BREAKING NEWS
Search

அவசரப்படாதீங்க.. சீக்கிரம் வந்திடறேன் – அஞ்சலி செய்தி

எந்த விஐபியும் இல்லாத வடிவேலு வீட்டு திருமணம்!

p16b

கிட்டத்தட்ட வனவாசம் முடிந்து மீண்டும் சினிமாவில் அடுத்த ரவுண்டுக்குத் தயாராகும் வடிவேலு வீட்டில் முதல் திருமணம். அவர் மூத்தமகள் கன்னிகா பரமேஸ்வரி – சதீஷ் குமார் திருமணம் மதுரையில் ஒதுக்குப்புறமான ஒரு திருமண மண்டபத்தில் எளிமையாக நடந்தது, கடந்த சனிக்கிழமை.

சினிமாக்காரர்கள், அரசியல்வாதிகளழ், ரசிகர்கள்… ஏன் பத்திரிகையாளர்களுக்குக் கூட அழைப்பில்லை. இப்படி ஒரு திருமணம் நடந்ததே கூட தெரியாத அளவுக்கு நடத்தி முடித்துவிட்டார்.

கேட்டால், ‘இப்போ நிலைமை சரியில்ல… அடுத்து மகன் திருமணத்தை பெரிய அளவில் நடத்துவேன். இதுக்குமேல எதுவும் சொல்றதுக்கில்ல’, என்கிறார் வடிவேலு.

மணிரத்னத்தை மீண்டும் மறுத்த இளையராஜா!!

மீபத்தில் மும்பை ஸ்டுடியோ ஒன்றில் இசைஞானி இளையராஜாவும் இயக்குநர் மணிரத்னமும் மீண்டும் சந்தித்தனர். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்தவர் இயக்குநர் பால்கி. ராஜாவும் மணிரத்னமும் பழைய நிகழ்வுகளை நினைவுபடுத்தி பேசிக் கொண்டிருந்தார்களாம்.

மீண்டும் இணைவது பற்றி பேச்சு வந்தபோது, ‘இருக்கட்டும்…. பிறகு பார்க்கலாம். ரஹ்மான் நல்லா செட் ஆகியிருக்காரே… தொடருங்க,’ என்றாராம் ராஜா!

மணிவண்ணனை கூப்பிடுங்க!

Manivannan Daughter marriage Photos _5_
கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் படம் இயக்குவதை நிறுத்தி வைத்திருந்த மணிவண்ணன் இப்போது முழுவீச்சில் இறங்கியுள்ளார். அமைதிப்படை 2 இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் அவர் பேச்சு, உலகம் முழுக்க உள்ள தமிழ் ரசிகர்களை ஈர்த்துவிட்டது.

உலகின் பல நாடுகளிலும் உள்ள தமிழ் ரசிகர்கள், மணிவண்ணனை விருந்தினராக அழைத்து கவுரவிக்க வேண்டும் என ஆர்வம் காட்டுகின்றனர்.

இப்போது நார்வே செல்லவிருக்கும் மணிவண்ணன், அடுத்து பிரான்ஸ், சுவிஸ், அமெரிக்கா என பறக்கவிருக்கிறார்.

அவசரப்படாதீங்க.. சீக்கிரம் வந்திடறேன்! – அஞ்சலி செய்தி

anjali39

டந்த ஒரு வாரமாக மீடியாவுக்கு தீனி போட்டுக் கொண்டிருப்பது நடிகை அஞ்சலி விவகாரம். இளம் நடிகைகளில் மிகத் திறமையான பெண் அஞ்சலி. அவரைப் பற்றி இப்போது உண்மை என்ற பெயரில் தாறு மாறாக செய்திகள் வந்துகொண்டுள்ளன. அதற்கெல்லாம் விளக்கம் சொல்ல யாருமில்லை. அஞ்சலி எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை.

அஞ்சலியோ, ‘இன்னும் இரண்டொரு நாளில் வந்துவிடுவேன். அப்புறம் தெளிவாக சொல்கிறேன்,’ என்று தனது தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு தகவல் அனுப்பியுள்ளார்.

இன்னொரு சில்க் ஸ்மிதா கதையாகிவிடாமல் இருக்க வேண்டும்!

-என்வழி ஸ்பெஷல்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *