BREAKING NEWS
Search

கோச்சடையான் இசைக்காக ஏ ஆர் ரஹ்மான் மீண்டும் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரை!!

கோச்சடையான் இசைக்காக ஏ ஆர் ரஹ்மான் மீண்டும் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரை!!

abc

சிறந்த இசையமைப்பாளருக்கான ஆஸ்கர் விருதுப் பட்டியலில் மீண்டும் ஏஆர் ரஹ்மான் பெயர் இடம்பெற்றுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த கோச்சடையான் உள்ளிட்ட 3 படங்களின் இசையமைப்புக்காக இந்தப் பட்டியலில் அவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பெயர் பட்டியல் ஜனவரி 15ந் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

87வது அகாடமி விருதுக்கான பட்டியல்கள் தயாராகின்றன. இதில் சிறந்த இசை அமைப்புக்காக 114 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் ஒன்று ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடிப்பில் மோஷன் கேப்சர் அனிமேஷனில் வெளியான ‘கோச்சடையான்’. இந்தியாவின் முதல் 3 டி மோஷன் கேப்சரிங் படம் இது. சவுந்தர்யா ரஜினி இயக்கினார்.

இந்தப் படத்தின் சிறந்த ஒரிஜினல் பின்னணி இசை, பாடல்களுக்காக ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் ஆஸ்கர் விருதுப் பட்டியலுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  மேலும் அவர் இசையமைத்த தி 100 ஃபூட் ஜார்னி, மற்றும் மில்லியன் டாலர் ஆர்ம் உள்ளிட்ட படங்களின் இசைக்காகவும் அவர் பெயர் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கோச்சடையான் படத்துக்காக ரஹ்மான், சிம்பொனி இசைக் குழுவை வைத்து பின்னணி இசை அமைத்தார். குறிப்பாக போர்க்களக் காட்சிகளில் சிறப்பான இசை தந்திருந்தார். இந்தப் படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தால் தமிழுக்கும், ரஜினி படத்துக்கும் கிடைக்கும் முதல் ஆஸ்கார் விருதாக அமையும்.

டேனி பாய்ல் இயக்கிய ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக ஏற்கெனவே ரஹ்மான் 2 ஆஸ்கர் விருதுகளைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-என்வழி




3 thoughts on “கோச்சடையான் இசைக்காக ஏ ஆர் ரஹ்மான் மீண்டும் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரை!!

  1. prakash

    Great news. As for i know, original score award is only for hollywood movies. How come for kochadaiyan? Pls clarify Vino.

  2. Ananth

    congrats ARR. Kaaviya thalaivan padathukku avarai thavaraga vasai padiyadu sariyillai. ARR is a legend like Rajini. You and me cant criticise.

  3. Murali

    thalaivar should go with D. Imam’s music hereafter. Somehow I feel he is very sincere to his Music than others as of today.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *