BREAKING NEWS
Search

1000 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை.. இளையராஜாவுக்கு ரஜினி, அமிதாப், கமல் மரியாதை!

1000 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை.. இளையராஜாவுக்கு ரஜினி, அமிதாப், கமல் மரியாதை!

B7zdGHaCcAAIK2s

லக சினிமா சரித்திரத்திலேயே இல்லாத வகையில் 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனைப் படைத்த இசைஞானி இளையராஜாவுக்கு மும்பையில் செவ்வாய்க்கிழமை நடந்த பாராட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் சாதனையாளர் அமிதாப் பச்சன், உலக நாயகன் கமல் ஹாஸன், நடிகை ஸ்ரீதேவி உள்ளிட்டோர் மரியாதை செய்தனர்.

1976-ல் அன்னக்கிளி படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக இசைத் துறையில் யாரும் கற்பனை கூட செய்ய முடியாத அளவுக்கு சாதனைகள் படைத்துள்ளார். 5 தேசிய விருதுகள், ஏராளமான மாநில அரசு விருதுகள், பத்ம பூஷன் விருது என பல பெருமைகளைப் பெற்றுள்ள இளையராஜா, விரைவில் இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னாவுக்கு பரிந்துரைக்கப்பட உள்ளார்.

பாலா இயக்கும் தாரை தப்பட்டை படம் இளையராஜாவின் 1000வது படம் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. அந்தப் படத்துக்குப் பிறகும் பல படங்களுக்கு இளையராஜா இசையமைத்து வருகிறார். இப்போது கிட்டத்தட்ட 25 படங்களுக்கு மேல் இசையமைத்து வருகிறார் இளையராஜா.

உலக அளவில் இசைத் துறையில் இப்படி ஒரு சாதனையை எவரும் நிகழ்த்தியதில்லை. அதுவும் இளையராஜா இசையமைத்த 1000 க்கும் மேற்பட்ட படங்களில் 80 சதவீதம் பெரும் வெற்றி பெற்றவை. 4000 பாடல்களுக்கு மேல் சூப்பர் ஹிட் ரகத்தைச் சேர்ந்தவை. வெளியில் தெரிய வராத அவரது பாடல்களை இப்போது கேட்டாலும் அவற்றில் புதிய பரிமாணத்தை அனுபவிக்க முடியும்.

10917035_915710585119942_2780888779451722955_n

இத்தனை பெருமைக்கும் சொந்தக்காரரான இளையராஜாவுக்கு, பாலிவுட் திரையுலகம் பாராட்டு விழா எடுத்தது.

இயக்குநர் பால்கி இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள, நடிகர் அமிதாப் பச்சனே முன் நின்று அனைவருக்கும் அழைப்பிதழ் அனுப்பினார். அவரது அழைப்பை ஏற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாஸன், நடிகை ஸ்ரீதேவி என இந்தியாவின் மிக உன்னத கலைஞர்கள்.. சாதனையாளர்கள் இந்த விழாவில் பங்கேற்று, இசைஞானியின் பெரும் சாதனையைக் கவுரவித்து மகிழ்ந்தனர்.

இந்திய சினிமா என்றாலே, அது ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், கமல் ஹாஸன்தான். இவர்களே இந்திய சினிமாவின் முகவரிகள். இவர்களன்றி இந்திய சினிமா பற்றி யாராலும் பேச முடியாது. இந்த மூன்று சிகரங்களும் ஒரே மேடையில் சந்தித்துக் கொண்டது, அநேகமாக இதுவே முதல்முறை. காரணம் இந்த மூவருக்கும் பொதுவான இளையராஜா.

10924753_10203334314694311_7804297123354514758_n

ரஜினிக்கும் கமலுக்கும் பல நூறு சூப்பர் ஹிட் பாடல்கள் தந்தவர் ராஜா. கமல் ஹாஸனின் அரிய குரலை, மிகச் சிறப்பாகப் பயன்படுத்திய ஒரே மேதை இளையராஜாதான். அவ்வளவு ஏன்… ரஜினியின் குரலில் முதல் பாடலைப் பதிவு செய்த பெருமைக்குரியவரும் ராஜாதான். அட, ஸ்ரீதேவியை முதல் முறையாக பாட வைத்தவரும் இளையராஜாதான் (மூன்றாம் பிறை… முன்ன ஒரு காலத்துல…)

அமிதாப் பச்சனின் இணையற்ற குரலை பிட்லி சே… பாடலில் பயன்படுத்தி இன்று இந்தியாவையே மயங்க வைத்திருக்கிறார் இளையராஜா.

உலகில் சிம்பொனி என்ற இசை வடிவம், ஐரோப்பிய இசை மேதைகளுக்கே உரித்தானது என்று பலரும் நினைத்த நேரத்தில், வெகு அநாயாசமாக சிம்பொனி வடிவ இசையைத் தந்த மாபெரும் மேதை இளையராஜா ஒருவரே!

இத்தனை பெருமைக்கும் சொந்தக்காரரான இளையராஜாவை, முதலில் கொண்டாட வேண்டியது தமிழ் சினிமாதான். ஆனால் அவர்களை முந்திக் கொண்டது பாலிவுட். காரணம், இளையராஜாவின் தூய ரசிகரான இயக்குநர் பால்கி. இளையராஜா இசையில் தான் உருவாக்கியுள்ள ஷமிதாப் படத்தின் இசை வெளியீட்டை அப்படியே இளையராஜாவுக்கான பாராட்டு விழாவாக மாற்றி, நாட்டையே அவர் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துவிட்டார்.

-என்வழி
7 thoughts on “1000 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை.. இளையராஜாவுக்கு ரஜினி, அமிதாப், கமல் மரியாதை!

 1. srikanth1974

  திரு.இசைஞானி இளையராஜா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  அவர் பாடிய பாடல் வரிகளையே இங்கு கருத்தாக பதிய விரும்புகிறேன்.

  அங்காள அம்மனுக்கு ஆடியிலே பொங்கல் வச்சா
  ஆயிரம் பாட்டுக்கவா அடியெடுத்து கொடுப்பாளே

  சிங்கார அம்மனுக்கு சித்திரையில் வடம் பிடிச்சா
  சங்கீதம் படிக்கச்சொல்லி சாரீரம் கொடுப்பாளே

 2. Rajalingam

  டியர் எடிட்டர்,
  “இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னாவுக்கு பரிந்துரைக்கப்பட உள்ளார் ” – இது குறித்து மேலும் தகவல்கள் பகிர வேண்டுகிறேன்.

  Milliions of his fans would be happy if IR is bestowed with Bharat Ratna.. Nevertheless the awrad wud infact be too small for achievements. Kindly share some info on his Bharat Ratna recommendations & chances

  – Rajalingam.P

 3. மிஸ்டர் பாவலன்

  //உலகில் சிம்பொனி என்ற இசை வடிவம், ஐரோப்பிய இசை மேதைகளுக்கே உரித்தானது என்று பலரும் நினைத்த நேரத்தில், வெகு அநாயாசமாக சிம்பொனி வடிவ இசையைத் தந்த மாபெரும் மேதை இளையராஜா ஒருவரே!//

  இந்த சிம்பொனி இன்னும் வெளியாகவில்லை.. Royal Philharmonic Orchestra
  இசையமைக்க 1993-ஆம் ஆண்டு ரெகார்ட் செய்யப்பட இந்த சிம்பொனி வெளிவாராத
  நிலையில் அவர் அனாயசமாக செய்தாரா, அட்டகாசமாக செய்தாரா என
  நாம் எதுவும் சொல்ல முடியாது. பலர் இந்த வெளிவராத சிம்போனியை
  சமீபத்தில் வந்த ‘திருவாசகம்’ Oratorio-உடன் குழப்பிக் கொள்கிறார்கள்.
  ஏன் வெளியாகவில்லை என்பது இளையராஜா தான் அறிவார் !

  பழைய சேதி கீழே! – மிஸ்டர் பாவலன்

  A SYMPHONY OF SUCCESS – Ilaiyaraaja Interview in 1993

  Now, Lets take a look into what Ilaiyaraaja has told about his Symphony No.1 in an interview with “The Hindu” after the recording of his Symphony No.1 with the Royal Philharmonic Orchestra(RPO) of London under the baton of John Scott in July 1993.

  Following is the article from “THE HINDU – International Edition” September 4, 1993

  A SYMPHONY OF SUCCESS

  With 3,500-odd songs in 650 films, Ilayaraja now occupies an unrivalled No. 1 spot in Tamil cinema. The ace music director added yet another feather to his cap recently by writing a Western symphony and having it played by the Royal Philharmonic Orchestra, London, thus becoming the first composer from Asia to do so. How did it all come about? If genius is one per cent inspiration and 99 per cent perspiration, the man who has lived up to it to achieve international fame and fortune through music is Ilayaraja whose name is now synonymous with success in the Tamil film industry. From the obscure village of Pannaipuram in Madurai district, where he was born on June 2, 1943, to the pinnacle in the world of music — writing a symphony and having it played by the Royal Philharmonic Orchestra, London, recently – it has been for him an arduous climb uphill through adversity. From setting tunes to his brother Pavalar Varadarajan’s songs for stage plays to an unrivalled No. 1 spot in Tamil film music and then on to the latest distinction, Ilayaraja has indeed come a long way. Until ‘Annakili’ (1976) catapulted him to fame, it was no path of roses for him after he came to Madras in 1968 with his two younger brothers, Bhasker and Gangai Amaran, to try his luck in films. But after ‘Annakili’ it was accolades all the way. Ilayaraja attributes it all to the mercy of God. Recently he talked to The Hindu. Excerpts:

  Q: How did you get the offer to write a symphony?

  Pyramid International, a recording company based in London, asked me whether I would be interested in writing a symphony. Writing a symphony needs much concentration. I said, “If I agree to write a symphony, how do you propose to market it? The people there who listen to classical music do not know about me. How do you make it possible for them to hear my music?” They said, You leave that part to us.” Only then I agree to it. That made them get in touch with several orchestras and eventually they chose the Royal Philharmonic Orchestra (RPO), considered the best in the world, which plays only great Western classical composers. The RPO people said that they did not know about me. They said that I might be a very good composer, but what about my caliber in Western classical music? So complete details about me were sent to them. My two discs, ‘Nothing but Wind’ and ‘How to name it,’ were sent. That convinced them of my capability to write a symphony.

  Q: So you started writing the symphony?

  No. I asked for a co-ordinator. They sent Michael Townsend. He can conduct, arrange. He is a one-man army as far as music is concerned. He came and saw me work in films. He said, ‘When you were writing the score, you did not struggle for any ideas. You did not take your pen off the script before finishing it. I have never seen such a composer before. Your dedication is remarkable.’ When he saw the re-recorded film, he was moved. He was really stunned to by the synchronisation of the music with the film. He told the RPO that this time they were going to record the work of a composer who was different.

  Q: So you agreed to write the symphony for the RPO?

  Yes. They laid certain conditions. The foremost was that I must send the score at least three months in advance. I accepted, but my film commitments made me give the score only a month before the recording. In fact, I gave the last piece only 12 days before the recording. But when the recording was over in London, all the musicians broke into a standing ovation. They started tapping the floor with their feet. I was thrilled and thanked the Almighty for giving me this opportunity to write a symphony and have it recorded.

  Q: What exactly is a symphony?

  It is a form of orchestration. We have in our system of music different elements — geetam, swarajathi, varnam, keerthanam. Film music is also a form, something like keerathanam with pallavi, anupallavi, and charanam. Symphony, which has three main elements, is a form too. What I do in films is also a kind of symphony. For a full-fledged orchestra, symphony is the mainstay.

  Q: How did you feel when every member of the RPO congratulated you?

  He (God) made it happen. It was unbelievable. There are thousands of people who are practising or composing music. But who got the chance? Who selected me? I did not do anything. He (God) selected me. I prayed to God in gratitude that He made me do it.

  Q: What do you think of the computer music coming up in a big way in films?

  Conductor John Scott also asked me about computer music. He has a computer and I too have one. Scott and I went to a bookstall and bought some books. To total the prices of the books, the store staff started searching for the calculator. But I calculated the total and told them before the calculator could do it. They asked me how I was able to do it. If you do not know arithmetical calculations, then you need a calculator. This is how I explain computer music. Anybody can buy a computer and make it play ‘C’ major. Anyone can compose music easily with a computer. But this is for the laymen. If you have the skill you do not need a computer … In computer music, after a few songs, one gets fed up because the computer can give only certain variations as programmed. You will never get anything new in moods or emotions.

  Q: What are your ‘bests’ in films?

  The moment I can say that this is my best song or best music in films, I will stop giving music. I still do not know what music really is and I am trying hard to comprehend it. Once I know it, I will have my fulfilment and I will stop doing what I am doing now.

  Q: Six hundred and fifty films in 17 years, 3500-odd songs. If you still say you have not done anything, then …

  For you, I am Ilayaraja. But for me, “Who am I?” I have not even started tuning my instrument properly. Then I must synchronise the tampura with the sruti, next practice it, and last comes the singing.

  Q: How many days did you take to write the symphony?

  One month. Some eminent composers have taken three to 14 years. Some others just three days.

  Q: It seems that Pandit Ravishanker and L. Subramanyam have also done a symphony and that was also recorded in London.

  I do not know whether they have recorded a symphony or not. But the RPO’s programme executive, Ian Maclay, wrote to me mentioning that I was the first composer from whole of Asia to write a symphony.

  Q: Have you named the symphony?

  No. Scott told me that he could name it ‘Fantasy.’ I said it was not fantasy. I have a couple of names in mind, but I have not decided on it.

  Q: Did any of the Carnatic music exponents congratulate you on your achievement?

  T. V. Gopalakrishnan, Mandolin Srinivas were there to receive me at the airport. The ‘Bhishma’ of Carnatic music, Semmangudi Srinivasa Iyer, came to my place twice to congratulate me.

  Q: What do you plan to do after this?

  Nothing is in my hands. We plan so many things. But can anyone predict what will happen? So I do not plan. Whatever comes, take it in your stride. If you aim at something and do not get it, you feel dejected … He (God) is planning in His own way.

  Q: Does the Carnatic base help you in your chosen field?

  Carnatic music and Western classical music are two different cultures, though the sounds are the same. The difference between the two systems is: one is like living with the people and the other like living alone. Carnatic music is like living in solitude and doing meditation like our sages. Western music needs harmony, counterpoints and many accompaniments. It is like living with people.

  Q: From Pannaipuram to films — do you think you have achieved what you wanted?

  No. I do not think of anything as my achievement. Today’s record may be bettered tomorrow.
  -=== END ===-

 4. anbudan ravi

  இசைக்கடவுள் இளையராஜாவை பாராட்ட தலைவர், கமல் மற்றும் அமிதாப் கூடி இருப்பது, இளையராஜாவிற்கு ஆஸ்கார் பரிசு கிடைத்தது போல் அல்ல…..அதுக்கும் மேல.

  அன்புடன் ரவி.

 5. elango

  Great Man….like Mother to all his fans…ad his dongs are lullaby for us!
  God bless you our Mother!

 6. s venkatesan, nigeria

  இளையராஜா இசை இல்லாதிருந்தால் நான் எப்போதோ தற்கொலை செய்து கொண்டிருப்பேன். என்னை காப்பாற்றியதே அவரின் இசைதான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *