ஜனவரி ஆறாம்தேதியும், பக்ரீத் அன்றும், மிலாடினபி அன்றும் நாங்கள் மூவரும் சந்திப்போம்.

  முதல் சில ஆண்டுகளில் சாகுல் ஹமீதும் அந்தச் சந்திப்பில் இருப்பார். சாகுலின் இளவயது மரணம் எங்களை அப்போது வெகுவாகவே பாதித்தது. சாகுல் ஹமீதும் ரஹ்மானும் இணைபிரியாத நண்பர்கள். சாகுலுக்கு திரைப்படப் பாடல் வாய்ப்புக் கிடைத்து சில நல்ல பாடல்களைப் பாடினார். வளர்ந்து வந்த இளம் கலைஞர், முழுமையாக வளரும் முன்னரே மாண்டது நெஞ்சை வருத்தும் நிகழ்வு.

  ஜென்டில்மேன், ரோஜா படங்களின் இசை வெளியே வந்ததபோது என்கள் சந்திப்பில் அந்த வெற்றியின் மகிழ்ச்சி இருந்தது.

  ரஹ்மான் எப்போதும் சிரித்த முகத்துடனே இருப்பார். எந்த சூழலிலும் அமைதி இழந்து பேசி நான் பார்த்ததில்லை. வெகு எளிமையானவர். ஜெண்டில்மேனுக்கு முன்னாள் இருந்தது போலவே பல வெற்றிகளைக் குவித்த பின்னாலும் இருந்தார், இப்போதும் இருக்கிறார். அவரை வழி நடத்தும் sufi குருவின் தாக்கம் அவரிடம் உண்டு. அந்த sufi குரு குறித்து சென்னையின் பிற பிரிவு முஸ்லீம்களிடமும் மரியாதையும், நல்லெண்ணமும் நிலவுவதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

 5. குமரன்

  ரஹ்மானின் வலைத் தளத்தில் உள்ள இந்தப் பாடலைக் கேட்டு மகிழலாம். Infinite Love என்ற தலைப்பில் உள்ள பாடல்.

  http://www.arrahman.com/

 6. மிஸ்டர் பாவலன்

  //அவங்க ரெண்டு பெரும் வொற்றுமையஆ இருந்தாலும் நீங்க விட மாட்டீங்களே// (ராஜேஷ்)

  நீங்கள் cine-field-ல் உள்ள யாரைக் கேட்டாலும் நான் எழுதிய
  “ரஜினியின் எளிமை கமல்ஹாசனுக்கு இன்னும் வரவில்லை”
  என்ற வரியில் எந்தத் தவறு இருப்பதாகவும் சொல்ல மாட்டார்கள்.
  இது ஆட்சேபிக்கும் வகையில் இருந்தால் வினோ விளக்கம் கொடுத்து
  இருப்பார், இல்லை edit செய்திருப்பார். நான் ஒரு கமல் ரசிகன் என்பதை
  நீங்கள் என் விஸ்வரூபம் பதிவுகளைப் படித்து நன்கு அறியலாம். நன்றி.

  -== மிஸ்டர் பாவலன் ==-

 7. மிஸ்டர் பாவலன்

  நண்பர்களே:

  1) தில்லுமுல்லு ரீமேக் படத்தின் ட்ரைலர் பார்த்தேன். எழுதும்படி
  எதுவும் இல்லை. ஒரிஜினல் படத்தில் ரஜினி, தேங்காய், நாகேஷ்,
  சௌகார், கமல் செய்த மாதிரி இந்த ரீமேக் படம் தேறுமா தெரியலை.
  ஒருவேளை பாடல்கள் ஹிட் ஆகலாம். KB கௌரவ வேடம் போல்
  தெரிகிறது.

  2) ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ ஸ்ரீதர் இயக்கத்தில் கமல்-ரஜினி-ஸ்ரீப்ரியா
  நடிப்பில் வெள்ளி விழா கண்ட படம். இதை தனுஷ்-சிம்பு இவர்களை
  வைத்து ரீமேக் செய்ய பேச்சு நடப்பதாக படித்தேன். அதாவது
  ரஜினி பாத்திரத்தில் தனுஷ் அவர்களும், கமல் பாத்திரத்தில் சிம்பு
  அவர்களும் நடிக்க இருப்பது போல் தெரிகிறது. ஸ்ரீப்ரியா பாத்திரம்
  யார் என தெரியலை. இதை த்ரிஷாவிற்கு கொடுக்கலாம். ஆனால்
  படம் வெள்ளி விழா ஓடுமா தெரியலை! குமரன் என்ன சொல்கிறார்?

  -=== மிஸ்டர் பாவலன் ==-

 8. மிஸ்டர் பாவலன்

  கோச்சடையான் படத்தைப் பார்த்து feedback அளிக்குமாறு
  கமல்ஹாசனை ரஜினி கேட்டுக் கொண்டதாகவும், கமல்
  உடனே அழைப்பே ஏற்றுக் கொண்டதாகவும், கமலுக்கு
  பிரத்யேக preview arrange செய்ய ரஜினி இருப்பதாகவும்
  தகவல்கள் பத்திரிகையில் படித்தேன். இது எந்த அளவிற்கு
  உண்மை என்பது சில நாள்களில் தெரிந்து விடும். இப்படி
  ஒரு preview நடந்தால் ரஜினி-கமல் நல்ல நண்பர்கள் என இந்த
  வலை நண்பர்கள் மேலும் அறிந்து கொள்ளலாம்.
  “If Rajini calls me, I can never say NO” என கமல் பதில்
  தந்தாகவும் நான் படித்தேன். நன்றி.

  பின்குறிப்பு: “இளமை ஊஞ்சல் ஆடுகிறது” ஒரு நல்ல படம்.
  இதை தனுஷ்-சிம்பு வைத்து remake செய்ய plan பண்றது
  விபரீத முயற்சி எனத் தோன்றுகிறது. கமல்-ரஜினி-ஸ்ரீப்ரியா
  போல இன்றைய நடிகர்கள்-நடிகை நடிக்க முடியாது. நன்றி.

  -=== மிஸ்டர் பாவலன் ==-

 9. srikanth1974

  திரு.மிஸ்டர் பாவலன் அவர்களுக்கு;
  நீங்கள் படித்த செய்தியை அலைகள் வலைத்தளத்தில் நானும் படித்தேன்.அந்த செய்தி உண்மையாகட்டும்.
  நன்றி.
  என்றும் உங்கள் அன்பு சகோதரன்
  ப.ஸ்ரீகாந்த்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *