முதல் பக்கம்    வணக்கம்!    ரசிகர் பக்கம்   தேர்தல்    புனைவுகள்    வணிகம்    நட்புடன்    சும்மா தமாசு    வீடியோ    இன்றைய கார்ட்டூன்    கேள்வி பதில்
  உலகம் சுத்தலாம் வாங்க!    நினைவுகளை மீட்டும் இசை!    இது எப்படி இருக்கு...!    அசத்தல் படங்கள்    ஃபிளாஷ்பேக்    எனது பக்கங்கள்    ஸ்போர்ட்ஸ்

அபூர்வ ராகங்கள் முதல் கோச்சடையான் வரை…



ஜினியின் அனைத்துப் படங்களைப் பற்றியும் – அதன் உருவாக்கம், படப்பிடிப்பு சம்பவங்கள், வெளியீடு, வசூல் நிலவரம், பாராட்டுகள், சர்ச்சைகள், முதல் நாள் முதல் காட்சி பார்த்த வாசகர் அனுபவம் – முழுமையாக எழுத வேண்டும் என்பது கிட்டத்தட்ட பத்து வருடங்களாக நான் மேற்கொண்ட முயற்சி. அதாவது ரஜினியை அருணாச்சலா ஹோட்டலில் சந்தித்த 2002-ஆம் ஆண்டிலிருந்து!

இந்த முயற்சியில், சில படங்கள் குறித்து அவ்வப்போது கிடைக்கிற தகவல்களைச் சேகரித்து வந்தாலும், முழுமையாக எழுத முடியாமல் போனது.

இப்போது ஒவ்வொரு படங்களின் தகவல்களையும் ஒழுங்கு செய்யும் வேலையை ஆரம்பித்துள்ளேன். இந்த ஆண்டுக்குள் முடித்துவிட முடியும் என்ற நம்பிக்கையுடன் அபூர்வ ராகங்கள் முதல் கோச்சடையான் வரை.. என்ற இந்தப் பகுதியை, ‘என்வழி’யில், ஆரம்பிக்கிறேன். ஏற்கெனவே எஸ்பி முத்துராமன் – ரஜினி படங்கள் குறித்த எழுத உத்தேசித்த கட்டுரைத் தொடரை ஆரம்பிக்காமல் போனது கூட இந்த முயற்சிக்காகத்தான்.

இந்தத் தொடரில் ரஜினியின் அனைத்து மொழிப் படங்கள் குறித்தும் – அவர் கவுரவ வேடத்தில் நடித்த படங்கள் உள்பட – முடிந்த வரை முழுமையாகத் தர முயற்சிக்கிறேன். கூடவே ரஜினி நடிக்கவிருந்து நடிக்காமல் போன படம், அவர் நடிப்பதாக அறிவித்து நிறுத்தப்பட்ட படங்கள் பற்றியும் தகவல்களைத் தரவிருக்கிறேன்.

ஒவ்வொரு படம் குறித்த கட்டுரையின் முடிவிலும், அடுத்த கட்டுரை எந்தப் படத்துக்கானது என்ற குறிப்பையும் தருகிறோம். ரசிகர்கள் அந்தப் படம் தொடர்பான புகைப்படங்கள் ஏதேனும் இருந்தால் பகிர்ந்து கொள்ளவும். அவரவர் அனுபவங்களையும் எழுதவும். அவற்றையும் குறிப்பாகத் தர விரும்புகிறேன்.

ரஜினி படங்களின் என்சைக்ளோபீடியா எனும் அளவுக்கு ஒவ்வொரு கட்டுரையும் வர வேண்டும் என்பது நமது ஆசை. பார்க்கலாம்!

முதல் கட்டுரை… அபூர்வ ராகங்கள். ரஜினியைத் தேர்வு செய்தது, அவரது முதல் ஷாட், அடுத்தடுத்து ரஜினியை தன் படங்களுக்கு ஒப்பந்தம் செய்யக் காரணம் ஆகியவை குறித்து இயக்குநர் சிகரம் கே பாலச்சந்தர்  நம்மிடம் பகிர்ந்து கொண்ட விஷயங்களுடன்… விரைவில்!

-வினோ

Comments

28 Responses to “அபூர்வ ராகங்கள் முதல் கோச்சடையான் வரை…”
  1. waiting waiting waiting………

  2. Srinivasan says:

    உங்களின் இந்த முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள். அணைத்து ரசிகர்களின் நீண்ட நாட்களின் எதிர்பார்ப்பு. அணைத்து ரசிகர்களின் பங்களிப்பு நிச்சயம் உண்டு.
    ஸ்ரீனிவாசன்
    Accra
    Ghana

  3. ஜான் says:

    சூப்பர்

  4. muthu says:

    நன்றி வினோ அண்ணா. ..waiting

  5. r.v.saravanan says:

    கலக்குங்க வினோ

  6. yhaleeselva says:

    உங்களின் இந்த முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள். அணைத்து ரசிகர்களின் நீண்ட நாட்களின் எதிர்பார்ப்பு. அணைத்து ரசிகர்களின் பங்களிப்பு நிச்சயம் உண்டு yhaleeselva

  7. Karthi says:

    Vino

    One Suggestion about the title of the article. Instead of Kochadaiyan Varai, why don’t you keep Indru varai? or even something else. Kochadaiyan may not be thalaivar’s last movie, so why to fit in that frame?

  8. Zephyrin says:

    wish u all success

  9. ஜெயன் says:

    விநோஜி வாழ்த்துக்கள்..

  10. Sabari giri Vasan says:

    Congrats and best of luck for you vino g

  11. kabilan says:

    வினோ அண்ணா வாழ்த்துக்கள் !!!!!!!!!!!!!

  12. எக்கச் சக்க எதிர்பார்ப்போடு காத்திருக்கிறோம் பாஸ்

  13. endhiraa says:

    அருமையான முயற்சி வினோ ஜி !! மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறேன் !!

  14. Shiva says:

    சூப்பர்..

  15. vikram says:

    வாழ்த்துக்கள்!

  16. Rajasekaran says:

    itha padikum bothai kicku yeruthu… Plz plz plz seikiram…

  17. எபோ வரும் சிக்கிரம் கத்திருகோம்

  18. Arun Varma says:

    we ll wait 4 all gud new abt Rajni sir…!

  19. a.mohan says:

    Good try.All the best Mr. Vino.

  20. khalifa says:

    All the best Vino. For any assistance pls contact me

  21. S.PRABAKAR says:

    We feel first day first show.
    Please start immediately
    Yours,
    S.PRABAKAR
    LIC UNIT

  22. Anand.kg says:

    அன்புள்ள வினோ,

    நண்பர் கார்த்தி சொன்னது போல், வேறு ஒரு நல்ல பொருத்தமான தலைப்பை வைக்குமாறு வேண்டுகிறேன். ப்ளீஸ். தலைவரை போல் சிம்பிள் ஆக இருந்தால் இன்னும் சிறப்பு.

    ஆனந்த்.

  23. KATHAR says:

    மகிழ்ச்சி

  24. subramanian says:

    ஆல் தி பெஸ்ட் சார்..

  25. krishanth says:

    நன்றி -
    முயற்சிக்கு வாழ்த்துகள்

  26. DASS says:

    அன்ன சிக்கிரம முடிங்க ப்ளீஸ்

  27. winston says:

    i am waiting for this for long days vino sir, i am watching this link frequently, please publish this as soon as you can sir

  28. எனக்கு தலைவர் நடித்த அனைத்துப் படங்களும் தெரியும் பிங்கர் டிப்ஸ்ல வச்சிருக்கேன்

Speak Your Mind

  Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)