BREAKING NEWS
Search

ரவுடித்தனமான பேச்சுக்காக அன்புமணி ராமதாஸ் கைது… 15 நாள் ஜெயில்… ஜெயலலிதாவுக்கு சாபம்!

ரவுடித்தனமான பேச்சுக்காக அன்புமணி ராமதாஸ் கைது… 15 நாள் ஜெயில்… ஜெயலலிதாவுக்கு சாபம்!

Anbumani-Ramadoss

சென்னை: மாமல்லபுரத்தில் நடந்த கூட்டத்தில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக பாமகவின் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் இன்று காலை கைது செய்யப்பட்டார்.

சென்னை தி.நகரில் உள்ள அன்புமணியின் வீட்டில் வைத்து காஞ்சிபுரம் போலீஸார் அவரைக் கைது செய்தனர்.

அன்புமணி ராமதாஸ் மீது, சட்டவிரோதமாக கூடுதல், கலவரத்தில் ஈடுபடுதல், பொது ஊழியரின் உத்தரவை மீறுதல் ஆகிய பிரிவுகளில், மாமல்லபுரம் காவல் நிலையத்தில் கடந்த 2012ல் பதிவு செய்யப்பட்ட வழக்கின்கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

ஜெயலலிதாவுக்கு சாபம் – அன்புமணி காமெடி!!

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, “இது ஜெயலலிதா அரசின் பழிவாங்கும் நடவடிக்கை. தமிழ்நாட்டில் நடந்த கலவரத்துக்கு பா.ம.க. தொண்டர்கள் காரணம் இல்லை. தொண்டர்கள் அறவழியில் போராட வேண்டும்.

திமுக தலைவர் கலைஞரை நள்ளிரவில் கைது செய்தது ஜெயலலிதா அரசு. அப்போதைய நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியைத் தழுவியது. அதேபோல் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது,” என்று சாபமிட்டார்.

அதைக் கேட்டு நிருபர்கள் நமுட்டுச் சிரிப்போடு வெளியேறினர்.

அன்புமணி 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் சில பழைய வழக்குகளிலும் அவரைக் கைது செய்ய காவல் துறை தீவிரம் காட்டி வருகிறது.
-என்வழி செய்திகள்
7 thoughts on “ரவுடித்தனமான பேச்சுக்காக அன்புமணி ராமதாஸ் கைது… 15 நாள் ஜெயில்… ஜெயலலிதாவுக்கு சாபம்!

 1. நாஞ்சில்மகன்

  அம்மான்னா சும்மா இல்ல. யாருக்கு வரும் இந்த தைரியம். அம்மா வாழ்க உங்கள் தைரியத்தில் ஒரு பங்கு ரஜினிக்கு இருந்திருந்தால் இன்று தமிழ்நாடு ரஜினியின் கையில்தான் இருந்திருக்க்ம். என்ன செய்ய ஸ்டைலை கொடுத்த ஆண்டவன் தைியத்தை கொடுக்கவில்லையே?

  நினைத்ததை நடத்தியே —
  முடிப்பவன் நான் ! நான் ! நான் !
  துணிச்சலை மனத்திலே
  வளர்த்தவன் நான் ! நான் !
  என்னிடம் மயக்கம் கொண்டவர் பழக்கம்
  இன்றும் என்றும் தேவை என்று சொல்லடி தங்கம்

  அம்மா வாழ்க உங்கள் புகழ் வளர்க தமிழ்நாடு
  திக்கெட்டும் பரவட்டும் உங்கள் புகழ்

 2. Deen_uk

  சூப்பர்! அப்படியே இந்த படப்பெட்டி திருடும் கட்சியை மொத்தமா புடிச்சு உள்ள போட்டா நல்லா இருக்கும்..தமிழ் நாட்டில் சாதிப்பிரச்சனை ,கொசுத்தொல்லை இல்லாமல் போகும்…மரங்கள் பாதுகாக்க படும்..மழை மும்மாரி பொழியும்.

 3. குமரன்

  //ரவுடித்தனமான பேச்சுக்காக//

  தொண்டர்களை வன்முறைக்கு ஏவுதல் என்பது ரவுடித்தனமான அராஜகச் செயலே.

 4. குமரன்

  1924 இல் பிறந்த கருணாநிதி 1950 களிலும், 1960 களிலும் தீவிர அசசியலில் ஈடுபட்டுக் கடும் உழைப்புக்குப் பின் 1969 இல் தனது 45 ஆவது வயதில் முதல்வரானார். பிறகு பெறும் ஊளல்களுக்குப்பின் அவரது குடும்பமும் அவரும் பெரும் தனக்காரர்களாக கோடீஸ்வரர்களாக ஆனார்கள்.

  ஆனால், அன்புமணியோ, ஒரு கவுன்சிலர் தேர்தலில் ஒட்டுக் கேட்கக் கூடத் தெருவுக்கு வராமல் இருந்து விட்டு 2005 இல் நேரடியாக மத்திய அமைச்சராக்கிப் பின்னரே ராஜ்ய சபா உறுப்பினாராக ஆனார்.

  ராமதாஸ் தானும் தனது குடும்பத்தாரும் சட்டசபையிலோ நாடாளுமன்றத்திலோ அரசிலோ எந்தப் பதவியும் வகிக்க மாட்டோம், மீறினால் முச்சந்தியில் நிற்க வைத்துச் சவுக்கால் அடியுங்கள் என்று சொல்லி அரசியலுக்கு வந்தவர். அவரை வாக்குத் தவற வைக்க வேண்டும் என்றே கருணாநிதி அன்புமணிக்குக் கொம்பு சீவி மந்திரி ஆக்கி ராஜ்ய சபா உறுப்பினரும் ஆக்கினார் என்பது அனைவரும் அறிந்ததே.

  வேடிக்கை என்னவென்றால் அந்த அன்புமணி தன்னை கருணாநிதியோடு ஒப்பிடுவதுதான்!

  பாவம் கருணானிதி.

 5. fanyarn

  நல்லது இந்த மாதிரி ஆளுகள உள்ள வக்கிறது தான் nallathu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *