BREAKING NEWS
Search

முகத்தை துணியால் மூடிக் கொண்டு 7 கிமீ சைக்கிள் ஓட்டிய ரஜினி ரசிகர் – புகைப் பழக்கத்துக்கு எதிராக பிரச்சாரம்!

புகைப் பழக்கத்துக்கு எதிராக ஒரு ரஜினி ரசிகனின் வித்தியாசமான பிரச்சாரம்!

rajinifan3

ஸ்ரீரங்கம்: புகையிலை மற்றும் புகைப் பழக்கத்துக்கு எதிராக 12 வயதே நிரம்பிய ரஜினி ரசிகன், கண்களைக் கட்டிக் கொண்டு 7 கிமீ தூரம் சைக்கிள் ஓட்டி வியக்க வைத்தான்.

ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அந்த சிறுவனின் பெயர் அரவிந்த். சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகன்.

fan

ஏழாம் வகுப்பு படிக்கும் இந்த சிறுவன், சூப்பர் ஸ்டார் ரஜினி பிறந்த நாளையொட்டி புகைப் பழக்கத்துக்கு எதிராக ஒரு விழிப்புணர்வுப் பிரச்சாரமாக இப்படி முகம் முழுவதையும் மூடிக் கொண்டு 7 கிலோ மீட்டர் தூரம் பயணம் மேற்கொண்டான். அவனைப் பின் தொடர்ந்து ரஜினி ரசிகர்களும் வாகனங்களில் சென்றனர்.

rajinifan4

ரஜினியின் உருவப்படம் பொறித்த பனியன் அணிந்து சாலையின் வளைவுகளில் எந்தத் தடுமாற்றமும் இல்லாமல் இந்த தூரத்தை அந்த சிறுவன் கடந்தது பார்ப்பவர்களை வியப்பின் உச்சிக்கு கொண்டு சென்றது.

இந்த நிகழ்ச்சியை ஸ்ரீரங்கம் நகர ரஜினிகாந்த் தலைமை நற்பணி மன்றம் செய்திருந்தது.

முன்னதாக ரஜினி பிறந்த நாளையொட்டி, ஸ்ரீரங்கம் ஸ்ரீராகவேந்திரர் மடத்தில் தங்கத் தேர் இழுத்தனர் ரசிகர்கள். பின்னர் 1000 பேருக்கு மண்டபத்திலேயே அறுசுவை உணவு பரிமாறினர்.

rajinifan7
இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ரஜினிகாந்த் நற்பணி மன்ற நிர்வாகிகள் எஸ் கர்ணன், தென்னூர் உதயா, ராயல் ரம்பா செந்தில், ஆர்கேஎஸ் ராஜ், ராயல் ராஜ், திருச்சி ரஞ்சித் குமார், ஸ்வீட் ரமேஷ், ஆட்டோ வேலு, ஆர் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி மேலும் பல நற்பணி நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளனர் இந்த நிர்வாகிகள்.

-என்வழி ஸ்பெஷல்




11 thoughts on “முகத்தை துணியால் மூடிக் கொண்டு 7 கிமீ சைக்கிள் ஓட்டிய ரஜினி ரசிகர் – புகைப் பழக்கத்துக்கு எதிராக பிரச்சாரம்!

  1. துரைசிங்கம்

    தம்பி நீ நல்லா வருவேப்பா.. நெசமாலுமே நல்ல காரியம் செஞ்சிருக்கே.
    .ஊதி ஊதி தள்ளுற பசங்க திருந்துவானுகளான்னு பாப்போம்.

  2. anbu patrison

    i am in qatar i was waiting for this news and for rajini birthday i am so happy my heart is full of joy. Please send as many as new regarding rajini birthday & poster, banners and every thing

  3. மு.முத்துக்குமார்

    ப்ளீஸ் சொல்லுங்க. தலைவர் இந்த முறை ரசிகர்களை சந்திப்பாரா? நான் போன தடவையே மிஸ் பண்ணிட்டேன்.

  4. s.sudha

    நிச்சியமா தலைவர் சந்தோஷப்படுவார்.இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா.

  5. srikanth1974

    சாதனைச் சிறுவன் அரவிந்துக்கு வாழ்த்துக்கள்.
    எங்களின் அன்போடு தலைவரின் ஆசியும் உனக்குண்டு

  6. Mani

    இதுக்கும் ரஜினிக்கும் என்ன சம்மந்தம் ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *