BREAKING NEWS
Search

தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே!

ன்வழி நண்பர்களே…

யாரெல்லாம் தலைவர் மற்றும் அவர் படத்தைப் பற்றி நெகட்டிவா போஸ்ட் போடுகிறார்களோ அவற்றையெல்லாம் தூக்கிகொண்டு வந்து தலைவர் சார்ந்த குரூப்களில் போட்டு டிஸ்கஸ் பண்ணுவீங்க. ஆனா தலைவருக்காக வரிந்து கட்டிக்கொண்டு ஆதாரங்களுடன் போடப்படும் பதிவுகள், கட்டுரைகளை பெரிதாக கொண்டு போகமாட்டிங்கறீங்க. இதனால தான் அந்த சில்லறைங்க இவ்வளவு சவுண்ட் விடுதுங்க.

நம்ம ரியாஸ் @Riazkahamed பேட்ட படத்தோட பிஆர்ஓ. அவர் சொல்ற தகவல் சன் பிக்சர்ஸ் சொல்ற மாதிரி தான். பேட்ட படத்துக்கு தியேட்டர்கள் அதிகரிப்பு என்ற அதிகாரபூர்வமான தகவலை அவர் ட்விட் செய்கிறார். அடுத்த நிமிடம் நயன்தாராவின் மானேஜரும், விஸ்வாசம் விநியோகஸ்தருமான ராஜேஷ் என்பவர், ரியாஸுக்கு எதிராக மறுப்பு சொல்கிறார். அந்த ராஜேஷ் சொல்வது அப்பட்டமான பொய் என்று தெரிந்தும், தலைவரையும், ரியாஸையும் தரைகுறைவாக பேசுகின்றன அந்த சில்லறைகள். இதற்கு ஒன் இந்தியா போன்ற கேவலமான மூன்றாம் தர இணையதளங்களின் ஆதரவு வேறு! ஆனால் நம் தரப்பிலிருந்து போதிய பதிலடி இல்லை.

நம்மிடம் உண்மை இருக்கிறது, ஆதாரங்கள் உள்ளன, பொங்கல் ரேஸில் அந்த குஸ்வாசத்தை அடித்து தூக்கி வீசிவிட்டோம். ஆனால் அதை நெஞ்சு நிமிர்த்தி பதிவு செய்வதை விட்டுவிட்டு கூலிக்கு கூவும் ட்விட்டர் குருவிகள் தரும் பொய் கணக்குகளை பகிர்ந்து புலம்பிக் கொண்டிருக்கிறோம்.

காவலர்களாக மட்டுமல்ல நேரத்திற்கு ஏற்ப போராளிகளாகவும் மாறி இந்த ஆமை குஞ்சுகளை அவித்து போட வேண்டும். வாழ்க்கையில் இன்னொரு முறை தலைவர் படத்துடன் மோத வேண்டுமென எவனுமே நினைத்துவிடக் கூடாது.

– வினோ,
என்றுமே தலைவருக்காக!




One thought on “தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *