BREAKING NEWS
Search

அம்பேத்கர், அப்துல்கலாம்… ஒரு வாசகரின் கருத்தும் நமது விளக்கமும்!

அம்பேத்கர், அப்துல்கலாம்… ஒரு வாசகரின் கருத்தும் நமது விளக்கமும்!


வாசகர் கருத்து: அம்பேத்கர் மாபெரும் தலைவர் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. ஆனால் இந்த காலத்து இளைஞர்களுக்கு அம்பேத்கர் பெயரை தவிர அவரை பற்றி வேறெதுவும் தெரியாது. மேலும் பலர் இடஒதிக்கீட்டுக்கு எதிராகவே உள்ளனர். அவர்கள் அனைவரும் அம்பேத்கரை வேறு விதமாகப் பார்க்கின்றனர். அவர்களின் பார்வையில் இடஓதிகீட்டுக்கு முக்கிய காரணம் அவர்தான்.

ஆனால் அப்துல் கலாம் அப்படி இல்லை. இளைஞர்களின் சிந்தனைகளை கருத்துக்களை எதிரொலிக்கும் தலைவராய் இருக்கின்றார். வயது 80 ஐ தாண்டினாலும் பேச்சு அறிவாற்றல் சிந்தனை அனைத்தும் இளைஞர்களை ஒத்து உள்ளது.மேலும் பேஸ்புக் கணக்கை பயன்படுத்துபவர்கள் பெரும்பாலும் இளைஞர்களே. இதனால் வாக்கெடுப்பில் அவருக்கு அதிக வாக்குக் விழுந்திருக்கலாம்.

ஆனால் போலி பேஸ்புக் கணக்கில்தான் அவருக்கு இவ்வளவு வாக்குகள் விழுந்திருக்கு என்று கூறுவதெல்லாம் சரியல்ல. அப்படி கூற உங்களிடம் ஏதாவது ஆதாரம் உண்டா? அப்படியானால் அவரின் ஆதரவாளர்கள் அதே போல் போலி பேஸ்புக் கணக்கில் வாககளிக்கவில்லை என்று எப்படி உங்களால் உறுதியாகக் கூற முடியும். மேலும் அம்பேத்கர் 23 லட்சம் என்ற எனிகையில் இருந்தபொழுது கலாம் அவர்களுக்கு 6000 கும் குறைவான வாகுகள் என்பதெல்லாம் பச்சைப்பொய். இரண்டு வாரத்துக்கு முன்னாலயே அவர் 10 லட்சத்தை தாண்டி விட்டார். அதோடு கடந்த இரண்டு வாரமாக அவர் இரண்டாவது இடத்தில்தான் இருக்கிறார். அவருக்கு இவ்வளவு வாக்குகள் விழுந்ததற்கு எனக்குத் தெரிந்து ஒரு காரணம், அவர் அடுத்த ஜனாதிபதி ஆக வேண்டும் என்று விரும்புபவர்கள் ஒரு தொலைபேசி எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்குமாறு பேஸ்புக்கில் பதிவில் ஒரு எண் தரபட்டிருந்தது. அந்த எண்ணும் ஹிஸ்டரி சேனல் இணையதளத்தில் அப்துல்கலாமுக்கு வாக்களிக்க வேண்டிய தொலைபேசி எண்ணும் ஒன்று. அந்தப் பதிவை பலர் பகிர்ந்தனர். அதன் விளைவுதான் இவ்வளவு ஒட்டுக்களுக்கும் காரணமாக இருக்க முடியும். நானே இருபதுக்கும் மேற்பட்ட எனது நண்பர்களிடம் சொல்லி அந்த எண்ணுக்கு அழைக்கச் சொன்னேன்.ஆனால் இதை யார் செய்தார்கள் என்பதெல்லாம் விடை காணமுடியா கேள்வி. அதற்குள் நீங்கள் என்னெனவோ கதைகட்டி விட்டீர்கள்.

உங்களுக்கும் அப்துல் கலாமிற்கும் எதாவது பகையா? அவரைப் பற்றி பல பதிவுகளில், கூடங்குளம் அனுமின்னிலையப் பதிவு முதல் அடுத்த ஜனாதிபதி பதிவுவரை உங்களின் கருத்து அவரை மட்டம் தட்டுவதாகவே உள்ளதே. ஒரு பத்திரிக்கையாளனுக்கு நான் சொல்லக் கூடாது. இருந்தாலும் சொல்கிறேன். ஒரு நிகழ்வை அறிவுப் பூர்வமாக அணுகுங்கள் உணர்வுப் பூர்வமாக வேண்டாம்!

-ரமேஷ்

என்வழி விளக்கம்: இளைஞர்கள் என்றால் அறிவோடு சிந்திக்கத் தெரியாதவர்கள் என்று அர்த்தமா? ஒரு இளைஞன் 25 பேஸ்புக் கணக்குகளைத் திறந்து, அதன் மூலம் கலாமுக்கு வாக்களிக்கிறான். போலி வாக்கு. இதற்காகவா கனவு காணச் சொன்னார் அப்துல் கலாம். பத்து வித எண்களிலிருந்து மிஸ்டுகால் கொடுத்து அப்துல் கலாமை முன்னிலைப்படுத்துகிறான் இன்னொருவன். இதையா அவர் கற்றுக் கொடுத்தார்? இவை எல்லாமே போலி வாக்குகள். இதே மாதிரி போலி வாக்களிக்கக் கோரி பெரிய இயக்கமே நடக்கிறது. போலிகளின் ஃபிராடு இயக்கம். அது கிடக்கட்டும்.

இதே இணையதளத்தில் ஜூன் 8-ம் தேதி நாம் வெளியிட்ட கட்டுரையில் அம்பேத்கருக்கு அளிக்கப்பட்ட வாக்குகள், அப்துல் கலாமுக்கு விழுந்த வாக்குகளைப் பாருங்கள். http://www.envazhi.com/dr-ambetkar-leads-in-who-is-the-greatest-indian-after-gandhipoll/

இந்தக் கட்டுரை எழுதப்படுவதற்கு மூன்று தினங்களுக்கு முன்பு வரை அப்துல்கலாம் 6வது இடத்தில்தான் இருந்தார்.

இதெல்லாம் கூட கிடக்கட்டும். இந்த ஆன்லைன் வாக்கெடுப்பு இப்போது ஒரு பொருட்டே இல்லையென்று ஆகிவிட்டது.

இந்தக் கட்டுரையின் நோக்கம், தகுதியான ஒருவரை இந்த தேசத்து மக்கள் எப்படியெல்லாம் இழிவுபடுத்துகிறார்கள்…என்ற ஆதங்கம்தான்! எந்த வகையில் பார்த்தாலும் அண்ணல் அம்பேத்கருக்கு நிகரானவர் யாருமில்லை. அவரை ஒரு சாதிக்கட்சி தலைவராக பார்க்கும் நோயுற்ற மனதுடன் இன்றைய இளைஞர்கள் இருப்பதை நினைத்து இதயம் கனக்கிறது. அவர் தாழ்த்தப்பட்டவனுக்காக மட்டுமா குரல் கொடுத்தார்… பல நூறு சாதிகளின் பெயர்களில் இருந்த அத்தனை மக்களுக்கும், முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் பிற்படுத்தப்பட்டோர் என்ற ஒரு அடையாளத்தைக் கொடுத்து அவர்களுக்காகவும்தானே பாடுபட்டார்?

அண்ணல் அம்பேத்கர் ஆவண செய்த இட ஒதுக்கீட்டின் பலன்கள், இன்று பிறப்பால் தன்னை உயர்ந்தவன் என்று சொல்லிக் கொள்பவர்களைத் தவிர அனைவருக்குமே கிடைக்கிறது. படிப்பு, வேலை, வீட்டுவசதி, பலவித கட்டண சலுகைகள் என அனைத்தையும் நன்றாக அனுபவித்துக் கொண்டே, இட ஒதுக்கீட்டுக்கு எதிராகப் பேசுவது இன்றைக்கு ஒரு ஸ்டைலாகிவிட்டது. இவர்களால் ஒரு நாள், ஒரு கணம் கூட இட ஒதுக்கீட்டின் பலனை அனுபவிக்காமல் இருக்கமுடியாது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

டாக்டர் அம்பேத்கர், இந்த சலுகைகளை ஒடுக்கப்பட்ட இன மக்கள் முன்னேறும்வரை தொடரட்டும் என்றுதான் சட்டம் வகுத்திருக்கிறார். நாங்கள் முன்னேறிவிட்டோம், இனி எங்களுக்கு வேண்டாம் இந்த வசதி, என எவனாவது சொல்லியிருக்கிறானா?

அப்துல்கலாம் மீது எனக்கென்ன பகை இருக்கிறது.. நல்ல மனிதராக அவர் இருக்கலாம். அதாவது இன்றைய சூழலில். அதற்காக அவரை அம்பேத்கருக்கு நிகராகவெல்லாம் வைத்துப் பார்க்க முடியாது.

கலாமுக்கு மரியாதை கொடுங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் அவரால் யாருக்கும் எந்த நன்மையும் இல்லை… தீமையும் இல்லை. அவர் ஒரு பிரச்சாரகர். நல்ல சிந்தனைகளை விதைக்க முயல்கிறார். அதற்கான உயர்ந்த மரியாதையை நாடு அவருக்குத் தந்துவிட்டது. சோனியா விஷயத்தில் கலாம் செய்தது பெரிய சாதனை என்ற வாதத்துக்கு தனியாக ஒரு பெரிய கட்டுரையை எழுத வேண்டியிருக்கும். சரி, ‘மரபை’க் காரணம் காட்டி, சோனியாவை ஒருமுறை கலாம் நிராகரித்துவிட்டார். ஆனால் பிடிவாதமாக சோனியா காந்தி மீண்டும் பிரதமராக முயற்சித்திருந்தால், கலாமால் ‘சட்டப்படி’ எதுவும் செய்திருக்க முடியாதே. அப்படிச் செய்யாமல் ‘மரபு’க்கு மரியாதை கொடுத்து அமைதியாக ஒதுங்கிக் கொண்டவர் சோனியா காந்திதானே!

சோனியா பிரதமரானால், என் தலையை மொட்டையடித்துக் கொண்டு தரையில் படுத்து உருளுவேன் என்றெல்லாம் அசிங்கமாக பாயைப் பிறாண்டிய சுஷ்மாக்களும் அவரது காவி கோஷ்டியும், சோனியா பிரதமராவதை எதிர்த்து தொடர்ந்த சட்டப்படியான வழக்குகள் அனைத்தையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்ட பிறகு, அவர் பிரதமர் ஆக தடை என்ன இருக்கிறது!

ஒருவர் நல்லவர் என்பதாலேயே அவரது பிம்பத்தை ஊதி ஊதிப் பெரிதாக்கி, அவர்தான் இந்த நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கும் மாமருந்து என்ற ஒரு பிரமையான உலகில் வாழ்வது நம்மவர்களுக்கு கைவந்த கலை. அப்துல் கலாம் விஷயத்தில் இதுதான் நடக்கிறது. அதனால்தான் பலரும் அவரது பிஆர்ஓ போல மாறி கருத்து மழை பொழிகிறார்கள்.

இந்த மனநிலை இருப்பதால்தான், நாட்டுக்கும் அதன் மக்களுக்கும் இன்னும் நூறாண்டுகள் தாண்டியும் நன்மை பயக்கும் பல நல்ல விஷயங்களை விளம்பரமே இல்லாமல் செய்துவிட்டுப் போன மகத்தான தலைவன் அம்பேத்கரின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள் உங்களைப் போன்றவர்கள்.

இந்த மூடத்தனத்திலிருந்து முதலில் வெளியில் வாருங்கள். அம்பேத்கரையும் பெரியாரையும் படியுங்கள். முடிந்தால் அம்பேத்கர் திரைப்படத்தையாவது பாருங்கள். அதன் பிறகு புரியும், இந்த தேசத்தை கட்டிக் காத்த, மக்களின் நன்மை ஒன்றையே தன் வாழ்க்கையாக நினைத்து பாடுபட்ட தலைவர் யார் என்பது!

ஒரு பத்திரிகையாளன் வேலை, எல்லோரோடும் சேர்ந்து கோஷம் போடுவதல்ல. உண்மையைச் சொல்வது! கலாம் ஜனாதிபதியாக இருந்த காலத்திலேயே, அவரது செயல்பாடுகள் சிறுபிள்ளைத்தனமாக உள்ளன என   அலைவ் மற்றும் சரஸ்சலீல் இதழ்களில் பெரிய கட்டுரைகள் வெளியாகின. அதற்கு கலாம் விளக்கம் கேட்டதும், அந்தப் பத்திரிகைகள் அளித்த விளக்கத்துக்குப்பிறகு அவர் அமைதியாகிவிட்டதும் தனிக் கதை (இந்த இதழ்களின் தமிழ்ப்பதிப்புகளுக்கு அன்றைக்கு பொறுப்பாசிரியராக இருந்தது நானே!) எனது இந்த விளக்கத்தின் சுட்டியைக் கூட ஃபேஸ்புக்கில் எப்போதும் பல ஆயிரம் பேருடன் ‘டச்’சில் இருக்கும் கலாமுக்கும் அனுப்பியுள்ளேன். மறுக்கிறாரா பார்க்கலாம்!

இந்தக் கட்டுரையில் மட்டுமல்ல, இதற்கு முந்தைய கட்டுரையிலும் நான் உணர்ச்சிவசப்பட்டு எந்த வார்த்தையையும் எழுதவில்லை. எழுதிய பிறகு ஒரு முறைக்கு பத்து முறை படித்து, திருத்திய பிறகே வெளியிட்டிருக்கிறேன்.

இப்போதும் படித்துப் பார்த்தேன்… எந்த வார்த்தையையும் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தோன்றவில்லை!

-வினோ
32 thoughts on “அம்பேத்கர், அப்துல்கலாம்… ஒரு வாசகரின் கருத்தும் நமது விளக்கமும்!

 1. Rajkumar.V

  அவரால் யாருக்கும் எந்த நன்மையும் இல்லை… தீமையும் இல்லை. அவர் ஒரு பிரச்சாரகர். நல்ல சிந்தனைகளை விதைக்க முயல்கிறார்.

  1000% Correct word Avar presedent a irunthu makkaluku ena nalathu paninarunu list kuduka solunga. Avar presedent a ilathapa than elapakamum poi nala visayangala eduthu solarar. Oru sudanthira paravaya ean kundukula adaikanumnu pakaranga?

 2. Rajkumar.V

  எந்த வகையில் பார்த்தாலும் அண்ணல் அம்பேத்கருக்கு நிகரானவர் யாருமில்லை. அவரை ஒரு சாதிக்கட்சி தலைவராக பார்க்கும் நோயுற்ற மனதுடன் இன்றைய இளைஞர்கள் இருப்பதை நினைத்து இதயம் கனக்கிறது. அவர் தாழ்த்தப்பட்டவனுக்காக மட்டுமா குரல் கொடுத்தார்… பல நூறு சாதிகளின் பெயர்களில் இருந்த அத்தனை மக்களுக்கும், முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் பிற்படுத்தப்பட்டோர் என்ற ஒரு அடையாளத்தைக் கொடுத்து அவர்களுக்காகவும்தானே பாடுபட்டார்?

  Gandi ji natuku Sudanthiram vanga makkala Ondru paduthinar. Sudanthiram vangi thanthar.
  Analaum Bramin thavira yarukum entha uirimayum salugaum ilama adaki vachurunthanga. Gandhi vangi thantha sudanthiratha ella makkalukum kondu poi sethavaru Ambedkar than.

  Mr.Ramesh Bramin ilama iruntha avar padichu inga vanthu mr.Vino kita kelvi kekarathukum Ambedkar than karanam.

 3. SENTHIL

  உங்களின் பார்வையில் நல்லவராகவே தோன்றும் பிரணாப் பற்றி ஒரு தனி கட்டுரை கொடுங்களேன் …..
  வருங்கால ஜனாதிபதியின் நம்பக தன்மை… எங்களுக்கு புரிந்து கொள்ள உதவும்.
  இத்தனை நாள் இல்லாத திடீர் கண்டுபிடிப்பு,வரும் திங்கள் அவர்களின் புதிய பணவீக்க கன்ட்ரோல் வழி முறை பற்றியும் ……

 4. rama

  எனக்கு இட ஒடுகிடு இல்லாம இருந்த, நல்ல காலேஜ்ல இடம் கிடைச்சிருக்காது, இப்போ engineer இறுக்க முடியாது, கொளுத்து வேலைதான் செய்துகொண்டு இருக்கணும்
  அம்பேத்கர் நாமம் வாழ்க,

 5. Murugesan

  ஹலோ ஆசிரியரே! எனது மானசீக குரு அம்பேத்கர். அவர் சாதீய தலைவர் என்று சொல்வது முட்டாள்களின் பார்வையில் மட்டும்தான். அப்துல் கலாம் என்ற ஞானி இந்தியாவை ஒரு உன்னனத நாடாக உலக அரங்கில் நிலை நிறுத்தவேண்டும் என்ற உயர்ந்த என்னத்தை கொண்ட அற்ப்புத மனிதர். இன்று எத்தனையோ அரசியல் தலைவர்கள் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட நினைக்கிறார்கள். அவர்களை பார்க்கும்போது ஒரு வாழும் அம்பேத்காரக நான் அப்துல் கலாமை பார்க்கிறேன். அப்துல் கலாம் நமது குடியரசு தலிவராக வருவதை விரும்பாதவர்கள் கண்டிப்பாக அரசியல் ஆதாயத்தை தேடுபவர்களாகவே மட்டும் தான் இருப்பார்கள் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை.

 6. karthik

  இந்த கட்டுரையும் உணர்ச்சி வசப்பட்டு எழுதப்பட்டுள்ளது. சோனியாவை கலாம் அழைக்கவில்லை என்பது மரபை மீறிய செயல் ஆகாது.

  கலாம் செய்தது சரியே. அம்பேத்கர் மீது உங்களுக்கு இருக்கும் மரியாதையை நானும் வைத்துள்ளேன். அதற்காக அவரது இட ஒதுகிடு சட்டம் இன்றும் இருப்பதாய் பார்த்துகொண்டு இருக்கமாட்டேன்.

  இந்தியாவில் மட்டும் தான் சாதி மற்றும் சலுகை எல்லாம். நம் நாடு வளர சாதி சலுகை இல்லாத நிலை வேண்டும். எல்லாருக்கும் பொதுவான சட்டம் வேண்டும். மதம் மற்றும் சாதியின் பெயரால் இருக்கும் சலுகைகள் ஒழியட்டும். வாழ்க இந்தியா. ………. கார்த்திக்

 7. enkaruthu

  நேர்மையான கட்டுரை சார்.இந்த கட்டுரை படிக்கும் நண்பர்கள் அனைவருக்கும் தன மனசாட்சிபடி நினைத்தால் இது சென்ட் பெர்சென்ட் கரெக்ட் என்று தோன்றும்.இந்த மார்பில் பிறந்தவர்கள் சொல்லும் கூற்றை போல நான் தொடையில் piranthaசூத்திர ஜாதியில் பிறந்தவன் இதை கூட நான் ஏன் சொல்கிறேன் என்றால் இவர்களெல்லாம் ஒரே ஜாதி அதனால்தான் இப்படி பேசுகிறார்கள் என்று சொல்லி விடக்கூடாது என்பதால்தான் என் ஜாதி பெயரை சொல்லாமல் எழுதுகிறேன்.

  நான் சின்ன வயசில் இருந்தபொழுது எங்கள் ஊரிலும் ஒடுக்கப்பட்ட ஜாதிக்காரர்கள் தனியாகத்தான் குடி அமர்த்தினார்கள்.ஆனால் என் ஜாதிக்காரர்களின் வயல்களில் உழைத்து இவர்களுக்கு சம்பாதித்து கொடுப்பது மட்டும் ஒரு ஒடுக்கப்பட்டவர்.எங்கள் வயலிலும் ஒரு ஒடுக்கப்பட்ட மிகவும் நல்ல இதயத்துக்கு சொந்தக்காரர் வேலை செய்து வந்தார்.அவர் பெயர் திரு கலியன். நான் என் விடுமுறைக்கு கிராமத்துக்கு போகும்போல்தெல்லாம் அவர் என்னை சாமி இளநி குடிக்கிறாயா நான் பறித்து தரட்டுமா என்று பாசமோடு கேட்பார்.அவரின் மகனும் என் வயதை ஒத்த உடையவன்தான் அன்று .அப்பொழுதெல்லாம் சின்ன பிள்ளைகளுக்கு சந்தோசமே பனங்காய் இரண்டை முன்னால் ஒரு டயர் மாதிரி செய்து ஒரு குச்சியை வைத்து ஒட்டுவதுதான்.கலியன் அவர்களின் பையன் ஒரு முறை ஒட்டியதை பார்த்து எனக்கும் அதை ஒட்டவேண்டும் என்ற ஆசையில் அதை பார்த்தேன்.அதை கவனித்த அவரின் அப்பா அவர்கள் டேய் வண்டியை அவரிடம்(நான் அவராம் அன்று ஒன்றும் தெரியவில்லை ஆனால் இன்று நினைத்தால் எவ்வளவு பெரிய ஜாதி கொடுமை நடந்திருகிறது ) கொடுடா என்று கத்தினார்.இன்று என் உயிர் நண்பனாக இருக்கும் அவனும் அன்று அழுதுகொண்டே கொடுத்தான்.நானும் கொஞ்ச நேரம் ஓட்டிவிட்டு அவன் அழுவதை பார்த்து இரண்டு பேர் சேர்ந்து ஓட்டலாம் வா என்று கூறினேன் .அன்று ஆரம்பித்த நட்பு இன்றுவரை தொடர்கிறது.

  நான் ஏன் இதை சொல்கிறேன் என்றால் எங்கள் ஊரிலும் அய்யர் ஒருவர் இருக்கிறார் அதாவது பல சாஸ்திரங்களை சொல்லி சுத்து வட்டார பத்து கிராமங்களுக்கும் தெவசம் கொடுப்பவர் இவர்தான்.இவர் ஒருமுறை நானும் கலியன் அவர்களின் மகனுமான ராமசாமியும் கில்லி தாண்டல் விளையாடுவதை பார்த்துவிட்டு போய்விட்டார்.பொங்கலுக்கு போன அந்த நேரம் பார்த்து எனக்கு தண்ணி ஒத்துக்காதலால் ஜுரம் வந்துவிட்டது.அதுதான் சமயம் என்று இந்த ஐயர் என் சின்ன தாத்தாவிடம் இந்த பையன் தாழ்த்தப்பட்ட ஜாதிக்காரர் கலியன் அவர்களின் பையனோடு கில்லி விளையாடியதால் வந்த வினை என்று இந்த உழைக்காமலே தன் வாய் சமார்த்தியதால் தெவசம் பெயரில் பிச்சை எடுத்த இவர் ரொம்ப கௌருமாக சொல்லிவிட்டு போய்விட்டார்.

  என் சின்ன தாத்தா இதை நம்பினார்.ஆனால் என் தாத்தா இரண்டாவதே படித்திருந்தாலும் மிக பெரிய முற்போக்கு சிந்தனைக்காரர்.இதை அறிந்த என் தாத்தா அந்த அய்யரிடம் சொன்னது இதுதான், சரி அய்யரே அந்த ஜாதிகாரகளோடு விளையாடுவதே தீட்டு என்றால் இனி அந்த ஜாதிக்காரர் என் தோட்டத்திலும் வேலை செய்வதை நிறுத்திவிடுகிறேன்.நீங்களும் நீங்கள் குலமாதவாக நினைக்கும் உங்கள் பசு மாட்டின் சாணியையும் இவர்கள் அல்ல சொல்வதை நிறுத்திவிடுங்கள். .அதுபோக இங்கே இருக்கும் யாருக்கும் தெரியாத பாஷைகளை சொல்லி தெவசம் கொடுத்துவிட்டு ஓட்டுகப்பட்ட இவர்களின் வியர்வையில் வந்த தீட்டு அரிசியை நீங்கள் வெட்கமே இல்லாமல் தானமாக கேட்காதீர்கள் என்று சொன்னார்.அந்த அய்யர் தன் வயற்றுக்கே ஆப்பு வைத்துவிட்டாரே என்று இவர்களுக்கு கடவுள் கொடுத்த வேலையை நாம் கெடுப்பது பாவம் என்று பம்மாத்து பண்ணினார் பாருங்கள் ரொம்ப காமெடி.

  நான் ஏன் இதை சொன்னேன் என்றால் ஒரு 1990 வருடத்திலே என் தாத்தாவுக்கு இப்படி ஒரு நிலை என்றால் அம்பேத்கர் அந்த சட்டத்தை ஏற்றும்பொழுது எவ்வளவு ஒரு பிரச்சினையை சந்தித்திருப்பார்.

  எல்லாம் கிடைத்து ஒரு சாதனை நிகழ்த்துவது ஒன்றும் பெருமை இல்லை.ஆனால் எதுவுமே கிடைக்காமல் சாதனை நிகழ்த்துவது ஒரு சாதனைதான்.கொஞ்ச நாள் முன்பு மெரினா கடற்கரையில் சுண்டல் விற்கும் ஒரு மீனவருக்கு மகனாக பிறந்த ஒரு மாணவன் 1000 துக்கு மேல் மதிப்பெண் பெற்று அடுத்த கல்விக்கு ஏங்குகிறான் என்றால் அம்பேத்கார் அன்று கொடுத்த இடஒதுக்கிடே.

  இந்த தளத்தின் ஆசிரியர் சொன்னபடி அம்பேத்கரின் வாழ்க்கை புத்தகத்தை முழுவதுமாக படித்துவிட்டு நேர்மையாக கருத்து போடுங்கள் நண்பர்களே.

 8. enkaruthu

  //உங்களின் பார்வையில் நல்லவராகவே தோன்றும் பிரணாப் பற்றி ஒரு தனி கட்டுரை கொடுங்களேன் …..//

  ஏற்கனவே இந்த தளத்தின் ஆசிரியர் பிரணாபை பற்றி நமக்கு தெரியாத தகவல்களை ஒரு கட்டுரையாக கொடுத்துவிட்டார்.என்னப்பா நீ இது கூடும் தெரியாமல் ஆத்திரத்தின் பேரில் கமெண்ட் போட்டு பல்பு வாங்கிவிட்டாயே.

 9. enkaruthu

  சார் எத்தனை வருஷம் ஆனாலும் இந்த பதிவிற்கு ஜெயலலிதா என்றவுடன் சும்மா பதில் மேல் பதில் போடும் ஒரு அவாக்களும் கமெண்ட் போட மாட்டார்கள்.ஏனென்றால் இந்த பதிவிற்கு மாட்டும் அவர்கள் எல்லாம் mute மோடுதான்.

 10. Manoharan

  இந்த காலத்தில், அதுவும் கேடு கேட்ட அரசியல்வியாதிகள் சூழ்ந்திருக்கும் சூழலில் ஒருவர் நல்லவராக இருப்பதும், நல்லவராக நடப்பதும், நல்லவைகளை போதிப்பதும் மிகப்பெரிய விஷயம். அதிலும் அதை இந்தக் கால இளைஞர்கள் கேட்டுக்கொள்கிறார்கள் என்றால் அது அதைவிட பெரிய விஷயம். இந்த விஷயத்தில் அப்துல் கலாம் தன் நிகர் அற்றவர். எப்போதுமே நமக்கு பொதுவான விஷயம் ஒன்று உண்டு. ஒருவரை நிறைய பேர் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினால் உடனே அவரை மட்டம் தட்டுவார்கள். ஆனால் அப்துல் கலாமை சிறுமை படுத்தநினைக்கும அத்தனை முயற்சியும் தோல்வியைவே கண்டுகொண்டிருக்கிறது. அம்பேத்கார் ஒரு உயர்ந்த மனிதர் என்றால் கலாமும்தான் …ஆனால் வெவ்வேறு வழிகளில் ,,,,இதில் எதற்கு மற்றவரை தாழ்த்தவேண்டும் ?

 11. Kannan

  வினோ…வாசகரின் கேள்விக்கு நீங்கள் அளித்துள்ள பதிலில் திருப்தி இல்லை…எதிர்மறையான கருத்துகள் தொடர்ந்து வந்ததால் நீகள் இந்த விளக்கத்தை அளித்துள்ளீர்கள்….மற்றபடி சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை.

 12. மு. செந்தில் குமார்

  என்கருத்து அவர்களின் கருத்தோடு ஒத்து போகிறேன்.

  வ எண் பொருள் அம்பேத்கர் அப்துல்கலாம்

  1 குணம் நல்லவர் நல்லவர்
  2 அறிவு அறிவாளி அறிவாளி
  3 நாட்டுப்பற்று உடையவர் உடையவர்
  3 நாட்டுக்கு
  செய்தது சுதந்திரத்திற்காக ————-
  போராடியவர்

  தாழ்த்தப்பட்ட
  மக்களுக்க
  தன் வாழ்வை
  அர்பணித்தவர் —————

  4 சாதனை ஜாதி, மதம், இனம் அணுகுண்டு
  மற்றும் மொழியால் சோதனைக்கு
  வேறுபட்ட ஒரு தலைமை;
  நாட்டுக்கே, ஏவுகணை
  பல நாடுகள் போற்றும் சோதனைக்கு
  சட்டம் அமைத்தது தலைமை

  (அறிவியலில் உள்ள எத்தனையோ துறைகளுக்கு எத்தனையோ தலைமை அதிகாரி இருக்கிறார்கள். ஆனால் பிஜேபி தன்னை ஒரு மத சார்பற்ற கட்சி என கட்டிக்கொள்ள இவரை ஜனாதிபதி ஆக்கியது. அதற்க்கு முன்னால் எத்தனை பேருக்கு அப்துல் கலாமை தெரியம் ? எந்த சாதனையின் அடிப்படையில் அவரை மக்கள் தெரிந்து வைத்திருந்தார்கள் ?)

  => 3 % உயர் ஜாதி மக்கள் 97 % கீழ் ஜாதி மக்களை ஆண்டது மாறியது.
  => அப்துல் கலாமே கூட கல்வி கற்றிருக்க முடியாது.

 13. பாவலன்

  //அம்பேத்கார் ஒரு உயர்ந்த மனிதர் என்றால் கலாமும்தான் …ஆனால் வெவ்வேறு வழிகளில் ,,,,இதில் எதற்கு மற்றவரை தாழ்த்தவேண்டும் ?//
  (மனோகரன்)

  என் மனதில் உள்ளதை நீங்கள் சொல்லி விட்டீர்கள்.

  Top 10 movies, Top 10 songs இந்த மாதிரி உயர்ந்த தலைவர்களை
  rank போட வேண்டாம் என்பது தான் என்னுடைய கருத்து.
  அந்த மீடியாவின் முயற்சி வியாபார உத்தியோ என்ற சந்தேகம்
  என் போன்ற சிலருக்கு உள்ளது.

  -பாவலன்

 14. Rajkumar.V

  mayaya Kandu Mayangathinga. Srilanka issuela Kalam oda stand enna? Avar Antha sambavam nadanthapa kandichu ethum pesinara? Ipa samebathula Srilanka poi Rajapakshe va santhichutu Tamilarkal Singalam Kathukanum nu solitu. Ipa elarum nala irukaratha solitu vanthar. Rajapakshe Kalama use pani than nalavanu katunan. Srilankan issue ls DMK va Kora solara vaikal than Kalam Pugal padarinka.
  corruption issue la Avaroda stand enna? Ethum vai therakama than irukarar.
  Srilankan issuela Avar Tamilarkaluku ataharava pesiruntharuna All over india intha issuela Namaku support a irunthirukum. Manasachi oda think pani parunka. Avar matum Rajapaksheva ethirthu poratam arivcaha India fulla Namaku support pannuvanga Ean Avar pannala?
  Etho avar undu avr book sale undunu irukaravara eanpa disturb panarinka?

 15. தினகர்

  இரு தலைவர்க்ளை ஒப்பீடு செய்வதே தவறு. அம்பேத்கர் வாழ்ந்த காலம் வேறு. சாதீய தீண்டாமைகளுக்கு உட்பட்டு, பலவேறு இன்னல்களுக்கிடையே, கல்வி கற்று, டாக்டர் பட்டம் பெற்று அந்த சட்ட அறிவை தனது சுய நலத்திற்காக பயன்படுத்திக்கொள்ளாமல், தன்னைப் போல் ஒடுக்கப்பட்ட சமூதாயத்தின் முன்னேற்றத்திற்க்காக, அந்த காலகட்டத்தில் உள்ள மற்ற தலைவர்களுடன் போராடி உரிமை பெற்று தந்தார்.

  அப்துல்கலாம் நண்பர் ஒருவர் குறிப்பிட்டது போல், அம்பேத்கர் வாங்கி தந்த உரிமையை பயன்படுத்தி, கல்வி கற்று முன்னுக்கு வந்தவர். அறிவியல் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்து கொண்டவர். எதிர்கால இந்தியாவுக்கு அறிவியலின் அவசியத்தை இளம் மாணாக்கர்களுக்கு புரிய வைக்கும் உன்னத முய்ற்சி செய்து வருகிறார்.

  அம்பேத்கர்,பெரியார், காமராஜர்,அண்ணாதுரை, அப்துல் கலாம் போன்ற பாரதத்தின் புகழ் பெற்ற புதல்வர்களுக்கு சாதி, இன அடையாளம் காட்டுவது சில குறுகிய மனப்பான்மை கொண்டவர்களேயன்றி ஒட்டு மொத்தமாக, குறிப்பிட்ட சாதி, இன மக்கள் அல்ல. சாதி, இன வரம்பிற்கு அப்பாற்பட்டு அந்த மாபெரும் தலைவர்களை, அவர்களது சாதனைகளை பார்த்தால் எல்லோருக்கும் நல்லது..

 16. sirippousingaram

  அம்பேத்கரை தானாக யாரும் ஜாதிக்கட்சி தலைவராக பார்க்கவில்லை பார்க்கவைத்தது தானே தலித்துகளின் ஏகபோக தலைவர் என்று சொல்லிக்கொண்டு-அம்பேத்கர் பெயரைச் சொல்லி பிழைப்பு நடத்தும்-பாஸ்வான்,மாயாவதி,இங்கே திருமா போன்றவர்கள்தான்.தலித் மக்கள் அல்ல

 17. enkaruthu

  //ஆனால் அப்துல் கலாமை சிறுமை படுத்தநினைக்கும அத்தனை முயற்சியும் தோல்வியைவே கண்டுகொண்டிருக்கிறது//

  இங்கே பாருங்கள் மனோகரன் இங்கு பதிவு போடும் இந்த தளத்தின் ஆசிரியர் உட்பட யாரும் கலாமுக்கு எதிராக இல்லை. ஆனால் கலாம் காலம் வேறு அம்பேத்கர் காலம் வேறு. ஒரு வேலை கலாம் கொஞ்ச காலம் முன்பு பிறந்திருந்தால் அவர் யாரென்றே தெரியாமல் செய்திருப்பார்கள்.நான் ஏன் சொல்கிறேன் என்றால் ஹிந்துவாக பிறந்தும் மிகவும் ஜாதி பார்த்த அன்றைய காலத்தில் அப்துல் கலாமை போன்ற இஸ்லாமியர்களை சாதிக்கவா விட்டிருப்பார்கள்.அப்படி ஒரு நிலைமையிலும் அம்பேத்கர் வென்றெடுத்தார் என்பது சாதனை என்பதைத்தான் சுட்டி காட்டுகிறோம்.

 18. குமரன்

  என்கருத்து

  ///ஆனால் கலாம் காலம் வேறு அம்பேத்கர் காலம் வேறு. ஒரு வேலை கலாம் கொஞ்ச காலம் முன்பு பிறந்திருந்தால் அவர் யாரென்றே தெரியாமல் செய்திருப்பார்கள்.///

  எல்லாக் காலங்களிலும் சாதனையாளர்கள் சாதனையாளர்கள் ஆகவே இருப்பார்கள், இருந்திருக்கிறார்கள்.

  அம்பேத்காரும் கூட 1947 க்கும் முன்னராகவே சிறந்த வழக்கறிஞராகவும், பல்முனை அறிஞராகவும் கூட உருவாகவில்லையா என்ன? அவர் என்ன ஒதுக்கீட்டு முறையாலா முன்னேறினார்?

  அதுபோலவே அப்துல் கலாமும் கூட அவரது துறையில் எப்படி இருந்தாலும் முன்னேறி இருப்பார். சாதனையாளர்கள் சலுகை இருந்தாலும் இல்லாவிட்டாலும் சாதிப்பார்கள், சாதித்தும் இருக்கிறார்கள்.

  அம்பேத்கார் போராடிக் கொண்டுவந்த இட ஒதுக்கீடு மிகவும் தாழ்த்தப்பட்ட மக்களைச் சென்று சேர்ந்தது என்பது மகிழ்ச்சியே. ஆனால் சாதனையாளர்களை இதனைக் காட்டி சிறுமைப் படுத்துதல் முறையல்ல.

  பல நூற்றாண்டுக்கால வரலாற்றில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் எத்தனையோ பேர் புகழ் வாய்ந்த அறிஞர்களாகவும் புலவர்களாகவும் இதே நாட்டில் இருந்திருக்கிறார்கள்.

  ஏதோ அம்பேத்கார் காலத்துக்குப் பின்னர்தான் தாழ்த்தப்பட்டவர்கள் அறிவாளிகளாகவே ஆக முடிந்தது என்றால் அது சரி அல்ல.

 19. Rajkumar

  ஏங்க குமரன், உங்களுக்கே இது கொஞ்சம் அநியாயமா தெரியல? அம்பேத்கர் வாழ்ந்த காலகட்டத்தில் அவருக்கு இந்த அங்கீகாரம் கிடைக்க அவர் பட்ட பாடுகள் கொஞ்சமா நஞ்சமா. அவர் நாடறிந்த தலைவரான பிறகு கூட ஒரு மாநாட்டுக்கு அவரை தலைவராகப் போட்டதையே தாங்கிக் கொள்ளாமல், அதன் ஏற்பாட்டாளர்களே மாநாட்டைப் புறக்கணித்த அவமானமெல்லாம் நடந்தது.

  //ஏதோ அம்பேத்கார் காலத்துக்குப் பின்னர்தான் தாழ்த்தப்பட்டவர்கள் அறிவாளிகளாகவே ஆக முடிந்தது என்றால் அது சரி அல்ல.//

  -உங்கள் கருத்து நிச்சயம் தவறு. இங்கேதான் உங்கள் உண்மை முகம் எட்டிப் பார்க்கிறது. அம்பேத்கரை ஒப்புக்கு கொண்டாடும் மனப்பான்மை இது. எங்கே, அம்பேத்கருக்கு முன் அவரைவிட பிரபலமான அல்லது அறிவார்ந்த அல்லது மக்கள் செல்வாக்கு மிக்க ஒரு தலைவரைக் காட்டுங்கள் பார்ப்போம்.

  தாழ்த்தப்பட்ட மக்களை அறிவு பெற்ற சமூகமாக்கவே உங்களைப் போன்றவர்கள் விடவே இல்லையே. அம்பேத்கர்தானே, குனிந்தே கிடந்த அந்த மக்களை நிமிர வைத்தார்?

  ஒரு குளத்தில் மகர் நீரருந்தக் கூட முடியாத காலகட்டம் அது. அன்றைக்கு தமிழகத்தில் எத்தனை கேவலமான நிலைமை? இன்றும்கூட தாழ்த்தப்பட்டவனால் சாதி இந்து என்பவனை நேரடியாக எதிர்க்கவே முடியாது. அப்படி முயன்றால் அரசே போலீசை வைத்து சுட்டுக் கொன்றுவிடும் தீவிரவாதம்தானே நிலவுகிறது.

  காலகாலமாக அடிமையில் கிடந்த சமூகத்தை அதி்லிருந்து வெளியில் கொணர்ந்து, படிக்க வழி சொல்லிக் கொடுத்தவர் அம்பேத்கர்தான்.

  உங்களுக்கு அனுபவமி்ருக்கிறதோ இல்லையோ, ஆனால் ஒரு கிராமத்தான் என்ற முறையில் நான் சொல்கிறேன். முதல் தலித் பட்டதாரி எங்கள் ஊரில் உருவானதே 1989 -ல்தான். அவன் மதுரையில் படித்து கிராமம் திரும்பிய அன்று ஊருக்குள் செருப்பணிந்து வரலாமா வேண்டாமா என தயங்கின தயக்கம் இருக்கிறதே. அந்த வலியெல்லாம் உங்களுக்குப் புரியாது குமரன்.

  அப்துல் கலாம் என்பவர் நல்ல மனிதர் நல்ல மனிதர் நல்ல மனிதர் என கூவுகிறீர்களே. அந்த நல்ல மனிதனால் என்ன பலன்? மக்கள் விரோத கூடங்குளம்தான் அவர் தந்த பரிசு. ஏன் அவரும்தான் ராஜபக்சேயுடன் கைகுலுக்கு விருந்துண்டார்? ஆனால் கனிமொழியும் திருமாவளவனும்தான் உங்கள் கண்னுக்கு குற்றவாளியாகத் தெரிகிறார்கள்!

  அப்துல் கலாம் தவிர, மற்றெல்லாரும் இந்தியா நாசமாகப் போகவேண்டும் என்றா நினைக்கிறார்கள்? எல்லோருக்கும்தான் இந்தியா வல்லரசாக வேண்டும் என்ற கனவுண்டு. அப்துல் கலாம் சொல்லும் முன்பே அந்தக் கனவு எனக்கும் உண்டு.

  தேசத்தின் தலைமகனாக இருந்தவருக்கு, தனக்கென்று குறைந்தபட்சம் சொந்தக் கருத்து கூட கிடையாது. இதில் அவரை இளைஞர்கள் கொண்டாடுகிறார்கள் என்றால் என்ன அர்த்தம்?

  சாதி வெறியில் திளைக்கும் அவர்களால் அம்பேத்கர் போன்ற இந்தியாவின் நல்ல மனிதர், தலைவர், முற்போக்கு சிந்தனையாளர், போராளியை ஏற்க முடியாது. ஏற்கவும் மாட்டார்கள். ஒரு போலித்தனமான ஒப்புதலுடன், அப்துல்கலாம்களைத் தேடிக் கொண்டுதான் இருப்பார்கள்.

 20. மு. செந்தில் குமார்

  என் அனுபவம்:

  என் சொந்த ஊர் வாலாந்தூர். செக்கர்நூரனியிலிருந்து தேனி செல்லும் வழியில் உள்ளது. மதுரை மாவட்டம்.

  30 ஆண்டுகளுக்கு முன்.

  என் தந்தை VAO ஆக இருந்தார் (now he is no more). என் தாதாவும் அதே வேலை தான். எங்கள் ஊரில் எங்கள் குடும்பம் மட்டும் தான் உயர்ந்த ஜாதி. மற்றவர்கள் எல்லாம் பிற்படுத்தப்பட்டவர்கள். மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் ஊருக்கு வெளியே வசிப்பார்கள்.

  50 வயதை ஒத்தவர் என்னை (7 or 8 வயதாக இருக்கும் பொழுது) “ஐயா ” என்று தான் அழைப்பார். நான் மரியாதை கொடுத்து அவரை கூப்பிட்டால் வீட்டில் உள்ளவர்கள் கண்டிப்பார்கள்.

  எங்கள் தோட்டத்தில் வேலை செய்த ஒருவரின் மகன் (மிகவும் பிற்படுதபட்டவ்ர்) இன்று படித்து (இன்ஜினியரிங்) சென்னையில் தான் வேலை செய்கிறார் (Rs. 40,000/month)

  இன்று ஊரில் உள்ள இளையதலைமுறை என்னை பேர் சொல்லி அழைக்கிறார்கள்.

  இந்த அருமையான மாற்றம் எப்படி வந்தது? இது என் அனுபவம். அனால் எத்தனை எத்தனை மக்கள் நாடெங்கும் பயன் அடைந்திருக்கிறார்கள்!. லட்சக்கணக்கான மக்கள் சுயமரியாதையை, கல்வியை மற்றும் பொருளாதார வளர்ச்சி கண்டிருக்கிறார்கள்.

  இதுபோன்ற ஒரு மாற்றத்தை அப்துல்கலாம் அவர்கள் எதாவது ஒரு துறையில், மக்கள் வாழ்வில் இத்தனை பெரிய மாற்றத்தை கொண்டுவந்தரா?

 21. Manoharan

  நான் இங்கு யாரையும் சிறுமைபடுத்த நினைக்கவில்லை அதனால் திரு.ராஜ்குமார் அவர்களின் கருத்தையே புறக்கணிக்கிறேன். ஒரு புறம் அம்பேத்கார் ஒரு மாமனிதர் என்பதை ஒத்துக் கொள்கிறோம். அதேநேரம் அவரின் அருமையை சொல்ல அப்துல் கலாமை சிலர் பயன்படுத்துவது ஏன் என்று தெரியவில்லை ? அப்படிஎன்றால் அப்துல் கலாமை ஒப்பிடாவிட்டால் அம்பேத்கார் பற்றி பெரும்பாலோர் பேசமாட்டார்கள் என்று ஒரு பிம்பத்தை சில வாசகர்கள் தெரிந்தோ தெரியாமலோ உருவாக்குகிறார்கள். அதாவது ஒருவரை குறை கூறித்தான் இன்னொருவரை உயர்த்தவேண்டுமா ? அவரின் பெருமையை சொன்னால் போதாதா ? இன்னொன்று அம்பேத்கார் எதோ தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டுமே சார்ந்தவர் என்கிற பிம்பத்தையும் சிலர் உருவாக்குகிறார்கள். அம்பேத்கார் இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கியவர். அவர் எல்லா இந்தியனுக்கும் பொதுவான தலைவர். அவருக்கு சாதீய சாயம் பூசாதீர்கள். அப்துல் கலாமை ஒரு முஸ்லிமாக மட்டும் எந்த இந்தியனும் பார்ப்பதில்லை. சொல்லப்போனால் இஸ்லாமியர்களே அவரை மதத்திற்குள் அடைக்கவில்லை. அவர் அனைத்து இந்தியர்களுக்கும் சொந்தம். அம்பேத்காரும் அதுபோலத்தான். தயவு செய்து இவர்களை விவாதத்துக்கு அப்பார்ப்பட்டவர்களாக பாருங்கள்.

 22. தேவராஜன்

  இப்படித்தான் ஹஸாரே என்பவரை ரஜினி உள்பட எல்லோருமே கண்ணை மூடிக் கொண்டு ஆதரித்து கருத்து சொன்னீர்கள். ஆனால் அன்றும் இந்தத் தளம்தான் அவர்களின் வண்டவாளங்களை புட்டுப் புட்டு வைத்தது. இன்று ஹஸாரே குழுவினரின் லட்சணம் சிரிப்பாய் சிரிக்கிறது. இந்தியாவின் அரசியல்வாதிகளைவிட மிக மோசமானவர்கள் என்ற பெயரை ரொம்ப ஈஸியாக சம்பாதித்துக் கொண்டது ஹஸாரே குழு.

  வெறும் உணர்ச்சி வசத்தால் அப்துல் கலாமுக்கு இத்தனை பெரிய இமேஜை அளிப்பது, அவருக்கே கூட நல்லதல்ல.

  நண்பர் ராஜ்குமார் சொன்னதைப் போல, ஒருமுறையாவது, முக்கிய பிரச்சினைகளில் கலாமின் கருத்து என்னவென்று யாருக்காவது தெரிந்திருக்கிறதா?

  இலங்கைத் தமிழர் பிரச்சினையா? ‘அது எப்படியோ போகட்டும். எல்லோரும் கனவு காணுங்கள்’

  ‘தமிழக மீனவர் பிரச்சினையா, அது பற்றி நாம் பேச முடியாது.. நீங்கள் கனவு காணுங்கள்’

  அணு உலையால் மக்கள் சாகும் அபாயமா. கவலை வேண்டாம், ரூ 500 கோடிக்கு ‘புரா’ கொடுத்திடலாம்!

  இவர் மேற்கொண்ட வெளிநாட்டுப்பயணங்களால் ஒரு நன்மையும் கிடைக்கவில்லை. ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்.

  அம்பேத்கர், காமராஜர், எம்ஜிஆர் என மனிதாபிமானமும், ஒடுக்கப்பட்டோர் மீதான அக்கறையும் கொண்டவர்களே தலைவர்கள். மற்றவர்கள் வெறும் மனிதர்கள்.

 23. Ayub

  //அணு உலையால் மக்கள் சாகும் அபாயமா. கவலை வேண்டாம், ரூ 500 கோடிக்கு ‘புரா’ கொடுத்திடலாம்!//
  -Nice Shot !

 24. குமரன்

  ராஜ்குமார்

  நான் சொன்னது சாதனையாளர்கள் எப்படிப்பட்ட சூழலிலும் முன்னேறிச் சாதனை புரிவார்கள் என்பதே. கலாம் மட்டும் அல்ல அனைவருக்கும் அது பொருந்தும். அம்பேத்கார் எத்தனை கஷ்டப்பட்டுப் போராடி இந்த உயரிய நிலைக்கு வந்திருப்பார் என்று வியந்து பாராட்டி, அவர் குறித்து இந்தத் தளத்தில் வந்த முதல் கட்டுரையிலேயே எனது கருத்தைப் பதிந்திருக்கிறேன். தங்கள் கருத்து முன்கூட்டி எடுக்கும் முடிவுகளால் (prejudice) பிழைப் பட்டது என்பது மீண்டும் ஒருமுறை, நிரூபணமாகிறது.

  எந்த வசதியும் இல்லாமல் தெரு விளக்கில் படித்து உயரிய நிலைகளை எட்டியவர்கள் உண்டு. எத்தனையோ சிரமப்பட்டு ஒருவேளை உணவும் இல்லாமல் படித்து முன்னேறியவர்கள் உண்டு. நமது நாட்டில் பல நூற்றாண்டுகளுக்கும் முன்னரே கூட தமது அறிவுடைமையை நிறுவிய பல சமூகத்தவர் உண்டு.

  தாழ்த்தப்பட்ட மக்களை மனமார நமது சகோதரர்கள் என அனைவரும் ஒப்புக்கொள்ள வகை செய்தவர் அம்பேத்கார் என்ற எனது கருத்தை நீங்கள் இப்படியெல்லாம் எழுதும் முன்னரே பதிந்தவன் நான். எனவே நீங்கள் எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி பார்த்தால் எனது கருத்து உங்களுக்குப் புரியும்.

  இங்கே கூட தத்தமது வாழ்க்கை அனுபவங்களைப் பதியும் எவரும் எந்தெந்த சாதியினர் இப்படிப்பட்ட சாதிக் கொடுமைகளைச் செய்து வருகிறார்கள் என்று பதிகிறார்களா, ஏன் அப்படிச் செய்யவில்லை என்ற கேள்வியைக் கேட்டுப் பாருங்கள். “ஜாதி ஹிந்து” என்று பத்திரிகைகள் எழுதுவது கிடக்கட்டும், இங்கே பதியும் நமது சகோதரர்களே கூட பட்டவர்த்தனமாக இன்ன சாதியினர் இப்படிப்பட்ட கொடுமையைச் செய்கிறார்கள் என்று என் ஒப்புக் கொள்வதில்லை?

  இதுதான் நம்மை நல்ல வழிக்குச் செல்ல விடாமல் செய்யும் “உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும்” நிலை. ஆங்கிலத்தில் சொல்லும் “hypocrisy”. நம்மிடையே பல சாதிகள் ஆதிக்கச் சாதிகள். இவை அனைத்தும் திருந்தினால்தான் உண்மையான சமத்துவம் பிறக்கும். நானோ பிராமணர்கள் குறித்து அம்பேத்கர் சொன்ன கருத்தை அப்படியே இந்தத் தளத்தில் வந்த அவர் குறித்த கட்டுரையில் பதிந்தவன். எனது வாழ்விலே எனது இருபத்து ஒன்றாம் வயதில் நான் ஒரு அதிகாரி. அதே அலுவலகத்தில் பியூனாக இருந்த தாழ்த்தப்பட்ட சகோதரர் ஒருவரிடம் நான் நடந்து கொண்ட நல்முறையின் பலனாக, பின்னர் வேறொரு தாழ்த்தப்பட்ட சகோதரர் (எழுத்தர்) காழ்ப்புணர்வின் காரணமாக என்மீது சாதிக்கொடுமைப் புகார் அளித்தபோது, முந்தைய சகோதரர் முன்வந்து என்மீது இருந்த பழி பொய்யானது எனச் சாட்சி கூறி என் நற்பெயரை நிலை நிறுத்திய அனுபவம் உடையவன் நான்.

  நல்வினை நன்மையையும் தீவினை தீமையையும் பயக்கும் என்பதில் திடமான நம்பிக்கை உடையவன். நல்லோர் மீது சுமத்தப்படும் பொய்க் குற்றச்சாட்டுக்கள் நிலைத்து நிற்பதில்லை. வினையும் வினைப்பயனும் சாதி பார்ப்பதில்லை !!!!

 25. பாவலன்

  //நல்லோர் மீது சுமத்தப்படும் பொய்க் குற்றச்சாட்டுக்கள் நிலைத்து நிற்பதில்லை. /// (குமரன்)

  நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடி
  புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் – தொல்லுலகில்
  நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
  எல்லார்க்கும் பெய்யும் மழை – ஔவையார்

  இந்த வலையில் “நல்லார்” என நான் காண்பது குமரன் முதலானோர்!

  குமரன் சென்னையில் தானே இருக்கிறார், ஏன் மழை பெய்யவில்லை
  எனக் கேட்கக் கூடாது!

  -பாவலன்

 26. kk

  அம்பேத்கரை படிக்கவைத்து ஒரு பிராமணன்!! ஜாதி வெறியை அந்த பிராமணன் பாத்திருந்தால் அம்பேத்காரை வரலாறு அடையாளம் கண்டிருக்குமா !!

  அம்பேத்காரை வைத்து அரசியல் பிழைப்பு நடக்கிறது !!

  நம் superstar இந்த online pollai வென்றிருந்தால் என்வழி வினோவின் பதில் எப்படி இறுக்கும் தலைவர் அந்தரங்கத்தை அலசிருப்பரோ !!!

 27. பாவலன்

  மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கார், டாக்டர் அப்துல் கலாம், அன்னை
  தெரசா போன்றார் – நான் கருதும் நல்லார்கள்.

  பாடலுக்குப் போவோம்!

  நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடி
  புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் – தொல்லுலகில்
  நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
  எல்லார்க்கும் பெய்யும் மழை – ஔவையார்

  பொருள்:

  உழவர்கள் தங்களுடைய நெற்பயிர் செழித்து வளர்வதற்காகத் தண்ணீர்
  இறைத்து ஊற்றுகிறார்கள். அந்தத் தண்ணீர் வாய்க்கால் வழியாக ஓடிப்
  பக்கத்தில் உள்ள புல்லின்மீதும் கசிகிறது, அதையும் நன்கு வளரச்
  செய்கிறது.

  அதுபோல, பழமையான இந்த உலகத்தில், நல்லவர் ஒரே ஒருவர்
  இருந்தால்கூடப் போதும், அவருக்காக மழை பெய்யும், மற்றவர்களும்
  அதில் பலன் அடைவார்கள்.

  கேள்வி:
  நல்லவங்களுக்கும் மழைக்கும் என்னய்யா சம்பந்தம்?
  அமெரிக்காவிலும், கேரளாவிலும் அடிக்கடி மழை பெய்கிறது.
  Gulf நாடுகளில் வறட்சியாக இருக்கிறது. அப்படீன்னா
  அமெரிக்காக் காரன் நல்லவன், Gulf-ல் இருக்கறவன் கெட்டவனா?
  கேணைத் தனமாக இருக்குயா இந்தப் பாட்டு! இது சரியா?

  பதில்:

  (கிருஷ்ணன்: இந்த கேள்வி-பதில் அறிக்கை யாரோ பாணியில இருக்கே?
  பாவலன்: ஹி..ஹி..ஹி..)

  Literal meaning எடுத்துக் கொண்டால் அது ஆபத்து தான்..உட்பொருள்
  எடுத்துக் கொள்வது தான் அறிஞர்க்கு அழகு.

  வலையில் படித்த ஒரு விளக்கம் (நன்றி: ரவிசங்கர்)

  புல்லு எங்கும் தான் விளையுது!

  சாலையோரம், திடல், குப்பை மேடு-ன்னு புல்லு உண்டாகாத இடமே
  இல்லை! ஆனா அங்கெல்லாம் புல்லுக்குத் தண்ணி பாயாது!

  எங்கே பாயும்? நெல்லு எங்கே விளையுதோ, அங்கே இருக்குற
  புல்லுக்குத் தான் தண்ணி பாயும்!
  நெல்லுக்கு இறைத்த நீர், வாய்க்கால் வழியோடி = ஆக…
  வாய்க்கா பக்கத்துல இருக்குற புல்லுக்கு மட்டும் தான் தண்ணி பாயுது!

  அதே போல், ஒரு சிலர், ரொம்ப நல்லவர்களா இல்லீன்னாலும்,
  நல்லவர்கள் இருக்கும் இடத்தில் தாங்களும் இருப்பார்கள்!

  அப்படி இருக்கும் போது, கொஞ்சம் கொஞ்சம் அந்த நல்ல குணங்கள்
  இவிங்க மேலேயும் படும்! அதனால் தாங்களும் சில குணங்கள்
  அமையப் பெறுவார்கள்!

  எப்படி நெல்லுக்கான நீரு, வாய்க்கா புல்லுக்கும் பாயுதோ…
  அதே போல், நல்லவர்களுக்கான குணங்கள், அங்கே அண்டி இருக்கும் அல்லாதவர்க்கும் பாயும்!

  எனவே…நாம நல்லார் தொடர்பில் இருக்க முயல வேணும்! (ரவிசங்கர்)

  இதனால் தான் நண்பர்களே.. பண்புடையவர்களை நண்பர்களாக
  வைத்திருத்தல் நல்லது. குமரன் போன்ற பண்புடையவர்கள்
  இந்த வலையில் எழுதுவது நமக்கு நன்மை என நான் கருதுகிறேன்.

  -பாவலன்

 28. Rajkumar.V

  Mr,Kumaran, Mr.K.K, Mr.manokaran,Mr.pavalan

  Srilanka issuela Kalam oda stand enna? Avar Antha sambavam nadanthapa kandichu ethum pesinara? Ipa samebathula Srilanka poi Rajapakshe va santhichutu Tamilarkal Singalam Kathukanum nu solitu. Ipa elarum nala irukaratha solitu vanthar. Rajapakshe Kalama use pani than nalavanu katunan. Srilankan issue ls DMK va Kora solara vaikal than Kalam Pugal padarinka.
  corruption issue la Avaroda stand enna? Ethum vai therakama than irukarar.
  Srilankan issuela Avar Tamilarkaluku ataharava pesiruntharuna All over india intha issuela Namaku support a irunthirukum. Manasachi oda think pani parunka. Avar matum Rajapaksheva ethirthu poratam arivcaha India fulla Namaku support pannuvanga Ean Avar pannala?

  கூடங்குளம் அணுமின் நிலைய விவகரதுல அவரோட முடிவு சரியா?

  Mela Nan keta question kelam answer panitu nexrt Kalam ku supporta comment podunga

 29. Rajkumar.V

  KK Says
  அம்பேத்கரை படிக்கவைத்து ஒரு பிராமணன்!! ஜாதி வெறியை அந்த பிராமணன் பாத்திருந்தால் அம்பேத்காரை வரலாறு அடையாளம் கண்டிருக்குமா !!

  Ambedkar ya padika vaika oru pramanan irunthar. Why that person required?
  Why Ambedkar not able to study with out help of Bramanan?
  With out Bramin help other persons how to study?
  That only Ambedkar did . Aavaru elarum Samama nadathapadanum nu nenachar.
  Avar Thanoda minisitor post a resign panitu odukapatorukaga poradinar.

  அம்பேத்காரை வைத்து அரசியல் பிழைப்பு நடக்கிறது !!

  BJP epidi kanala pakatha Ramana vachu politics panaranga ramarajiam amaipenu solarnga?

  Nama kannala kanda Ambedkar ya ean nama follow panakudathu. AMbedkar rajiayam amaipom All over india la. Apathan nattula irukara elarukum ellame kedaikum

  நம் superstar இந்த online pollai வென்றிருந்தால் என்வழி வினோவின் பதில் எப்படி இறுக்கும் தலைவர் அந்தரங்கத்தை அலசிருப்பரோ !!!

  Kandipa vino accept paniruka mattar. apavum avar Thalaivara vida megaperiyavanga elam irukanga. anna yougsters ku Matha thalaivarkaloda arumai theriyalainu than katturai poturupar.

  Presedent post kuduthahtan Kalam work panuvara?????

  Entha postum ilama makkala therati purachiya erpaduthiyavangathan maberum thalivarkala irunthirukanga.

  Makathma Gandhi,
  Ambedkar,
  Thantahi periyar.

  Ivanga elllam nenachiruntha entha postula venunalum poi ukanthirukalam.
  ivangaellam makkala nenachanga sagaravaraiku poradite irunthanga.

  ivangalaoda kalama compare panina mela sona thaivar kalukuthan kevalam.

  Avar presedent a irunthapa enapanninar?

  கலாமுக்கு மரியாதை கொடுங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் அவரால் யாருக்கும் எந்த நன்மையும் இல்லை… தீமையும் இல்லை. அவர் ஒரு பிரச்சாரகர். நல்ல சிந்தனைகளை விதைக்க முயல்கிறார்.

  Mr.Vino sonathu 1000% correct

 30. Rajkumar.V

  PAVALAN Nadunilyalar mugamudi potu ura emathitu irukaru. Why Jaya pathuna negative news kelam avar coment podaratu illa? engada karunanidiya pathi news varum thiti comment podalam nu than irukanga. Karunanidiya thiti comment potavanenlam Nadunilaiyalara? APA dinamalar, NamathuMGR, Dinamani than Ulagathulaye nadunilai pathirikaikal.

 31. மு. செந்தில் குமார்

  //குமரன் போன்ற பண்புடையவர்கள்
  இந்த வலையில் எழுதுவது நமக்கு நன்மை என நான் கருதுகிறேன்.// -பாவலன்

  =>கண்டிப்பாக. அவரை பற்றிய என் எண்ணமும் அதுவே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *